ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Today at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Yesterday at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Yesterday at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Yesterday at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Yesterday at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Yesterday at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Yesterday at 12:06 am

Admins Online

103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்

103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார் Empty 103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்

Post by ayyasamy ram on Mon Mar 09, 2020 4:57 am

103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார் 202003090341112396_National-Award-for-15-Achievement-Women-including-103-Year_SECVPF
-
புதுடெல்லி,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில்
சாதனை புரிந்த பெண்களுக்கு மத்திய அரசு பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையின் மூலமாக
‘நாரி சக்தி புரஸ்கார்’ (பெண் சக்தி விருது) தேசிய விருது
வழங்கி கவுரவித்து வருகிறது.

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள கலாசார
மையத்தில் நேற்று இந்த ஆண்டுக்கான ‘நாரி சக்தி புரஸ்கார்’
விருது வழங்கும் விழா நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி
முன்னிலையில் நடந்த விழாவில் பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமாக
சாதனை படைத்துள்ள 15 பெண்களுக்கு ‘நாரி சக்தி புரஸ்கார்’ தேசிய
விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விவரம் வருமாறு:-

* சண்டிகாரை சேர்ந்த 103 வயது தடகள வீராங்கனை, மான் கவுர்.
இவர் 93 வயதில் தடகள போட்டிகளில் கலந்து கொள்ளத்
தொடங்கினார். போலந்து நாட்டில் நடந்த உலக மாஸ்டர்ஸ்
தடகள போட்டியில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களை
( டிராக் அண்ட் பீல்டு) குவித்தவர். இவர் ‘பிட் இந்தியா’ இயக்கத்துடன்
தொடர்பு உடையவர். ஆக்லாந்தில் ஸ்கை டவர் உச்சிக்கு சென்ற
மிக வயதான நபர் இவர்தான்.

* பீகார் மாநிலம், முங்கர் பகுதியை சேர்ந்த பீனா தேவி.
‘காளான் பெண்’ என்று அழைக்கப்படுகிற 43 வயதான இவர்,
காளான் வளர்ப்பை 105 கிராமங்களில் பிரபலப்படுத்தியவர்.
இதனால் 1,500 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

* உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 58 வயதான கலாதேவி,
பெண் கொத்தனார் ஆவார். அங்கு திறந்தவெளி கழிப்பிடங்களை
ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்.

* ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் டார்ஜான் என்று அழைக்கப்படுகிற
47 வயது சமி முர்மு, 25 லட்சம் மரக்கன்றுகளை நடுவதில்
ஈடுபட்டுள்ளார். காடுகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

* காஷ்மீர் லடாக் பகுதியை சேர்ந்த 40 வயதான நில்ஜா வாங்மோ
தொழில் அதிபர். லடாக்கி கலாசார உணவகம் நடத்தி வருகிறார்.
இதை நிர்வகிக்க 20 கடைக்கோடி கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு
பயிற்சி அளித்துள்ளார்.

* மராட்டிய மாநிலம், புனேயை சேர்ந்த ராஷ்மி உர்த்வர்தேஷி.
இவர் மோட்டார் வாகன தொழில் துறையில் பெண்களை
ஊக்குவித்து வருகிறார்.

* உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இரட்டையர்கள்
தாஷி மாலிக் மற்றும் நுங்ஷி மாலிக் சகோதரிகள்.
இவர்கள் 2013-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல்
இரட்டை சகோதரிகள் என்ற சாதனையை படைத்தவர்கள்.

விருது அறிவிக்கப்பட்டவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த
பாகீரதி அம்மா நேரில் செல்ல இயலவில்லை என தகவல்கள்
கூறுகின்றன.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57905
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை