ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by krishnaamma Yesterday at 10:25 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Yesterday at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:14 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Yesterday at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Yesterday at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Wed Aug 12, 2020 11:56 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Wed Aug 12, 2020 11:46 pm

Admins Online

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by krishnaamma on Tue Mar 10, 2020 6:49 pm

மிக அருமையான பதிவு !

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !...

30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.

அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர்.

சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.
பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.

வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!.

அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய்,  அஜித், சூர்யா அவர்கள் போல் இருக்க வேண்டும் !.

1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பது தான் !!

ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.

சரி, இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா ?!.

1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வது தான். தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.

1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நல்ல நிலை தொடர்ந்தது.

1980 ஆண்டுக்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர், நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது.

2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். பின்பு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை என்று வேறு.

ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும் !!

தொடரும்...


Last edited by krishnaamma on Tue Mar 10, 2020 6:51 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by krishnaamma on Tue Mar 10, 2020 6:50 pm

ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா!!! என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.

இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.

1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்
உணவு: ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, கருப்புக் கொள்ளு, கருப்பட்டி...

1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.
உணவு: ஐ.ஆர் அரிசி

1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25
உணவு: பட்டை தீட்டப்பட்ட டபுள் பாலீஷ் அரிசி.

2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..
உணவு: துரித உணவு.

2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம், புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து, சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.

எனவே, வரும் காலம் இப்படித் தான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி, நல்லதை நினைத்து, திருமணங்கள் முடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்கலாம்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by krishnaamma on Tue Mar 10, 2020 6:50 pm

எல்லாவற்றுக்கும் மேலாக
மாடு வளர்த்தால் கேவலம்.
பால் கறந்தால் கேவலம்.
மரம் வளர்த்தால் கேவலம்.
விவசாயம் செய்தால் கேவலம்.
இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.

ஐடி தொழில் போகிறோம்.
கலாச்சாரம் மாற்றப் படுகிறது.
செய்யாத தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.
இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.
ஒரு கட்டத்தில் வெளியே போகச் சொல்கிறான்.
வாழ்வை தொலைக்கிறோம்.

இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினை தானே!.

வெளி நாடு போகிறேன் என்பான்.அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.
ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.

நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம், என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம், என் பண்பாடு, என் மண், என் ஊர், என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.

ஆண் 23,24 தாண்டிய உடன், பெண்கள் 20,21 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.

நான் சம்பாதித்தால் தான் திருமணம். எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகு தான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.

கஷ்டம் என்பது தவறு அல்ல. அது வாழ்க்கைக்கு தேவை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம். அதற்கு பணம் தேவை தான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.

அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை!!.

அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல. அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by krishnaamma on Tue Mar 10, 2020 6:51 pm

பெண்களே, உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும், அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.
ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரித் தான் இருக்கும். அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம், நம்பிக்கை இருக்காது.

அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா, பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆம்பளையா ஆண் வாழ வேண்டும்.

வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள். வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.

தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிமை ஆகியே தீரும்.

வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன், ஏதாவது பிரச்சனை இருக்கும். எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தான் திருமணம் என்றால் வாழும் காலம் தொலைந்து போகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே.
தட்டிக் கழிக்க அல்ல.


நன்றி : வாட்ஸ் ஆப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by ayyasamy ram on Tue Mar 10, 2020 7:56 pm

பொதுவாக ஆணுக்கு திருமணம் ஆகாமல்
27 வயது முடிந்து விட்டால், அதன் பின்னர்
அவனது திருமணம் இரண்டாம் கல்யாணம் போன்றதே...!
-
அதனால் 27 வயதிற்கு பின்னர், ஜாதகப் பொருத்தம் என்பதை
ரொம்பவும் ஆழமாக பார்க்க வேண்டியதில்லை...
மேலோட்டமாக பார்த்தாலே போதும்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59563
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by krishnaamma on Tue Mar 10, 2020 8:53 pm

@ayyasamy ram wrote:பொதுவாக ஆணுக்கு திருமணம் ஆகாமல்
27 வயது முடிந்து விட்டால், அதன் பின்னர்
அவனது திருமணம் இரண்டாம் கல்யாணம் போன்றதே...!
-
அதனால் 27 வயதிற்கு பின்னர், ஜாதகப் பொருத்தம் என்பதை
ரொம்பவும் ஆழமாக பார்க்க வேண்டியதில்லை...
மேலோட்டமாக பார்த்தாலே போதும்.
-
--------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1314901

இன்றைய நாட்களில் ஆணாகட்டும் பெண்களாகட்டும் ரொம்ப கண்டிஷன் போடுகிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by T.N.Balasubramanian on Tue Mar 10, 2020 9:05 pm

அய்யாசாமி அவர்கள் பொதுவாகவே எப்போதும் சில விஷயங்களை
ஒரு முறைக்கு இருமுறையாக எடுத்துக் கூறுவார்.
நிற்க,
நம்ம கிட்டே,அதாவது நம் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு.
அதுவும் அரைகுறையாக சாஸ்திரங்கள் தெரிந்து இருந்தாலோ
அல்லது புரிந்து கொண்டாலோ கஷ்டம்தான்.
ராகு காலம் எமகண்டம் போட்டுக் குழப்பிக்கொள்வார்கள்.
ராகு காலத்தில் கிளம்பாதே: எமகண்டத்தில் காரியம் ஆரம்பிக்காதே.
புதிதாக திங்களன்று வேலைக்கு சேரும் உறவிடம் இப்பிடி கூறி குழப்புவார்கள்.
ஆபீஸ் ஆரம்பம் 10 மணி என்றால் ஏழரை ஒன்பது ராகுகாலம்.
9 மணிக்கு மேல் கிளம்பி தூரத்தில் உள்ள ஆபீசுக்கு போய் சேரும்போது
10 /10 .15 .பிறகு ஆபீஸ் சென்று HR ஐ பார்த்து படிவத்தில் கையொப்பம் இடலாமென்றால் எமகண்டம் வந்து விடும். என்ன பரிதாபம்.
இப்பிடி தான் ஊருக்கு போவதென்றால் கிழக்கே சூலம் மேற்கே சூலம் என்று போட்டு குழப்பி டிக்கெட் வாங்கி தரேன்னு சொன்னவர் சூலத்தை கையிலெடுத்து குத்தாத குறைதான்.
இரவு நேரத்திற்கு சூலம் பார்க்கவேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார்கள்.
சரி 27 க்கு வருவோம்.
ஜாதகத்தை மேலெழுந்தவாரியாக பார்த்தால் போதும் என்பதை யார் ஒத்துக்கொள்வார்கள். ஆண்/பெண் ஜாதக பரிவர்த்தனை மைய்யங்களில்
பாருங்கள். எல்லாம் 30 + ,35 + தான் 40 + கூட இருக்கிறது. ஜாதகம்பொருந்தி இருக்கவேண்டும் என கட்டாயமும் இருக்கிறது.
அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் ஆண் பெண் இருபாலரும்
கல்யாண பந்தத்தில் ஈடுபட விரும்புவதில்லை. எனக்கு தெரிந்து 35 ,38 வயதில்
ஆண்கள் மிக நல்ல வேலையில் இருக்கிறார்கள். கெட்டப் பழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கல்யாணம் அமையவில்லை.
பெற்றோர்களை குறை சொல்வதா, ஆண்களை குறை சொல்வதா அல்லது பெண்களை குறை சொல்வதா?

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் ! Empty Re: மிக அருமையான பதிவு ! - தவறாமல் படிக்கவும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum