ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Mon Nov 23, 2020 3:32 pm

Admins Online

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

Go down

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? Empty கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

Post by ayyasamy ram on Mon Mar 30, 2020 7:03 pm

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? _111467939_gettyimages-1207348129
படத்தின் காப்புரிமைGETTY இமகேஸ்
-

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை
எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான
வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி
வருகின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள
நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த
செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால்
நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த
சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான்
இந்த வென்டிலேட்டர்கள்.

இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி
அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.
-
கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? _111467937_gettyimages-497601235
-

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
வென்டிலேட்டர்களில் பல்வேறு வகைகள் உள்ளன.

கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் -19 நோய்த்
தொற்றால் பாதிக்கப்படும் 80 சதவீதத்தினர் மருத்துவமனை
சிகிச்சை இல்லாமலேயே குணமடைவதாக உலக சுகாதார
அமைப்பு கூறுகிறது.

ஆனால், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறில்
ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சுவாச
பிரச்சனை ஏற்படுகிறது.

கோவிட்-19 தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின்
நுரையீரல் செயல்பாடு நாளடைவில் பலவீனமடைகிறது.
இந்த பிரச்சனை குறித்து அறிந்தவுடன், நோயாளியின்
நோயெதிர்ப்பு மண்டலம் இரத்த குழாய்களை விரிவடைய
செய்வதால், அதிகளவிலான நோயெதிர்ப்பு செல்கள்
நுழைகின்றன.

இந்த செயல்பாட்டின் காரணமாக நுரையீரலுக்குள் திரவங்கள்
அதிகளவு நுழைவதால், அதன் காரணமாக நோயாளி
சுவாசிப்பதற்கு சிரமப்பட தொடங்குகிறார். இதனால், அந்த
நபரின் உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைய ஆரம்பிக்கிறது.

இந்த சிக்கலான பிரச்சனையை கையாள்வதற்கு பயன்
படுத்தப்படும் வென்டிலேட்டர்கள், உயர் அளவு ஆக்சிஜன்
மிக்க காற்றை நுரையீரலுக்குள் செலுத்த உதவுகிறது.

வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டியும் இருப்பதால், அவை
செயற்கையாக செலுத்தப்படும் காற்றிலுள்ள வெப்பம் மற்றும்
ஈரப்பதத்தை நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு
மாற்றியமைத்து சரிவர பராமரிக்கிறது.

நோயாளியின் மொத்த சுவாச செயல்பாட்டையும்
வென்டிலேட்டர் மேற்கொள்வதால் இடைப்பட்ட நேரத்தில்
நோயாளியின் சுவாச தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு
கிடைக்கிறது.

நோய்த்தொற்றுக்குரிய லேசான அறிகுறிகள்
தென்படுபவர்களுக்கு முகக்கவசங்கள், நாசிவழிக் கவசங்கள்
அல்லது வாய்வழிக் கவசங்கள் வாயிலாக காற்றோ அல்லது
பலதரப்பட்ட வாயுக்களின் கலவையோ நுரையீரலுக்குள்
செலுத்தப்படும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு
வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ்
ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ்
காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

எனினும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்
சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
உடனடியாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படும்.
இதன் மூலம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு
நிலைப்படுத்தப்படும்.
----
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63041
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? Empty Re: கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

Post by ayyasamy ram on Mon Mar 30, 2020 7:05 pm



படத்தின் காப்புரிமைINTERSURGICAL


இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இன்டென்சிவ் கேர்
சொசைட்டியை சேர்ந்த மருத்துவர் சந்தீபன் லஹா,
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான
நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப்படுவதில்லை
என்றும், வீடுகளிலோ அல்லது அடைக்கப்பட்ட
ஆக்சிஜனே அவர்களுக்கு போதுமானது என்றும் அவர்
கூறுகிறார்.

"வென்டிலேட்டர் பராமரிப்பு மிகவும் சிக்கலானது.
அதை சரிவர நிர்வகிக்காவிட்டால் அது நோயாளின்
உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். தொழில்நுட்ப
அம்சங்கள் சவாலானவை.

ஒரு குறிப்பிட்ட வகை வென்டிலேட்டரை பயன்
படுத்தியவர்களால் அனைத்து ரக வென்டிலேட்டரையும்
இயக்க முடியும் என்று கூற முடியாது" என்று மருத்துவர்
லஹா கூறுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போது
ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே
மருத்துவமனைகளில் உள்ளதாகவும், அடுத்த சில
வாரங்களில் இதன் தேவை பல லட்சங்களை தாண்ட
கூடும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே வென்டிலேட்டர்கள்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகளவிலான
கருவிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்
கொண்டுள்ளது. அதேபோன்று, மகேந்திரா உள்ளிட்ட
தனியார் நிறுவனங்களும் குறைந்த விலை
வென்டிலேட்டர்களை உண்டாக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில்
தற்போதைக்கு 3,044 வென்டிலேட்டர்கள் கையிருப்பில்
உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63041
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? Empty Re: கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

Post by krishnaamma on Tue Mar 31, 2020 12:17 pm

நல்ல பகிர்வு, நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி? Empty Re: கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum