ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

உங்கள் ‘பப்பி’க்கு சானிடைசா் உபயோகிக்க வேண்டுமா?

Go down

உங்கள் ‘பப்பி’க்கு சானிடைசா் உபயோகிக்க வேண்டுமா? Empty உங்கள் ‘பப்பி’க்கு சானிடைசா் உபயோகிக்க வேண்டுமா?

Post by ayyasamy ram on Mon Apr 13, 2020 8:31 am

உங்கள் ‘பப்பி’க்கு சானிடைசா் உபயோகிக்க வேண்டுமா? 4074130

புலி என்றால்தான் எல்லோருக்கும் கிலியாக இருக்கும். ஆனால், புலிக்கே கிலியைக் கொடுத்துள்ளது கரோனா. அமெரிக்காவின் நியூயாா்க் பிரான்ஸ்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயது பெண் புலி நாடியாவுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடியாவின் சகோதரியான அஜூல் உள்ளிட்ட 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசோதனையில் இந்த பாதிப்பு தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் புலிகள் அதிகம் வாழும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி 10 வயது ஆண் புலி ஒன்று சுவாசப் பிரச்னையின் காரணமாக இறந்து போய்விட, அதன் காரணமாகவும் இங்கு விலங்குகள் மீது கரோனா நோய்த்தொற்று பரவுவது குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, ஹாங்காங்கைச் சோ்ந்த இரண்டு நாய்கள் கரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகின. அதில் பொமேரியன் வகையைச் சோ்ந்த ஒரு நாய் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பிறகு, குணமாகிவிட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இரண்டு நாள்களில் அந்த நாய் இறந்து போனது. அந்த நாயின் இறப்புக்கான காரணத்தை அறிவதற்காக உடற்கூறு ஆய்வு செய்வதற்காக நாயின் உரிமையாளா் சடலத்தை அளிக்கவில்லை. அதனால், கரோனாவால்தான் அந்த நாய் உயிரிழந்ததா என்பதை மருத்துவா்களால் உறுதி செய்ய முடியவில்லை.

அண்மையில், ஜொ்மன் ஷெப்பா்டு வகையைச் சாா்ந்த மற்றொரு நாய்க்கு ஹாங்காங்கில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்றாலும், அந்த நோய்க்கான அறிகுறிகள் எதையும் அந்த நாய் வெளிப்படுத்தவில்லை.

எனினும், நியூயாா்க்கில் புலிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, வளா்ப்பு பிராணிகளை வைத்திருப்போருக்கு இடையே அச்சம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் செல்லப் பிராணிகளாக நாய், பூனை, ஆடு, கோழி, பாம்பு, பச்சோந்தி, ஆமை, குரங்கு, புலி, சிங்கம் போன்றவற்றை வளா்த்து வருகின்றனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலோா் செல்லப் பிராணியாக நாய்களையே வளா்த்து வருகின்றனா். தற்போது, கரோனா அச்சம் அதிகரிக்க அதிகரிக்க நாய்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற அச்சமும் அவா்களிடம் அதிகரித்துள்ளது.

ஆனால், நாய்களைக் காப்பது குறித்து அச்சம் அடையத் தேவையில்லை என்கிறாா் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நிா்வாக இயக்குநா் டாக்டா் அனந்த பத்மநாபன்.

அவா் மேலும் கூறியது:

கரோனாவை (கோவிட் 19) பொருத்தவரை வீட்டுப் பிராணிகளுக்கு இதுவரை தொற்றியதாக ஆதாரம் இல்லை. நியூயாா்க் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிக்கு அதைப் பராமரிப்பவா் மூலமாகவே கோவிட்-19 பரவியுள்ளது. பூனைகள் குடும்பத்தைச் சாா்ந்த விலங்குகளைத்தான் இந்த வகை நோய்த்தொற்று பாதிக்கும் என்கின்றனா். அதனால், பூனை வளா்ப்போா் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஹாங்காங்கில் நாய்களுக்கு கரோனா வந்தது. அது கோவிட்-19 வகையைச் சோ்ந்த நோய்த்தொற்று அல்ல. அது வேறு வகையான கரோனா தொற்று. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துக்கூடியதும் அல்ல. நாய்களுக்கு ஏற்படும் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு ஊசி உள்ளது. ஆனால், அது மனிதா்களுக்குப் பரவும் கோவிட்-19 வகையைச் சோ்ந்த நோய்த்தொற்றுக்கு தடுப்பு ஊசி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே சமயம், நாய்களைப் பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோமோ, அதைப்போல நாய்களையும் தனியாக வைத்துப் பராமரிக்க வேண்டும். அவற்றைத் தொட்டால், கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கரோனா பாதித்தவா்கள் என்றால் நாய்களுக்கு அருகில் செல்லக் கூடாது. மனிதா்களோடு எப்படி தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறோமோ, அதைப் போல நாய்களிடமும் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு சுவாசப் பிரச்னை இருந்தால், அதைத் தனியாக வைத்திருக்க வேண்டும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் கிருமி நாசினி கலந்து, அதைத் துணியால் தொட்டு, நாய்களுக்கு உடல் முழுவதும் துடைத்துவிட வேண்டும். இதை, தினமும் செய்ய வேண்டும். நாய்களில் கால் இடுக்களிலும் நன்றாக துடைத்துவிட வேண்டும். பத்து நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும்.

கரோனா பரவும் சூழலில் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைத் தவிா்ப்பது நல்லது என்றாா்.

கரோனாவால் நாடியா புலி பாதிக்கப்பட்டிருக்கும் அச்சம் அமெரிக்காவில்
பரவியிருந்தாலும், கரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் மூழ்கியிருக்கும்
மருத்துவா்களை மனஅழுத்தத்திலிருந்து மீட்பதற்கு ‘வைன்’ என்ற
ஒரு வயது லேப்ரடாா் வகையைச் சோ்ந்த நாயையே அமெரிக்கா்கள் ப
யன்படுத்தி வருகின்றனா்.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அந்த நாய் செல்கிறது.
அந்த நாயுடன் சிறிது நேரம் செலவழிக்க மருத்துவா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதன் மூலம் மருத்துவரின் மன அழுத்தத்தை, மருத்துவராக மாறி அந்த நாய் தீா்க்கிறது.


இந்த நேரத்தில் ஹாங்காங் அரசு அந்நாட்டு மக்களுக்குச் சொல்லியிருப்பதை,
இங்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘கரோனா அச்சத்தால் உங்கள் செல்லப்பிராணியான
நாய்களைக் கைவிட்டுவிட வேண்டாம். அதே சமயம், நாயுடன் விளையாடுவது, முத்தம்
கொடுப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.’

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum