ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Today at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Today at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Today at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Today at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Today at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Today at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 2:40 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 1:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:27 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

Admins Online

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Apr 25, 2020 11:02 am


அமெரிக்காவை இயற்கை பேரிடர்களும் தங்கள் பங்குக்கு திணறடித்து
வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை
சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டது.

மிசிசிப்பி, டெக்சாஸ், அலபாமா, லூசியானா ஆகிய மாகாணங்களை
புயல் தாக்கியதை தொடர்ந்து, கனமழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலியாகினர்.

இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அமெரிக்காவின்
தெற்கு மாகாணங்களை நேற்று முன்தினம் புயல் மற்றும் சூறாவளி
கடுமையாக தாக்கியது. ஒக்லஹோமா, டெக்சாஸ் மற்றும் லூசியானா
ஆகிய மாகாணங்களில் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் புயல் காற்று
சுழன்றடித்தது.

புயலை தொடர்ந்து, பயங்கர சூறாவளி காற்றும் வீசியது. புயல் மற்றும்
சூறாவளியில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்
1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. இதனால்
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதனிடையே, புயல் மற்றும் சூறாவளியை தொடர்ந்து, மேற்கூறிய
3 மாகாணங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டியது.
பல இடங்களில் பெரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும்
தெரிகிறது.

கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள்
தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
3 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும்
மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில்
மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து
தற்போது வரை அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை 12 புயல்கள்
தாக்கியதும், இதில் 76 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
-
------------------------------மாலைதலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by சக்தி18 on Sat Apr 25, 2020 12:44 pm

அமெரிக்காவில் புயலும் சொல்லுக் கேட்பதில்லை,மக்களும் கேட்பதில்லை. இவ்வளவு கொரொனா இழப்பு வந்தும் கூட கூட்டம் கூடுவதை மக்கள் நிறுத்தவில்லை.அமெரிக்க ஜனநாயகம் பொலீசாரின் கைகளை கட்டுப் போட்டிருக்கிறது.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2074
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by சக்தி18 on Sat Apr 25, 2020 12:46 pm

மாலைதலர் என்று ஒரு ஊடகமா? சொல்லவே இல்லை ராம் சார்!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2074
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Apr 25, 2020 5:00 pm

@சக்தி18 wrote:மாலைதலர் என்று ஒரு ஊடகமா? சொல்லவே இல்லை ராம் சார்!
மேற்கோள் செய்த பதிவு: 1318202
-
மாலைமலர் என்பதுதான் மாலைதல என பதிவாகி விட்டது!
-
ஏபரல் 9 ந் தேதி என்னுடைய மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது
மூக்கு கண்ணாடி தேவை என்பது அத்தியாவசிய அயிட்டம் இல்லை
என்று அரசு கருதியதால், அந்த கடைகள் மே 4 ந் தேதி தான்
திறக்கப்படுமாம்...!!

-
அதனால் அதுவரை எனது பதிவுகளில் எழுத்துப்பிழை காணப்பட்டால்
ஈகரை வாசகர்கள் திருத்தி வாசித்துக்கொள்ள கோரப்படுகிறார்கள்..!!


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by சக்தி18 on Sat Apr 25, 2020 6:37 pm

அய்யய்யோ எழுத்துப் பிழை என சுட்டிக் காட்டி சொல்லவில்லை ராம் சார்.உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கா என எண்ணியே பதிவிட்டேன்.இப்போதெல்லாம் எப்படியெல்லாம் பெயர் போடுகிறார்கள்.ஈகரையிலேயே எப்படியெல்லாம் பெயர் வருகிறது.
அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி 1757813334
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2074
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by T.N.Balasubramanian on Sat Apr 25, 2020 6:51 pm

[quote="ayyasamy ram"]
-
ஏபரல் 9 ந் தேதி என்னுடைய மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது
மூக்கு கண்ணாடி தேவை என்பது அத்தியாவசிய அயிட்டம் இல்லை
என்று அரசு கருதியதால், அந்த கடைகள் மே 4 ந் தேதி தான்
திறக்கப்படுமாம்...!!

-
ராம், இதற்கு முன் உபயோகப்படுத்திய கண்ணாடி வீட்டில் இருந்தால் 
அதை உபயோகப்படுத்தவும்.
வீட்டை விட்டு வெளியே போயிருக்கமாட்டீர்கள்.வீட்டிலேயே நீங்கள் அதிகம் புழங்கும் 
இடங்களில் தேடவும்.
அல்லது அரை காசு அம்மனுக்கு வேண்டிக்கொள்ளவும்.(நம்பிக்கை இருந்தால்)

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Apr 25, 2020 9:23 pm

@சக்தி18 wrote:அய்யய்யோ எழுத்துப் பிழை என சுட்டிக் காட்டி சொல்லவில்லை ராம் சார்.உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கா என எண்ணியே பதிவிட்டேன்.இப்போதெல்லாம் எப்படியெல்லாம் பெயர் போடுகிறார்கள்.ஈகரையிலேயே எப்படியெல்லாம் பெயர் வருகிறது.
அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1318219
-

உங்கள் மறுமொழியின் நோக்கம் புரிந்தே
நான் விளக்கம் அளித்தேன்!!
அதனால் மன்னிக்க வேண்டிய குற்றம் ஏதமில்லை!!

-
ஒரு நகைச்சுவை:-
----------------
ஒரு செல்வந்தர் புதிதாக பொன்னாலான காப்பினை
கையில் கட்டியிருந்தாராம். ஆனால் அது குறித்து
யாருமே விசாரிக்காதது ரொம்ப வருத்தமாக போய்விட்டது.
-
சிறிய வைக்கோல் போருக்கு தீ வைத்து விட்டார்...
தீயை அணைக்க வந்த கூட்டத்தில் ஒருத்தி மட்டும்
தீ ஜவாலையில் அவரது கையில் கட்டியிருந்த
பொன் காப்பு ஜொலித்தது கவனித்து, அது குறித்து
விசாரித்தாளாம்....!
-
ஆமாம், இது புதிசுதான்...யாருமே விசாரிக்காததால்
ஒரு வைக்கோல் போர் நஷ்டமாகி விட்டது என்றாராம்!
-
--------------------------------
நீதி:-

நம்ப லாப நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள உறவு தேவை!!


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி Empty Re: அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum