ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இலையுதிர் காடு
by nsatheeshkumar Today at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
by சக்தி18 Today at 7:18 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by M.Jagadeesan Today at 6:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Anvar@Erode Today at 6:29 pm

» கடல் கொண்ட தென்னாடு
by Anvar@Erode Today at 6:22 pm

» இசை ஆரவாரம் இல்லா மிக மெல்லிய பாடல்கள் - கே.வி.மகாதேவன்
by ayyasamy ram Today at 5:22 pm

» அதிமுகவில் உட்கட்சி பூசலா?
by M.Jagadeesan Today at 5:10 pm

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 4:52 pm

» கடலூர் மாவட்டத்தில் கொரோனா -எச்சரிக்கை பதிவு !
by ayyasamy ram Today at 4:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
by Dr.S.Soundarapandian Today at 4:42 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by sncivil57 Today at 4:40 pm

» காபி தூளால் காந்தியின் வரைபடம்; கின்னஸ் முயற்சியில் சென்னை ஓவியர்
by ayyasamy ram Today at 4:09 pm

» கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Today at 4:07 pm

» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
by ayyasamy ram Today at 4:05 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Today at 3:58 pm

» கடாரம் - மாயா
by sncivil57 Today at 3:06 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Anvar@Erode Today at 2:01 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Anvar@Erode Today at 1:49 pm

» ஜூேலேகா tamil novel pdf vendum
by Anvar@Erode Today at 1:42 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by சக்தி18 Today at 1:17 pm

» பீஷ்மர் சொன்ன கதை
by ayyasamy ram Today at 1:02 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43 pm

» புகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 12:38 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:21 pm

» ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
by சக்தி18 Today at 12:14 pm

» பாராட்டின் பலம்!
by ayyasamy ram Today at 12:12 pm

» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:30 am

» கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது
by ayyasamy ram Today at 11:28 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by Muthumohamed Today at 11:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:47 am

» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

Admins Online

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்!

Go down

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Empty கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்!

Post by ayyasamy ram on Wed Jun 03, 2020 4:42 pm

‘இந்த உலகில், பிறந்தது முதற்கொண்டே இன்ப-துன்பங்கள்,
நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே
இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே
ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும்
என்று எண்ணுவது பேதைமை.

வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும்
காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு
எப்போதும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும்
துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.

வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம்
இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத
வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக
உறக்கம் வரும்.’

‘பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான்
சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும்.
பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள்
சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான்.

அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர்.
அரச சுகங்களையும் வறுமையையும் துலாக்கோலில்
நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது’
என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர்
தருமருக்கு உபதேசித்தார்.

மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த
நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள்
பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும்
ஊழிக்கூத்தாடின.

கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள்
அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப்
பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.

ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம்,
தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. ‘பிள்ளைகளையும்
உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில்
பெரும் தோல்வியாகப் படுகிறது. நம் வலிமையின் மீது
நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த
ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.

நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின்
மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது’
என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.

இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன
வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல்
ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை
இல்லை.

இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின்
சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை
இழக்கிறான். துன்பம் வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு
பிறக்கிறது.

இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன.
துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத
இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப்
பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம்.

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில்
மூழ்கியே தீரவேண்டும்.

புழு… தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச்
சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது
போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி,
அதில் விழுந்து அல்லல்படுகிறோம்.

புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச்
சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக
வெளிப்படுகிறது.

நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல்,
அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள்
துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும்
-
-----------------------
புல்லாங்குழலாகும்.
படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59647
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum