ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Today at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Today at 9:44 am

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை01 Jul 2018ShareFacebookTwitter
by ayyasamy ram Today at 9:33 am

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by ayyasamy ram Today at 9:18 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Today at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:56 am

» சாம்பிராணி போடலாமா?
by M.Jagadeesan Today at 8:54 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Today at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Today at 8:46 am

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by ayyasamy ram Today at 8:42 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by ayyasamy ram Today at 8:39 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Today at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

Admins Online

தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Reply to topic

Go down

best தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by BookzTamil on Thu Jun 11, 2020 12:29 am

தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF] %25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%2Bbooks


டவுன்லோடு செய்வதில் சந்தேகம் ஏற்படின் வீடியோ காணவும் :- https://youtu.be/Hkj1wbGCw0w

[10/06, 9:41 pm] : அறிவியல் துளிகள்! பாகம் 1 முதல் 6 வரை

நூலாசிரியர்: ச.நாகராஜன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: அறிவியல், கட்டுரைகள், கல்வி, விஞ்ஞானம்

நூல் குறிப்பு:

வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடர் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! இதில் அறிவியல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மானுடம் இறப்பின்றி உயிர் வாழ அவதார் ஆராய்ச்சி, உள்ளத்திற்கு இசைவான இசை தரும் நோயற்ற வாழ்வு என்னும் கட்டுரை, இளமையோடு நூறு வயது வாழ்வது எப்படி?, செவ்வாயில் க்யூரியாஸிடி, மனித குலத்தையே மாற்றப் போகும் அற்புதக் கண்டுபிடிப்புகள், மின்சாரப் போர், சோதனைக்கூடத்தில் மிருகங்கள், கடவுளின் சூதாட்டம் பற்றிய அறிவியல் மேதைகளின் கருத்துப் போர் என்ப போன்ற மனித குலம் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் தகவல்கள் சார்ந்த கட்டுரைகள் இனிய தமிழில் இதில் இடம் பெற்றுள்ளன.

டவுன்லோடு
[10/06, 9:45 pm] : கடல்புரத்தில்

நூலாசிரியர்: வண்ணநிலவன்

நற்றிணை பதிப்பகம்

மொழி : தமிழ்

நூல் வகை: நாவல், கதைகள்

நூல் குறிப்பு:

கடல்புரத்தில் வாழும் ஒரு மீனவ கிறித்துவக் குடும்பத்தின் கதை. பிலோமியின் நிறைவேறாத காதலின் வழியே, குருஸுவின் உலகத்திற்கும் அவரது மகன் செபஸ்தியின் உலகத்திற்கும் இடையேயான தலைமுறை இடைவெளியின் வழியே, ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டம், வன்மம், உறவு, துரோகம் என பல உணர்வுகளை மையமாக வைத்துச் சுழலும் நாவல்.

‘கடல்புரத்தில்' நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான; எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருக்கிறது அவர்களுக்கு.

வாசிக்க, வாசிக்கப் பல தகவல்களை அள்ளித் தரும் இந்நாவல் என்னளவில் மகத்தான புனைவுதான். ஒவ்வொருவருக்கும் ‘கடல்புரத்தில்' பல அரிய விசயங்களைக் கற்றுத்தருகிறது.

டவுன்லோடு
[10/06, 9:50 pm] : எம்.எல்.

நூலாசிரியர்: வண்ணநிலவன்

நற்றிணை பதிப்பகம்

மொழி : தமிழ்

நூல் வகை: நாவல், கதைகள்

நூல் குறிப்பு:

சொல்வனம் இதழில் தொடராக வந்த எம்.எல். தற்போது நூல் வடிவில் வெளியாகியுள்ளது.

எம்.எல். மிக எளிமையான, வார்த்தைகளால் வதம் செய்யாமல் எழுதப்பட்டுள்ளது. நாவல் தொடங்கும்போதே அது 1969 காலகட்டத்தில் நடக்கும் கதையென சொல்லிவிடுகிறார்.

படித்து விட்டு எந்த வேலைக்கும் போகாத இளைஞர்களை எப்படி ஓர் இயக்கம் மூளை சலவை செய்து தன்வசமாக்கிக் கொள்ள முயல்கிறது என்பதை நாவல் தெளிவாக சொல்கிறது...

டவுன்லோடு
[10/06, 9:52 pm] : மறக்கமுடியாத மனிதர்கள்

நூலாசிரியர்: வண்ணநிலவன்

கிழக்கு பதிப்பகம்

மொழி : தமிழ்

நூல் வகை: கட்டுரைகள்

நூல் குறிப்பு:

எழுத்துலகில் மறக்க முடியாத படைப்புகளைத் தந்த வண்ணநிலவன் சில மறக்க முடியாத நட்புகளைப் பற்றியும் பேசுகிறார்.

இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் வண்ணநிலவன் தன் வாழ்வில் சந்தித்த தன் மீது செல்வாக்கு செலுத்திய ஆளுமைகள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கும் தொகுப்பு இது.

வல்லிக்கண்ணன், ‘விக்ரமாதித்யன்’ என்ற நம்பிராஜன், வண்ணதாசன், ஜே.பி. என்ற பா. ஜெயப்பிரகாசம், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், திருலோக சீதாராம், நா. வானமாமலை, வெ. கிருஷ்ணமூர்த்தி, தி.க.சி என்ற தி.க. சிவசங்கரன், ஜி.எம்.எல். பிரகாஷ், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், ‘அம்பை’ (சி.எஸ். லெட்சுமி), அசோகமித்திரன், ‘தீபம்’ நா. பார்த்தசாரதி, க.நா.சு., தி. ஜானகிராமன், சோ ஆகியோர் பற்றிய தன்னுடைய அனுபவங்களை, நினைவுகளை இந்த நூலில் உணர்வுபூர்வமான நடையில் விவரித்திருக்கிறார்.

டவுன்லோடு
[10/06, 9:55 pm] : நட்புக் காலம்

நூலாசிரியர்: அறிவுமதி

விஜயா பதிப்பகம்

மொழி : தமிழ்

நூல் வகை: கவிதைகள்

நூல் குறிப்பு:

ஆண் - பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதை நூல் ‘நட்புக் காலம்’. ஆண் பெண் நட்பை இவ்வளவு அழகாக யாரும் சொல்லவில்லை. ஆண் பெண் நட்பின் இலக்கணம், மற்றவர்கள் அவர்களை நோக்கும் விதம் எல்லாவற்றையும் மிக அழகாக கூறியுள்ளார்.

கண் பார்த்துப் பேசினாலே கடலை, காதல் எனத் தூற்றித்திரியும் உலகத்தில் நட்பின் உண்மையை ‘நச்’ எனச் சொல்லியுள்ளார். கவிதைக்கு மேலும் மெருகூற்றி மகுடம் சேர்க்கின்றன: படங்களும், புத்தகத்தின் ஓவியங்களூம்.

டவுன்லோடு
[10/06, 10:04 pm] : சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! - பாகம் 1 முதல் 4 வரை

நூலாசிரியர்: ச.நாகராஜன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: அறிவியல், விழிப்புணர்வு கட்டுரைகள், கல்வி

நூல் குறிப்பு:

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமை!

பல்வேறு தலைப்புகளில் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்த நூல். ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அரிய தகவல்கள் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமயமாதல், மரங்கள் அளிக்கும் நன்மைகள், டாக்சிக் மாசுகள், வீடுகளில் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு போன்ற நம் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது இன்றியமையாதது!

டவுன்லோடு
[10/06, 10:33 pm] : ஆங்கிலம் அறிவோமா?

நூலாசிரியர்: ச.நாகராஜன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: கல்வி, கட்டுரைகள்

நூல் குறிப்பு:

ஆங்கிலம் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல்!

ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிறந்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது. அனாக்ராம், கிராஸ்வேர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets, Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் அருமையான பரிமாணங்களையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற, ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்

டவுன்லோடு
[10/06, 10:36 pm] : ரெயினீஸ் ஐயர் தெரு

நூலாசிரியர்: வண்ணநிலவன்

கிழக்கு பதிப்பகம்

மொழி : தமிழ்

நூல் வகை: நாவல், கதைகள்

நூல் குறிப்பு:

ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன்.

எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன்.

துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளிவந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.

டவுன்லோடு
[10/06, 10:39 pm] : பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

நூலாசிரியர்: ச.நாகராஜன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: அறிவியல், கட்டுரைகள், கல்வி, விஞ்ஞானம்

நூல் குறிப்பு:

நவீன அறிவியலாலும் விளக்க முடியாத விஷயங்களுள் ஒன்று பறக்கும் தட்டு! அமெரிக்காவில், பல லட்சம் டாலர் செலவழித்துப் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘ப்ராஜக்ட் ப்ளூ புக்’ என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வின் முழு விவரங்கள், பறக்கும் தட்டுக்களைப் பார்த்தோர், அயல் கிரகவாசிகளுடன் பேசியோர், அவர்களால் கொண்டு செல்லப்பட்டோர் என ஏராளமான அதிசய நிகழ்வுகளை விளக்கும் அரிய நூல்!

‘கலைமகள்’ ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் “நூலாசிரியரின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி இருக்கிறது” எனப் பாராட்டுகிறார். பறக்கும் தட்டுக்கள், அயல்கிரகவாசிகள் பற்றியெல்லாம் அறிய விரும்புவோருக்கு ஓர் அற்புதக் கருவூலம்!

டவுன்லோடு
[10/06, 10:42 pm] : பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

நூலாசிரியர்: ச.நாகராஜன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: அறிவியல், கட்டுரைகள், கல்வி, விஞ்ஞானம்

நூல் குறிப்பு:

பிரமிடின் அபூர்வச் சக்திகள் ஏராளம்! அதன் மர்மங்களையும் வேறு சில அதிசயங்களையும் சொல்லும் கட்டுரைத் தொகுதி!

உறைபனிச் சடலங்கள், நடமாடும் பிணம், ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மனித ரத்தத்தில் நிஜமாகவே குளித்த மகாராணி, ஜெயிலுக்கு வந்த பேய் என நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத பல அதிசய நிகழ்வுகளை விளக்கும் பரபரப்பான நூல்! படிக்கத் தவறி விடாதீர்கள்!

டவுன்லோடு
[10/06, 10:44 pm] : புதுமை கண்ட பேரறிஞர்கள்

நூலாசிரியர்: டாக்டர் விஜயராகவன்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: வரலாறு, சரித்திரம், கட்டுரைகள், கல்வி, அறிவியல்

நூல் குறிப்பு:

ஆற்றல் மிகு 45 விஞ்ஞானிகளின் வரலாற்றை அழகுத் தமிழில் சரளமாக, எளிமையாக இந்த நூல் தருகிறது. கலிலியோ மாதா கோவிலில் கண்ட விளக்குகள், ஆப்பிள் விழுந்ததை நியூடன் கண்டது, கெக்குலே பென்சீன் அமைப்பைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்த கனவு என சுவையான பல சம்பவங்களை நூலில் காண முடிகிறது.

உலகளாவிய அளவில் கணினித் தொழில்நுட்பம் பரந்து விரிந்திருக்கும் இன்றைய நிலையில் இந்த நூலை அனைவரும் விரும்பி வரவேற்பர். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் நூல். இதன் மூலம் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து உத்வேகம் பெறமுடியும். அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் தம் வாழ்வை வகுக்க இயலும். பரந்த அறிவியல் துறையின் அகல, நீள, ஆழத்தையும் பரிமாணங்களையும் உணர முடியும்.

டவுன்லோடு
[10/06, 11:10 pm] : ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் - பகுதி 1 முதல் 4 வரை

நூலாசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: கதைகள், சிறுகதைகள்

நூல் குறிப்பு:

பிரபல வார, மாத இதழ்கள் பலவற்றில் பிரசுரமான பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு. ஆசிரியரின் திறனே நிகழ்வுகளை அவரது பாணியில் அனாயசமாய்க் கையாளும் கலையில்தான் அமைந்திருக்கிறது. அத்தனை சிறுகதைகளும் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுபவை.

டவுன்லோடு
[10/06, 11:16 pm] : மாம்பழச்சாலை

நூலாசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: கதைகள், சிறுகதைகள்

நூல் குறிப்பு:

மனித உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வாசித்துப் பார்க்கையில் கிடைக்கும் சுவை அலாதியானது. கோரியின் எழுத்துகளில் கிடைக்கும் அந்த சுவையே இத்தொகுதிக்கு தலைப்பாயும் அமைந்துள்ளது!

உயிருடன் உலவும் மாந்தர்களும் அவர்தம் சுற்றுப்புறமுமே ஆசிரியரின் கதைக் களன்களாக உள்ளன. மிக இலகுவாய் செல்லும் கதைகளின் இறுதியில் ஒரு யதார்த்தமான உண்மை முகத்தில் அறைந்து ‘அட!’ போட வைக்கிறது. வடக்கு வாசல், கவிதை உறவு, யுக மாயினி உள்ளிட்ட பல இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.
டவுன்லோடு
[10/06, 11:19 pm] : தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

நூலாசிரியர்: டி.கே.இரவீந்திரன்

விகடன் பிரசுரம்

மொழி : தமிழ்

நூல் வகை: தமிழக வரலாறு, சரித்திரம்

நூல் குறிப்பு:

தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்கு உள்ள இடத்தினைப் போன்றே களப்பிரர் என்பாருக்கும் இடமுண்டு. தமிழகத்தின் இருண்ட காலம் களப்பிரர்களின் காலம் என்று சொல்லப்படுகிறது.

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள். களப்பாளர் என்றும் இவர்களை வரலாற்றாளர்கள் குறிப்பிடப் படுவதுண்டு. தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்ததாகவே தெரிகிறது. எனினும், தமிழ்மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக்காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களின் மூலம் என்ன? தமிழகத்தில் இவர்கள் வலிமைபெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர்கள் யார்? எவர்? என அத்தனை விவரங்களையும், கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர்.

களப்பிரர் காலத்தை விளக்கும் கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் போன்றவற்றை திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். களப்பிரர் காலத்து சமயங்கள், களப்பிரரின் நாணயங்கள், களப்பிரர் காலத்து மொழி வளர்ச்சி, சமயங்கள், கலைவளர்ச்சி என களப்பிரர்களைப் பற்றிய அரிய தகவல்களை ஆய்வு நோக்கில் இந்த நூல் சொல்கிறது.
தமிழக வரலாற்றில் தவிர்க்கமுடியாத அரசர்களான களப்பிரரை மட்டுமல்ல தமிழகத்தின் வரலாற்றையும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.

டவுன்லோடு
[10/06, 11:22 pm] : ஆனந்த விகடன் பொக்கிஷம்

நூலாசிரியர்: விகடன் பிரசுரம்

விகடன் பிரசுரம்

மொழி : தமிழ்

நூல் வகை: பொது அறிவு, தகவல் களஞ்சியம், கட்டுரைகள்

பக்கங்கள்: 751

நூல் குறிப்பு:

இந்தப் பொக்கிஷத்தில்! காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்!

டவுன்லோடு
[10/06, 11:26 pm] : 101 ஒரு நிமிடக் கதைகள்

நூலாசிரியர்: விகடன் பிரசுரம்

விகடன் பிரசுரம்

மொழி : தமிழ்

நூல் வகை: கதைகள், சிறுகதைகள்

பக்கங்கள்: 191

நூல் குறிப்பு:

ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி. அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை.

வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும்.

ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்

டவுன்லோடு
[10/06, 11:29 pm] : வெட்டாட்டம்

நூலாசிரியர்: ஷான் கருப்புசாமி

யாவரும் பப்ளிஷர்ஸ்

மொழி : தமிழ்

நூல் வகை: நாவல், அரசியல், கதைகள்

பக்கங்கள்: 232

நூல் குறிப்பு:

ஒரு மண்ணின் சரித்திரம் எப்போதுமே அதன் மன்னர்களின் சரித்திரம்தான். மன்னர்கள் இல்லாமல் சரித்திரம் இல்லை. மன்னராட்சி ஒழிந்துவிட்டதாக சொல்வதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. இப்போதைய மக்களாட்சியிலும் மன்னர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களின் வடிவம் மட்டும் மாறிவிட்டது. அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒவ்வொருவரும் இங்கே மன்னராக மாறிவிடுகிறார்கள். அதன்பின் தலையிலிருந்து மனதுக்கும் மனதிலிருந்து தலைக்கும் இடம் மாறியபடி இருக்கும் அவர்கள் கிரீடம் எப்போதும் இறங்குவதே இல்லை. அப்படியான மன்னர் குடும்பம் ஒன்றின் கதைதான் இது. இதை எழுதுவதற்கான உந்துகோலாக இருந்த நிகழ்கால, இறந்தகால அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் செயல்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

- ஷான்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

டவுன்லோடு
[10/06, 11:31 pm] : பசுமை பூமி

நூலாசிரியர்: கவிதா பிரகாஷ்

நிலாச்சாரல் லிமிடட்

மொழி : தமிழ்

நூல் வகை: விழிப்புணர்வு கட்டுரைகள்

பக்கங்கள்: 23

நூல் குறிப்பு:

பசுமை பூமி என்ற இந்த மின்னூல் மூலம் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனைத் தடுக்க நாம் எளிதாய் பின்பற்றக் கூடிய வழிமுறைகளையும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

உலகில் மின் ஆற்றலின் நுகர்வுத் திறன் பன்மடங்கு பெருகி விட்டது. மேலதிக உற்பத்தி பூமியை மாசுபடுத்துவது ஒருபுறமிருக்க, பூமியின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனத்தைத் தள்ளியிருக்கிறது. இருக்கும் வளங்களை சிக்கனமாய் உபயோகித்தாலே அது இப்பூவுலகிற்குச் செய்யும் பேருதவி என்று அதற்கான வழிமுறைகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர். அதே போல, சுருங்கி வரும் நீர்வளத்தைக் காக்க, நீர் சேமிப்பு முறைகளும் விரிவாய் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

டவுன்லோடு
[11/06, 12:06 am] : பரிணாம வளர்ச்சி - பூமியில் உயிரினங்கள் உருவான கதை

நூலாசிரியர்: ஜோவனா கோல்
தமிழில் : குமேரேசன் முருகானந்தம்

மொழி : தமிழ்

நூல் வகை: சிறுவர் நூல், கல்வி, அறிவியல், சரித்திரம்

பக்கங்கள்: 31

நூல் குறிப்பு:

"பரிணாம வளர்ச்சி" எனும் படிப்படியான வளர்ச்சியைப்பற்றி குழந்தைகளுக்கான ஒரு ஆகச்சிறந்த புத்தகம்.

டவுன்லோடு
[11/06, 12:09 am] : மம்மிகள் - எகிப்திய உருவாக்கம் (8 முதல் 12 வயதினருக்கு)

நூலாசிரியர்: அலிக்கி
தமிழில் : குமேரேசன் முருகானந்தம்

மொழி : தமிழ்

நூல் வகை: சிறுவர் நூல், கல்வி, அறிவியல், சரித்திரம்

பக்கங்கள்: 30

நூல் குறிப்பு:

பல அடுக்குகளில் துணிப் பட்டைகளால் சுற்றி மறைக்கப்பட்டு, விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பூட்டப்பட்ட மம்மி ஓர் புதிர். புராதன எகிப்தியர்கள் ஏன் இறந்தவர்களை பதப்படுத்தி என்றென்றைக்கும் இருக்குமாறு போர்த்தி வைத்தனர்? மேலும், அதை எவ்வாறு செய்தார்கள்?

சவமானது, பதப்படுத்துவோரின் மேசையில் தயார் செய்யப்பட்டது முதல் கடைசியாக மம்மி கல்லறையில் அடைக்கப்பட்டு அதன் சாசுவதமான புதிய வாழ்க்கைக்கு செல்வது வரையிலான எழுபது நாட்கள் எடுத்துக்கொள்ளும் செய்முறையை பின்பற்றி செய்த விபரத்தை படிப்படியாக விவரிக்கிறது

டவுன்லோடு
avatar
BookzTamil
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jun 11, 2020 11:01 am

எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டேன், மிக்க நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4506
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1404

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by i6appar on Fri Jun 12, 2020 7:33 am

Nandri
i6appar
i6appar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by Kadirmarun on Sat Jun 13, 2020 6:01 pm

நன்றி
Kadirmarun
Kadirmarun
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 13/06/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by கண்ணன் on Thu Jul 02, 2020 7:27 am

தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF] 103459460 தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF] 1571444738
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 270
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by velmarun on Sun Jul 12, 2020 1:00 pm

Link ஓப்பன் ஆகவில்லை நண்பர்களே
velmarun
velmarun
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 18/10/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum