ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:41 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 6:01 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

Admins Online

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:00 pm

சியாமளா ரமேஷ்பாபு… பட்டிமன்றப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் என்பதையும் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரிடமும் நம்பிக்கைப் பயிர் வளர்ப்பவர்.

அறம் சார்ந்த சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காகப் பேச்சாலும் எழுத்தாலும் பாடுபடுபவர். பாரம்பர்யத்துக்கும் நவீனத்துக்கும் உறவுப்பாலம் அமைக்கும் சிந்தனையாளர். அவரை `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்.

ஆன்மிகம் என்பது தனக்குள் பள்ளி நாள்களில் பதியம் போடப்பட்டு இன்று விருட்சமாகக் கிளை பரப்பியிருக்கும் அனுபவங்களைப் பகிந்துகொண்டார்.

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Vikatan%2F2020-06%2F9fb0cfa5-5596-4783-84d8-69da5cda94f0%2Fspiritual_candle_meditation_spirituality_religion_flame.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty Re: “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:01 pm

““செவ்வாய், வெள்ளி கட்டாயம் தலைகுளித்தே ஆக
வேண்டும். அதுவும் வீட்டில் அரைத்த சீயக்காயும்,
வடிகஞ்சியும் கலந்து. மாலை மணி ஆறு அடித்ததும் எங்கே
விளையாடிக்கொண்டிருந்தாலும், `டாண்னு’ வீட்டுக்கு
வந்து, கால், கை, முகம் அலம்பி, சுவாமிக்கு விளக்கேற்றி,
தெரிந்த ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுத்தான் வீட்டுப்
பாடமே எழுதவேண்டும்.

எங்கள் தெருவில் பசுஞ்சாணம் எங்கிருந்தாலும் தேடி எடுத்து,
வாளியில் நிரப்பி, காலை ஆறுமணிக்குக் கரைத்து வாசல்
தெளிப்பது வீட்டில் என் இலாகா. `சாணமிட்டு மெழுகின
வாசலுக்குத்தான் லஷ்மி வருவா’ என்பார் பாட்டி. துர்க்கைக்கு
எலுமிச்சை விளக்கு போட அம்மா வேண்டிக்கொண்டு
கோயிலுக்குச் சென்ற போதெல்லாம் கூடவே சென்றதால்,
கோயில் பிரகாரங்களும், கர்ப்பகிரக வாசமும் மனதுக்குள்
ஆழமாய்ப் பதிந்துபோயின.

வெள்ளிக்கிழமைதோறும் வீட்டிலேயே தலைமுறைகளாகச்
செய்து வந்த அம்பாள் வழிபாட்டை அப்பாவும் செய்ததால்,
அம்பாள் மீதான பக்திப் பாடல்கள் அத்துப்படியாயின.

பக்கத்துத் தெருவில் ரிட்டையர்டு போஸ்ட்மாஸ்டர் தாத்தா
ஆரம்பித்த ஸ்லோக வகுப்புகளில் விளையாட்டாகச் சேர்ந்து
கொண்டாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம், ருத்ரம் முதல் மந்திர
புஷ்பம் வரை அனைத்தும் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்,
தெளிவாய்ச் சொல்லுமளவுக்குக் தலைகீழ் மனப்பாடம்.

அடிக்கடி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பக்திப்
படங்களைப் பார்த்ததன் விளைவாக, `நம் கண் முன்னும் சாமி
என்றைக்காவது நிஜமாகவே வந்து நிற்கும்’ என்ற எண்ணமும்
அவ்வப்போது மனதில் லேசாய் எட்டிப்பார்த்தது.

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Vikatan%2F2020-06%2F1ddba722-1258-4913-abee-ee8a4f96e5d7%2F5.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
Syamala Ramesh babu


Last edited by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:06 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty Re: “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:03 pm

`எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் கடவுளை
வேண்டிக்கொண்டு தொடங்கு. நாம் நினைத்தது நடந்தால்,
கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். நடக்காவிடில் நம்
பிரார்த்தனையில் ஏதோ பிழை இருக்கிறது.

வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்.
வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால் திருஷ்டி
சுத்திப் போடவேண்டும்’ – பால்ய பருவத்தில் ஆன்மிக
அறிமுகம் இவ்வாறெல்லாம்தான் எனக்குள் விதையாய்
விழுந்திருந்தது.

வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வுகள் மாறும்போதும், சூழல்களைப்
பல கோணங்களிலிருந்தும், பலரின் கோணங்களிலுமிருந்தும்
பார்க்கும்போதும், `ஆன்மிகம்’ அதுவரை இல்லாத வேறொரு புது
உருவம் எடுத்ததை உணரமுடிந்தது.

`இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலைகின்றாய் ஞானத்தங்கமே’ – இந்த வரிகளைச்
சிலிர்ப்பூட்டும் சில நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் காதுகளுக்குள்
ஒலிக்கச் செய்திருக்கின்றன.
-
“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Vikatan%2F2020-06%2F362ea3b7-1904-45bd-90a3-a5a9e2375c23%2Fdownload.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

உடல் நலக்குறைவால், பதினொன்றாம் வகுப்பில் பல நாள்களை
மருத்துவமனைக் கட்டிலிலேயே கழித்தேன். என் வகுப்பு மாணவர்கள்
அனைவரும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்துச் சென்ற
அந்நாள், பொக்கிஷமானது.

`உனக்கு ஒண்ணும் ஆகாது. சீக்கிரமே திரும்பவும் ஸ்கூலுக்கு
வந்துடுவே நீ’ என நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி, எனக்காகக்
கண்களை மூடிச் சிறப்புப் பிரார்த்தனை செய்து, பைபிள் ஒன்றை
என் தலையணை அடியில் வைத்தாள் என் வகுப்புத்தோழி.

நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா?
ஆன்மிகம் மீதான எனது கண்ணோட்டத்தை, புரிந்துணர்வை
விரிவாக்கியவள் அவள்தான்.

இப்போது முதுகலை படிக்கும் என் மகனுக்கு அப்போது ஏழு வயது.
ஒரு நள்ளிரவு ரயில் பிரயாணத்தில், அப்பர் பெர்த்திலிருந்து,
தூக்கத்தில் பொத்தென அவன் கீழே விழுந்தபோது நான் பயத்தில்
உறைந்துபோய்விட்டேன். என்னையும் என் கணவரையும் தேற்றி,
என் குழந்தைக்காக அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே பயணம்
முடியும்வரை, விடியற்காலைவரை தொழுகை செய்த மனிதரின்
பிரார்த்தனை, பேதங்கள் கடந்தது.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty Re: “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:04 pm


“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Vikatan%2F2020-06%2F455c9ed1-0d7b-4376-a4d7-62eb256c599b%2F4395360920_acdfde4996_z.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
நிதர்சன ஆன்மிகத்துக்கான புது விளக்கம் அன்று எனக்குக்
கிடைத்தது. கால்நடை மருத்துவர் வருகைக்காக அவர் க்ளினிக்
வாசலில் கண்ணீரோடு கையில் ஒரு நாய்க்குட்டியுடன் நின்ற
தம்பியிடம், `என்னாச்சுப்பா?’ என்றேன்.

`என்னான்னே தெரியல… ரெண்டு நாளா வாயே திறக்க
மாட்டேங்குது. தண்ணிகூட குடிக்கல. கீழ்த்தாடை வீக்கமா இருக்கு…’
என்றவன் அழுகையை அடக்க முடியாமல் விம்மினான்.

அவனைத் தேற்ற, `மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்குப்பா…
செல்லப்பிராணிகளும் வீட்ல ஒருத்தரா ஆகிடுதுங்கதானே…’
என்றேன்.

`இல்லீங்க இது நாங்க வளர்க்கிற நாய்க்குட்டி இல்ல. எங்க தெருவுல
இருக்குற குட்டி. தினம் சாப்பாடு வெப்பேன். அப்படியே பழகிடுச்சு’
என்றான் கண்ணீர் கசிந்திருந்த விழிகளுடன்.

எல்லா உயிரையும் சமமாகப் பாவிப்பது, தனதல்லாத ஒன்றிற்காகவும்
தயவு காண்பிப்பது… என்ன ஓர் அழகான மனது! இந்த சூட்சுமத்தைக்
கண்ணிமைக்கும் நொடிக்குள் நயமாய்ப் புரியவைத்த அந்தத்
தம்பிதான் என் ஆன்மிக குரு.

ஒரு வாரம் என லீவ் சொல்லிவிட்டு, இரண்டு மாதங்கள் சொல்லாமல்
விடுப்பெடுத்த பணிப்பெண், தீபாவளிக்கு இரண்டு நாள்கள் முன்னதாக
மீண்டும் வந்தார். கோபம் கண்ணை மறைத்ததால் மனிதம் சற்று பின்
வாங்கியது.

`இந்த வருஷ போனஸ் கொடுக்காம விட்டாத்தான் தெரியும்’ என்றேன்
புலம்பலாக. `ஏம்மா… ரெண்டு மாசம்தானே வரல? மீதி பத்து
மாசத்துக்கான போனஸ் தர வேண்டாமா? நீ இப்படிப் பேசவே மாட்டியே…
என்னாச்சு உனக்கு?’ என்றார் என் மாமா.

அடடா… தன்னைப்போல பிறரையும் பாவித்தல். அடைத்திருந்த
மனிதத்தின் ஊற்றுக்கண்களைத் திறந்துவைத்த என் மாமனாரிடம்
மீண்டும் ஓர் ஆன்மிகப் பாடம்.
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty Re: “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by ayyasamy ram on Thu Jun 11, 2020 12:05 pm

ரெண்டுக்கும் ஒழுங்கா துடைக்கலைன்னா தோலெல்லாம்
அரிக்கும் பாவம்…’ – மரணப்படுக்கையில் அப்பா இருந்த
நாள்களில், அவருக்கு அந்தப் பணிவிடைகளைச் செய்த
கைகளுக்கு எப்படி நன்றி சொல்வது?

முகம் சுளிக்காது, நடு இரவு, அதிகாலை எனக் கூப்பிட்ட குரலுக்கு
ஓடி வந்து, `எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காங்க. உங்க அப்பா,
எங்கப்பாவா இருந்தா செய்யமாட்டேனாக்கா? எப்பன்னாலும்
ஒரு போன் பண்ணுங்கக்கா வர்றேன்’ என ஒவ்வொரு முறையும்
தவறாமல் இதமாக உத்தரவாதம் அளித்த அப்பாவின்
அபிமானியின் முகம், நினைவில் நீங்காத சித்திரம்.

செய்நன்றி மறவாமைகூட ஆன்மிகத்தின் ஓர் அவதாரம்தானோ?
-
--------------------
-எஸ்.கதிரேசன்
நன்ற- இகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு Empty Re: “நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!” – சியாமளா ரமேஷ்பாபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum