ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

Admins Online

கண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா?

Go down

கண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா? Empty கண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா?

Post by ayyasamy ram on Tue Jun 23, 2020 3:18 pm

கண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா? 37a
-


நம் வீட்டில் பாட்டி, தாத்தாக்கள் வெற்றிலை பாக்கு
போடுவதைப் பார்த்திருப்போம். பல் போன காலத்திலும்
கிண்ணத்தில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்து
நுணுக்கி மெல்லுவார்கள்.

எப்போதோ சிறு வயதில் தொற்றிய பழக்கம்
முதுமையானால் விடாது தொடர்ந்திருக்கும். தற்போது
உள்ள தலைமுறைக்கு வெற்றிலை பாக்கு எனும்
தாம்பூலம் தரிக்கும் பழக்கம் பெரும்பாலும் கிடையாது.

அரிதாய் சிலர் எப்போதாவது மெல்லுகிறார்கள்.
மறுபக்கம், சிலர் கண்ட கண்ட குட்காவையும் போட்டு
உடலை அழித்துக்கொள்கிறார்கள். அளவாய் வெற்றிலை
பாக்கு தரிப்பது உடலுக்கு கெடுதல் இல்லாத பழக்கம்தான்.

ஆனால், புகையிலையுடன் சேர்த்து மெல்வது
ஆரோக்கியமற்றது. புகையிலை எந்த வடிவிலும்
உடலுக்கு உகந்தது அல்ல. சரி இந்த வெற்றிலை பாக்கு
மெல்லும் வழக்கம் எப்போது வந்தது.

இதன் வேர்களைத் தேடிச் சென்றால் அது கிட்டதட்ட
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நீள்கிறது.
சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி கோவலனுக்கு
வெற்றிலை பாக்கு மடித்துக்கொடுத்த செய்தி ஒன்று
வருகிறது.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரகத்சம்ஹிதை என்ற
நூலில் வெற்றிலையின் மகிமை பற்றிய பாடல்கள்
உள்ளன.

‘தாம்பூலம் காம உணர்வைத் தூண்டும், உடலின் எழிலை
அதிகரிக்கும், புஷ்டி தரும், நட்பை கொண்டுவரும்,
களைப்பை நீக்கும்’ என்கிறது அந்நூல்.

வெற்றிலை, அடக்காய் எனும் பாக்கு, தக்கோலம், லவங்கம்,
ஜாதிக்காய் ஆகிய அடங்கிய தாம்பூலத்தை மெல்வதால்
இன்ப நுகர்ச்சி அதிகரிக்குமாம். தென்னிந்தியாவில்தான்
தாம்பூலம் தரிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது.

நாகர்ஜுனகொண்டா சிற்பங்களிலேயே வெற்றிலை
பாக்கு போன்ற நகாசுகள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
ஆகியவைதான் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டு வரும்
பிரதான பொருட்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் வெற்றிலைக்கொடி,
பாக்கு மரம் இரண்டுமே நம் நாட்டு தாவரங்கள் அல்ல.
ஆசியாவின் பிற நாடுகளிலும் தாம்பூலப் பழக்கம்
இருந்திருக்கிறது.

பசிப்பிக் தீவு மக்களுக்கு வெற்றிலை தரிக்கும் பழக்கம்
இருந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த
ஹெரடோடஸ் என்ற கிரேக்க ஞானிக்கு பாக்கு
அறிமுகமாகியுள்ளது. அதேபோல் சீனாவுக்கு கி.மு
இரண்டாம் நூற்றாண்டிலேயே மலேயாவிலிருந்து
சென்றுள்ளது.

நம்முடைய சேர நாட்டுக் கடற்கரைகள் வழியாகவே
தென்னிந்தியாவுக்கு எங்கிருந்தோ வெற்றிலை பாக்கு
வந்து சேர்ந்திருக்க வேண்டும். வாஸ்கோடகாமா கடல்
வழியாக இந்தியா வந்தபோது கள்ளிக்கோட்டையில்
வந்திறங்கி அரசரை சந்திக்கிறார்.

இதை, ‘அரசர் வெற்று உடம்பில் பட்டு அங்கவஸ்திரம்
அணிந்தபடி, தன் அரியணையில் அமர்ந்து மூலிகை
இலைகளை மென்று ‘புளிச் புளிச்’ என பக்கத்தில்
இருந்த கலையத்தில் துப்பிக்கொண்டிருந்தார்’ என்று
தன் குறிப்பில் எழுதிவைத்திருக்கிறார்.
அவர் மூலிகை இலை என்று சொல்வது
வெற்றிலையைத்தான்.
-
------------------------------
-இளங்கோ கிருஷ்ணன்
நன்றி-குங்குமம் தோழி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum