ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 9:04 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Go down

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Empty கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Post by ayyasamy ram on Sat Jun 27, 2020 3:40 pm

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Tamil_News_large_2565731

சென்னை:
செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு
கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Empty Re: கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Post by ayyasamy ram on Sat Jun 27, 2020 3:43 pm

ராயபுரத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னை:
சென்னையில் இன்று (ஜூன் 26) ஒரே நாளில் கொரோனாவால்
பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில், நேற்றுடன் (ஜூன் 26), 49 ஆயிரத்து, 690 பேர்
தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும்,
குணமடைவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி, சென்னையில், 28 ஆயிரத்து, 823 பேர் குணமடைந்து
வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்து, 136 பேர் மட்டுமே சிகிச்சை
பெற்று வருகின்றனர். 730 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக பாதிப்பு

மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி,
அதிகபட்சமாக ராயபுரத்தில், 7,211 பேருக்கும், தண்டையார்பேட்டையில்
5,989 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,655 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Gallerye_112707484_2565730
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Empty Re: கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Post by ayyasamy ram on Sat Jun 27, 2020 4:17 pm

டிரைவருக்கு கொரோனா: தெறித்து ஓடிய அமைச்சர்
-
கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Tamil_News_large_2565797
திருவண்ணாமலை; அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தன் கார் டிரைவருக்கு கொரோனா இருப்பது தெரிந்ததால், காரிலிருந்து இறங்கி அலறியடித்து ஓடினார்.


திருவண்ணாமலை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (27 ம் தேதி) , நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.காலை, 11:00 முதல் மதியம், 12:15 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், அவருடன் கலெக்டர் கந்தசாமி, ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை முடித்து, சொந்த ஊரான ஆரணி அடுத்த சேவூருக்கு, அமைச்சர் காரில் சென்றார். போளூரை கடந்தபோது, அமைச்சரின் கார் டிரைவருக்கு போன் வந்து உள்ளது.அதில் பேசியவர், 'உங்களுக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது; உடனடியாக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இதை, அமைச்சரிடம் டிரைவர் கூற, அதிர்ந்த அமைச்சர், உடனடியாக காரை நிறுத்தும்படி கூறி இறங்கி, அலறியடித்து துாரமாக ஓடினார். பின், கட்சி பிரமுகர் காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.இந்த தகவலால், அமைச்சர் மற்றும் அரசு விழாவில் பங்கேற்ற அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Empty Re: கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Post by ayyasamy ram on Sat Jun 27, 2020 8:07 pm

மதுரையில் கொரோனா: மருத்துவமனையில் 25 பேர் பலி
-
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று
(ஜூன் 27) 7 பேர் பலியாகினர். மூன்று நாளில் 25 பேர் இறந்துள்ளனர்.

மதுரையில் 650 படுக்கை வசதி கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு
மூன்று விதமான வார்டுகள் உள்ளன.

தீவிரப் பாதிப்புள்ளோரை அனுமதிக்க ஐ.சி.யூ., வார்டு, அறிகுறியற்ற
மிதமான பாதிப்புள்ளோரை கண்காணிக்க தனி வார்டு, கொரோனா
அறிகுறியுடன் வரும் பிற நோயாளிகளை அனுமதித்து பரிசோதிக்க
'சாரி' (SARI) என்னும் வார்டு உள்ளது.

ஒரு வாரமாக இந்த சாரி வார்டில் தொடர் மரணங்கள் நிகழ்கின்றன.

பரிசோதனை முடிவு வரும் முன்பே நோயாளிகள் இறப்பதால்,
'கொரோனா சந்தேக மரணம்' என அழைக்கின்றனர். முதலில் தினமும்
4 பேர் இறந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 பேர் பலியாகினர்.
நேற்று 5 பேர், இன்று 7 பேர் இறந்துள்ளனர். இதில் கொரோனாவிற்கு
இறந்தவர்களும் உள்ளனர்.
20 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவு அறிவிக்கப்படவில்லை.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரைனா பாதிப்பு - ஜூன் 27 Empty Re: கொரைனா பாதிப்பு - ஜூன் 27

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum