ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by Muthumohamed Yesterday at 11:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 10:56 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 10:51 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:23 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

» வேண்டுமா, வேண்டாமா?
by krishnaamma Yesterday at 8:03 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 8:01 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
by krishnaamma Yesterday at 7:57 pm

» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:38 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Yesterday at 4:34 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Yesterday at 11:40 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Yesterday at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Yesterday at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Sun Aug 09, 2020 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Sun Aug 09, 2020 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Sun Aug 09, 2020 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Sun Aug 09, 2020 11:20 pm

Admins Online

ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு...

Go down

 ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான  அவசியமான பதிவு... Empty ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு...

Post by ayyasamy ram on Tue Jun 30, 2020 10:54 pm


பெயர் வெளியிட விரும்பாத, சிவகங்கை மாவட்டம்,
நாட்டரசன் கோட்டை வாசகி எழுதிய கடிதம்:

ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான
அவசியமான பதிவு...

* இரவு நேரங்களில், தன்னந்தனியாக பயணம் செய்ய
நேர்ந்தால், உங்கள் கைப்பையில் மிளகாய் துாள்,
'பெப்பர் ஸ்ப்ரெ' மற்றும் குண்டூசி, இவைகளில் ஒன்றை
மறக்காமல் எடுத்து செல்லுங்கள்

* 'ஏய் ஆட்டோ...' என்றோ, 'நீ, வா, போ...' என்றோ, ஓட்டுனரை
அழைக்காதீர்; இதனால், உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்.
'அண்ணா, தம்பி...' என்றோ, முடிந்தால், 'சார்...' என்றோ
அழைக்கவும்; இதனால், உங்கள் மீது நல்ல அபிப்ராயமும்,
உடன்பிறந்த சகோதரி என்ற எண்ணமும் ஏற்படலாம்

* ஆட்டோவில் ஏறும் முன், நாம் போகும் இடத்தை தெளிவாக
கூறி, அதற்கான வாடகை பேசிக் கொள்ள வேண்டும்.
இதனால், வாடகை தகராறு ஏற்படுவதை தவிர்க்கலாம்

* நீங்கள் ஏறும் முன், ஆட்டோ டிரைவரின் பெயரையோ அல்லது
பதிவு நம்பரையோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால்,
நாம் ஏதாவது பொருளை விட்டுச் சென்றால், அந்த ஆட்டோ
நம்பரை வைத்து கண்டுபிடித்து விடலாம்

* ஆட்டோவில் ஏறிய பின், ஓட்டுனரின் காது கேட்கும்படி
சத்தமாக, உங்கள் நெருங்கிய உறவினருக்கோ, உறவினர்
இல்லாதபட்சத்தில், 'டயல்' பண்ணாமல், போனில், 'நான் இந்த
பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறி விட்டேன்;
இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவேன்...' என்று கூறவும்.

* பயணம் செய்யும்போது, ஓட்டுனரிடம், குழைந்தோ அல்லது
தேவையற்ற விஷயமோ ஏதும் பேசாமல் இருப்பது நல்லது.
ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல், நடு பகுதியில்
இருக்க வேண்டும்

* உங்கள் அரைகுறை ஆடையே, ஆபத்தை விளைவிக்கும்.
ஆதலால், ஆடைகளை ஒழுங்கான முறையில் உடுத்திக்
கொள்ளுங்கள். புடவை உடுத்திய பெண்கள், முந்தானையை
சரி செய்து, காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்க
வேண்டும். ஏனெனில், கண்ணாடி வழியாக, பின்னால் வரும்
வாகனத்தை, ஓட்டுனர் பார்க்க முயற்சிக்கும்போது, புடவை
காற்றில் பறந்தால், அவரின் கவனம் திசை திரும்பும்;
அதுவே, மிகப்பெரிய பிரச்னை ஆகிவிடும்

* நீங்கள் போய் சேரும் வரை, உங்கள் கவனம் எப்போதும்
ஓட்டுனரை நோக்கியே இருக்க வேண்டும். அவரின் சிறு சிறு
நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்

* முதல் முறையாக போகும்போது, நமக்கு அதன் வழி தெரியாது.
ஆதலால், மொபைல் போனை எடுத்து, 'நான் இந்த இடம் வந்தாகி
விட்டது...' என்று, ஓட்டுனரின் காதில் விழும்படி, உறவினரிடம்
பேச வேண்டும் அல்லது பேசுவது போல், 'பாவ்லா' காட்ட வேண்டும்

நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க
வேண்டும். தவறான வழியில் சென்றால், பதற்றப்படாமல்
நிதானமாக, ஏன் என்று காரணம் கேட்க வேண்டும்

ஓட்டுனர் கூறும் காரணம் (சாலை வேலை அல்லது சாலை
மூடல்) சரியாக இருக்கும் என்று, நம்பிக்கை வந்தாலோ அல்லது
வராவிட்டாலோ, மறுபடியும் மொபைல் போனை எடுத்து,
'இந்த, 'ரூட்' சரியில்லை; வேறு வழியாக வருகிறேன்...' என்று,
உறவினருக்கு பேசுவது போல், 'பாவ்லா' காட்ட வேண்டும்

அதையும் மீறி, தவறான பாதையில் போகிறது என்றால்,
எந்த காரணம் கொண்டும், பதற்றப்படாமல், சமயோஜித
புத்தியை உபயோகித்து, சில வழிமுறைகளை கையாள
வேண்டும்

தங்கள் இருக்கையின் கீழ் தான், பெட்ரோல் திறக்க, மூட,
'ரிசர்வ்' செய்ய, 'பைக்'கில் இருப்பது போல், 'நாப்' இருக்கும்.
அதை அடைத்து விட்டால் போதும். சிறிது துாரம் சென்றவுடன்,
அதுவே தானாக, 'ஆப்' ஆகி விடும்.

மீண்டும், 'ஸ்டார்ட்' செய்வதற்குள், நம்மை பாதுகாத்துக்
கொள்ளலாம். அது, டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில்,
ஓட்டுனரின் வலது பக்கத்தில், சிவப்பு கலரில், 'ஆப் சோக்'
உள்ளது; அதை இழுத்தால், 'ஆப்' ஆகிவிடும்

சில ஆட்டோக்களில், ஓட்டுனரின் முன் பகுதியில், சிகப்பு
கலரில், 'லிவர்' உள்ளது; அதை இழுத்தால், 'ஆப்' ஆகிவிடும்.
இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால், உங்கள் துப்பட்டாவோ,
புடவையின் முந்தானையோ வைத்து, ஓட்டுனரின் கழுத்தில்
போட்டு பின்னால் இழுத்தால், நிச்சயமாக, ஆட்டோவை
நிறுத்துவது, அவருக்கு பாதுகாப்பு

இல்லையெனில், ஆட்டோ நிலைதடுமாறி கவிழும்
வாய்ப்புள்ளது

அவ்வாறு, ஆட்டோ கவிழப் போகும் என்று தெரிந்தால்,
தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம். நடு பகுதியில் இறுக்கமாக
பிடித்தபடி இருங்கள். அடி ஒன்றும் படாது; காயங்கள் இல்லாமல்
உங்களால் எழ முடியாது

* இறுதியாக, இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானோர்,
படித்தவர்களாகவும், குடும்ப வறுமை காரணமாகவும்,
இத்தொழிலுக்கு வருவதால், பெண்களிடம் வரம்பு மீறாமல்,
கண்ணியமாகவே நடக்கின்றனர்.

மேலும், போலீசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால்,
மது அருந்தும் பழக்கமுள்ள ஓட்டுனர் கூட, பணி நேரத்தில்
அருந்துவதில்லை.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்த ஓட்டுனர்களும்
குற்றவாளிகள் இல்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.
உங்களை நம்பி தான், அவர்கள் வாழ்கின்றனர்.

- இவ்வாறு, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார், அந்த வாசகி;
பின்பற்றுவீர்கள் தானே!
-
--------------------------
அந்துமணி பா.கே.ப.,- வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59437
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

சிவா likes this post

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum