ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by சிவா on Wed Jul 01, 2020 9:08 am

"இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முககவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து இருப்பேன், சானிடைசர் பயன்படுத்துவேன்.

08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது, சரி இரவு தூக்கம் சரியில்லை என என்னை நானே தேற்றிக் கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன். 

நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் ஊடுருவ தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதட்டப்படுவதையும் என்னால் உணர முடிந்தது. மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன். 
சுரம்: 99°.

09.06.2020. லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் நிலை கண்டு என் மனைவி பதட்டம் அடைவதை பார்க்க முடிந்தது. 
எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். சுரம்: 99°

10.06.2020. சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இருமல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டேன் நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நல்ல நண்பர்களுக்கு என் நிலையை விளக்கினேன். யாரும் என்னை பயப்படுத்தவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினார்கள். பயப்பட வேண்டாம் என்றார்கள், உணவு முறைகளை பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சுரம்: 99°.

(உணவு முறை - 45 நிமிடத்திற்கு ஒருமுறை சூடான பானம் ஏதாவது ஒன்று - வெந்நீர், டீ, இஞ்சி சாறு, ரசம், சூப், லெமன் டீ, சித்தரத்தை கசாயம் etc)
(கபசுரக் குடிநீர் இரு முறை மட்டும்). 
குளிர்ந்த உணவு இல்லாமல் வாய்க்கு பிடித்த எந்த உணவையும் சாப்பிடலாம். ( சைவம் என்றால் கொண்டை கடலை சுண்டல் தினமும், அசைவம் என்றால் முட்டை, கோழி)

11.06.2020:  தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல் என்னவென்றால் படுக்கையிலிருந்து எழுந்து வெந்நீர், உணவு எடுத்துக்கொள்வது. சிறுநீர் கழிக்க செல்வது. சுரம்: 99°.
(ஆவி பிடிப்பது மிக முக்கியம்,  நம் பாரம்பரிய ஆவி பிடிக்கும் முறைகளை விட, 300 ரூபாய்க்கு விற்கும் எந்திரம் (Vaporizer) எளிதானது. அந்த நீரில் ஒரு பல் பூண்டு அதே அளவு இஞ்சி சிறிது மஞ்சள் தூள் ஒரு வெத்தலை கசக்கி போடவேண்டும். வரும் ஆவியை புனல் கொண்டு உள்ளே இழுக்க வேண்டும், இருமல் வரும் பயப்பட வேண்டாம். (இது நுரையீரலில் தங்கியுள்ள கிருமிகளை கொன்று வெளியே கொண்டு வரும்). ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை செய்தால் நலம்.

12.06.2020: உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. சுரம்: 99°

13.06.2020 to 15.06.2020: படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர், வெப்பம் இது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. 
நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சிமீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 92 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்லவேளை எனக்கு 95 முதல் 99 வரை மாறி மாறி ஆக்சிஜன் அளவு இருந்தது. சுரம்: 99.4°.

(14.06.2020 இரவு, ஒரு முறை தரையில் மயங்கி விழந்தேன், எவ்வளவு நேரம் என தெரியாது, ஆனால் நானே எழுந்து விட்டேன், அதன்பின் நல்ல மாற்றம்).

16.06.2020: உடல்வலி குறைய தொடங்கியது. ஆனால் உடல் பதட்டப்படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதை பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். சுரம்: 99.3°
(அதுவரை நான் மருத்துவமனை செல்லவில்லை, அதற்கு காரணம் என்னால் இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்று இருந்த நம்பிக்கை, மற்றொன்று மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார்)
(வயிறு புண்ணானது போன்ற ஒரு உணர்வு தோன்றியதால் கபசுர குடிநீர் பருகுவதை நிறுத்திவிட்டேன்)

17.06.2020: காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. ஆம் நான் ஒரு கோரானா நோயாளி. 
இப்போது என் குடும்பம் மிகவும் பதட்டம் ஆகிவிட்டது. என் மனைவி, அரசு ஆம்புலன்சில் என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப்பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது, உபயம் என் மைத்துனன்.

என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்டபின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார், 'உங்கள் கணவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார், இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை.'

தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாட்களுக்கு தொடரச் சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தார். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார். 

அந்த மருத்துவர் என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். என் மனைவி அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டிச் செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். சுரம் இல்லை.

18.06.2020: உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை, தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்கிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எதிர் வரும் நாட்களை ஓட்டவேண்டும். 

என்னை காப்பாற்றியதாக நான் கருதும் மூன்று விஷயங்கள்..
 
1. ஆக்சிஜன் அளவு குறையும் போது எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது
2. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆவி பிடித்தது ( மூன்று நாட்கள் மட்டும்)
3. சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொண்டது (5 நாட்கள்)
4. என்னை வெளியில் இருந்து கவனித்துக் கொண்ட என் மனைவி.

இவையே என்னை காத்தது என நான் உறுதியாக நம்புகிறேன். 

தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது. 

கிருமி நுரையீரலுக்குச் என்றால் அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். வயிற்றுக்கு சென்றால் நீங்கள் அதை வென்று விட்டீர்கள் என்று பொருள். வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ளத் தேவையில்லை.

மூச்சு விட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. 

நாம் வாழப் பிறந்தவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் தோற்றுப் போகக்கூடியவர்கள் அல்ல‌.

என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனனின் நண்பர்கள், எனக்கு பிரச்சனை என தெரிந்தவுடன் என்னை தொடர்பு கொண்டு உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.."

நோயை வென்றவரது யுக்திகளை மனதில் கொண்டு, உற்சாகத்துடன் நோயை எதிர்கொள்ளுங்கள்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2020 12:48 pm

என்ன இது .நம்பமுடியவில்லையே..
அதிர்ச்சியாக உள்ளது.
கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
உங்கள் அன்பு மனைவியின் மாங்கல்ய பாக்யம் 
நீங்கள் செய்த புண்ணியங்கள்
 உங்களின் மனோ  தைரியம் 
குழந்தைகள் /உறவினர்/நண்பர்கள் வேண்டுதல் 
உங்களை மீட்டு விட்டன என்றே சொல்லலாம்..
காஞ்சி மஹாபெரியவா அருள் புரியட்டும்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2020 12:54 pm

 ஜூன் 21 அன்று மாலை 5-30 க்கு போன் பண்ணும் போது
ஏன் எடுக்கவில்லை என்பதற்கு விடை கிடைத்து விட்டது.

@சிவா


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by சிவா on Wed Jul 01, 2020 12:58 pm

ஆஹா, இது எனக்கு நேர்ந்தது அல்ல... எவரோ ஒருவருக்கு நேர்ந்ததாக வாட்ஸப்பில் வந்த தகவல் இது...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by ranhasan on Wed Jul 01, 2020 1:21 pm

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Dc-gXx3UwAAIcAu
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by ranhasan on Wed Jul 01, 2020 1:22 pm

@சிவா என் ப்ரோபைல் இன்னும் banned என்று வருகிறது அழுகை . உங்கள் விஷேச அதிகாரத்தை பயன்படுத்தி அதை மாற்றுங்களேன்.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by சிவா on Wed Jul 01, 2020 1:38 pm

@ranhasan wrote:@சிவா என் ப்ரோபைல் இன்னும் banned என்று வருகிறது அழுகை . உங்கள் விஷேச அதிகாரத்தை பயன்படுத்தி அதை மாற்றுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1323489

:நல்வரவு:

மாற்றிவிட்டேன்அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by ranhasan on Wed Jul 01, 2020 2:06 pm

@சிவா wrote:
@ranhasan wrote:@சிவா என் ப்ரோபைல் இன்னும் banned என்று வருகிறது அழுகை . உங்கள் விஷேச அதிகாரத்தை பயன்படுத்தி அதை மாற்றுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1323489

:நல்வரவு:

மாற்றிவிட்டேன்

மேற்கோள் செய்த பதிவு: 1323494


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2020 2:08 pm

@சிவா wrote:ஆஹா, இது எனக்கு நேர்ந்தது அல்ல... எவரோ ஒருவருக்கு நேர்ந்ததாக வாட்ஸப்பில் வந்த தகவல் இது...
மேற்கோள் செய்த பதிவு: 1323487

அடப்பா ,,,,,,,,,,
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 6...................?என்னாச்சு?
போகட்டும் நம் ஈகரை உறவுகள் எல்லோரும் நலமாகஇருங்கள்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

சிவா likes this post

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by சிவா on Wed Jul 01, 2020 6:29 pm

@T.N.Balasubramanian wrote:
@சிவா wrote:ஆஹா, இது எனக்கு நேர்ந்தது அல்ல... எவரோ ஒருவருக்கு நேர்ந்ததாக வாட்ஸப்பில் வந்த தகவல் இது...
மேற்கோள் செய்த பதிவு: 1323487

அடப்பா ,,,,,,,,,,
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 6...................?என்னாச்சு?
போகட்டும் நம் ஈகரை உறவுகள் எல்லோரும் நலமாகஇருங்கள்.

இன்று பகிர்ந்த அனைத்து பதிவுகளும் வாட்ஸப்பில் இருந்து எடுத்தது....

வாட்ஸப் பகிர்வு என்பதை எழுதியிருக்கலாமோ.,..

வரும் பதிவுகளில் மறவாமல் குறிப்பிடுகிறேன்...

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by விமந்தனி on Thu Jul 02, 2020 1:04 am

பயம் அய்யோ.... படிக்கும் போதே பயமாய் இருக்கிறது.... நம்மையும், நம்மை சுற்றியிருப்பவர்களையும் கடவுள் தான் காப்பாற்றவேண்டும். சோகம்


கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

சிவா likes this post

Back to top Go down

கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல. Empty Re: கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum