ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:07 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:34 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by M.Jagadeesan Yesterday at 7:43 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 7:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Jairockerszx Yesterday at 7:26 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by krishnaamma Yesterday at 6:37 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Yesterday at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Yesterday at 10:43 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Yesterday at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

Admins Online

நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 9:17 pm

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. B7dZBQ76SYU1B0KLtQ45+ja_ra_su_article

இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம்
இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது

நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு
டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து
வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக
வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள்
போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து
திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன்.

அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’
என்று கேட்டு கடிதம் வந்தது.

எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச்
சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம்
200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து
கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து
மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம்
செலுத்தியிருக்கிறார்கள்.

நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம்
மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது.
ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று
கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ,
அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பதற்குச்
சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி
அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள்
கேட்டிருக்கிறார்கள்.’’

அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி
செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான்
உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை.
நானே ‌நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு
சந்தேகப்பட்டார்கள்.

எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட்
போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை.
அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும்
மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து
கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில்
கன்னங்கள் மழமழவென்றிருந்தன.


Last edited by ayyasamy ram on Sat Jul 11, 2020 9:20 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59182
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 9:17 pm


ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே...
‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க
அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’
என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக
மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக்
கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத
அளவு தாடி பெருகியிருந்தது.

தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம்
பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது.
அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும்
மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன.
வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில்
ஒரு தொப்பி போட்டிருப்பேன்.

நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு
தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம்
கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை
நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது
போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள
விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள
வேண்டும்.

எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது
எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ்
பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.

சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச்
செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல்
அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல்
இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும்,
சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான்.
என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே
கிடையாது.

ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது
தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்)
நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா!
அம்மா எந்த மாமா‌வுடைய கன்னத்தையோ தொடறாள்!’’
என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம்
இருப்பேன் என நினைத்து ஓடினான்.

‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக்
கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட்
ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச்
சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’
என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59182
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 9:18 pm


நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து
பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப்
போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட
மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர்,
மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும்
ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள்.

நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக்
கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக
இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.

ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை
அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’
என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத்
தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக்
கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது.

கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப்
பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப்
பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல்
மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய்
அமர்ந்து விட்டார்.

அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக,
‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு
கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர்,
‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி!
நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை
விட்டு வெளியேற்றவா?’’ என்றார்.

அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’
என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி
சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி
வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து
விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம்
தெரிந்தது.

ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக ‌
எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு
அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து
விட்டார்.

‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால்
உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார்.
அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது
ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.

நீதி :
வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள்
தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள்
இருப்பது உத்தமம்.
(நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால்
இன்னும் உத்தமம்!)
-
---------------------------------

-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’
(நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து.
எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி.
வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60
-
நன்றி-பால கணேஷ் (மின்னல் வரிகள்)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59182
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen likes this post

Back to top Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by T.N.Balasubramanian on Sat Jul 11, 2020 9:31 pm

பாக்கியம் ராமசாமி 
நகைச்சுவை பதிவுகளின் சூப்பர் ஹீரோ 

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26954
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by mohamed nizamudeen on Sun Jul 12, 2020 9:09 pm

நகைச்சுவையுடன் சில அனுபவங்கள்!
mohamed nizamudeen
mohamed nizamudeen
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 15

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen likes this post

Back to top Go down

 நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி. Empty Re: நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum