ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Go down

  'வந்த நாள் முதல் இந்த  நாள் வரை...'  - பாடல் பிறந்த கதை Empty 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Post by ayyasamy ram on Sun Aug 09, 2020 5:14 pm



கலைஞன் பதிப்பகம்,
'கண்ணதாசனின் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:

பாவ மன்னிப்பு படத்தில் வரும், 'வந்த நாள் முதல் இந்த
நாள் வரை...' பாடலுக்கு இசை உருவான விதம் பற்றி,
எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுகிறார்:

காலை நேரம் -
என் அருகில், அண்ணன் டி.கே.ராமமூர்த்தி இருந்தார்.
'தக தகி கிட... தக தகி கிட...' என்று தபேலாவின் ஒலி,
மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது. பட்டும் படாததுமாக
அடிக்கொரு தடவை, வயலின் ஒலி ஆதார சுருதியில்,
தபேலாவின் தாளக் கட்டுடன் இணைந்து வெளிப்பட்டது.

என் கை விரல்கள், ஆர்மோனியத்தின் மீது குறுக்கும்
நெடுக்குமாக விளையாடி, வினோதமான பல மெட்டுக்களை
எழுப்பிக் கொண்டிருந்தது. இருப்பினும், என் பார்வை மட்டும்
ஆர்மோனியத்தின் மீதிருந்த அந்த பாடல் பிரதி காகிதத்தின்
மீதே இருந்தது.

'வந்த நாள் முதல்...' என்று துவங்கும் பாடல் அது.

என் மனம் ஏதேதோ மெட்டுக்களில் அந்த பாட்டை மனனம்
செய்து கொண்டிருந்தது. ஒன்றும் பிடிபடவே இல்லை.
கை விரல்கள் ஆர்மோனியத்தில் துள்ளி விளையாடுவதை
நிறுத்தின. சில நிமிடங்கள் ஒரே அமைதி.

அந்த அமைதியிலும் தபேலாவின் தாளக் கட்டு மட்டும்
லேசாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த தாளக் கட்டுடன் லயித்த என் மனம், எங்கெங்கோ தாவிப்
போய் கொண்டிருந்தது. என் சிந்தனையில், கடந்த கால
நினைவுகள் மிதந்து வந்தன.

ஒரு நாள் -

என் வீட்டை அடுத்த சாந்தோம் கடற்கரை... 'ஓ' என்ற ஓசையுடன்
ஆர்ப்பரித்து, சில மீனவர்கள் உற்சாகமாய் பாடிக் கொண்டிருப்பது
கேட்டது. கரையோரம் நடந்து சென்ற என் கால்கள், அங்கேயே
நின்று விட்டன.

அவர்கள் பாடிய மெட்டு, என்னை வசியப்படுத்தியது. மீனவர்கள்
எழுப்பிய அந்த மெட்டை மனனம் செய்தபடியே, என் வீட்டில் வந்து
படுத்தேன்.

சில நாட்களுக்கு பின், சென்னை, சினிமா தியேட்டர் ஒன்றில்,
நானும், ராமமூர்த்தியும் படம் பார்க்க போனோம். படம்
ஆரம்பமாவதற்கு முன், சில இசைத்தட்டு பாடல்களை ஒலிபரப்புவர்
அல்லவா, அப்படியொரு ஆங்கில பாடலை வைத்தனர்.
அதைக் கேட்டு அப்படியே துணுக்குற்றேன்.

ஆம்... சில தினங்களுக்கு முன், சாந்தோம் கடற்கரையில் கேட்ட அதே
பாட்டு. ஆனால், கொஞ்சம் மாறுதல். நினைவுச் சூழல் ஒரு நிலைக்கு
வந்தது. அது நின்ற பிறகு, மீண்டும் என் கண் முன் இருந்த,
'வந்த நாள் முதல்...' பாட்டு தான் தென்பட்டது.

அடுத்து, என் மனம், மீனவர் மெட்டில் இந்த பாட்டை வைத்து பாடியது.
என்ன ஆச்சரியம், அந்த பாட்டுக்காகவே பிறந்த மெட்டு போல் அது
இருந்தது.

என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அடுத்த நாள் என்
விரல்கள், ஆர்மோனியத்தின், 'ரீடு'களில் ஆனந்த நடனமாடின.
கூடவே, ராமமூர்த்தியின் பிடிலும் இணைந்தது; தாளமாக தபேலாவும்
சேர்ந்து கொண்டது. ஒரே வேகம் தான்.

'வந்த நாள் முதல், இந்த நாள் வரை வானம் மாறவில்லை...' பாட்டும்,
இசையும் பிறந்தது.
-
------------------------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

  'வந்த நாள் முதல் இந்த  நாள் வரை...'  - பாடல் பிறந்த கதை Empty Re: 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Post by ayyasamy ram on Sun Aug 09, 2020 5:19 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

  'வந்த நாள் முதல் இந்த  நாள் வரை...'  - பாடல் பிறந்த கதை Empty Re: 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Post by krishnaamma on Sun Aug 09, 2020 6:43 pm

ம்ம்... நல்லா இருக்கு பாடல் பிறந்த கதை புன்னகை .........மிகவும் நல்ல பாடல் ... அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

  'வந்த நாள் முதல் இந்த  நாள் வரை...'  - பாடல் பிறந்த கதை Empty Re: 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 10, 2020 2:52 pm

சிவாஜி சும்மா சைக்கிள்தான் ஓட்டுவார்! ஆனால் அதுவே இரசிக்கும்படியாக இருக்கும் !
MSV போன்றோர் பாடலை நாம் காதில் கேட்டு இரசிக்கவிட்டனர்! இப்போது பாடலைக் கேட்கவிடுகிறார்களா? ‘டொம்மு டொம்மு’ என்று போட்டு அடித்துப் பாடலையே குட்டிச்சுவராக்கிவிடுகிறார்களே!
‘வந்த நாள் முதல்.....’ பாடலை மோகன இராகம் எனும் தமிழ் இசையில் பாடி மகிழுங்கள் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

  'வந்த நாள் முதல் இந்த  நாள் வரை...'  - பாடல் பிறந்த கதை Empty Re: 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum