ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி

Go down

020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி Empty 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி

Post by ayyasamy ram on Mon Aug 10, 2020 6:30 pm


ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பிரதான
ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு யோகா குரு பாபா ராம்தேவின்
பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் முயல்வதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்
வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை
நடக்கிறது. இந்தத் தொடரில் பிரதான ஸ்பான்ஸராக சீனாவின்
விவோ நிறுவனம் இருந்தது.

ஆனால், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு
இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும்
அலை நாடு முழுவதும் எழுந்தது.

இதையடுத்து, ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனமான விவோ செல்போன்
நிறுவனம் அளித்து வந்த ஸ்பான்ஸர்ஷிப்பையும் இந்த ஆண்டு மட்டும்
ரத்து செய்து பிசிசிஐ அறிவித்தது.

இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸர்ஷிப் யார் என்பது
தெரியவில்லை. அதற்கான விருப்ப மனுக்களையும் வரும் 14-ம் தேதிக்குள்
அளிக்க பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்துடன் 2018-ம் ஆண்டு
முதல் 2022-ம் ஆண்டுவரை ஆண்டுக்கு ரூ.440 கோடி வீதம் ரூ.2,190 கோடி
ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ செய்துள்ளது.

இந்தச் சூழலில் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம்
ஐபிஎல் டி20 தொடரின் பிரதான ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற முயன்று
வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்
எஸ்.கே.திஜாராவாலாவிடம் பிடிஐ நிருபர் கேட்டபோது,
“ஐபிஎல் டி20 ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு பதஞ்சலி நிறுவனம்
முயல்கிறது எனும் செய்தியை மறுக்கவில்லை. உள்நாட்டுப் பொருட்களை
ஊக்குவிப்போம் என்ற அடிப்படையில் உள்நாட்டு நிறுவனத்தை உலக அளவில்
எடுத்துச் செல்ல இந்தப் போட்டித் தொடர் நல்ல களம்.

இதைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். ஆனால், இது தொடர்பாக இறுதி
முடிவை நிறுவனத்தின் தலைமைதான் எடுக்கும். ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்தால்
எடுக்கலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவெடுப்போம்” எனத்
தெரிவித்தார்.

ஹரித்துவாரைச் சேர்ந்த பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.10,500 கோடி விற்று
முதல் கொண்டது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.8,329 கோடி வருவாயை
பதஞ்சலி நிறுவனம் ஈட்டியது. பெரும்பாலான ஆயுர்வேதப் பொருட்களை ஏற்றுமதி
செய்வதில் பதஞ்சலி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கரோனானில் எனும் மருந்தைக் கண்டு
பிடித்து அந்த மருந்தால் கரோனா வைரஸைக் குணப்படுத்த முடியும் என்று
தெரிவித்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் மத்திய ஆயுஷ் அமைச்சகம்
எதிர்ப்புத் தெரிவித்தது.

மேலும், ''பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்தை விற்பனை செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.
அந்த மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகப்படுத்தும் மருந்து மட்டும்தான்.

ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து அல்ல” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி Empty Re: 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி

Post by Muthumohamed on Mon Aug 10, 2020 11:19 pm

பாபாவிடம் அவ்வளவு பணம் இருக்குதோ
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum