ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 12:43

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 12:33

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 10:16

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 10:11

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 10:06

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:03

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 9:57

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 9:10

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 9:08

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 8:59

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 8:50

» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 3:01

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:29

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Today at 0:02

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Today at 0:01

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 21:37

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 21:37

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 21:34

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:32

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 21:28

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 20:42

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 20:40

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 18:52

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 18:35

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 16:29

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 16:19

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 16:17

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 16:15

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 16:10

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:20

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 15:19

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 15:09

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 13:34

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 13:34

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 13:33

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 13:32

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 11:40

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:11

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed 29 Jul 2020 - 12:20

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by T.N.Balasubramanian on Fri 4 Sep 2020 - 19:12; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:27

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1087

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில்

வாசிக்க
மாதர் படாஅ முலைமேல் துகில், கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்.

தெளிவுரை
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை,
மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:29

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1088

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

வாசிக்க
ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு, ஒண்ணுதற்கோஒ உடைந்தது ஏ.

தெளிவுரை
போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை,
இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:32

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1089

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பிணையேர் மடநோக்கு நாணும் உடையாட்
கணியெவனோ வேதில தந்து

வாசிக்க
பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு, ஏதில தந்து அணி எவன்.

தெளிவுரை
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய
இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:35

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-1-தகையணங்குறுத்தல் -1090

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

வாசிக்க
அடுநறா, உண்டார்கண் அல்லது, காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.

தெளிவுரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல்
தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:41

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1091

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

வாசிக்க
இவள் உண்கண் உள்ளது இருநோக்கு, ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து

தெளிவுரை
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:43

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1092

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது

வாசிக்க
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது

தெளிவுரை
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை
காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:46

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1093

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

வாசிக்க
நோக்கினாள், நோக்கி இறைஞ்சினாள், அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர்.

தெளிவுரை
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்;
அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

குறிப்பு-
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:47

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1094

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
யானோக்குங் காலை நிலனோக்குங் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

வாசிக்க
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.

தெளிவுரை
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான்
நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:49

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1095

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

வாசிக்க
குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்.

தெளிவுரை
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு
கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:52

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1096

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

வாசிக்க
உறாஅதவர் போல் சொலினும், செறாஅர் சொல் ஒல்லை உணரப் படும்.

தெளிவுரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon 24 Aug 2020 - 18:54

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1097

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

வாசிக்க
செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போல் நோக்கும், உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.

தெளிவுரை
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும்
புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by சக்தி18 on Mon 24 Aug 2020 - 21:34

1006 இரண்டு தடவை வந்ததாக தெரிகிறது.பாருங்கள். பராமரிப்பு பணிகளின் பின் இமேஜ் ஹோஸ்ட் வேலை செய்கிறது எனத் தெரிகிறது. நன்றி ஐயா.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2074
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 25 Aug 2020 - 11:57

[You must be registered and logged in to see this link.] wrote:1006 இரண்டு தடவை வந்ததாக தெரிகிறது.பாருங்கள். பராமரிப்பு பணிகளின் பின் இமேஜ் ஹோஸ்ட் வேலை செய்கிறது எனத் தெரிகிறது. நன்றி ஐயா.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி ,நானும் கவனித்தேன்.
ரமணியன் ஐயா ஒவ்வொன்றாக திருத்திக் கொண்டு
வருகிறார் இந்த லிஸ்ட் நீண்டுள்ளது.
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 25 Aug 2020 - 12:05

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1098

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

வாசிக்க
யான் நோக்கப் பசையினள் பைய நகும்,அசையியற்கு ஆண்டு ஓர் ஏஎர் உண்டு.

தெளிவுரை
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்;
அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 25 Aug 2020 - 12:08

3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-2-குறிப்பறிதல் -1099

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள

வாசிக்க
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள.

தெளிவுரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு
பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 18 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum