ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Today at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Today at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Today at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Today at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Today at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Today at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Today at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Today at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Today at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Today at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Today at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Today at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 10:32 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1251

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கணிச்சி உடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

வாசிக்க
நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு, காமக் கணிச்சி உடைக்கும்தெளிவுரை
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும்
கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 10:47 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1252

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காம மெனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்

வாசிக்க
யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழி்ல் ஆளும், காமமென ஒன்றோ கண் இன்று.

தெளிவுரை
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது;
அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 11:03 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1253

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் தோன்றி விடும்

வாசிக்க
காமத்தை யான் மறைப்பேன்மன், குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றி விடும்.

தெளிவுரை
யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என்
குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 11:18 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1254

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும்

வாசிக்க
யான் நிறையுடையேன் என்பேன்மன், என் காமம் மறை இறந்து மன்றுபடும்.

தெளிவுரை
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால்,
என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 11:42 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1255

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று

வாசிக்க
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காமநோய் உற்றார் அறிவது ஒன்றன்று

தெளிவுரை
தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும்
பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 11:56 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1256

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்

வாசிக்க
செற்றவர் பின் சேறல் வேண்டி, என்னை உற்ற துயர் எற்று அளித்தரோ

தெளிவுரை
வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால்
என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது? அந்தோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 12:11 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1257

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணென ஒன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்

வாசிக்க
பேணியார் காமத்தான் பெட்ப செயின், நாண் என ஒன்றோ அறியலம்.தெளிவுரை
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால்,
நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமலிருப்போம்

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 12:27 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1258

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை

வாசிக்க
நம் பெண்மை உடைக்கும் படை, பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ

தெளிவுரை
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது.
பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 12:43 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1259

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்தல் உறுவது கண்டு

வாசிக்க
புலப்பல் எனச் சென்றேன், நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன்தெளிவுரை
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என்
நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 1:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1260

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்

வாசிக்க
நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு, புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ

தெளிவுரை
கொழுப்பைத் தீயில் இட்டாற் போன்ற உருகும் நெஞ்சு உடைய என்னைப்
போன்றவர்க்கு, 'இசைந்து ஊடிநிற்போம்' என்று ஊடும் தன்மை உண்டோ?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia on Thu Sep 17, 2020 1:25 pm

17.09.2020
[You must be registered and logged in to see this link.] wrote:இங்கு காதலால் வந்த அல்லது வளர்ந்த துன்பமே., பிரிவு அதற்கு காரணமே. ஆதலால் காதலால் வளர்ந்த துன்பம் சரியன தோன்றுகிறது.
உங்கள் கண்ணோட்டத்தை பகிரலாம் பேபி.

என் கண்ணோட்டத்தை பகிரலாம்னு சொல்லிட்டீங்கல்ல. சொல்றேன் சொல்றேன். இல்ல இல்ல, கேள்விக் கணைகள்.
கேள்விக் கணைகளுக்கு நாணக் கூடாது. பதில் சொல்லணும்.

என்ன முத்து சார், நீங்க ப்ளேட்டையே மாத்துறீங்க.
காதலால் வந்த அல்லது வளர்ந்த துன்பமே / பிரிவால் வந்த அல்லது வளர்ந்த துன்பமே - எது சரி?

காதலால் வளர்ந்த துன்பம் சரியன தோன்றுகிறது / பிரிவால் வளர்ந்த துன்பம் சரியென தோன்றுகிறது - எது சரி.

பேபி
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 992
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 1:44 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-12- அவர்வயின்விதும்பல் -1261

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

வாசிக்க
அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த, கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற.

தெளிவுரை
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 2:01 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-12- அவர்வயின்விதும்பல் -1262

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேற்
கலங்கழியுங் காரிகை நீத்து

வாசிக்க
இலங்கிழாய், இன்றுமறப்பின், மேல் காரிகை நீத்து என்தோள் கலம் கழியும்.

தெளிவுரை
தோழி! காதலரின் பிரிவால் துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்துவிட்டால், அழகு கெட்டு என்தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by heezulia on Thu Sep 17, 2020 2:38 pm

17.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-12- அவர்வயின்விதும்பல்

பிரிவித் துயர் தீரும் காலம் நெருங்குகிறது. தலைவனை காணப்போகின்ற ஆசையில் தலைவி கூறுவது.
விதும்பல் என்றால் விரைதல். தலைவனை காண தலைவி மனதாலேயே விரைந்து செல்கிறாள்.

[You must be registered and logged in to see this link.] wrote:விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

தலைவன் சென்ற நாட்களை சுவற்றில் குறித்து வைக்கிறாள். அதை தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து அவள் விரல்கள் தேய்ந்து போகின்றன.

பேபி
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 992
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 17, 2020 4:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:17.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-12- அவர்வயின்விதும்பல்

பிரிவித் துயர் தீரும் காலம் நெருங்குகிறது. தலைவனை காணப்போகின்ற ஆசையில் தலைவி கூறுவது.
விதும்பல் என்றால் விரைதல். தலைவனை காண தலைவி மனதாலேயே விரைந்து செல்கிறாள்.

[You must be registered and logged in to see this link.] wrote:விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

தலைவன் சென்ற நாட்களை சுவற்றில் குறித்து வைக்கிறாள். அதை தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து அவள் விரல்கள் தேய்ந்து போகின்றன.

பேபி
[You must be registered and logged in to see this link.]
கிராமத்தில் சுவற்றில் கரிக்கட்டையில் எழுதுவது இயல்பு
அந்த சுவற்றை வருடி வருடி விரல்கள் தேய்ந்து போயின.
அருமையான விளக்கம்
சந்தோஷம் பேபி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15255
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

heezulia likes this post

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 35 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum