ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 7:49 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by coolidiot Today at 5:25 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by ayyasamy ram Today at 5:14 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 5:07 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by ayyasamy ram Today at 5:04 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Today at 5:02 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by சக்தி18 Today at 11:30 am

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Today at 10:39 am

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by SK Today at 9:25 am

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

Admins Online

அதிவேக ஏவுகணை இன்ஜின் பரிசோதனை

Go down

அதிவேக ஏவுகணை இன்ஜின் பரிசோதனை Empty அதிவேக ஏவுகணை இன்ஜின் பரிசோதனை

Post by ayyasamy ram on Tue Sep 08, 2020 4:03 am

அதிவேக ஏவுகணை இன்ஜின் பரிசோதனை Tamil_News_large_2609395
-

புதுடில்லி :
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் செல்லக்
கூடிய 'ஹைப்பர்சானிக்' தொழில்நுட்பத்தில் ஏவுகணைகள்
தயாரிப்பதற்கான முன்னோட்டமாக இந்திய விஞ்ஞானிகள்
மேற்கொண்ட முதல் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை
வெற்றிகரமாக அமைந்தது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நான்காவது நாடாக
இந்தியா விளங்குகிறது. இந்த ராக்கெட் இன்ஜின் சோதனையின்
மூலம் நம் ராணுவ ஆயுதங்களின் திறன் அதிகரிக்கும் என்ற
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக
வேகத்தில் இயங்கக் கூடிய திறன் ஹைப்பர்சானிக் என்று
அழைக்கப்படும். தற்போதைக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா
ஆகியவை மட்டுமே இந்த உயர் தொழில் நுட்பத்தைக் கொண்ட
ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளன.

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்துக்கான
ரயில்களை இயக்க முடியும்; அதிநவீன ஏவுகணைகளை இயக்க
முடியும்.'கொரோனா' மற்றும் சீன ஆக்கிரமிப்பு கற்றுத் தந்த
பாடமாக நம் நாட்டை 'ஆத்ம நிர்பார்' எனப்படும் தற்சார்பு
உடைய நாடாக மாற பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து ராணுவ ஆயுத தயாரிப்பிலும் 'மேக் இன் இந்தியா'
எனப்படும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் நம் நாட்டில்
முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே எச்.எஸ். டி.டி.வி. எனப்படும்
ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஏவுகணைகளை விண்ணுக்கு
அனுப்பும் 'ஸ்கிராம்ஜெட்' ராக்கெட் இன்ஜினைத் தயாரித்துள்ளது.


இதன் முதல் பரிசோதனை ஒடிசா மாநிலத்தின் பாலாசோர்
பகுதியில் அப்துல் கலாம் ஏவுதளத்தில் நேற்று காலை 11:03 மணிக்கு
நடந்தது. திட்டமிட்டபடி இந்த பரிசோதனை வெற்றிகரமாக
அமைந்ததாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

ஒலியை விட ஐந்து மடங்கு அதாவது மணிக்கு 7400 கி.மீ. வேகத்தில்
செல்லக் கூடிய திறன் வாய்ந்தது இந்த 'ஸ்கிராம்ஜெட்' இன்ஜின்
பொருத்தப்பட்ட ராக்கெட். ஆனால் தற்போது செய்யப்பட்ட
பரிசோதனையில் இந்த ராக்கெட் ஆறு மடங்கு வேகத்தில் சென்றது.

இதையடுத்து இந்தத் தொழில்நுட்பத்தை இதுவரை பரிசோதித்துள்ள
நான்காவது நாடாக இந்தியா விளங்குகிறது. அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்குள் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் ராக்கெட்களை நம்
நாட்டிலேயே தயாரிப்பதற்கான முன்னோட்டமாக இந்த பரிசோதனை
விளங்குகிறது.

சீனாவிடம் மணிக்கு 5000 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய
ஏவுகணை உள்ளது. அமெரிக்காவிடம் மணிக்கு 20,000 கி.மீ.
வேகத்தில் இயங்கக் கூடிய ஏவுகணை உள்ளது.

நாம் நடத்திய இந்த பரிசோதனைக்கு பா.ஜ. மூத்த தலைவரும்
ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் உள்ளிட்டோரிடம்
பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ள
அவர்களை பாராட்டினேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு கோஷத்துக்கு
வலுசேர்ப்பதாக இந்த பரிசோதனை வெற்றி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61248
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum