ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

குரு சிஷ்யன் உறவு !

Go down

குரு சிஷ்யன் உறவு ! Empty குரு சிஷ்யன் உறவு !

Post by krishnaamma on Wed Sep 23, 2020 9:12 pm

குரு சிஷ்யன் உறவு( மகாபாரதத்தில் தெரியாத செய்தி)

அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன்
தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’
என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்.

‘‘கேளுங்கள் மன்னா!’’

‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல்,
வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின்
இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார்.

‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர்.

‘‘தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும்
என்பதே எனது விருப்பம்!’’

‘‘மன்னா… என்ன கூறுகிறீர்கள்?’’ _ திடுக்கிட்டார்
துரோணர்.

‘‘துரோணரே… பாண்டவர்களையும் எனதருமைப்
பிள்ளைகளையும் சரிசமமாக
பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்!’’

‘பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட
துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள்
சொல்லி இருப்பார்கள்’
என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.

பிறகு அவர்,
‘‘மன்னிக்க வேண்டும் மன்னா!
நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை.

ஆர்வம், முயற்சி, உத்வேகம், தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும்
ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும்’’ என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார்.

அதோடு ‘கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட
வேண்டும்!’ என்று துரோணருக்குத்
தோன்றியது.

மறு நாள்.
காலை நேரத்தில் பாண்டவர்களும்
கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக
வந்து சேர்ந்தனர்.
துரோணரை வணங்கினர்.

அவர்களிடம் துரோணர்,

‘‘சீடர்களே…
இன்று நான்ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப்போகிறேன்.
அதற்காக நாம் காட்டுக்குச்செல்லலாம்’’ என்றார்.
உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர்.
சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர்,

ஆற்று மணலில் தன் விரலால்
ஒரு ஸ்லோகத்தை எழுதினார்.

‘‘சீடர்களே…
இன்று உங்களுக்குக் கற்பிக்கப்
போகும் வித்தை மூலம்
ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம்.

நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன்
என்று கூர்ந்து கவனியுங்கள்!’’ என்றவர் அர்ஜுனனிடம்,

‘‘அர்ஜுனா…கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா!’’ என்றார்.

தொடரும்............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63064
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12738

Back to top Go down

குரு சிஷ்யன் உறவு ! Empty Re: குரு சிஷ்யன் உறவு !

Post by krishnaamma on Wed Sep 23, 2020 9:13 pm

‘குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ?’ என்ற
கவலையுடன் குருநாதரின்
குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன்.

கமண்டலத்துடன் திரும்பியவன்,
அவர்கள்ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப்பார்த்தான்.

உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம்
சென்றான்.
கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான்.

‘‘குருவே! என்னை மன்னியுங்கள்.
சற்றுத் தாமதமாகி விட்டது!” என்றான்
அர்ஜுனன்.

அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக்
கொண்ட துரோணர்,

மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார்:

‘‘நல்லது சீடர்களே… இன்று கற்பித்த வித்தையில்
எவருக்காவது சந்தேகம் இருந்தால், என்னிடம்
கேளுங்கள்!’’

‘‘குருவே… நான் வருவதற்குள் பாடம்
முடிந்துவிட்டதா?’’ என்று ஏமாற்றமாகக்
கேட்டான் அர்ஜுனன்.

‘‘ஆம்!’’ என்று அவனுக்கு பதிலளித்த துரோணர்

மற்றவர்களை நோக்கி,
‘‘சரி… ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகம் சொல்லி,
அம்பைப்பிரயோகித்து அந்தக் காட்டுப்
பகுதியை எரியுங்கள், பார்க்கலாம்’’ என்றார்.

கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர்கள் நால்வர்
(அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகத்தை உச்சரித்து, அஸ்திரம்
பிரயோகித்தனர். ஆனால், பலன் இல்லை!

‘‘என் உழைப்பு மொத்தமும் வீண்!’’
என்று கோபத்தில் கத்தினார் துரோணர்.

‘‘குருவே… தாங்கள் ஆணையிட்டால், அந்தக்
காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன்!’’
என்று அர்ஜுனன் முன்வந்தான்.

உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும்
கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. ‘‘சரிதான்…
பாடம் நடத்தும்போது இவன் ஆளே இல்லை.
பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும்
செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப்
போகிறானாம். நல்ல வேடிக்கை!’’
என்று இகழ்ந்தனர்.

‘‘வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப்
போகிறான்!’’ என்றான் கௌரவர்களில் ஒருவன்.

துரோணர், அர்ஜுனனிடம் ‘‘எங்கே, எரித்துக்
காட்டு. பார்க்கலாம்!’’ என்றார்.
வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன்,
கண்களை மூடி,
ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
பிரயோகித்தான்.
உடனே காடு ‘திகுதிகு’வென
தீப்பிடித்து எரிந்தது! கௌரவர்கள் உட்பட
அனைவருக்கும் பிரமிப்பு.

‘‘அர்ஜுனா… மந்திர உபதேசம் செய்யும்போது நீ
இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச்
சாதிக்க முடிந்தது?’’ என்று துரோணர் கேட்டார்.

‘‘குருவே… கமண்டலத்துடன்
ஆற்றங்கரைக்கு வந்தபோது, அங்கு நீங்கள்
மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன்.
படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன்.

அவ்வளவுதான்.’’

துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
‘‘ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால், குருவின்
போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம்
என்பதற்கு அர்ஜுனனே சாட்சி!’’
என்ற துரோணர் பொருட்செறிவுடன் கௌரவர்களைப் பார்த்தார்.

அதன் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெட்கித் தலைகுனிந்தனர் கௌரவர்கள்!!!

இந்தக் கதையை நேற்று கோவிலில் பெரியவர் சொன்னார்.
புதிதாக இருந்தது எனக்கு. பல பேருக்கு தெரிந்திருக்கலாம்.

இருந்தாலும் குரு சீடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லாமல் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.

நன்றி வாட்ஸாப்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63064
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12738

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum