ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Go down

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Empty ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 9:01 am

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Spt1
-
அபுதாபி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்றிருந்த மும்பை இண்டியன்ஸ், இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் குவின்டன் டி காக் 1 ரன்னில் வெளியேற, கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்.
முதல் 2 ஓவர்களில் மும்பை அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சந்தீப் வாரியார் வீசிய 3-ஆவது ஓவரில் சூர்யகுமார் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்ட, மும்பையின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது.

அதைத் தொடர்ந்து பட் கம்மின்ஸ் வீசிய 5-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா இரு சிக்ஸர்களை விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய ரோஹித், ஆன்ட்ரே ரஸல் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாச, 7 ஓவர்களில் 72 ரன்களை எட்டியது மும்பை.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 28 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். சூர்யகுமார்-ரோஹித் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து செளரப் திவாரி களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோஹித் 39 பந்துகளில் அரைசதம் கண்டார்.

தொடர்ந்து வேகம் காட்டிய ரோஹித், குல்தீப் வீசிய 14-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார். பட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் செளரப் திவாரி தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசிய நிலையில், சுநீல் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து வந்த ஹார்திக் பாண்டியா, கம்மின்ஸ் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாச, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, ஷிவம் மவி பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் ஆனார். அவர் 54 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து கிரண் போலார்ட் களமிறங்க, ஹார்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

கிரண் போலார்ட் 13, கிருணால் பாண்டியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் ஷிவம் மவி 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுளையும், சுநீல் நரேன் 4 ஓவர்களில் 22 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொல்கத்தா தோல்வி: பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில் 7 ரன்களில் வெளியேற, சுநீல் நரேன் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்-நிதிஷ் ராணா ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. கொல்கத்தா 71 ரன்களை எட்டியபோது, தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் (23 பந்துகள்) வெளியேற, நிதிஷ் ராணா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆன்ட்ரே ரஷலும், இயோன் மோர்கனும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடியை 16-ஆவது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பூம்ரா வீழ்த்தினார். ஆன்ட்ரே ரஷல் 11 ரன்களில் ஸ்டெம்பை பறிகொடுக்க, இயோன் மோர்கன் 16 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டெம்பிங் ஆனார். அப்போதே கொல்கத்தாவின் தோல்வியும் உறுதியானது. பின்னர் வந்தவர்களில் பட் கம்மின்ஸ் 12 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் சேர்த்து வெளியேற, கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 80 ரன்கள் குவித்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Empty Re: ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 9:02 am


சுருக்கமான ஸ்கோர்


மும்பை 195/5

ரோஹித் சர்மா 80 (54)
சூர்யகுமார் யாதவ் 47 (28)
ஷிவம் மவி 2வி/32

கொல்கத்தா 146/9


பட் கம்மின்ஸ் 33 (12)
தினேஷ் கார்த்திக் 30 (23)
ஜேம்ஸ் பட்டின்சன் 2வி/25
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Empty Re: ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 9:02 am


சுருக்கமான ஸ்கோர்


மும்பை 195/5

ரோஹித் சர்மா 80 (54)
சூர்யகுமார் யாதவ் 47 (28)
ஷிவம் மவி 2வி/32

கொல்கத்தா 146/9


பட் கம்மின்ஸ் 33 (12)
தினேஷ் கார்த்திக் 30 (23)
ஜேம்ஸ் பட்டின்சன் 2வி/25
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Empty Re: ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Post by ayyasamy ram on Thu Sep 24, 2020 5:02 pm

தோல்வி ஏன்?: கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பதில்
-
ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Rohit_Sharma_PTI_Image
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்றிருந்த மும்பை இந்தியன்ஸ், இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

கொல்கத்தா அணியின் ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பேட்டிங்கில் மிகவும் சுமாராகவே விளையாடியது. இதுபற்றி கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

பேட்டிங், பந்துவீச்சில் இன்னும் நாங்கள் நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் சுமாராகவே ஆடியிருக்கிறோம். தோல்வியை மிகவும் ஆராய விரும்பவில்லை. எங்குத் தவறு செய்தோம் என வீரர்களுக்குப் புரிந்துள்ளது.

பேட் கம்மின்ஸ், மார்கன் ஆகிய இருவரும் இன்றுதான் தனிமைப்படுத்துதலை முடித்துள்ளார்கள். இந்த வெயிலில் இந்தச் சூழலில் விளையாடுவது கடினமானது. எங்கள் வீரர்கள் நன்கு முயற்சி செய்தார்கள். பேட்டிங் வரிசையை மாற்றுவது குறித்து பயிற்சியாளர் மெக்கல்லமுடன் விவாதிக்கவில்லை என்றார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி Empty Re: ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum