ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by ayyasamy ram Today at 8:32 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

Admins Online

அப்பா – சிறுகதை

Go down

அப்பா – சிறுகதை Empty அப்பா – சிறுகதை

Post by ayyasamy ram on Tue Oct 27, 2020 5:34 pm

அப்பா – சிறுகதை 4
-
சமையற்கட்டில் மிக்ஸி ஓடும் சத்தம் கேட்டது.
முதலில் சீராக ஆரம்பித்து சில வினாடிகளிலேயே
வினோத சப்த ஜாலங்கள்.

‘‘என்னம்மா...’’எழுந்து போய்ப் பார்த்தால்
அதற்குள் ஸ்விட்சை அணைத்திருந்தாள்.
மிக்ஸியைத் திறந்து பார்த்தால் உள்ளிருந்த
பிளேடு வளைந்திருந்தது.

‘‘ரெண்டு நாளாவே தொல்லை பண்ணுச்சு.

இன்னிக்கு வாயைப் பொளந்துருச்சு...’’எதுவும்
பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டேன்.
இரவு டிபனுக்கு சட்னி அரைக்கும்போதுதான்
இந்த சிக்கல்.

மிக்சி சரியில்லை என்கிற ஒரே பதில் டிபனுக்கு
ஆப்பு வைத்து விடும். இன்னொரு ஜார் ஏற்கெனவே
வாயைப் பிளந்திருந்தது. எதையும் தள்ளிப் போடும்
சாமர்த்திய வாழ்க்கையில் ‘அதான் இன்னொரு
ஜார் இருக்கே... வச்சு சமாளி...’ என்று இத்தனை
நாட்கள் ஓட்டியாச்சு.

கைபேசி சிணுங்கியது. எடுத்தால் அப்பா என்கிற
எழுத்துக்கள் ஒளிர்ந்தன. இப்போது பேச
ஆரம்பித்தால் மிக்சி வேலை தடைப்படும்.
போய் விட்டு வந்து பேசலாம் என்று ரிங் டோனை
ஒலிக்க விட்டேன்.

ஷாப்பர் பையில் மிக்சி, ஜார்களைப் போட்டுக்
கொடுத்தாள். முன் ஜாக்கிரதையில் கில்லாடி.
சரி செய்யும்போது ‘எல்லாவற்றையும் சேர்த்தே
பார்த்துருங்க’ என சொல்லாமல் சொன்ன
புத்திசாலி.

‘‘எவ்வளவு கேட்பார்னு தெரியலியே...’’
‘‘இந்தாங்க...’’எட்டாய் மடித்த ஐநூறு ரூபாய்
தன் ரகசிய பதுங்குமிடத்திலிருந்து வெளிப்பட்ட
குஷியில் உடம்பை விரித்து முழுக் காற்றையும்
ஆழ்ந்து சுவாசித்தது.

டூ வீலர் ஏற்கெனவே ரிசர்வில் ஓடிக் கொண்டிருந்தது.
வண்டியில் சாவியை சொருகியதுமே ஞாபக
சவுக்கு சொடுக்கியது.

தெரு முனையில் சர்வீஸ் சென்டர்.
ராகா எலக்ட்ரானிக்ஸ். ‘உரிமை: மனோகர்.
எல்லாவித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இங்கே
பழுது நீக்கப்படும்’. இந்த வரியில்தான் நான் முதன்
முதலில் விழுந்தேன். பிற இடங்களில் பழுது
‘பார்க்கப்படும்’ என்றிருக்கும். இங்கே ‘நீக்கப்படும்’.
மெக்கானிக்கிடம் அதைச் சொல்லி சிலாகித்த
போது பெருமையாகச் சிரித்துக் கொண்டான்.
என்னில் பாதி வயசு.

இன்று நல்ல வேளையாகக் கடை திறந்திருந்தது.
கடைக்குள் ஒரு பெரியவர் மட்டும்
உட்கார்ந்திருந்தார். மனோகரைக் காணோம்.

மிக்ஸி பையை வைத்தேன். எடுத்துப் பார்த்த
வேகத்தில் அவரே சரி செய்து விடுவார் போலிருந்தது.
பிளேடைச் சுழற்றி... மிக்சியைத் தலை
கீழாய்க் கவிழ்த்து... உச்சு கொட்டினார்.

‘‘பார்த்தீங்களா... பாட்டம் போயிருச்சு...’’
‘‘ம்ம்... சத்தம் வரவும் எடுத்துகிட்டு வந்தேன்...’’
‘‘பையன் இப்ப வந்துருவான்...’’
ஒரு ஸ்டூலை எடுத்து ஓரமாய்ப் போட்டார்.
‘‘உட்காருங்க...’’

‘ஓ... அப்போ இவர் சரி செய்ய மாட்டார்’ என்று
புரிந்தது. கடைக்குள் ஷெல்பில் ரேடியோ.
எஃப்எம்மில் இளையராஜா இசையில் பாடல்கள்.
ரேடியோ கேட்டு எவ்ளோ நாளாச்சு. வீட்டை விட்டு
வெளியில் எவ்வித நெருக்கடியும் உணராத
நேரத்திற்கு மனம் உண்மையிலேயே ஏங்கி
இருந்திருக்கிறது.

இல்லாவிட்டால் இப்படி நாலைந்து பாடல்கள்
ஒலிபரப்பாகும் வரை ஏன் என்னிடம் எவ்வித
பதற்றமும் இல்லை?

பிறகுதான் புத்தி விழித்துக் கொண்டது.
இது என் இடம் இல்லை. நான் கிளம்ப வேண்டும்.

எழுந்து நின்றேன் என் அதிருப்தியைக் காட்டும்
விதமாய்.‘‘என்னங்க... எப்போ வருவாரு..?’’
பெரியவர் அசரவில்லை. மொபைலை எடுத்தார்.
அழைப்பு போனது. ‘‘தம்பி... கஸ்டமர்
காத்திருக்கார்ப்பா...’’

‘‘சரிப்பா...’’ என்னிடம் திரும்பினார்.‘‘சர்வீசுக்குப்
போன இடத்துல இன்னும் வேலை முடியலியாம்.
கொடுத்துட்டு போகச் சொல்றான்...’’அப்போது
இன்றைய தேவைக்கு உதவாது. இந்த நினைப்பில்
முகம் சுளித்து விட்டேன் என்னையும் மீறி.

‘‘வந்த உடனே மொத வேலை உங்களுதுதான்.
ஃபோன் நம்பர் கொடுத்துட்டு போங்க...’’என்
பெயரை விசாரித்து ஜார்களில் எழுதிக் கொண்டார்.
உள் பக்கமாய் பத்திரப்படுத்தினார். இதற்குள்
இன்னொருவர் வர அவரிடமும் அதேபோல்
விசாரிப்பு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63264
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பா – சிறுகதை Empty Re: அப்பா – சிறுகதை

Post by ayyasamy ram on Tue Oct 27, 2020 5:35 pmவண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து
விட்டேன். போன வேலை முடியவில்லை என்று
தெரிந்ததும் அவள் ‘எதிர்பார்த்த ரிசல்ட்தான்’
என்கிற பாவனையைக் காட்டினாள்.

‘இதே எதிர் வீட்டுக்காரன் என்றால் கையோடு
ரிப்பேர் செய்து வாங்கி வந்திருப்பான்’ என்கிற
தகவலும் அதில் ஒளிந்திருந்தது.

மொபைலுடன் மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.
எதிரே கோபுரங்களின் வரிசை. பக்கத்து வீட்டில்
வளர்க்கும் புறாக்களின் சிறகடிப்பு. தோப்புகள்
அழிக்கப்பட்ட பூமியில் எங்கிருந்தோ வரும் காற்று.

கைபேசி ஒலித்தது.
‘‘மிக்ஸி ரிப்பேருக்கு கொடுத்தீங்களா..?’’
‘‘ஆமா...’’
‘‘உங்களுக்காகத்தான் இப்போ கடைக்கு வரேன்.
வந்து வாங்கிட்டு போயிருங்க...’’

கீழிறங்கி வந்து வண்டியை எடுத்துக்கொண்டு
கிளம்பினேன். சட்னி நிச்சயம் என்று மனம்
குதூகலித்தது.

கடைக்குப் போனால் அதே பெரியவர்தான்
இருந்தார்.

‘‘பையன் ஃபோன் பண்ணாப்ல. கடைக்கு வரச்
சொன்னாரே...’’
‘‘வந்துருவான்... ஒக்காருங்க...’’
மறுபடி ஸ்டூலை எடுத்துப் போட்டார்.

‘‘இதா... பக்கத்துல ஒரு காப்பி குடிச்சுட்டு வரேன்...’’
லேசான கெஞ்சல் அவர் குரலில் தெரிந்தது.

‘‘போயிட்டு வாங்க...’’
‘‘ஆள் இல்லாம கடையை விட்டுப் போக முடியல...’’

என்ன வைத்தாலும் எழுபது வயசிருக்கும்.
ஆனால், அஞ்சு பத்து வயசு குறைத்துச் சொல்கிற
மாதிரி உருவம். அவர் நடந்து போனபோது தளர்ச்சி
தெரிந்தது. எத்தனை நேரமாய் உட்கார்ந்திருந்தாரோ.

பைக் வந்து நின்றது. மனோகர்.
‘‘எங்கே இவர் போயிட்டாரு..?’’ என்றான்.
‘‘பக்கத்துலதான். சொல்லிட்டுத்தான் போனாரு...’’ என்றேன்.
மிக்சியை எடுத்துப் பார்த்தான். உதட்டைப் பிதுக்கினான்.
‘‘நல்லா அடி வாங்கிருச்சு. முதல்லியே கொண்டு
வந்துருக்கலாம். இப்போ முழுசா மாத்தணும்...’’

‘‘மாத்திருங்க...’’

ஏதோ கணக்கு போட்டு தோராயமாய் ஒரு தொகை
சொன்னான். நான் சம்மதமாய்த் தலை அசைக்கவும்
வேலையை ஆரம்பித்தான்.

பெரியவர் திரும்பி விட்டார். மகனைப் பார்த்தும்
பார்க்காத மாதிரி மையமாய் நின்றார்.
‘‘வேற யாரும் தேடுனாங்களா..?’’
‘‘இல்லை...’’
‘‘கெளம்பணுமா..?’’
‘‘பரவால்ல... இருக்கேன்...’’

‘‘இவருக்காகத்தான் வேகமா வந்தேன். இருந்து
கடையைப் பூட்டிக்கிட்டு போகலாம்...’’

சரி என்று தலையாட்டினார். இருந்தது ஒரு
ஸ்டூல்தான். அவர் நிற்பது சங்கடமாய் இருந்தது.

‘‘அரை மணி ஆவுமா..?’’ என்றேன் மனோகரிடம்.
‘‘முடிஞ்சிரும் சார்...’’‘‘நீங்க ஒக்காருங்க. அந்தக்
கடை வரைக்கும் போயிட்டு வரேன்...’’ என்றேன்
பெரியவரிடம்.

அலுவலகம், வீடு என்று திரும்பத் திரும்ப செக்கு
மாட்டு வாழ்க்கை. இதே தெருவின் இன்னொரு
பாதியில் பூக்கடைகள் வரிசையாய் இருக்கும்.
கீழே பூக்கள் சிதறிக் கிடக்கும். இருவாட்சி, முல்லை,
மல்லிகை, ரோஜா, சம்பங்கி, செவ்வந்தி...
வினோதமான மணம் காற்றில்.

இலக்கில்லாமல் இப்படி நடக்கும்போது உடம்பே
லேசாகி விடுகிறது. புத்தி எதையும்
ஆராய்வதில்லை. சிந்தனை ஓய்வெடுக்கிறது.
வாழ்வில் சில சமரசங்களுக்கு மனம் தயாராகி
விடுகிறது.

திரும்பி நடந்தேன். மனோகர் இன்னமும்
மிக்சியோடு போராடிக் கொண்டு இருந்தான்.
என்னைப் பார்த்ததும் பெரியவர் சமாதானமாய்
சொன்னார்.

‘‘இதோ முடிஞ்சிரும். டைட்டா புடிச்சிருக்கு...’’
எழுந்திருந்தார் எனக்கு அமர இடம் கொடுக்க.
கவனிக்காத மாதிரி நின்றவாறே வேடிக்கை
பார்த்தேன்.

அரை மணி நேரத்திற்குப் பின் மிக்சி ரெடியானது.
ஜாரை வைத்து ஓட்டிக் காட்டினான். உடைந்த
பகுதியைக் கொடுத்தான்.

‘‘நல்லா வேலை வாங்கிருச்சு...’’ என்றான்
பெருமூச்சுடன்.

ரூபாய் நோட்டை நீட்டினேன். மீதியைக் கொடுத்து
விட்டு பெரியவரிடம் திரும்பினான்.
‘‘பார்த்துக்குங்க. வீடு வரைக்கும் போயிட்டு வரேன்...’’
பைக்கில் ஏறிப் போய் விட்டான்.

‘‘இவர் ஒரு மகன்தானா..?’’ என்றேன்.
‘‘ரெண்டு பொண்ணு. இவன்...’’
‘‘கட்டிக் கொடுத்தாச்சா..?’’
‘‘ம்ம்ம்...’’
‘‘பேரப் புள்ளைங்க கூட பொழுது போவும்...’’ என்றேன்
சிரித்தபடி.பெரியவர் வாயிலிருந்து வார்த்தைகளைப்
பிடுங்க வேண்டியிருந்தது. விமர்சனங்கள் அற்ற முகம்
அவருக்கு.

‘‘அவரு வெளியே போற நேரத்துல கடையைப்
பார்த்துக்கிறீங்க பொறுப்பா...’’ என்றேன் கூடுதல்
பாராட்டாய்.சிக்கனமாய் புன்னகைத்தார்.

மிக்சி பையை மாட்டிக் கொண்டு கிளம்ப யத்தனித்த
போது பெரியவர் கேட்டார்.‘‘அப்பா அம்மா உங்க கூட
இருக்காங்களா தம்பி..?’’

திரும்பி அவரைப் பார்த்தேன். இப்போதும் நிதானமான
முகம். ‘நீ கேட்டில்ல... நானும் ஒரே ஒரு கேள்வி
கேட்டுக்கிறேங்’கிற மாதிரி.

‘‘ஊர்ல இருக்காங்க...’’

சரி என்பது போல் தலையாட்டினார். வேறு எவ்வித
விசாரணையும் இல்லை. வீட்டுக்கு வந்து மிக்சியைக்
கொடுத்ததும் கேட்டாள்.

‘‘என்னவாம்... எவ்ளோ வாங்கினான்..?’’

அவளுக்கு பதில் சொல்லத் தோன்றாமல் மொபைலை
எடுத்துக் கொண்டு நகர்ந்தேன். மிஸ்டு அழைப்பில்
அப்பா நம்பரைத் தேடி அழைக்க.

இதுவரை அமைதியாய் இருந்த மனசு பிறாண்ட
ஆரம்பித்திருந்தது.‘ச்சே, தப்பு பண்ணிட்டேன்.
அப்பவே பேசி இருக்கணும்...’

ரிங் போக ஆரம்பித்தது. அப்பாவின் குரல் கேட்க
தவிக்க ஆரம்பித்தேன் அப்போது.
-
----------------------------------ரிஷபன்
நன்றி- குங்குமம்ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63264
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum