ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 4:50 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 1:28 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

Admins Online

வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா

Go down

வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா Empty வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா

Post by ayyasamy ram on Tue Nov 03, 2020 7:08 am

உடலுக்கு சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவு,
மிக அவசியம் என்பது டாக்டர்கள் சொல்லும்
ஆரோக்கிய அறிவுரை. சரிவிகித ஊட்டச் சத்து
என்றால், எவ்வளவு என்பதில்தான் பலருக்கும்
சந்தேகம்.

குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, கொழுப்புச் சத்து,
மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள்
போன்ற சத்துக்கள் சேர்ந்ததுதான் சரிவிகித
ஊட்டச் சத்து. எல்லாச் சத்துக்களுமே
முக்கியமானவை என்றாலும், உடல் செல்களின்
வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு
சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும்
அவசியம்.

வைட்டமின் சி என்பது நீரில் கரையக்கூடிய
வைட்டமின். ‘வைட்டமின் டி’-யைப்போல் இதை
நம் உடல், உற்பத்தி செய்வதில்லை.

நீரில் கரையக்கூடியது என்பதால், சேமித்து வைக்கவும்
முடியாது. எனவே, பெரியவர்கள் தினசரி 60 மி.கி.
அளவுக்கு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம்
உள்ளது. இதுதவிர, வேறு எந்தெந்த உணவுப்
பொருள்களில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது
என்பது பற்றி காரைக்குடியைச் சேர்ந்த டயட்டீஷியன்
செல்வராணியிடம் கேட்டோம்.

‘நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத
உற்பத்திக்கும் வைட்டமின்- சி மிகவும் அவசியம்.
இந்த கொலாஜன்தான் லிகமென்ட் என்று சொல்லக்
கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள்,
தசைகளுக்கு உதவுகிறது.

மேலும், நம் சருமம் மற்றும் இதர உறுப்புக்களின்
ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது.
இது, மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ‘ என்றவர்,
இதர காய்கறி – பழங்களில் வைட்டமின் சி
எவ்வளவு உள்ளது என்று பட்டியலிட்டார்.

ஆரஞ்சு

100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மி.கி. அளவில்
வைட்டமின் சி உள்ளது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து
சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவடையும்.
வளரக்கூடிய எலும்புகள், தசை நார்கள், ரத்தக்
குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில்
ஆரஞ்சு முக்கியமான பங்கு வகிக்கிறது.

வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம்,
பொட்டாசியம், நார்ச் சத்து, வைட்டமின் ஏ மற்றும்
பீட்டா- கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் இதில்
அடங்கியுள்ளன. மேலும், கலோரி அளவு குறைவாக
இருப்பதால், உடல் எடையைக் குறைக்க
நினைப்போர், தினமும் சேர்த்துக்கொள்வது நல்ல
பலனைத் தரும்.

அதுமட்டுமின்றி, ஆரஞ்சுப் பழத்தின் வாசமே
மனநிலையை சந்தோஷமாக மாற்றும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63426
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா Empty Re: வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா

Post by ayyasamy ram on Tue Nov 03, 2020 7:09 am

பப்பாளி

விலை மலிவானதும் எல்லாக் காலங்களிலும்
கிடைக்கக்கூடியதுமான பப்பாளியில் வைட்டமின்
ஏ சத்துடன், வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளது.
100 கிராம் பப்பாளியில் 60 மி.கி. வைட்டமின் சி
இருக்கிறது. நாள் ஒன்றுக்குத் தேவையான அளவு
வைட்டமின் சி, 100 கிராம் பழத்திலேயே கிடைத்து
விடும்.

இதுதவிர பொட்டாசியம், கால்சியம் போன்ற
தாது உப்புக்களும் அதிகம் உள்ளன.

கொய்யா

கொய்யாப் பழ ரகத்துக்கு ஏற்றபடி அதிகபட்சமாக
228 மி.கி. வரையில் வைட்டமின் சி உள்ளது.
இது செல்களைப் பாதுகாத்து, புற்றுநோய் செல்
உருவாவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன்,
இதர செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடும்
ஆற்றலை, செல்களுக்கு அளிக்கிறது. ரத்தத்தில்
சர்க்கரை அளவைக் குறைக்கிறது. வைட்டமின் சி
தவிர்த்து இதில் பொட்டாசியம் அதிக அளவில்
உள்ளது. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க
இது பெரிதும் உதவும்.

குடமிளகாய்

இதில், வைட்டமின் சி இருக்கிறது. இதுதவிர,
குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6
போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக்
கொடுக்கும்.

பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே
கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும்
காக்கும்.
சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று
அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப்
போக்க உதவும்.

மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில்
பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும்
சூப்களில் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை?

பச்சிளம் குழந்தைகளுக்கு: 35 மி.கி.,
வளர் இளம் பருவத்தினருக்கு: 50 மி.கி.,
பெரியவர்களுக்கு: 70-75 மி.கி.
கர்ப்பிணிகளுக்கு: 80-85 மி.கி.
தாய்ப்பால் புகட்டும்போது: 120-125 மி.கி.

நன்றி:- டயட்டீஷியன் செல்வராணி
நன்றி:- டாக்டர் விகடன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63426
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum