புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
45 Posts - 58%
heezulia
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
87 Posts - 60%
heezulia
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_m10ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Jan 14, 2010 3:47 pm






உங்கள் வாழ்க்கையில் நீங்களே அதிசயிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கிக்
கொள்ள முடியும். மிக மோசமான நிதி நிலையை மாற்றி செல்வந்தனாக
மாறிவிடமுடியும். நோயாüயாக இருந்தால் முழு ஆரோக்கியத்தை அடைந்துவிட
முடியும். சராசரி மனிதராக இருத்தாலும் புகழ்மிக்க மதிப்புமிக்க மனிதராக
மாறிவிட முடியும்.
அதற்கு யார் உதவியைப் பெறவேண்டும்? எவருடைய ஒத்துழைப்பைப் பெற வேண்டும்? எவரும் உதவத் தேவையில்லை; உதவவும் முடியாது.
நீங்கள்தான் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும். அதைச் செய்து முடிக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு.
முடியாது, இயலாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது என்னும் எண்ணங்களை
மாற்றி அமைக்கும் போது நம்பிக்கை பலப்படுகிறது. நம்பிக்கை எண்ணங்களைத்
தொடர்ந்து பதித்துக் கொண்டே வந்தால் அது ஆழ்ந்த நம்பிக்கை ஆகிவிடுகிறது.
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றலாகச் செயல்பட்டு, நாம் எது நடக்க வேண்டும்
என்று விரும்புகிறோமோ அது நிறைவேறுவதற்குத் தேவையான சம்பவங்களை
உருவாக்குகிறது.
ஒரு நம்பிக்கை, அவநம்பிக்கையின் தலையீடு இன்றி, தொடர்ந்து
பதிக்கப்படும் போது, நாளடைவில் அது ஆழ்ந்த நம்பிக்கை என்னும் விசுவாசமாக
மாறிவிடுகிறது.
உலக வரலாற்றை கவனமாகப் புரட்டினால் ஏழையர் பலர் கோடீஸ்வரர்களாக
உயர்ந்ததையும், குறைந்த பள்üப் படிப்பே உடையவர்கள் மேதைகளாக
உயர்ந்ததையும், அவமானங்களையே சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் புகழ்
பெற்றவர் களாக மாறியதையும், மிகச் சாதாரணமான தொழிலைச் செய்து
கொண்டிருந்தவர்கள் மிக உயர்ந்த பதவிகளைப் பெற்றமைக்கும் ஆயிரக் கணக்கான
சான்றுகள் கிடைக்கும்.
அவர்கள் அவ்வாறு சாதிக்கத் துணையாக இருந்தது எது? அவர்களுக்குள்
ஏற்பட்ட ஆழ்மனப் பதிவுகள்தான் அதிசய ஆற்றலை வெüயில் கொண்டு வந்தன.
வெüப்பட்ட அதிசய ஆற்றல் அவர்களுக்கு எதிராக, பாதமாக, விரோதமாக இருந்த
புறச்சூழ்நிலைகளை ஆதரவாக, சாதகமாக, உதவியாக மாற்றியமைத்தது.
அவர்களுடைய உடல் வலிமையோ, செல்வாக்கோ, கிடைத்த சிபாரிசுகளோ அவர்
களுடைய வெற்றிக்குக் காரணமல்ல. ஆழ்ந்த நம்பிக்கைதான் அதிசய ஆற்றலை உருவாக்கிக் கொடுத்தது.

அவர்கள் பயன்படுத்திய அதிசய ஆற்றலை நாமும் வளர்க்க முடியும், வெüக்கொணர
முடியும் உலகம் வியக்கும் பெருமை மிக்க சாதனைகளைச் செய்ய முடியும்.
ஆனால், நம்மில் பலர் ஏன் சோர்ந்து போய் இருக்கிறோம்? கடந்த கால கஷ்ட,
நஷ்டங்கள், தோல்விகளையே மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறீர்களா?
நிகழ்காலத்தில் சூழ்நிலை எவ்விதத்திலும் சாதகமாக இல்லையே என்று திகைத்துப்
போயிருக்கிறீர்களா? இந்த இரண்டு செயல்கள்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை
ஆவதைத் தடுக்கின்றன.

இந்த நொடியிலிருந்தே நீங்கள் கடந்த காலக் காட்சிகளை நினைவுக்குக்
கொண்டு வருவதை நிறுத்திவிட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையே என்று உறுதியாக எண்ணுங்கள். நிகழ்காலச் சூழ்நிலை அப்படி
நம்புவதற்கு எதிராக இருக்குமானால் நிகழ்காலத்தைக் கணக்கில் எடுத்துக்
கொள்ளாமல் கழித்து விடுங்கள்.
ஆதாரமோ, அறிகுறியோ அடையாளமோ இல்லாத நிலையிலும், நீங்கள் விரும்புவது
எதிர்காலத்தில் நிறைவேறியே தீரும் என்று அடிக்கடி எண்ணுங்கள். அந்த
எண்ணம்தான் நம்பிக்கையாகி, ஆழ்ந்த நம்பிக்கையாகி அதிசய ஆற்றலை
வெüக்கொணர்கிறது.
“ஆழ்ந்த நம்பிக்கை” என்னும் விசுவாசம் உங்கள் உள்ளத்தில் வேர் கொள்ள
வேண்டும் என்றால் நீங்கள் ஆக்கமனப்பான்மையுடன் உங்கள் முயற்சிகளை ஒரு
குறிக்கோளை நோக்கித் திருப்பிவிட வேண்டும்.

அப்படியானால், பத்து ஆண்டுகüல் சாதிக்கத் தகுந்த ஒரு குறிக்கோளை
நீங்கள் நிர்ணயித்திருக்க வேண்டும். நிர்ணயிக்காவிடில் ஆழ்ந்த நம்பிக்கை
பற்றி அறிந்து கொள்வதோ, இது போன்ற பல கட்டுரைகளைப் படிப்பதோ, உங்களுக்குப்
பயன் எதையும் தாராது.
“நடந்தே தீரும் நடந்தே தீரும்” என்று உணர்ச்சியுடன் சொல்லச் சொல்ல
உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை பெருகும். மேலும் மேலும் நம்பிக்கை
பதிக்கப்படும்போது அது விசுவாசமாக மாறிவிடும்.

விசுவாசம் தானாகவே நீங்கள் விரும்புவதை உங்களுக்குப் பெற்றுத்
தந்துவிடாது. ஆனால், அதை அடையக் கூடிய வழியை உங்களுக்குத் தெüவாகக்
காட்டும். விசுவாசம் காட்டும் வழியில் சென்று, நீங்கள் அதனை எடுத்துக்
கொள்ளலாம்.

விசுவாசத்தை ஒரு அடிப்படையை வைத்துத் தான் நிலைநிறுத்த முடியும்.
அப்படி விசுவாசத்தை நிலை நிறுத்தாவிடில் அந்த இடத்தை பயம் ஆக்கிரமிக்கும்.
அப்படி ஆகிவிட்டால், இப்படி ஆகிவிட்டால் என்று எண்ணுகிற பயத்திற்கு இடம்
கொடுத்தால் நாம் சூழ்நிலையின் கைதியாக மாறி விட நேரும்.

நீங்கள் விசுவாசத்தை வளர்த்து வெற்றி காண வேண்டும் என்றால் ‘முடியாது’
என்னும் சொல்லை அர்த்தமற்றதாக எண்ண வேண்டும். அப்படி எண்ணி வளர்க்கப்பட்ட
விசுவாசம்தான் மிகப் பெரும் அதிசயங்களையும், அற்புதங்களையும்
நிகழ்த்தியுள்ளது.
முடியாது என்பதற்கு ஆதாரமான காரணங் களை ஏன் தேடுகிறீர்கள்? முடியும்
என்று நினைத்துக்கொண்டு ஆதாரங்களைத் தேடுங்கள் நூற்றுக் கணக்கில்
கிடைக்கும்.
விசுவாசம் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை மாபெரும் சாதனைகளைப்
படைத்திருக்கிறது. பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது. உங்கள்
விசுவாசத்தை பலப்படுத்த உதவும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியை கவனமாகப்
படியுங்கள். படிக்கும் போது உங்கள் குறிக்கோளையும், உங்கள் வாழ்க்கையையும்
தொடர்புபடுத்திச் சிந்தியுங்கள்.

பிரான்சு நாடு பல ஆண்டுகளாக இங்கிலாந் துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது.
பிரான்சின் அரசன் பலமுறை படையெடுத்துப் போய் ஒவ்வொரு முறையும் தோல்வி
அடைந்து சோர்ந்து போனான்.

தம் தாய்நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது குறித்து பலர் கவலைப்பட்டார்கள். அவர்கüல் ‘ஜோன்’ என்னும் ஏழைச் சிறுமியும் ஒருத்தி.
அவளோ, ஓர் ஏழைச் சிறுமி, ஆடு மேய்ப்பவள், எழுதப்படிக்கத் தெரியாதவள், உடல்வலிமை இல்லாதவள், வயதோ பன்னிரண்டு.
எந்தத் தகுதியும் இல்லாத ஜோன் தாய் நாட்டைக் குறித்துக் கவலைப்பட்டாள்.
நம் தாய்நாடு விடுதலை பெற வழியில்லையா? என ஏங்கினாள். எவரும் தாய்நாட்டை
மீட்க மாட்டார்களா? என்று கவலையோடு சிந்தித்தாள்.

அரசனைச் சந்திப்பதற்குப் பலமுறை முயன்றாள். ஆனால், ஏழையான மெலிந்த அவள் தோற்றத்தைக் கண்டு காவலர்கள் அவளை விரட்டியடித்தனர்.
ஆனால், அரசனைக் காணும் முயற்சியை அவள் நிறுத்தவில்லை. ஐந்து ஆண்டுகள் இடைவிடாது முயன்ற பிறகே அவளால் அரசனைச் சந்திக்க முடிந்தது.
அவளுடைய ஏழ்மைக் கோலத்தைக் கண்ட அரசன் “என்ன வேண்டும் உனக்கு?” என்று
கேட்டான். “என் பின்னால் ஒரு படையை அனுப்புங்கள். நான் நாட்டை மீட்டு
வருகிறேன்!” என்று அவள் சொல்லக் கேட்ட அரசன் முதலில் சிரித்தான்.

ஆனால், அவள் குரலின் உறுதியும், கண்கüன் ஒüயும் அவனைச் சிந்திக்க
வைத்தன. நூறு முறைக்கு மேல் தோற்றுப் போயிருக்கிறோம். இன்னொரு முறை
தோற்பதனால் என்ன நேர்ந்து விடும்! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

படை வீரர்களை அணிவகுத்து நிறுத்தி, “ஜோன் என்னும் பெண் என்ன சொல்கிறாளோ அதன்படி செய்யுங்கள்” என்று கட்டளை இட்டான்.

இராணுவ உடைகளைக்கூட அணிந்து கொள்ளாத, ஆயுதங்களை ஏந்தத் தெரியாத, போர்ப்
பயிற்சி இல்லாத, ஏழையான எழுதப் படிக்கத் தெரியாத, மெலிந்த உடலுக்குரிய,
பதினேழு வயது ஜோன், படையை தலைமை தாங்கி நடத்திச் சென்று, எவராலும்
தகர்க்கப்பட முடியாது என்று கருதப்பட்ட ஆர்லீன்ஸ் கோட்டையை தகர்த்து
தாய்நாட்டை மீட்டாள்.
உலகமே அதிசயித்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? ஜோனிடம் இருந்த அந்தத்
தகுதி அவளுக்கு வெற்றிபெற்றே தீரவேண்டும் என்னும் குறிக்கோள். அதில் வெல்ல
முடியும் என்னும் நம்பிக்கை. எப்படி வெற்றி கிடைக்கும் என்று தெரியாது.
அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, ஆனால் வெற்றி கிடைத்தே தீரும்! என்னும்
விசுவாசம்.

ஜோனிடம் இருந்த திட்டவட்டமான குறிக்கோளும், வெல்ல முடியும் என்னும்
நம்பிக்கையும், எப்படி என்று தெரியாது அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால்
வெற்றி கிடைத்தே தீரும் என்னும் விசுவாசமும் உங்கüடமும் இருக்குமானால்
நீங்களும் அற்புதமான சாதனைகளைப் படைத்துவிட முடியும்.

நன்கு கவனித்துப் பாருங்கள். ஜோனிடன் குறிப்பிட்டுச் சொல்லும்படி
ஏதேனும் தகுதி இருந்ததா? குறைகளும், பலவீனங்களும் அவள் சொத்தாக இருந்தன,
பின்னர் எப்படி அவளால் வெல்ல முடிந்தது.

கடந்த காலத் தோல்விகள் குறித்து அவள் சிந்திக்கவில்லை. நிகழ்காலச்
சூழ்நிலை பாதமாக இருப்பதை அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்கால
வெற்றியில் நம்பிக்கை வைப்பதற்கு அறிகுறியையோ, அடையாளத் தையோ, ஆதாரத்தையோ
அவள் தேடவில்லை. ஆனால், தான் விரும்புவது நடந்தே தீரும் என்று நம்பினாள்.
அதுவும் ஆழமாக நம்பினாள். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அதிசய ஆற்றலாக
உருவெடுத்தது. சூழ்நிலையை அவளுக்குச் சாதகமாக மாற்றியது. அந்த மாபெரும்
அற்புதம் தானே நிகழ்ந்தது.

வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள ஆர்வமா? அப்படியாயின் ஜோன் என்னும் வீராங்கனையோடு உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

அவளைப் போன்று நீங்கள் சிறுவயதினரா? இல்லை. எழுதப்படிக்கத் தெரியாதவரா?
இல்லை. அவள் அளவுக்கு ஏழையா? இல்லை. ஆடு மேய்ப்பவரா? இல்லை. உடல் வலிமை
அற்றவரா? இல்லை. எல்லாற்றிலும் அவளைவிட நீங்கள் பன்மடங்கு மேலானவர்.
ஜோனைப் போன்று உங்கள் குறிக்கோளை, பத்து ஆண்டுகüல் அடைய வேண்டிய நிலையை
திட்டமாக முடிவு செய்து விட்டீர்களா? அதை நிச்சயம் அடைய முடியும் என்று
நம்புகிறீர்களா? எப்படி என்று தெரியாது! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை!
ஆனால் நான் வைத்துள்ள காலவரையில் அது நிறைவேறியே தீரும் என்று ஆழமாக
நம்புகிறீர்களா? உங்களாலும் ஜோனைப் போன்று அற்புதச் சாதனை நிகழ்த்த
முடியும்.

“நம்பிக்கை” என்பது மந்திர சக்தி, ஆனால் “விசுவாசம்” என்னும் ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்.
“நடந்தே தீரும், நடந்தே தீரும்” என்று ஆட்டோசஜசன் செய்யுங்கள். உங்கüடம் மந்திரசக்தி பெருகும்.
“எப்படி என்று தெரியாது! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ஆனால் என்
குறிக்கோள் நிறைவேறியே தீரும்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள்.
உங்கüடம் அதிசய ஆற்றல் பெருகும்.

மந்திர சக்தியும், அதிசய ஆற்றலும் உங்களுக்குள்ள பிரச்சினைகளை, தடைகளை
எதிர்ப்புகளை முறியடித்து, வழியையும் முறையையும் கற்றுக்கொடுத்து,
திட்டம், மூலதானம் உதவி, ஒத்துழைப்பை உருவாக்கிக் கொடுத்து அறிவு, திறமையை
வலுவாக்கி நீங்கள் நம்பியபடியே, திட்டமிட்டப்படியே வெற்றி தேடித் தரப்
போகின்றன.

ஆகவே, நம்புங்கள்,


ஆழ்ந்த நம்பிக்கையே அதிசய ஆற்றல்.

இதுதான் வெற்றியின் ஐந்தாவது இரகசியம்!



ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக