புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 6:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:29 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 7:08 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 5:48 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 2:59 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 7:54 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 3:41 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:51 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:46 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:23 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 12:07 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:06 am

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:21 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:20 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:54 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:47 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:32 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:15 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:18 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:12 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 12:33 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 9:01 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:43 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 7:26 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 6:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 3:28 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:08 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:02 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:52 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 1:56 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 1:13 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 1:01 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 7:54 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 6:57 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:04 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 4:57 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 7:39 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 7:14 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 8:06 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 3:02 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 2:57 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Fri Dec 01, 2023 10:17 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 5:11 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 3:22 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
34 Posts - 61%
ஆனந்திபழனியப்பன்
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
4 Posts - 7%
heezulia
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
2 Posts - 4%
Saravananj
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
1 Post - 2%
prajai
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
1 Post - 2%
Safiya
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
13 Posts - 9%
heezulia
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
6 Posts - 4%
prajai
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Kpc71
மனோவசிய ரகசியம் Poll_c10மனோவசிய ரகசியம் Poll_m10மனோவசிய ரகசியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோவசிய ரகசியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:11 pm

மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் என்னும் மனோவசிய ரகசியம்
ஆசிரியர்: k.வெங்கட்ராவ்

நினைப்பது கைகூட வேண்டும்

நமது நண்பர்கள் நமக்கு எல்லா நன்மைகளும் செய்ய வேண்டும். நமது காதலி நம்மையே நேசிக்க வேண்டும். நமது மனைவி நம்முடன் கருத்து வேற்றுமையில்லாமல் இல்லறம் நடத்த வேண்டும். நாம் நினைப்பது போலவே' கைகூட வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? எல்லோரும் நினைக்கிறோமல்லவா?

நமது மனதில் சிந்திப்பது நடக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யார் என்று கூற முடியாது. நாம் கோரிய காரியம் கைகூட வேண்டும். கடவுள் கூட நமது இச்சைக்கு இணங்க வேண்டும் என்று ஆசைப்படுவோரும் உண்டு. எல்லாம் நியாயமான ஆசைகள் தான், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் எண்ணுவது போல் பிறரும் எண்ண வேண்டும்; நாம் நல்லவர் என்று மற்றவர் சொல்ல வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? இது தான் கலைக்கு அஸ்திவாரமாகும்.

இந்த அஸ்திரவாரத்தைக் கொண்டே நாம் நமது திட்டங்களை உருவாக்க வேண்டும்.

'கெட்ட எண்ணங் கொண்டவன்; கெட்ட செய்கை செய்பவன்' என்று பிறரை நாம் பழிக்கிறோமல்லவா? பிறர் நம்மைப் பார்த்து இப்படி பேசாதிருக்க வேண்டுமல்லவா? அதாவது நம்மைப் பிறர், பொய்சொல்பவன், நன்றி கெட்டவன். ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன் என்று சொல்லாமலிருக்க வேண்டுமானால் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறர் செய்யும் உபகாரத்தை எப்போதும் மதித்து போற்ற வேண்டும். மனமார பிறரை வஞ்சிக்க எண்ணவே கூடாது. பிறர் எப்படி நல்லவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அந்த நல்ல குணங்களுடன் நல்ல எண்ணங்களுடன் நாம் வாழ வேண்டும்.

'மனம் அழுக்கில்லாமல் பரிசுத்தமாயிருக்க வேண்டும். இதுவே மனேவசியக் கலைக்கு அடிப்படையாகும். இக் கலையால் பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது மற்றவன் ஏமாந்திருக்கும் வேளையில் அவனது பொருளை அபகரிக்க வேண்டுமென நினைக்கக்கூடாது.

மற்றவன் மனைவியை வேறு எண்ணமே இல்லாத பதிவிரதையை ஏமாற்றி அவளது கற்பைப் பறிக்க வேண்டுமென்ற ஆசையை வைக்கக்கூடாது. கல்யாணமாகாத பெண்ணை வசியப் படுத்தி பலாத்காரத்தால் அவளைக் கெடுத்து பிறகு நடுத்தெருவில் அலைய விட்டுவிடலாம் என்று கற்பனை கூட செய்யக்கூடாது.

நமது மனம் பரிசுத்தமாக, நல்ல எண்ணங்களுடன் நல்ல குறிக்கோள்களாக இருந்தால்தான் மனோவசியக் கலை நல்லப் பலனைத் தரும். இல்லாவிடில் இது பலிக்காது.

மனோவசிய மின்சாரம்

மின்சார வசதி இருந்தால் தான் இரும்புத் தூள்களை இழுக்க முடியும். இந்த சக்தி இல்லாவிட்டால் ஒன்றுமே முடியாது. இதுபோலவே நமது மனம் நல்ல நிலைமையில் இருந்தால்தான், பிறர் மனதை இழுக்க முடியும். நமது மனதில் அன்பு இருந்தால்,

இதன் மூலம் பிறரை வசியப்படுத்தலாம். நாம் விசுவாசம் காட்டி பிறரை நம்மை விசுவாசிக்கும்படி செய்யலாம். வெறுப்பும், கடுமையும், கெட்ட எண்ணமும் இருந்தால் இவைகளின் பிரதிபலிப்பே பிறரிடம் நாம் காண நேரிடும். ஆகையால் மனோவசியக் கலைக்கு நாம் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களுடன் நமது மனம் துள்ளி விளையாட வேண்டும். நல்ல சக்தியுடன் நமது மனம் இருந்தால்தான் பிறர் மனதையும் நமக்கு ஆதரவாக இழுத்துக் கொள்ள முடியும் பிறருடைய சக்தி நமக்கு அடிமைப்பட வேண்டுமென்று நாம் கோரும்போது அதைவிட நமது சக்தி அதிகமாக இருக்க வேண்டுமென்று தெரிகிறதல்லவா?

ஒரு ஆசிரியரையும் மாணாக்கர்களையும் எடுத்துக் கொள்வோம். மாணாக்கர்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியருடைய அறிவுக்கு மாணாக்கர்கள் மதிப்புக் கொடுத்து அடங்குவார்கள். மாணாக்கர்களின் சந்தேகங்களைப் போக்க அறிவில்லாத ஆசிரியரை, மாணாக்கர்கள் மதிக்க மாட்டார்கள். அதுபோலவே மற்றவர்கள் நமது இஷ்டங்களுக்கு இணங்க வேண்டும்.

மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நாம் நினைக்கும் போது அவர்களுடைய மனோசக்திக்கு மீறிய சக்தி நம்மிடம் இருக்க வேண்டுமென்று பொருள் படுகிறதல்லவா? இந்த சக்தியை நாம் எப்படி அடையலாம்? இதற்கு வழிமுறைகள் என்னென்ன? கவனிப்போம்.

எதுவும் நினைத்தவுடன் நடந்து விடாது. சிறிதேனும் பயிற்சி வேண்டும் அல்லவா?மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:12 pm


கைகளின் கண்களின் சக்தி

மனம் என்பது எங்கோ இருக்கிறது. அது என்ன செய்கிறது என்பது தான் நமக்குத் தெரிகிறது. மின்சக்தியை நாம் கண்ணால் பார்ப்பதில்லை. விளக்குகள் எரிவதாலும், விசிறி வீசுவதாலும் மின்சக்தி இருக்கிறதென்பதை உணர்கிறோம். அதுபோலவே மனம் இருக்கும் இடம் தெரிவதில்லை. ஆனால் இதன் பிரதிபலிப்பை ஒருவாறு கண்கள், நாக்கு, கைகள் இவைகள் மூலம் அறிகிறோம்.

'ஐயோ அவன் கண்பட்டால் போச்சு; அவன் கைப்பட்டால் நாசம் தான்; அவன் சபித்தால் அப்படியே நடந்து விடும்' என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா? நல்ல அதிர்ஷ்டம் உள்ளவனிடம் நாலு காசு வாங்க வேண்டும்; நல்ல எண்ணம் உள்ளவன் மூலம் ஒரு காரியத்தைத் தொடங்க வேண்டும்; நல்லவன் ஒருவன் வாயால் ஒரு நல்ல வார்த்தை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவது சாதாரணமல்ல. இதற்கெல்லாம் நல்ல காரணங்கள் இருக்கின்றன. 'ஆஹா! அவன் கைராசியுள்ளவன். அந்த டாக்டர் தொட்டாலே வியாதி பறந்து போகும்' என்று கூறுவதில் அர்த்தம் இல்லாமலில்லை.

இன்பம் காணவே பிறந்தோம்

நமது முன்னோர்களாகிய நபிகள் நாயகம் (சல்) இராமலிங்க ஸ்வாமிகள் முதலியவர்கள் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். இவ்வளவும் அவர்களுடைய மனோசக்தியால் தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. மனோசக்தியானது அளவுக்கு மீறி வளர்ச்சி அடைந்த பின்னர் அது பல அற்புதங்களைச் செய்யும்.

இது தெய்வீக சக்தி என்றே நாம் நினைக்க வேண்டியதாக ஏற்பட்டுவிடும். இந்த சக்தியை அடையவே நாம் ஒவ்வொருவரும் உலகில் பிறந்திருக்கிறோம் இந்த மனோசக்தியைப் பெருக்கிக் கொள்ளவே நமது முன்னோர்கள் நமக்கு பல வழிகளைக் காட்டியிருக்கிறார்கள்.

'மனோ சக்தியை அதிகரித்துக் கொண்டு எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டுமென்றே கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்திருக்கிறார். இதை நாம் கவனிக்காமல் நாம் மறந்து இன்பத்திற்குப் பதிலாக துன்பத்தையே அனுபவித்து இரவு பகலாய் கஷ்டப்படுகிறோம். நமது கஷ்டங்கள் பலவற்றிற்கு நாமே பொறுப்பாளி என்பதை நாம் மறக்கலாகாது.

நமது இன்ப வாழ்க்கை நமது கையிலேயே இருக்கிறது. மனேசக்தியிலேயே இருக்கிறது.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:13 pm


நமது கண்பட்டால்

கண்ணின் மூலம் நன்மைகள் ஏற்படுவதைப் போல் தீமைகளும் ஏற்படுவதுண்டு. பசுவோ, எருமையோ பால் கறக்கும் போது கண்டவர் கண்களுக்குத் தெரியக்கூடாது என்று வீட்டிலேயே மறைத்துக் கறப்பதுண்டு. திடீரென்று பசு, பாலுக்கு பதிலாக இரத்தத்தையே முலைக்காம்பிலிருந்து கொட்டச் செய்யும், மாந்திரீகம் செய்வதால் பழையபடி பால் கறக்கத் தொடங்கும். நல்லவர்களின் கண்பார்வையே நன்மை செய்யும்.

கடைக்கண் பாராய்' என்று பகவானை வேண்டுகிறோம். ஒரே பார்வையால் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அடிமையாவதுண்டு. காதல் பிறப்பது சகஜம். காதலுக்காக காதலர்கள் தங்கள் வாழ்க்கையையும் உயிரையும் அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.

கண்களில் கவர்ச்சி-காந்த சக்தி இருக்கிறது. இந்த சக்திக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் விஷயமாக இங்குள்ள தலைவர்களைக் கண்டு பேச ஸ்டாபோர்டு கிரிப்ஸ் என்பவரை பிரிட்டிஷ் மந்திரி சபையினர் அனுப்பி வைத்திருந்தனர். அவர் எல்லாத் தலைவர்களையும் கண்டு பேசினார். ஆனால் காந்திஜியை மட்டும் பார்க்க மறுத்து விட்டார். இதற்கு அவர் கூறிய சமாதானம் என்னவென்றால், 'நான் காந்திஜியை மட்டும் பார்த்தால் அவர் கூறுவதை அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டியவனாய் விடுவேன். ஏனென்றால் அவருடைய கண்களில் உள்ள சக்தியை என்னால் மீற முடியாமற் போய்விடும் என்று கூறினார். ஸர், கிரிப்ஸ் மனோவசியக் கலையை ஆராய்ச்சி செய்தவர். அவ்வாறு இருந்தும் காந்திஜியின் கண்களில் இருந்த சக்தியை அவர் அறிந்து வைத்திருந்தார்.

கண்களின் சக்தியைப் பெருக்கிக் கொள்வதே மனோவசியக் கலையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

கைகளின் சக்தி

கைகளில் உள்ள சக்தியை கவனித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் விரல் நுனி பட்டுவிட்டால் - அதனால் ஏற்படும் காந்த சக்தி காதலனுடைய தேகமெல்லாம் பாலி, அவனைப் பைத்தியமாக்கி விடுகிறது.

குறிப்பிட்ட பெண் சமையல் செய்தால் தனி ருசி உண்டாகிறது. பதார்த்தம் செய்யும் வாணலியில் குறிப்பிட்டவர் எண்ணெய் ஊற்றினால் அதிகமாகச் செலவழியாது,

நிலத்தில் விதை விதைக்கும் போது கைராசியுள்ளவர்களைக் கூப்பிட்டு விதைகளை எடுத்துக் கொடுக்கச் சொல்வது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் சிலரது பார்வையால் தொடுவதால் செடிகள் காய்ந்து தீய்ந்து போகிறது. துளசி செடியின் அருகில் சிலர் வந்தாலும் அன்று முதல் அது தீய்ந்து செத்துப் போகும். மாதவிடாயான பெண்கள் துளசிச் செடியின் பக்கத்தில் வந்தாலே அது விரைவில் தியந்து போய்விடுகின்றது. அதாவது சிலருடைய வாடையிலேயே தீங்கு என்பது இருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.

எனவே, பார்வை ஒன்று தொடுதல் இரண்டாவது மனோசக்தியை உபயோகிப்பது மூன்றாவது, இம்மூன்று சக்திகளை வளர்த்துக் கொண்டு அதை நல்ல வழியில் உபயோகப்படுத்தி நாமும் வாழ பிறரும் வாழ வகை காணுவதே மனோவசியக் கலையின் முக்கியமான குறிக்கோள்.

மனோ சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமானால் மனதைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். பார்வையில் ஒரு சக்தியை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமானால் மனதின் சக்திக்கு ஒத்த வகையில் பார்வையில் ஒரு சக்தியை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். மனிதன் சக்திக்கு ஒத்த வகையில் பார்வையும் கண்டபடி சிதறக்கூடாது. மனம் அடங்க அடங்க அதற்கோர் புதிய சக்தி உண்டாகிறது. பார்வையில் ஒரு சக்தி தோன்றத் தோன்ற பிறர் அதற்கு அடிமையாகும் நிலைமையும் உண்டாகிறது. இவைகளை நாம் வளர்க்க வளர்க்க அற்புதங்களைச் செய்யலாம். இதற்கான வகைகளைக் காணுவோம்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:26 pm

2 .கண்களின் காந்த சக்தி

தூரத்தில் கண்களில் உள்ள காந்த சக்தியைப் பயன்படுத்தி எவரையும் வசியப்படுத்தலாம். காட்டில் வசிக்கும் கொடூர விலங்குகள் கூட மனிதனின் கண் பார்வைக்கு அடிமையாய் விடுகின்றன.

வெகு தூரத்தில் பேசும் வார்த்தையை நாம் கேட்க முடியும், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களிடம் நாம் பேசலாம். ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ளவரைப் பார்க்கலாம் என்று நம் முன்னோர்கள் சொன்னதை நம்பாமல் இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது ரேடியோவின் மூலம் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இயக்கும் இசையை நாம் கேட்கிறோம். தொலைபேசியின் மூலம் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவருடன் உரையாடுகிறோம்.

கம்பியில்லாத தந்தியின் மூலம் உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் செய்திகளை அறிகிறோம். டெலிவிஷன் மூலம் லண்டனிலும், நியூயார்க்கிலும் நடைபெறும் நாடகத்தை இங்கிருந்தே நாம் பார்க்கிறோம். இதற்கெல்லாம் இயற்கை சக்தியே காரணமாகும்.

இயற்கையை அடிப்படையாகக் கொண்டே செயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

மன எண்ண அளவிலும் எழுத்து அளவிலும் சில அதிசய சக்திகளைப் பற்றி செய்தி இருக்கும் வரையில் அவைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் அவைகள் செயல்படும்போது ஆச்சரியப்படுகிறோம்.

நமது சக்திகள் செம்பு, துத்தநாகம், ஈயம், காந்தக்கல் இவைகள் தனித்தனியே இருக்கும்போது அதன் சக்தி இன்னதென்று தெரிவதில்லை. அவைகள் ஒன்றுக்கொன்று பொருந்தும்போது தான் அதன் சக்தி வெளிப்படுகிறது.

காற்றில் உள்ள சக்தியை தண்ணீரில் உள்ள சக்தியை பயன்படுத்திப் பயன் அடைய மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். பூமியிலுள்ள உலோகங்களையும் ரசாயனப் பொருள்களையும் பயன்படுத்தி சில அரிய காரியங்களைச் செய்கிறான். மனிதனிடமும் காந்த சக்தி இல்லாமல் இல்லை. இரும்பு, சுண்ணாம்பு, சர்க்கரை போன்ற சத்துக்களும் நமது உடலில் இருக்கின்றன. பூமியில் உள்ள உலோகச் சத்துக்களைப் போலவே நமது உடலிலும் உலோக சத்துக்கள் இருக்கின்றன.

இவைகளைப் பயன்படுத்த அறிந்து கொள்வதே நம்மிடமுள்ள அரிய சக்திகளுக்கு எழுச்சி வழங்குவதாகும்.

மனோவசிய சாஸ்திரத்தை பயில விரும்புபவர்கள் தனி இடத்தை நாட வேண்டும். எவ்வித சந்தடியும் கூச்சலும் குழப்பமும் இல்லாத தனிமையான ஒரு இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் அதிகம் புகாதவாறு உங்கள் அறையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய இடம் வசதிப்படாதவர்கள் மலை, கோயில், மண்டபங்கள், தோப்புகள், தோட்டங்கள், வெட்ட வெளி போன்ற இடத்தை நாட வேண்டும் எந்த வித குழப்பங்களும் கூச்சல்களும் தொல்லைகளும் தொந்தரவுகளும் இல்லாமல் சிந்தனையைக் கிளறாத தனிமையான இடத்தில் தான் பழகத் தொடங்க வேண்டும். உங்கள் வீட்டிலேயே தனிமை என்பது இருக்குமானால்உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:47 pm

பெண் இன்பமும் - மெஸ்மரிஸமும்

பெண் இன்பத்தை அதிகமாக நாடக்கூடாது. அளவுக்கு மீறி இவ்விஷயத்தில் ஈடுபட்டால் சக்தி குறையும் மனோ சக்தியையும், தேக சக்தியையும் சேமித்துக் கொண்டால் தான் மனோவசியத்தைப் பயின்று தேர்ச்சியடைய முடியும். இந்த சக்தி விரயமாகாமல் இருந்தால்தான் மனத்தெளிவு இருக்கும்.

மனத்தெளிவுதான் மனோவசியக் கலைக்கு அடிப்படையாகும்.

பெண் இன்பத்தில் மனம் சிதறினால் உன்னுடைய எண்ணங்கள் வலுப்பெறாது. பெண் இன்பத்தை அறவே வெறுக்கும்படியாகச் சொல்லவில்லை. இதற்கோர் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும் பெண் இன்பத்தையே நினைத்து நினைத்து பைத்தியமாகக்கூடாது. மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் என்றும் நியதியை ஏற்படுத்திக் கொண்டு மற்ற நாட்களில் இதைப்பற்றி நினைக்காமலேயே இருக்கப் பழக வேண்டும்.

உங்கள் உடல் திடமாக இருந்தால்தான் உள்ளமும் திடமாக இருக்க முடியும், இளம் வாலிபர்களாக இருந்தால், பெண் இன்பத்தை நாடாத நாட்களிலேயே மனோவசியக் கலை பயிலுவது நல்லது.

பெண் இன்பத்தை அனுபவித்தவர்களோ, கல்யாணம் செய்து கொண்ட பின்னர் இதைப் பயிலுவது நல்லது. கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னர் பெண் இன்பத்தில் ஆர்வமும், ஏக்கமும் உள்ள நிலைமையில் மனோவசியக் கலையைப் பயின்று விரைவில் வெற்றி காண முடியாது. கல்யாணமானவரானால் ஒரு கட்டுப்பாடு செய்துகொண்டு கவனமுடன் வெற்றியை அடைய முடியும்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:50 pm

முக்கியமான பயிற்சி

கண்களின் மூலம் பயிற்சி பெறுவதே முக்கியமான பயிற்சியாகும். இந்த பயிற்சிக்காக மனதை ஒப்படைப்பது போலவே கண்களையும் பூர்ணமாக ஒப்படைக்க வேண்டும். கண், மனம், கைவிரல்கள் ஆகியவற்றின் பயிற்சியின் மூலம் "சக்தி"யை ஒன்று திரட்டி மனோவசியக் கலையில் நீங்கள் பயிற்சி பெறும் நேரத்தில் மனம், கைவிரல்களை விட கண்களே அதிகம் பாதிக்கப்படும்.

கண்களே மனிதரின் ஆத்மாவிற்கு காரணங்களாக அமைந்திருக்கின்றன எனலாம். ஒருவர் மனதிலுள்ள எண்ணங்களையும், விருப்பங்களையும் பார்வையாலேயே அறிய முடியும், பலரையும் பார்வையிலேயே வசியப்படுத்த முடியும்.

மனிதர்கட்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட கண்களில் விசேஷ வசிய சக்தி இயற்கையாக அமைந்திருக்கிறது. உதாரணமாக, பூனையின் கண்களிலிருந்து பாயும் ஒளி வீச்சுக்கு எலி எந்த வகையில் மயங்கி சரணடைகிறது என்பது நாம் அறிந்ததுதானே!

ஆகவே இயற்கையாகவே கண்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கே இத்தகைய சக்தியிருக்குமானால் மேலும் அதனை வளர்த்துக்கொண்டால் எத்தகைய பயன்களை விளைவிக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

கண்களுக்கு மேலும் வசிய சக்தியையும் திட நிலையையும் உண்டாக்கிக் கொள்ள சில பயிற்சி முறைகள் உண்டு. அந்த பயிற்சிகளில் நீங்கள் தேர்ச்சிப் பெற்று விட்டால் உங்களை எவர் வெல்லமுடியும்? நீங்கள் எவரையும் எத்தனை எளிதாக உங்கள் வசப்படுத்தலாம். ஹிப்நாடிச - மெஸ்மரிச கலையில் வெற்றி பெறலாம்.

கண்களின் சக்தி மூலமே. மனிதன் அறிவோடும், ஆற்றலோடும் வாழ வேண்டியதாக இருப்பதால், பாதிக்கப்படும் கண்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாமல் பயிற்சியில் இறங்க வேண்டும். குறைந்த அளவு நேரங்களைப் பயிற்சிக்காக ஒதுக்கி, கண்களுக்கு ஓய்வு கொடுத்து தகுந்த முறையில் பாதுகாக்க, வேண்டும். ஆரம்பவேகத்தில் எச்சரிக்கையின்றி நடந்து அளவுக்கு அதிகமாக வேலை தந்தால் கண்களுக்கு கெடுதல் விளைவதோடு உங்கள் வாழ்வும் கெடும்
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:56 pm

கண்களுக்குப் பயிற்சி - 1

சந்தடியற்ற அமைதி சூழ்ந்த தனியறையை நாடிச் செல்லவும். அங்கு மேஜையின் மீது முகம் பார்க்கும் நிலைக் கண்ணாடியில் பார்க்கவும், கண்ணாடியில் தெரியும் உங்கள் கண்களை நீங்கள் இமைக்காது உற்று நோக்க வேண்டும். முந்து வினாடிகளுக்கு ஒரு முறை விழி இமைகளை மூடுவதும், திறப்பதும், பார்ப்பதுமாக இருக்க வேண்டும். இந்த பயிற்சியை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவரின் ஆச்சரியமான மாறுதலைக் காண்பீர்கள். தொடக்கத்தில் ஏற்பட்ட கண் எரிச்சல், கண்ணீர் பெருகுதல், வலி முதலியன தொடர்ந்து செய்து நாளாவட்டத்தில் நின்றுவிடும்,

கண்களுக்குப் பயிற்சி - 2

வெளிச்சம் படர்ந்த அறையினுள் சென்று முற்பயிற்சியில் கூறியவாறு கண்ணாடி ஒன்றை மேசையின் மேல் வைக்கவும். அக்கண்ணாடியில் கறுப்பு மையால் ஒரு புள்ளியிடவும். பின் நீங்கள் கண்ணாடிக்கு நான்கங்குல தூரத்தில் நின்றபடி விழிகளை இமைக்காது கண்களால் அப்புள்ளியை உற்று நோக்கவும் பயிற்சி காலத்தில் பார்க்கும் நேரத்தை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளவும். காலை மாலை இரு வேளைகளிலும் இப்பயிற்சியை விடாது தொடர்ந்து செய்து வரவும்

கண்களுக்குப் பயிற்சி - 3

இரண்டாவது பயிற்சியில் நீங்கள் நல்ல தேர்ச்சிப் பெற்றுவிடுவீர்களானால் பின்னர் செய்ய வேண்டிய பயிற்சி இது. கண்ணாடியில் காணப்படும் கரும்புள்ளியை உற்றுநோக்கும் போது, கண்களைத் திசைதிருப்பாது தலையையும், முகத்தையும் சக்கரவட்டமாக சுழற்றவும். ஆனால் பார்வை மட்டும் கண்ணாடியிலுள்ள புள்ளிலேயே இருக்க வேண்டும். தலையும் முகமும் மட்டும் தான் அசைய வேண்டுமேயொழிய கண்விழி பார்வையில் எந்த வித அசைவும் கூடாது. கடினமான பயிற்சி என்றபோதிலும் காலப்போக்கில் கைகூடி வரும். பயிற்சியின் தொடக்க காலத்தில் மயக்கம் வரக்கூடும். உடனே குளிர்ந்த தண்ணீரில் கண்களையும், முகத்தையும் கழுவிக் கொள்ளவும்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:57 pm

கண்களுக்குப் பயிற்சி - 4

மேடுபள்ளமற்ற சமதரையில் வெண்மை நிற நேர்க்கோடு ஒன்றை வரைந்து கொள்ளவும், நேர்க்கோடு 12 அடி நீளமுள்ளதாக இருக்க வேண்டும். பின் அக்கோட்டின் இரு முனைகளும் சந்திக்குமாறு வில்போன்ற வளைத்த கோடொன்றை வரைந்துக் கொள்ளவும். நீங்கள் நேர்க்கோட்டின் மத்தியில் நின்றவாறு நேர்க்கோட்டின் வலது முனையிலிருந்து இடது முனைக்கு வளைந்த கோட்டின் வழியாகப் பார்வையை செலுத்துங்கள். இப்படி பலமுறை மாறிமாறிப் பார்த்து பயிற்சி பெறுங்கள். இப்படி பார்க்கும்போது தலையோ முகமோ அசையக்கூடாது. இப்படி தினசரி காலை 10 அல்லது 15 நிமிடங்கள் செய்துவரின் கண்களில் அபரிமிதமான சக்தி கூடும்.

கண்களுக்குப் பயிற்சி - 5

இப்பயிற்சிக்கு புதிய பத்து காசிலிருந்து ஒரு காசு நாணயம் வரை படிப்படியாக பயன்படுத்திப் பார்க்கலாம். ஒரு வெள்ளை அட்டையில் காசினை ஒட்ட வைத்து உற்று நோக்க வேண்டும். நாளடைவில் காசின் அளவையும், நேரத்தையும், தூரத்தையும் குறைத்துக் கொள்ளவும் மேலும் கழித்து ஓடும் ஆற்றுநீர் வெள்ளம், காஸ்லைட் இவைகளையும் உற்றுப் பார்த்து கண்களுக்கு கூரிய ஒளியை உண்டாக்கிக் கொள்ளலாம்.

கண்களுக்குப் பயிற்சி - 6

மூன்று அல்லது நான்கு அடி தூரத்திலே சுண்ணாம்பு அடித்த சுவற்றிலே நீலநிறமான மையிலே தேங்காய் அளவு வட்டவடிவமாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். நாற்காலியின் மீது அல்லது வசதியான முறையில் அதன் எதிரில் உட்கார்ந்து கொண்டு கண்களை சிமிட்டாமல் ஒரே நேரான பார்வையை அந்த நீலவர்ண அடையாளத்தின் மீது செலுத்த வேண்டும்.

அப்படிப் பார்வையை ஒரு நிலைப்படுத்திப் பார்க்கும் போது மனதையும் ஒரு நிலையில் வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து இருக்க, வேண்டும் கண்ட இடங்களில் கண்ட விஷயங்களில் மனதை சிதறவிடாமல் அந்த வட்டத்தின் மீதே நிலைக்க செய்ய வேண்டும்.

செய்யும் நாட்களில் கண்களிலிருந்து கண்ணி அருவி போல் வீழ்ச்சியடையும், நரம்புகள் தளர்ச்சியடைந்து மண்டையில் வலிகூட ஏற்படலாம்.

உங்களுடைய ஆரம்பம் மயக்கம் வரலாம்,
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 22, 2021 10:57 pm


கண்கள் ஜாக்கிரதை

கண்களை இமைக்காமல் குறிப்பிட்ட இடத்தை சில நிமிட நேரம் உற்றுப் பார்த்தாலும் கண்ணீர் வழிந்து ஓடுவதோடு கண்களில் நரம்புகள் வலுவிழந்து தசைகள் சோர்வு அடைந்து உங்களைசோர்வு அடையச் செய்யும் நேரத்திலே நீங்கள் செசரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரே சமயம் நீண்ட நேரம் பழகக்கூடாது. ஒவ்வொரு தடவையும் சில வினாடி நேரம் என்று ஒதுக்கி படிப்படியாக அதிகப்படுத்துவதே நல்லது.

கண்களை நீண்ட நேரம் கண்களை ஆடாமல் அசையாமல் செய்வதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை உணர்ந்து சற்று நேரத்திற்கு ஒரு தரம் கண் இமைகளை அசைத்து மூடித் திறந்து ஒரு நிலைக்குக் கொண்டு வந்து மிகவும் எச்சரிக்கையோடு பழக வேண்டும். அவசரப்பட்டு அதிக நேரம் ஈடுபட்டு, கண்களுக்குக் கெடுதலை விளைவித்துக் கொண்டால் உங்கள் வாழ்நாள் வீணாகிவிடும்.

முதன் முதலில் பெரிய வட்டம் போட்டு அருகில் இருந்து பார்த்து வரவேண்டும் பின்னர் தூரத்தை அதிகப்படுத்தி புள்ளியை சிறிதாக்கி அதிக நேரம் கண்களை அசைக்காமல் பழகி வரவேண்டும்.

ஆரம்ப நாட்களில் உங்கள் கண்களிலிருந்து அருவிபோல வந்த கண்ணீர் நாளடைவில் குறைந்து போகும்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 23, 2021 8:47 pm


ஒரே பார்வை

மனதில் எவ்வித களங்கமும் இல்லாமல் 'மெஸ்மரிஸம்' பழகுகிறோம் என்ற ஒரே எண்ணத்தோடு நீங்கள் உண்மையில் கண்களால் அந்த நீலவர்ணப் புள்ளியை பார்த்துப் பழகி வந்தால் அந்தப் புள்ளி உங்கள் கண்களின் பார்வையிலிருந்தே சில வினாடிகளில் மறைந்து போககூடிய நிலையானது உண்டாகும்.

உங்கள் தேகத்திலுள்ள அபூர்வமான மின்சாரசக்தியை ஒன்றாகத் திரட்டி காந்த முறையை ஏற்படுத்தக் கூடிய ஓர் நிலையில் நீங்கள் பயிற்சி அடைந்து விட்டீர்கள் என்பதை அறிவிக்கும் காலமே அது.

தூய மனத்தோடு பரிசுத்தமான எண்ணத்தோடும் மேலும் தொடர்ச்சியாக பழகிவர வேண்டும். நீண்ட நேரம் கண்களை அசைவற்ற தன்மையில் நீடிக்க செய்யும் முயற்சியில் தொடர்ச்சியாகப் பழகிவர வேண்டும்.

இந்தப் பழக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கும் புள்ளி மறைதல் நிகழ்ச்சியில் நீங்கள் பரிபூரணத்தை அடைந்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

அதோ சந்திரன்

பௌர்ணமிதினத்தன்று முழுமதி (சந்திரன்) வானவீதியிலே வரும் நடுநிசியில் அதைப் பார்த்துப் பார்த்துப் பழக வேண்டும் சந்திரனை நீங்கள் உற்றுப் பார்த்துப் பழகி வரும் போது, சந்திரனும் ஒரு நாள் உங்கள் கண்களிலிருந்து மறைந்து போகும். இப்படியாக நீங்கள் எந்த ஒரு பொருளை உற்று நோக்கினாலும் மறைந்து போகக்கூடிய அளவுக்கு பயிற்சி பெற்றுவிட்டால், நிச்சயமாகவே நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுவிடுவீர்கள்.

வீதியிலே போகும் நபரை உற்று நோக்கி உங்கள் அருகில் வரவேண்டுமென்று மனதில் நினைத்தாலும் அது நடக்கும். தூரத்திலிருக்கும் உங்கள் நண்பர் உறவினர் யாரையும் மனதில் நினைப்பது, கம்பி இல்லாத தந்தியைப் போல் அலைகளின் மூலம் இழுத்துச்செல்லப்பட்டு அவர்களுடைய உள்ளத்தில் பிரதிபலித்து அதற்கேற்ப நடத்திக் காட்டும் சக்தியை இந்தப் பழக்கத்தின் மூலம் பெற்று நீங்கள் நிச்சயமாக வெற்றியை அடைந்தே தீருவீர்கள்.
மனோவசிய ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக