புதிய பதிவுகள்
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Today at 7:31 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 7:20 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 7:14 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Today at 7:01 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Today at 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
29 Posts - 74%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
5 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
venkat532
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
441 Posts - 67%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
95 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
eraeravi
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தமிழ் மருத்துவம்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:46 am


அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

. பனை முகரி . பாலம்மை

. மிளகம்மை . வரகுதரியம்மை

. கல்லுதரியம்மை . உப்புதரியம்மை

. கடுகம்மை . கடும்பனிச்சையம்மை

. வெந்தயவம்மை . பாசிப்பயறம்மை

. கொள்ளம்மை . விச்சிரிப்பு அம்மை

. நீர்கொள்ளுவன் அம்மை . தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

வர்ம நோய்கள்

உடலின் உறுப்புகளில் அல்லது உடற்பகுதிகளில் குறிப்பிடப்படும் நூற்றியெட்டு வர்ம நிலைகளில் ஆயுதங்களாலோ வேறு பொருள்களாலோ ஏற்படுகின்ற அடி, குத்து, வெட்டு, தட்டு போன்ற காரணங்களால் வர்மம் ஏற்பட்டு, அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தும். வர்மங்கள் நாழிகை, நாள், மாதம், ஆண்டு என்னும் கணக்கில் விளைவுகளைத் தருவன. இவ்வாறான விளைவுகளே நோயாகவும் மாறி உடலைத் துன்புறுத்தும். அவை நோயாகவே கருதப்படும். வர்மப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஒடிவு முறிவு என்றும், ஈடு என்றும் குறிப்பிடப்படும். அவ்வாறானவை, வர்ம விளைவுகள் எனப்படும்.

. நெஞ்சு பக்கத்தில் காணப்படும் அலகை வர்மத்தில் ஈடு கொண்டால், பற்களைக் கடிப்பதும், சத்தமும் ஏற்படும்.

. தண்டுவடத்தில் காணப்படும் நட்டெல் வர்மத்தில் முறிவு ஏற்பட்டால், முறிவு கொண்டவன் நாய் போல் அமர்வான். அவன் நாவில் சுவை உணர்வு தோன்றினால் நாளில் மரணமும், சுவை காணப்படாவிட்டால் நாளில் மரணமும் உண்டாகும்.

. பஞ்சவர்ணக் குகையாகிய நெஞ்சறையின் அருகிலுள்ள அக்கினி நரம்பில் முறிவு ஏற்பட்டால், உடல் முழுவதும் காந்தும். உடலில் எறும்பு ஊர்வது போன்று தோன்றும்.

. பழு எலும்பில் காணப்படும் விட்டில் வர்மத்தில் ஈடு கொண்டால், உடல் தீப்போல எரியும். விட்டில் போல் உடல் துடிக்கும்.

. நீர்ப்பையோடு இணைந்திருக்கும் நீர் நரம்பு முறிந்தால் சன்னி உண்டாகும்.

. கண்ணின் இமை அருகில் உள்ள பகலொளி நரம்பு முறிந்தால், பார்வை போகும்.

. தலை உச்சியின் நடுவில் உள்ள குருபோக நரம்பு முறிந்தால், போகம் கழிந்தபின் ஏற்படும் உணர்வு உண்டாகும்.

. முதுகிலுள்ள தாரை நரம்பு முறிந்தால், சேவல் போலக் கொக்கரிக்கச் செய்யும்.

. தேரை நரம்பு முறிந்தால், உடலில் நிறம் மாறித் தேரை நிறம் போலாகும்.

. குண்டிச் சங்கு நரம்பு முறிந்தால் தாகத்தினால் வருந்த நேரும்.

. மூச்சுக் குழலின் இடது பக்கத்திலுள்ள குயில் நரம்பு முறிந்தால், குயில்போல ஒலி யெழும். சன்னி உண்டாகும்.

. பீசத்தின் மேற்புறத்தில் காணப்படும் கொட்ட காய நரம்பு முறிந்தால், வேகமாக ஓடச் செய்யும்.

. இதயத்தின் அருகில் பதிவிருதை வர்மம் முறிந்தால், நீண்ட மூச்சு ஏற்படும். நினைவு தடுமாறும். பிறரைக் கண்டால் நாணம் உண்டாகும். மிகுந்த போக உணர்வு ஏற்படும். கண்களை உருட்டும். வண்ணத்தைக் கண்டு நாணும்.

. பிருக்கத்துடன் இணைந்திருக்கும் குக்குட நரம்பு முறிந்தால், சேவலாகக் கொக்கரிக்கும்.

. குய்யத்திற்கு இருவிரல் மேலே காணப்படும் பாலூன்றி நரம்பு முறிந்தால், சுரம் உண்டாகும். இரத்தம் பால் போல ஒழுகும்.

. முதுகிலுள்ள கூச்சல் நரம்பு முறிந்தால், கருச்சிதைவு உண்டாகும். ஆம் நாளில் கூம்பு வர்மத்தில் நீல நிறமும், முகத்தில் மஞ்சள் நிறமும் தோன்றும்.

. தலை உச்சியின் நடுவிலுள்ள துண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.

. நெஞ்சறையின் இடக்குய்யத்தில் மயிர்க் கூச்சல் நரம்பு முறிந்தால், உடல் வளைந்து குன்னிக் கொள்ளும், மயிர்க் கூச்சமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.

. முதுகின் நடுவில் புயம் அருகில் தீபார நரம்பு முறிந்தால், ஆண்குறி பாதித்து கறுப்பாகும்.

. கண்ணின் அருகில் உள்ள மாற்றான் நரம்பு முறிந்தால், தலை இடிக்கும். உடல் பொன்னிறமாகும். கண் மஞ்சளாகும். கொக்கரித்தல் செய்யும். சுவாசித்தல் கடினமாகும்.

. புச்ச என்பின் அருகில் பலமாக வர்மம் கொண்டால், விசை நரம்பு தளர்ந்து ஆம் நாள் வாதம் வரும். விந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்; இரு கால்களும் செயலற்றுப் போகும். என்று கூறப்பட்டுள்ளன.

வர்மம் என்பதை விபத்து போன்று எதிர்பாராமல் ஏற்படுகின்ற பாதிப்புகளாகக் கருதலாம். இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபடவும், மருத்துவம் காணவும் அவசர கால நடவடிக்கை தேவைப்படும். வர்ம மருத்துவ முறை, விபத்து மருத்துவ முறை என்றால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறான அவசரமான மருத்துவத்தையும் சித்த மருத்துவத்துறை விரிவு படுத்தி வளர்த்து வந்திருக்கிறது என்பதை, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எடுத்துக் கூறியிருக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நோய்நாடித் தேர்வு செய்யும் முறைகளால் நோயை அறிந்து கொள்வதில், குத்து/வெட்டு என்பவற்றினால் சுமார் நோய்கள் உண்டாகுமென்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் வர்மத்தினால் ஏற்படும் விளைவுகளும் அடங்கும் எனலாம்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:49 am


உடலின் இயல்பு தரும் நோய்கள் :

கரு உருவாகும் போதே உடலின் இயல்புகளும் உடலோடு இணைந்தே உருவாகின்றன. உடலில் உயிர் இருக்கும் வரை, உடல் இயல்புகள் இருக்கும். உடலை நன்னிலைப் படுத்த உடலியல்புகள் கருவிகளாக அமைகின்றன. அவ்வாறான உடலியல்புகளை மருத்துவ நூலார் வேகம் என்னும் குறியீட்டினால் குறிப்பிடுவர். அவை அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், இளைப்பு, தூக்கம், வாந்தி, கண்ணீர், விந்து, மூச்சு, என்னும் பதினான்கு ஆகும்.

மேற்கண்ட இவை, தடுக்கப்பட்டாலும், தடைப்பட்டாலும் அவற்றின் எதிர்விளைவுகளாக நோய்களை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது.

. அபானவாயு: இது கீழ்வாய்வளி அல்லது கீழ் நோக்குங்கால் அல்லது கீழ்க்கால் எனப்படும். இது தடுக்கப்பட்டால் அல்லது தடைப்பட்டால், மார்பு நோய், வாயு, குன்மம், குடல்வாதம், உடல் குத்தல், குடைச்சல், வல்லை, மலத்தடை, பசி, மந்தம் ஆகியவை உண்டாகும். ஈரல், மார்பு இவற்றிலுள்ள ஈரம் வற்றும்; வயிற்றில் எரிச்சல் உண்டாகும்; உளைச்சல், தலை கனத்தல், நோதல், மயக்கம், புளிப்பு, வாந்தி, குடல்வலி ஏற்படும்; உணவு உண்ணாமை, செறியாமை போன்றவை தோன்றும்.

. தும்மல்: இது தடுக்கப் பட்டால் தலைவலி, முகம், இழுப்பு, இடுப்பு வலி, அரைமேல் வலி, வயிற்றுப் பொறுமல், விந்து நீத்தல், கால் கை கடுகடுத்தல், சிறுநீர்க் கடுப்பு முதலியன உருவாகும்.

. சிறுநீர்: நீரடைப்பு, நீர்வரும்வழியில் புண், ஆண்குறி சோர்வு, குறியில் சீழ் குருதி சேர்தல், குறியில் எரிச்சல் தோன்றும்.

. மலம் : சலதோசம், முழங்காலின் கீழ், பல நோய், தலைவலி, உடல்வலிமை குறைவு போன்றவை ஏற்படும்.

. கொட்டாவி: இதனால் முகம் வதங்கும், இளைப்பு, செறியாமை, நீர் நோய், வெள்ளைநோய், அறிவு மயக்கம், வயிற்று நோய் உண்டாகும்.

. பசி

. தாகம் அடக்கினால், உடலும் உடற்கருவிகளும் இயங்கா; சூலை, பிரமை, இளைப்பு, வாட்டம், சந்துநோவு ஆகியவை தோன்றும்.

. இருமல்

. இளைப்பு (ஆயாசம்)கொடிய இருமல், மூச்சில் துர்மணம், நீர்மேகம், குன்மம், இதய நோய் உருவாகும்.

. தூக்கம்தலைக்கனம், கண் சிவத்தல், செவிடு, அரைப்பேச்சு போன்றவை வரும்.

. வாந்திநமச்சல், பாண்டு, கண்நோய், பித்தம், இரைப்பு, காய்ச்சல், இருமல், தடுப்புக் குட்டம் ஆகியவை தோன்றும்.

. கண்நீர்தமரக வாயு, பீனிசங்கள், கண்நோய், தலையில் புண், குன்மம் வரும்.

. விந்துசுரம், நீர்க்கட்டு, கை கால்கள் கீல் நோய், விந்து கசிவு, மாரடைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை போன்றவை வரும்.

. மூச்சுதடைப்பட்டால் இருமல், வயிற்றுப் பொறுமல், சுவையின்மை, குலைநோய், காய்ச்சல், வெட்டை ஆகியவை ஏற்படும் என்றுரைக்கப்படுகிறது.

இவற்றினால் நோய் என்பது இயல்புக்கு மாறானது என்பதும், மருத்துவம் என்பது இயல்புக்கு மாறான செயலை மீண்டும் இயல்பு நிலைக்கே மீளச் செய்வது என்பதும் பெறப்படுகிறது.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:50 am


நிலமும் நோயும்

பண்டைய இலக்கிய மரபின்படி நிலம் நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டது. அந்தந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, ஒழுக்கம் என்றுரைக்கப்பட்டது. அவ்வாறு பிரித்தறியப்பட்ட நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அந்நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் பருவத்தினால் மாற்றமடையும்போது அந்நிலம் பாலை எனப்படும். இந்த ஐந்து நிலத்தையும் ஐந்திணை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது.

குறிஞ்சியில் ஐயமும், முல்லையில் பித்தமும், நெய்தலில் வாதமும் அதிகரிக்கும். பாலையில் வாத, பித்த, ஐயம் மூன்றும் வளர்ச்சியடையும். மருதத்தில் அம்மூன்றும் கட்டுப் பட்டுச் சமநிலை பெற்றிருக்கும் என்பதிலிருந்து, வாழ்வதற்கு மருதநிலம் ஏற்றது என்று கருதப்படுகிறது. குறிஞ்சி, இரத்தத்தை உறிஞ்சுகின்ற சுரமும், வயிற்றில் ஆமைக் கட்டியும் உண்டாக்கும்; ஐயம் ஓங்கும். முல்லை, வல்லை நோயும் வாத நோயும் உண்டாகும். பித்தம் ஓங்கும். நெய்தல், மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும். ஈரலைப் பெருக்கும். குடல் வாயு உண்டாகும். வாத நோய் வளரும். பாலை, வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் தோன்றும். மருதம்–வாதம், பித்தம், ஐயம் ஆகிய நோய் அனைத்தும் குணமாகும். வாழத் தகுந்த நிலம் மருத மாகும் என்று நிலத்தின் பண்பினால் உடல்வளம் அறியப்பட்டது. மேலும், நிலப் பாகுபாட்டையும், தட்ப வெப்ப நிலையையும், நில வளத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதனால், அந்தந்த நிலத்திற்குரிய வெப்பமும் நிலத்தின் வளத்திற்கு ஏற்ப விளைகின்ற உணவுப் பொருள்களை உண்பதினால் உடற்குற்றங்கள் ஏற்படுவதாகக் கொள்ளலாம்.

சுவையும் குணமும்

நிலத்திற்கு நிலம் மண்ணில் வேறுபாடுகள் தோன்றுவது போல், மண்ணின் கனிமங்களும் வேறுபடுகின்றன. அதற்கு ஏற்றவாறு மண்ணின் சுவை அமைந்து, அந்தந்தச் சுவைக்கு ஏற்ப நலன்கள் அமைகின்றன என்பது பண்டைய கால வழக்கு.

"" உவர்ப்பில் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் அவற்றில்
புளிநோய் பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகும் மாத வர்க்கு''

என்று, சிலப்பதிகார காலத்தில் தோன்றிய பரத சேனாதிபதியம் உரைக்கின்றது. உவர்ப்பு கலக்கத்தையும், கைப்பு கேட்டையும், துவர்ப்பு அச்சத்தையும், புளிப்பு நோயையும், கார்ப்பு பசியையும், இனிப்பு நன்மையையும் மனிதர்க்குத் தருவதாக இதன் பொருளமையக் காணலாம்.

அதனால்தான் புள்ளிருக்கு வேளூரைச் சார்ந்த மருத்துவர் வைத்திய நாத ஈசுவரர், நோய் என்று வருகின்றவர்களுக்கு மருந்தாக மண்ணையே வழங்கி வந்தாராம். அந்த மண்ணும் நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது. எவ்வாறென்றால், அம்மருத்துவர் தந்த மண்ணுக்கு உரிய நிலம் மருத நிலம்–இனிப்புச் சுவையைக் கொண்டது என்பது பெறப்படுகிறது.

"" மண்டலத்தில் நாளும் வயித்தியராகத் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார், காணீரோ? தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூர்என் னாதர்
மருந்தைப் பார்த் தால்சுத்த மண்.''

என்று காளமேகப்புலவர் உரைக்கக் காணலாம்.

உப்பும் புளியும்

உணவின் சுவையைக் கூட்டுவதற்காக உப்பும், புளியும் உணவின் பாகமாக அமையும். அவை உணவில் பாகமாகக் கொள்ளப் பட்டாலும் இனிப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகள் இணைந்து உப்பு, புளிக்குரிய இயல்பான குணத்தை மாற்றிவிடுகின்றன. அவ்வாறிருந்தாலும் உப்பும், புளியும் உடலைப் பாதிக்கக் கூடியதாகவே அமைகின்றன. இவ்விரண்டும் நெஞ்சடைப்பு, கோழை, ஈளை ஆகியவற்றை ஆதியாகக் கொண்டு உருவாகும் நோய்களுக்கு மூலமாக அமை கின்றன. அதன் பொருட்டே மருந்துண்ணும் வேளையில் நோயாளி உப்பையும், புளியையும் விலக்கிட வேண்டுமென்பர். நோய் வாராதிருக்கவும் இவை தள்ளப்பட வேண்டிய தென்று உணர்த்துவதை உணரலாம்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:51 am


உணவும் நோயும்

உணவும், உணவுப் பொருளும் உடலைப் பாதுகாக்கும் என்பது பொதுவான கருத்து. எந்த உணவு, எந்த உணவுப் பொருளோடு சேரலாம் என்றும், சேரக் கூடாது என்றும் தெரிவிப்பதும், உடல் நலனைப் பேணுகின்ற மருத்துவத்தின் கருத்தாகும்.

உணவு வகைகள் எதனை எதனோடு சேர்த்து உண்டால், உணவு நஞ்சு (ஊணிணிஞீ ணீணிடிண்டிணிண) உருவாகும் என்பதைத் தெளிவு படுத்துகிறது சித்த மருத்துவம். உணவு முறைக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிகளைக் கடைப்பிடித்து விலக்க வேண்டியவற்றை விலக்கி வந்தாலே பெரும்பகுதி நோயிலிருந்து விடுபடுவதுடன் நோயற்ற வாழ்வும் வாழலாம்.

நஞ்சாகும் உணவு

. வெண்கலப் பாத்திரத்தில் நெய்விட்டு சமைத்தல், பித்தளை, செம்பொன் ஆகிய பாத்திரங்களில் தயிர், மோர் வைத்திருந்து உண்ணல்.

. கோழிக்கறி, பழைய மாமிசம் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து உண்ணல்.

. தேனுடன் தயிர், மாமிசம், கொழுப்பு, எண்ணெய் ஆகியவற்றை உண்ணல்.

. அழுகிய கனிகள், திரிந்தபால், ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரைத்த உணவு, நூல்விட்ட உணவு ஆகியவற்றை உண்டால், கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைக்கச் செய்து, மரணத்தைத் தரும் நஞ்சாகும்.

. ஆட்டு, மாட்டிறைச்சியுடன் உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, பால், தேன், துவரம் பருப்பு, முளை கட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ–பலவோ கலந்து சமைத்தாலும், வெல்லம் சேர்த்து உண்டாலும் உணவு நஞ்சாகும்.

. மீன்கறி, கீரைக்கறி, முள்ளங்கி சேர்ந்த துணைஊண் (கூட்டு, சாம்பார்) ஆகியவையும், அதிக புளிப்புச் சுவையுடைய பழமும், கம்பு, வரகு, கொள், காட்டுப் பயறு (நரிப்பயறு, பாசிப்பயறு) ஆகியவை தனித்தோ சேர்ந்தோ உண்ட உடன், பால் அருந்தினால் நஞ்சாகும்.

. பன்றி இறைச்சியுடன் முள்ளம் பன்றி இறைச்சியும், மான் இறைச்சியுடன் நாட்டுக் கோழி இறைச்சியும் தனியாகவோ, கலந்தோ தயிர் கூட்டி உண்டால் நஞ்சு.

. உளுந்தும் முள்ளங்கியும் சேர்ந்தாலும், குசும்பாக் கீரையுடன் செம்மறியாட்டின் இறைச்சி சேர்ந்தாலும் நஞ்சு.

. கிச்சிலிப் பழத்துடன் பால், நெய், உளுந்து, வெல்லம் இவற்றில் ஒன்றிரண்டு கலந்தாலும் நஞ்சு.

. மீன் சமைத்த சட்டியில் மணத்தக்காளிக் கீரை சமைத்தல், மீன் பொரித்த நொய்யில் திப்பிலியைப் பொரித்தல், பன்றிக் கொழுப்பில் நாரை இறைச்சி சமைத்தல், நஞ்சாகும்.

. தேன், பசுவின் பால், நிணம், தண்ணீர் இவை நான்கும் சம அளவாக எடுத்துக் கலக்கி உண்டால் நஞ்சு.

. சிட்டுக்குருவி, தித்திரிப்புள், காடை, மயில், உடும்பு இவற்றின் இறைச்சியை–ஆமணக்கு விறகு, எண்ணெயில் சமைத்தால் உடனே உடலை எமன் எடுத்துச் செல்வான்.

. மஞ்சளைக் கடுகெண்ணெயில் வறுத்தல், நாரை இறைச்சியுடன் கள் குடித்தல், காராமணியுடன் நாரை சமைத்தல், தாமரை விதையுடன் தேனுண்ணல், தயிர் மோருடன் வாழைப்பழம் உண்ணல், பனம்பழத்துடன் வாழைப்பழம் உண்ணல், மணத்தக்காளிக் கீரையை இரவில் சமைத்துக் காலையில் உண்ணல் அனைத்தும் கடும் நோயைத்தரும் குற்ற உணவுகளாகும் என்றும், உணவு நஞ்சாகி நோயைத் தருவதுடன் உடல் நலனைப் பாதிப்படையச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும், விரிவாக உரைக்கப் பட்டுள்ளது. இவற்றில், வெண்கலம், பித்தளை, தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள், உளுந்து, பழங்கள், இறைச்சி, குசும்பாக்கீரை, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது, அவ்வுணவு நஞ்சாகும் என்று உரைக்கப் பட்டிருக்கிறது. இவ்வகை உணவுப் பொருள்களும், பாத்திரங்களும் புளிப்புச் சுவையுடையவை எனத் தெரிய வருகிறது. புளிப்புச் சுவை அதிக அளவு அல்லது மிதமான அளவு உணவில் கலக்கும் போது அவை நஞ்சாக மாறுகின்றன எனத் தெரிகிறது. அல்லது புளிப்புச் சுவையைத் தருகின்ற நச்சுப் பொருள் வேறு ஏதேனும் அவ்வாறான உணவில் கலந்தோ அல்லது கலப்பதினால் வேதியல் முறையால் புதியதாக உருவாகின்றதா என்பதும் தெரியவில்லை. இதனை, ஆய்வுக் கூட ஆய்வின் மூலம் சுவையால் ஏற்படுகின்ற உடல் நலனையும் பாதிப்பையும் கண்டறிய முனைய வேண்டும்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:52 am


உண்கலமும் உடல்நலமும்

உணவு உண்ணும் போது, ஒவ்வொரு வகையான உண்கலங்கள் பயன்படுகின்றன. உண்கலங்கள் அவரவர் நிலைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.

பெரும்பாலான விருந்துகளில் வாழையிலை பயன்படுத்தப் படுகிறது. அரசு, அரச விருந்துகளில் உலோக உண்கலங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்றறிந்து செய்யப்படுவதில்லை. மதிப்பிற்காகவும், செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இலை

உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

உலோகம்

“உலோகவகை உண்கலங்களில் தங்கம், பித்தம், சோபப் பிணியை நீக்கித் தாது, பசி, வலிமை, பூரிப்பை உண்டாக்கும். வெள்ளி, கபம், பித்தம் போக்கும்; காந்தி, களிப்பு, வாதம் உண்டாக்கும். செம்பு, இரத்த தோஷத்தைப் போக்கும்; உடல் ஆரோக்கியம், காந்தி, கண்ணொளி உண்டாக்கும். வெண்கலம், சோபம், இரத்தப் பித்தம் போக்கும்.’’ என்கிறது. உலோக உண்கலங்களிலேயே தங்கம் சிறந்த உலோக உண்கலமாகக் கருதப்படுகிறது.

வெந்நீரும் வியாதியும்

தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

“காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’’ என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.

வெந்நீரும் பாத்திரமும்

தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.

. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.

. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்

. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.

. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.

. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.

. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.

. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.

. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும் என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:54 am


வெந்நீர் மருந்து

தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை,

"" கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்
அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.''

என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்

என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.

"" இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்''

என்றும்,

"" சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி''

என்றும்,

"" நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே''

எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது.

ஆடைகளும் உடல் நலமும்

ஆடைகள் பலவகை. அவை கொண்டிருக்கும் வண்ணங்களும் பல என, ஆடைகள் வளர்ந்து வந்துள்ளன. பெரும்பாலும் ஆடை என்பது உடலை மறைக்கவும், மதிப்பு மரியாதைக்காகவுமே என்று கருதப்பட்டு வருகிறது. ‘ஆடையில்லாதவன் அரை மனிதன்’ என்பது பழமொழி யாகவும் இருந்து வருகிறது. ஆடை இருந்தால் தான் மனிதன் மதிக்கப்படுகிறான் என்பது அறியப் பட்டாலும், ஆடை உடல் நலனைப் பாதிப்படையச் செய்பவையாக இருக்கிறதென்கிறது, சித்த மருத்துவம்.

ஆடை வகைகள்:

சாலுவை : சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.

பட்டாடை : பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.

வெண்பட்டு : சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.

நாருமடி : சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.

வெள்ளாடை : முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.

சிவப்பாடை : பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.

பச்சை ஆடை : உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.

கறுப்பாடை : காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.

மஞ்சளாடை : நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.

கம்பளம் : பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.

அழுக்குத்துணி : அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்.

என்று குறிப்பிடுகிறது. ஆடை வகைகள் எல்லாம் ஒவ்வொரு குணத்தை உடையவையாக இருக்கக் காணலாம். இவற்றில் சிவப்பு ஆடையும், அழுக்குத் துணியும் உடலுக்குப் பயன் தராதவைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் பழமொழி, அழுக்குத் துணியினால் வரக் கூடிய கெடுதல்களைக் கருதி உரைக்கப்பட்டதாகக் கொள்ளவும் இடமுண்டு. ஆக, ஆடை வகைகள் உடல் நலன் கருதியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிகிறோம்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:55 am


நீராடலும் உடல் நலமும் (நோயணுகா நெறி)

நீராடுதல் என்பது தினமும் நீரில் குளிப்பதை உரைப்பதன்று. அது புறத்தே உள்ள அழுக்கை நீக்குவது. அதனால் தான் ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நீராடுதல் என்பது ‘சனிநீராடு’ எனக் குறிப்பிடும் நீராடலையாகும். நீராடுதல் வாரம் ஒன்றுக்கு இருமுறை நீராட வேண்டுமென்று, ‘வாரம் இரண்டு’ என்று குறிப்பிடக் காணலாம். அவ்வகை நீராடலால் ஏற்படும் பயனைப் போகர் குறிப்பிடக் காணலாம். நெல்லி, கடுக்காய், மிளகு, மஞ்சள், வேம்பின் வித்து ஆகிய ஐந்துடன் கையான் தகரைச் சாறும் கூட்டி அரைத்து தலைக்குத் தேய்த்து வாரம் இருமுறை நீராடி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கண் எரிச்சல் நீங்கும், தலைவலி போகும், மண்டைக் குத்து தீரும். உடல் கல்தூண்போலாகும் என்று, நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்வதுடன் உடலைப் பேணவும் வழி உரைக்கப் பட்டது. இம்முறையைக் ‘காயாதி கற்பம்’ என்பர்.

நோயின் வாயில்கள்

நோய் என்பது, துயரம் துன்பம் குற்றம் என்னும் பொருள்களைத் தருவதாக அமையும். நோய்க்கு உரிய செயல்களைச் செய்தல் குற்றம். அக்குற்றம் செய்வதனால் வருகின்ற பயனே துன்பமும், துயரமும். இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா என்பது ஆன்றோர் வாக்கு. துன்பமும், துயரமும் தருகின்ற நோய் பிறரால் தரப்படுவதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதென்றோ–தருவித்துக் கொள்வதென்றோ கொள்ளலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழி, அளவுடன் இருப்பதே அமிருதம் எனப் பொருள் தருகிறது. அமிருதம் என்பது நோயற்றிருத்தல் என்றாகும்.

நாம் உண்ணுகின்ற உணவும், செய்கின்ற செயலும், எண்ணுகின்ற எண்ணமும் அளவுக்கு மிஞ்சியும் இயற்கையின் தன்மைக்கு மாறாகவும் இருக்குமேயானால், அவையே நோயின் மூலங்களாகி நோய்களை வருவிக்கும் வழிகளை ஏற்படுத்துகின்றன.

நாம் செய்யும் செயல்களில் எவையெல்லாம் நோயைத் தரும் செயல்கள் என்பதை அறிவுறுத்தி, அதன்வழி நடக்கச் செய்வதே மருத்துவ நீதியாகும். நீதிக்குப் புறம்பாக நடப்பது எவ்வாறு நாட்டில் குற்றமாகக் கருதப்படுகின்றதோ, அதைப்போலவே மருத்துவ நீதிக்குப் புறம்பாக நடப்பது உடலுக்குக் குற்றமாகும். இவ்விரண்டு நீதிகளுக்கும் புறம்பாக நடந்தால் தண்டனை உண்டு. ஒன்று, நீதிதரும் தண்டனை சிறை. இரண்டாவது உடல்தரும் தண்டனை நோய்.

வாத நோய்க்குரிய குற்றங்கள்

வாத நோய்கள் ஆகும். மலச்சிக்கல், பெருந்தீனி, வாழைரசம், பலாப்பழம், மலைவாழை, மொந்தன் வாழை, கல்வாழை, வத்தக்காய், நந்திக்காய், பரங்கிக் காய், வாழைத்தண்டு, எருமைமோர், தயிர், வெண்ணெய், உணவு உண்டவுடன் போகம், புளி மிகுதி, கொள்ளுடன் பயறு, உளுந்து, தென்னை–பனங்கள், போகம் செய்யும் போது பால்–பழம் உண்ணல், முள்ளங்கி, கடலை, மொச்சை, முற்றிய அவரை, முற்றிய முருங்கை, முக்கனி, பால், சோறு, வெள்ளரிக் காய், செம்மறியும் உடும்பும் சேர்த்துண்ணல் ஆகியவை வாத நோயை வருவிக்கும் வழிகளாகக் கூறப்படுகின்றன.

மேற்கண்ட உணவும், உணவின் கலப்பும் வாத நோயை வருவிக்கும் என்றதனால், அவை உணவுப் பொருள் என்பதையும், முற்றிலும் விலக்குதற்கு உரிய பொருள்களல்ல என்பதையும் கருத வேண்டும். இவ்வகை உணவுகள் புளிப்புச் சுவைக்குரிய உணவுகள் எனத் தெரிவதால், அவை அளவாகவும் புளிச்சுவையை மாற்றக் கூடிய உணவுகளை உண்டால் அது சமநிலையடைந்து நோயை உருவாக்காமல் இருக்கு மெனலாம்.

பித்த நோய்க்குரிய குற்றங்கள்

பித்த நோய்கள் ஆகும். அவை, மனம், செயல், உணவு என்னும் வழிகளால் நோய் வரும் எனப்படுகிறது. அவை காதல், காமம், கோபம், பழி, மன உளைச்சல், வருத்தம், துயரச் செய்தி, மரணச் செய்தி, வஞ்சகம், பகை, பயம், என்னும் மனம் சார்ந்த உணர்ச்சிகளும், உறக்கமின்மை, பட்டினி, செய்வினை, நடை, அலைச்சல், கடற்பயணம், நீண்ட உறக்கம். மருந்தீடு, அபின், கஞ்சா, நீர், மலம் அடக்கல் என்னும் செயல்களும், மிளகாய், பெருங்காயம், கஞ்சி, உப்பு, வெள்ளுள்ளி, காரம், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஏறண்ட எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, வற்றல், திப்பிலி, கடுக்காய், மஞ்சள், போன்றவை பித்தத்தை உண்டாக்கும் பொருள்களாகக் கூறப்படுகின்றன. பித்தம் உடலைக் காக்கும் செயலைச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள், செயல் ஆகியவை பித்தத்தை உருவாக்கக் கூடியவையாக இருப்பதனால், அதனால் உடலுக்கு நன்மைதானே என்றால் நன்மைதான், எந்த அளவு என்றால், வாதம் ஒன்று, பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில்தான் இருக்க வேண்டும். அந்த அளவை மீறினால் தான் நோய் வரும் வழிகள் திறக்கப்படும் என்று அறியலாம்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:56 am


ஐய நோய்க்குரிய குற்றங்கள்

ஐய நோயின் எண்ணிக்கை எனப்படுகிறது. ஐயம் நீர்த்தன்மையுடையதாக இருப்பதனால் குளிர், குளிர்ந்த பொருள், குளிர்ச்சி என்று ஐயம் வரும் வழியைக் குறிப்பர். அவை, பனி, பலவகை நீர், காலையில் குளிக்காதது, காமம், மருந்தீடு, மணம், சயம், மருவல், சுத்தி செய்யாத மருந்து, பழித்த தோசம், தோசபானம், மழையில் நனைதல், தூக்கம், விஷம், போகம் மிகுதி, அலைச்சல், மந்தம் போன்றவை ஐய நோய்க்குரிய குற்றங்கள் என்பர்.

ஐயம் அழிக்கும் தொழிலுக்குரியதாகையால், வாதத்தின் அளவில் கால் அளவே ஐயம் இருக்க வேண்டும் என்கிறது நாடி நூல். எனவே கெடுதல்/அழிதல் குறைவாக இருந்தால், தானே பாதுகாத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் முடியும்? அதனால் தான் உடலில் சேரும் பொருளும் கெடுதலைத் தரக் கூடிய பொருள்களாக இருக்கக் கூடாது என்று கருதினர். மேற்கண்ட பொருள்களில், சுத்தி செய்யாத அவிழ்தம், பழித்த தோசம், தோச பானம் ஆகியவை ‘ஒவ்வாமை’யைக் குறிப்பதாகும். ஒவ்வாமை உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் என்பதனை அறிந்தே, தமிழ் மருத்துவம் சுத்தி என்னும் தனிப் பிரிவையே மருந்துத் தயாரிப்பில் வைத்துள்ளது. ‘சுத்தியில்லையேல் சித்தியில்லை’ என்பது குறிப்பிடத் தக்கது. சுத்தம் என்னும் பழக்கமும் ஐயத்திலிருந்து விடுபடச் செய்யும். ‘ஒவ்வாமை’ எல்லாம் ஒவ்வாது என்பதும் ஒவ்வாதது. சிறிய அளவு இருந்தால் தான், அது இன்பம். அதனால் அது சிற்றின்பம். அளவு மிகுந்தால் சேரும் துன்பம் எனக் கூறுவதாகக் கருத வேண்டும்.

நோயும் நோயின் வகையும்

வாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் என்று தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ் வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது எனக் கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:

நோய்களின் பெயர்கள்

. வாத நோய் – . பித்த நோய் –

. ஐய நோய் – . தனுர் வாயு –

. காச நோய் – . பெருவயிறு –

. சூலை நோய் – . பாண்டு நோய் –

. கண்நோய் – . சிலந்தி –

. குன்மம் – . சந்தி –

. எழுவை, கழலை – . சுரம் –

. மகோதரம் – . தலையில் வீக்கம் –

. உடம்பில் வீக்கம் – . பிளவை –

. படுவன் – . கொப்புள் நோய் –

. பீலி நோய் – . உறுவசியம் நோய் –

. கரப்பான் – . கெண்டை – . குட்டம் – . கதிர் வீச்சு நோய் –

. திட்டை (பல்லீறு நோய்) – . சோபை –

. இசிவு – . மூர்ச்சை நோய் –

. படு (குலை நோய்) – . மூல நோய் – . அழல் நோய் – . பீனிசம் . கடிவிஷம் – . நாக்கு, பல்நோய் – . கிராணி – . மாலைக் கண் – . அதிசாரம் – . கட்டி – . கிருமி – . மூட்டு(கீல்) நோய் – . முதிர்வு நோய் – . சத்தி (வாந்தி) – . கல்லடைப்பு – . வாயு நோய் – . திமிர் நோய் – . விப்புருதி நோய் – . மேகநீர் – . நீர்ரோகம் – . விஷ பாகம் – . காது நோய் – . விக்கல் – . அரோசியம் – . மூக்கு நோய் – . கடி தோஷம் – . காயம், குத்துவெட்டு – . கிரந்தி – . பொறி (பறவை) விஷம் – . புறநீர்க் கோவை – . துடி (உதடு) நோய் – . பிள்ளை நோய் –

என்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் ஐ விடவும் அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:57 am


சித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்

மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water) ஆகிய பொருள்கள் உள்ளன.

துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.

சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.

மருந்து முறை

சித்த மருத்துவ நூல்கள் கூறும் மருந்து முறைகளில் உடலுக்கு உள்மருந்தாக அளிக்கப்படும் அக மருந்துகள், உடலுக்கு வெளிமருந் தாகப் பயன்படும் புற மருந்துகள், என இரண்டு வகைகள் குறிப்பிடப் படுகின்றன.

அக மருந்துகள்

. சுரசம் . நெய் . பதங்கம்

. சாறு . இரசாயனம் . செந்தூரம்

. குடிநீர் . இளகம் . நீறு (அ) பற்பம்

. கற்கம் . எண்ணெய் . கட்டு

. உட்களி . மாத்திரை . உருக்கு

. அடை . கடுகு . களங்கு

. சூரணம் . பக்குவம் . சுண்ணம்

. பிட்டு . தேனூறல் . கற்பம்

. வடகம் . தேநீர் . சத்து

. வெண்ணெய் . மெழுகு . குளிகை

. மணப்பாகு

புற மருந்துகள்

. கட்டுதல் . நசியம் . பொடி

. பற்று . ஊதல் . முறிச்சல்

. ஒற்றடம் . நாசிகாபரணம் . கீறல்

. பூச்சு . களிம்பு . காரம்

. வேது . சீலை . அட்டைவிடல்

. பொட்டணம் . நீர் . அறுவை

. தொக்கணம் . வர்த்தி . கொம்பு கட்டல்

. புகை . சுட்டிகை . உறிஞ்சல்

. மை . சலாகை . குருதி வாங்கல்

. பொடிதிமிர்தல் . பசை . பீச்சு

. கலிங்கம் . களி

என்பனவாகும்.

மேலே கூறப்பட்ட அகமருந்துகள், புற மருந்துகள், ஆக மருந்துகளில், அகமருந்துகளுக்குத் தயாரிக்கப்படும் முறைகளினாலும், புறமருந்துகளுக்குச் செயல்படுத்தப்படும் முறைகளினாலும் பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இம்மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயராகவே இருப்பது, தமிழ் மருத்துவத்துக்கு உரிய மருந்துகள் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

மருந்து செய்முறைகள்

மருந்துகள் –ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.

. கருக்கல் . உலர்த்தல் . பொசுக்குதல்

. அரைத்தல் . உறைத்தல் . நனைத்தல்

. கசக்கல் . குழைத்தல் . எரித்தல்

. கலக்கல் . உடைத்தல் . வழிக்குதல்

. வறுத்தல் . நறுக்குதல் . இறுக்குதல்

. சுழற்றுதல் . உருட்டுதல் . இழைத்தல்

. உருக்குதல் . நகத்துதல் . குழைத்தல்

. இறுத்தல் . நசுக்குதல் . எடுக்குதல்

என்பனவாகும். இவை, மருந்து செய்யும் வினையாகக் கொள்ளலாம்.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88787
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:58 am


மருந்துகளின் மூலங்கள்

சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகள் இம்மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த வல்லவையாக இருக்கக் காண்கிறோம். அவை வருமாறு,

. உப்பு வகைகள் – . பாடாணங்கள் –

. உலோகங்கள் – . மூலிகைகள் –

. உபரசங்கள் – . கடை மருந்துகள் –

இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன. எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் வேறு எந்த மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். அதே போல், எல்லா மருத்துவ முறைகளிலும் பொதுவாக வகைகளில் மட்டுமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், சித்த மருத்துவத்தில் . உப்பு, . பாடாணம், . உபரசம், . இரசம், . உலோகம், . கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே என்பர். அவ்வாறு பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

. இரசம் செய்முறை . இரசக் செந்தூரம் செய்முறை

. வீரம் செய்முறை . பூரம் செய்முறை

. அரிதாரம் செய்முறை

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாடாணங்கள் ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் பாடாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாடாணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

"" வயதென்ன நல்லபாம் பொன்றை வாங்கி

மாளாம லதன்விஷத்தை வாங்கிக் கொண்டு

அயதென்ன சூதமொரு கழஞ்சு கொண்டு

ஆலகால விஷத்தில் ஊற்றிக் கொண்டு.''

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை உயிரினங்களும் மருந்திற்குப் பயன்படுவன என்று ஆராய்ந்து காண்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என எண்ணிப் பார்த்தால், இந்த மருத்துவ முறைகள் எத்தனை ஆண்டுகள் பழைமை கொண்டவை என்பது விளங்கும்.

சுத்தி

சுத்தி என்பது தூய்மைப்படுத்துதல் அல்லது பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கியிருக்கின்ற மாசுகளை நீக்குதல், குற்றம் களைதல் என்பதாகும். மூலிகை, மருந்துப் பொருள், உலோகம், பாடாணம், இரச வகை ஆகிய அனைத்தையும் சுத்தி செய்த பின்பே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பது, சித்த மருத்துவ நெறிகளுள் ஒன்றாகும்.

சுத்தி செய்யப்படாமல் செய்யப்படுகின்ற மருந்தினால் முழுமையான மருத்துவக் குணமில்லாமல் போவதுடன், தீமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதால், சுத்தி முறைகள் வலியுறுத்தப் படுகின்றன. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்னும் மருத்துவப் பழமொழியும் இதனையே வலியுறுத்துகிறது.

"" சுசியா னதுலோகத் தோமகற்ற லென்ன

சுசியா னதுலோகந் துவ்வாய்ச் சுசியா

முளரி யுலகை முயறலின் மாலுத்தி

முளரியுல கையுறு முன்.''

பிரபஞ்சம் என்று சொல்லக் கூடிய இந்த உலகத்தின்கண் சிறப்பினை வளரச்செய்ய, இவ்வுலகத்திலுள்ள குற்றங்கள் என்று சொல்லக் கூடிய உட்பகையை எப்படி நீக்க வேண்டுமோ அப்படி, மருந்துப் பொருள்களிடத்திலே தங்கியுள்ள மாசுகளை நீக்கி ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் ஏற்றவாறு வகுத்துரைக்கப் பட்டதே சுத்திமுறையின் சிறப்புத் தன்மையாகும் என்று, தேரையர் கூறக் காணலாம்.

இஞ்சிக்கு மேல் தோலும், கடுக்காய்க்குக் கொட்டையும் மரங்களுக்குச் செதிலும் நஞ்சு என்பர். மருந்துக்குப் பயன்படுத்து முன், அந்நஞ்சு நீக்கப்பட்டால் சுத்தியாகும். குண்டுமணி, அலரிவிதை ஆகியவற்றை உண்டால் மரணத்தை உடனே வருவிக்கும். ஆனால், மருந்துகளில் அவை அரிய பணியைச் செய்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்தை உண்பவர் மரணமடைவதில்லை. காரணம், சுத்தி செய்த பின்னர் மருந்தாகச் செய்யப்படுவதாலேயாம். பாடாணங்கள் எல்லாம் உயிரைக் கொல்லும். ஆனால், மருந்தாகப் பயன்படுகின்றன என்பதால், சுத்தி என்பதன் தேவை மருத்துவத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.
தமிழ் மருத்துவம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக