புதிய பதிவுகள்
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
27 Posts - 71%
heezulia
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
11 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
64 Posts - 64%
heezulia
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருட பஞ்சமி Poll_c10கருட பஞ்சமி Poll_m10கருட பஞ்சமி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட பஞ்சமி


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 11:57

கருட பஞ்சமி FM6G3Ck

கருட பஞ்சமி நாளில் கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்.
இதுவே கருட பஞ்சமி எனப்படுகிறது.

நட்சத்திரங் களில் சுவாதி நட்சசத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சூரியன் துலா ராசியில் சஞ்சாரம் செய்யும்போது சுவாதி நட்சத்திர நாளில்தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகும். நரசிம்மர் அவதாரம் செய்ததும் சுவாதி நட்சத்திரத்தில் தான். கருடபகவானின் அம்சமாக ஆழ்வார்களில் பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.

எனவே கருடாழ்வாரை வழிபடுவது மிகவும் பலன் தரக்கூடியது. அதற்கு முன் கருடாழ்வார் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்....

கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு. பெயர்க் காரணம்..

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன.

பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.

பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.

மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:00

கருட பஞ்சமி CbQVZTbkSsKmK7BWBrHG+94308056.MeQohKR8

கருட வாகனம்..........

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.

தனது உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.
........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:01

கருட பஞ்சமி 8N6KEa7SYajun2Tvmy1E+amrit-garuda_jpg

கருட சேவை............

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருடாழ்வார் அவதரித்த தினம் பெருமாள் கோவில்களில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:06

நல்ல சகுனம்...........

கருட பஞ்சமி JhlrPXV7SxS5bN2o2Gao+brahminy-kite-131124-111eos1d-fy1x7492

ஆகாயத்தில் கருடனைப்பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். பத்மபுராணத்தில் உள்ள நான்கு பாடல்கள் கருடன் அருளால் மனிதனுக்கு கிடைக்கும் என அபூர்வ சக்திகளைப் பற்றி கூறுகின்றன.

பிறரை வசியம் செய்தல், மயங்க வைத்தல், பகைவர்களை அடக்குதல், உணர்வை வற்றச் செய்தல், வானத்தில் உலாவுதல், காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றி புகுதல், இந்திராஜாலம் காட்டுதல், படிப்பில் தேர்ச்சி, நல்ல நினைவாற்றல், வாதத்திலும் நேரிலும் வெற்றி பெறுதல் ஆகியவை சித்தியாகும்.

வழிபாட்டு பலன்கள்.........

கருட பஞ்சமி Md7tiMhbT8avvXWGD6f2+brahminy

கீழ்க்கண்ட தினங்களில் கருடனைத் தரிசித்தால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் - குடும்ப நலம். செவ்வாய் - தைரியம் ஏற்படும். புதன் - எதிரிகள் மறைவர். வியாழன் - நீண்ட ஆயுள் வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சனி - முக்தி கிடைக்கும். கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

.................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:09

கருட பஞ்சமி N9bzl8fuScydHTwREtHs+garuda11

கருடனின் அணிகலன்கள்:

நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியைபூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.

..........................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:11

கருடனின் சிறப்பு............

கருட பஞ்சமி BhlaSnrUTJaI6zztEc4K+garudan1

ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார். இவர் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

கருடனுக்கு பிரகஸ்பதி குரு. ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாளின் சன்னதிக்கு எதிராக கருடன் சன்னதியும், துவஜ ஸ்தம்பம் என்ற கருடக்கொடி மரமும் அமைந்தள்ளன. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும். மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.
.............................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:20

கருட சன்னதிகள்...........

கருட பஞ்சமி Mm0P85qPRa2WHf1vjqLd+ve7

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.

இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது.

சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.

இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும்.        

திருக்கண்ண மங்கை கருடன் : இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:22

ஸ்ரீகருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். விநதை சிறுவன் கருடன் மகாபாரதத்தில் அவன் பிறந்த கதை மிக அழகாக வர்ணிக்க படுகிறது.

கருட பஞ்சமி 5MX2DRBsRKSEfnWCuCzU+unnamed
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப்பின்
கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால் காப்பவன். சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து - ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை - அவசரத்தில் தன் தமக்கையின் குட்டிகள் கண்ட ஆர்வத்தில் அவள் செய்த தவறு - உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது - அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான் .( அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )

அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை.

அந்தப் போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் ( பாற்கடலை கடையும் பொது வந்தது அது - அதனுடன் வந்ததே கௌஸ்துபம் - பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி ) வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள்.

பின் போட்டி நடைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.
.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:25

குறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.

கருட பஞ்சமி VxBAuaphTUyUHETQagox+dsc050181

தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான்.

அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள்.

இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது.

உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து - அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு , ஒரு இயந்திரம் - வெட்டு கத்திகள் பொருந்தியது - சுழன்று கொண்டே இருக்கிறது - தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் - அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.

அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.

......................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 12:34

கருட பஞ்சமி DkuTNGmSMK9xTsaJVF51+31E81DA8-A52D-4EEE-A213-13DB5F154135_L_styvpf

பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.

குளித்துவிட்டு வந்த நாகங்கள் அமிருத கலசத்தை தேடின. அது வைக்கப்பட்டிருந்த  தர்பை புல்லின் மேல் நக்கி பார்த்தன, ஒருவேளை அமிர்தம் சிந்தி இருந்தால் என்று. அப்போது தர்ப்பம் அவற்றின் நாக்கை அறுத்து விட்டது. அதனால் தான் அவற்றின்  நாக்கில் பிளவுகள் உள்ளது.

இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக