by சிவா Today at 3:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
கோபால்ஜி |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்
ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.
பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.
பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்
அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.
காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களது ஆட்சி, ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான முந்தைய தலிபானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஒட்டு மொத்த உலமும் ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்ப்பாக கவலையுடன் கவனித்து வருகிறது.
தலிபானின் மூத்த உறுப்பினரான வஹீதுல்லா ஹாஷிமி, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.
ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது
தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த உறுப்பினர், "ஆப்கானிஸ்தானின் ஷரியா சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமையும், அது ஜனநாயக முறையாக இருக்காது என திட்ட வட்டமாக தெரிவித்தார்
ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆயுதப் படைகளைச் சேர்ந்த முன்னாள் விமானிகள் மற்றும் வீரர்களையும் ஆட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றக் காரணமான வீரர்க்களுடன், ஆப்கான் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இராணுவத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய, சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அதற்கு, துருக்கி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ரணுவ வீரர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
தலிபான் தலைவர் வஹீதுல்லா ஹாஷிமி
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு நேர்காணலின் போது மூத்த தலிபான் தளபதி வஹீதுல்லா ஹாஷிமி ராய்ட்டர்ஸிடம் பேசினார்
ஆப்கானிஸ்தான் அதிபர்
ஆப்கானை ஆளும் தலிபான் அதிபருக்கு தோஹாவில் உள்ள அப்துல் கானி பராதர் முல்லா உமரின் மகன் மவ்லாவி யாகூப், ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி ஆகிய 3 துணை அதிபர்கள் இருப்பர் கூறப்படுகிறது.
இருப்பினும், பராதர் தான் அடுத்த அதிபர் என இதுவரை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 1968 இல் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்த பராதர், ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த தலைவராக உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அப்துல் கானி பராதர், மிகவும் பேசப்படும் தாலிபானின் மிகவும் குறிப்பிடத்தக்க பொது முகமாகவும் இருக்கிறார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்தது போதும்... வேலைக்கு போங்க..! துப்பாக்கி முனையில் வீடுவீடாக சென்று மக்களை விரட்டும் தலிபான்கள்

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டின் மீதான சர்வதேச பார்வை அதிகரித்து வருகிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள் சர்வதேச சமூகத்தை கவலையடைய செய்து வருகிறது. அமெரிக்க அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளதால், அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. சர்வதேச நாடுகள் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆப்கான் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தலிபான்களின் கைக்கு ஆப்கான் நிர்வாகம் சென்றதால், உயிருக்கு பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போதும் மக்கள் நடமாட்டம் வெளியே இல்லாததால், எவ்வித நிறுவனங்களும் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயுதமேந்திய தலிபான்கள், ஒவ்வொரு வீடாக சென்று பூட்டியிருக்கும் கதவுகளை தட்டி வருகின்றனர். அவர்கள், வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்களிடம், மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு அச்சுறுத்தி வருகின்றனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் அச்சத்துடனும், வறுமையிலும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரான மேரி எலன் மெக்ரோர்டி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் கிட்டதிட்ட 14 மில்லியன் (1.40 கோடி) மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர். அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் கடுமையான வறட்சியால் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். கடும் வறட்சியால் 40 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நாசமடைந்துள்ளன. குளிர்காலம் நெருங்குவதால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்’ என்றார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 100 சர்வதேச ஊழியர்கள் ஆப்கானில் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவர்கள் கஜகஸ்தானில் இருந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றும் முன், பெண்களுக்கான சுதந்திரம் அதிகமாக இருந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பெண்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
காபூலின் முக்கிய நகரங்களில் உள்ள அழகு நிலையத்தின் முகப்பு பகுதி, பொழுதுபோக்கு இடங்கள், ஓட்டல்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை கறுப்பு மையை ஊற்றி தலிபான்கள் அழித்து சிதைத்து வருகின்றனர். ஜலாலாபாத் நகரில் உள்ளூர் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்களை தலிபான்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற புகைப்படங்கள், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
தாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் அத்யாவசிய பொருட்கள் விலை 4 மடங்கு உயர்வு!: உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்... ஆப்கான் மக்கள் கவலை..!!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஆப்கனை தாலிபான்கள் பிடித்த உடனே அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. முன்னர் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களை தற்போது 4 ரூபாய் கொடுத்து வாங்குகின்றோம். பகலான் மாநிலம் 3 மாதங்களாக தாலிபான்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்போது கூட தொழில்கள் அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தன. அவர்கள் ஆப்கன் முழுவதையும் பிடித்த நாள் முதல் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமாகி உள்ள நிலையில் அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் அத்யாவசிய பொருட்களை வாங்கி மக்கள் வீடுகளில் குவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக கடைகளில் அத்யாவசிய பொருட்களின் இருப்பு குறைந்து வருவதால் வர்த்தகர்கள் காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியிருக்கின்றனர். இதனிடையே பால், காய்கறிகள், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் வரத்து முடக்க தொடங்கியிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
தாலிபான்களால் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடினேன்
- மவுனம் களைத்த அஷ்ரப் கனி !
-
-
தாலிபான்களால் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடினேன் என்று ஆப்கனிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்து அவர் விமர்சிக்க பட்டார். இந்நிலையில் அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும் என குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கனி, 1996- ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா, தாலிபான்களால் சிக்னல் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைப் போல் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியதாகவும், அதன் அடிப்படையிலேயே தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ள கனி, காலணிகளை கூட அணிய நேரம் இல்லாத நிலையில், எப்படி அவ்வளவு பணத்தை எடுத்து செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதாகவும் தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க எண்ணியதாகவும் கூறினார். மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அஷ்ரப் கனி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி-குமுதம்
சிவா likes this post
ஆப்கனில் இந்திய தூதரக அலுவலகங்களில் தலிபான்கள் சோதனை?
ஆப்கனில் கந்தகார் மற்றும் ஹெராட் பகுதியில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் சூறையாடியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும், மூடப்பட்டு கிடந்த தூதரகங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் எடுத்து சென்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது எதிர்பார்க்கப்பட்டது தான். உலக நாடுகளுக்கு தலிபான் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறி செயல்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆப்கனில், இந்திய தூதரகம் காலி செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்திய ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கத்தாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தூதரகங்களில் தலிபான்கள் சூறையாடியுள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஆப்கனில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்
அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கனில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்தாலும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த ரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதை தயாரித்தவர்கள், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேடோ படைகளுக்கு உதவி செய்தவர்களை வீடு வீடாக சென்று தலிபான்கள் தேடி வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். தங்களின் பேச்சை கேட்காதவர்களை ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்குகின்றனர். நேடோ மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவியர்கள், இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, தலிபான்கள் கொடுமைப்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
நிருபர்கள் உறவினர் சுட்டுக்கொலை
இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ‛ டெயுட்சே வெல்லே' பத்திரிகை நிருபர்கள் இருவரை, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். ஆனால், தற்போது அவர்கள் ஜெர்மனிக்கு சென்று விட்டனர். அவர்கள் கிடைக்காத கோபத்தில், நிருபர்களின் உறவினர்கள் மீது கடுமையாக தாக்கினர். அதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். சிலர் தப்பி சென்று விட்டனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஆப்கானில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு!
காபூல் விமான நிலைய வழியில் தடுப்பு!
இந்தியத் தூதரகங்களைச் சோதனையிட்ட தலிபான்கள்!
நமது பலத்தையும், பொறுமையையும் சோதித்துப் பார்க்க அனுமதித்து விடக் கூடாது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களது படைகளை விலக்கிக் கொள்ளும் என்று ஜோ பைடன் அறிவித்த பிறகு, தலிபான்களின் காபூலை நோக்கிய முன்னேற்றம் வேகம் எடுத்தது. 15 தினங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியே தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பின்பலத்தோடு பிரதமராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானின் நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டு வருவதை இந்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்ததாகவே நாம் கருதினோம். மத்திய அரசு ஜூலை மாதம் நான்காவது வாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பலரை இரவோடு இரவாகத் தனி விமானத்தில் அழைத்து வந்தது. ஆனால், அன்று அழைத்து வரப்பட்டவர்களில் பலர் உயர் அதிகாரிகள் மட்டுமே. இந்திய அரசின் அனுமதியுடன் அங்கு பணியாற்றச் சென்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எனப் பலரும் இன்று வரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்படாததும், அதனால் அவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் வரும் செய்திகள் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியத் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து வந்ததை போன்ற துரித நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழல் வந்திருக்காது.
கடந்த 20 வருடமாக மிக மிகப் பின்தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நாடாளுமன்றம், பெரிய நூலகம், மிகப்பெரிய அணைக்கட்டு போன்ற கட்டமைப்புகளையெல்லாம் உருவாக்கித் தந்ததை சிறிதும் கூட எண்ணிப் பார்க்காமல் காந்தகார் மற்றும் காபூலில் பூட்டிக்கிடந்த இந்தியத் தூதரகங்களைக் கூட ஒவ்வொரு அங்குலமாகச் சோதனையிட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் இந்திய மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்குகிறது.
நகரின் பல பகுதிகள்; காபூல் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியத் தூதரக குடியிருப்புகளிலிருந்து கூட இந்தியர்களை காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வர முடியாத அளவிற்கு அங்கே தலிபான்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றன. நேற்றைய தினம் இந்தியர்களை அழைத்து வரச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வெறும் 40 இந்தியர்களோடு மட்டுமே திரும்பி வந்திருக்கிறது. இன்னும் எத்தனை இந்தியர்கள் ஆப்கானில் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் கூட நம்மிடம் சரியாக இல்லை.
இப்பொழுது காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் காபூல் நகரம் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் எவரும் எளிதில் விமான நிலையத்தை நெருங்க முடியாத நிலை இருக்கிறது. பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க பத்து மணி நேரமும், சில தருணங்களில் ஒரு நாள் கூட ஆகிவிடுவதாகவும் சொல்கிறார்கள். காபூல் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆப்கான் மக்களுக்கும் தலிபான்களுக்கும் நடைபெறும் மோதல்கள், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் போன்ற மிக ஆபத்தான நிலை அங்கு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் ’நிலைமை’ என்னவாகுமோ? என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.
காபூல், காந்தகார் உள்ளிட்ட அனைத்து ஆப்கான் பகுதிகளிலும் சிக்கித் தவிக்கக் கூடிய இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் உடனடியாக அழைத்து வர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. தேவைப்பட்டால் நமது இராணுவத்தையும் ஆப்கானிஸ்தானில் இறக்குவதற்குக் கூட இந்தியா தயங்கக் கூடாது. இது ஆப்கான் இந்தியர்களின் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் கௌரவப் பிரச்சினையும் கூட. இந்தியாவின் கௌரவத்தை தலிபான்கள் எவ்விதத்திலும் சோதித்துப் பார்க்க அனுமதித்து விடக் கூடாது. ஜனநாயக ரீதியாக அமைந்த அரசுகளிடம் பேசுவதைப் போன்ற மெல்லிய அணுகுமுறைகள் அடிப்படைவாத தலிபான்களிடம் எவ்வித பலனையும் தராது.
எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மிகவும் துரிதப்படுத்த வேண்டும்; அதே சமயத்தில் தலிபான்களிடத்தில் இந்தியா சிறிதும் இரக்கம் காட்டாது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் தலிபான்களை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்; தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கானிலுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது என்பதுமே அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
ஆப்கானில் இந்தியர்கள் தொடர்ந்து தவிக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது!
இந்தியாவின் பலத்தையும், பொறுமையையும் தலிபான்கள் சோதித்துப் பார்க்க ஒரு கணமும் அனுமதிக்கக் கூடாது!
தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கான் இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
கொன்று உடல்களை நாய்களுக்கு உணவாக போடும் தாலிபான்கள்: பாதிக்கப்பட்ட பெண் தகவல்!
ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை.
அதேவேளையில், பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை.
தாலிபான்கள் பெண்களை கொன்று அவர்களின் உடல்களை சில நேரங்களில் நாய்களுக்கு உணவாக வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் கதேரா. தாலிபான்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், தனது சிகிச்சைக்காக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் தங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் போலீஸாக பணியாற்றிய கதேரா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணி முடிந்து வீடு திரும்பியபோது தாலிபான்கள் அவரை வழிமறித்துள்ளனர்.
அவரது அடையாள அட்டையை பார்த்ததோடு துப்பாக்கியாக தொடர்ச்சியாக சுட்டுள்ளனர். கத்தியாலும் குத்திய தாலிபான் தீவிரவாதிகள், கதேராவின் கண்களை தோண்டி எடுத்தனர். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதேரா சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்த கதேரா, “ அவர்கள் முதலில் எங்களை (பெண்கள்) கொடுமைப்படுத்துவார்கள், பின்னர் தண்டனைக்கான எடுத்துக்காட்டாக எங்கள் உடல்களை வீசிவிட்டு செல்வார்கள். சில நேரங்களில் நாய்களுக்கு உணவாக எங்கள் உடல் வீசப்படும்.
அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்த நான் அதிர்ஷ்டசாலி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது” என்று கூறியுள்ளார். தாலிபான்களுக்கு அடிபணியவில்லை என்றால் பெண்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வீதிகளில் மரணத்தை சந்திப்பார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள கஸ்தூர்பா நிகேதன் வழக்கமான சலசலப்பை இழந்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் வசிக்கும் காலனியாக இப்பகுதி தற்போது களையிழந்து காணப்படுகிறது. அங்கு இருப்பவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களின் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் இயலாமல் வேதனையில் உழன்று வருகின்றனர்.
ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை அதேவேளையில், பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறும் கதேரா, ’பின்னர் பெண்கள் என்ன செய்ய முடியும் , இறக்கவா முடியும்? குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மட்டும்தான் பெண்கள் என்று நீங்கள் நினைத்தாலும், மருத்துவ வசதி இல்லாமல் எப்படி குழந்தை பெற்றுகொள்ள முடியும்’ என்று கேள்வி எழுப்புகிறார்.
‘கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் என்ன உருவாக்கினோம் என்பதை கற்பனை செய்ய இந்த உலகத்திற்கு கடினமாக இருக்கும். நாங்கள் கனவுகள் உருவாக்கி இருந்தோம். தற்போது அவை போய்விட்டன. எங்களுக்கு அனைத்தும் முடிந்து விட்டன. நாட்டை கைப்பற்றுவதற்கு முன்பே அரசாங்கத்தில் பணீயாற்றும் பெண்கள், பெண் காவலர்கள் போன்றவர்கள் தாலிபான்களால் வேட்டையாடப்பட்டனர். தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சீனாவால் ஆப்கானின் வளர்ச்சியில் உதவ முடியும்: சீனா மீது தாலிபான் கொண்டுள்ள நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகித்துள்ளது என்றும் நாட்டின் புனரமைப்பிற்கு சீனா செய்ய நினைக்கும் உதவிகள் வரவேற்கத்தக்கது என்றும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சீன அரசு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து விட்டன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தன்வயப் படுத்தியது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பித்து ஓடினார். ஆப்கான் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆப்கான் குடிமக்கள் பாதுகாப்புக்காக பிற நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த முந்தைய தாலிபான் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளை தாலிபான் மீண்டும் கொண்டு வருமோ என்ற அச்சம் வெகுவாக உள்ளது.
இந்த நிலையில், சக்திவாய்ந்த நாடாக இருக்கும் சீனா ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் போலல்லாமல், ஆப்கானிஸ்தானில் எந்த வித சண்டைகளிலும் ஈடுபடவில்லை என்பதால், தலிபான்களைக் கையாள்வது, அந்த நாட்டுக்கு மிக எளிதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
"சீனா ஒரு பெரிய பொருளாதாரம் மற்றும் திறன் கொண்ட ஒரு பெரிய நாடு. ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு, மறுவாழ்வு, வளர்ச்சி ஆகியவற்றில் சீனாவால் மிகப் பெரிய பங்கு வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஷகீன் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு நேர்காணலில் சிஜிடிஎன் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
கடந்த மாதம் வடக்கு சீன துறைமுக நகரமான தியான்ஜினில் தாலிபான் குழுவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு நடத்தினார். அப்போது, ஆப்கானிஸ்தான் ஒரு மிதமான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொள்வதை சீனா விரும்பும் என்று அவர் கூறினார்.
சீனா தனது மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் மத தீவிரவாதத்தை ஒரு சீர்குலைக்கும் சக்தியாக மேற்கோள் காட்டியுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் பயன்படும் என்று நீண்டகாலமாக தன் கவலைகளையும் வெளிப்படுத்தி வந்துள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் கை ஓங்கியுள்ள நிலையில், சீனா தன் சாய்வை ஆப்கான் பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது. இது சீனாவின் குள்ளநரித்தனத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
விமானத்தில் இருந்து விழந்தது கால்பந்து வீரர் - அதிர்ச்சி தகவல்!
19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியவர். விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான விமானத்தில் சென்றபோது அவர் உயிரிழந்தார். இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜகி அன்வரியின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர் பாபக் தக்வேய் கூறுகையில், “அமெரிக்காவின் C-17A விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்ற இளைஞர்களில் ஜகி அன்வரியும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் கால்பந்து அணியின் வீரர்” என தெரிவித்தார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஆப்கானிஸ்தானின் பிரபல பூங்காவை தாலிபான்கள் எரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.
ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.
இந்நிலையில் அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.
உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்பூர்வமான நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,காபூலைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் உள்ள தாலிபான்கள் நேற்று விளையாட்டுப் பூங்காவில் துப்பாக்கியுடன் விளையாடினர்.
இன்று, நேற்று விளையாடி மகிழ்ந்த பூங்காவை அவர்களை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர். இதுகுறித்து வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சிலைகள் பூங்காவில் இருந்ததால் இதை எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வெற்றி: இந்தியா என்ன செய்யப் போகிறது?
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் இந்த வேகத்தில் கைப்பற்றியது உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு மற்றும் ராஜீய நிபுணர்களை திகைக்க வைத்திருக்கிறது.
காபூல் நகரம் வீழ்ச்சியடைந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் செய்திருக்கும் முதலீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு வெளிநாடுகள் அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளையும் குடிமக்களையும் அவை மீட்டு வருகின்றன.
தாலிபன்களின் வெற்றி தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படத்தக்கூடும். இது இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கலாம்.
ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பாகிஸ்தான் மற்றும் சீனவுடனான எல்லைச் சிக்கல்கள், பதற்றமான உறவுகள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய காரணிகளாக இருக்கும்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லை, அதிக கட்டுப்பாடு இல்லாதது. இது இரு தரப்பு உறவில் மிக முக்கியமான அம்சம். இப்போது ஆப்கானிஸ்தானில் பெரிய அளவில் செயலாற்ற வேண்டும் என்று சீனாவும் விரும்புகிறது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தாலிபன் தலைவர்கள் கடந்த மாதம் பெய்ஜிங்கில் சந்தித்தார். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சீனா இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்தப் புதிய புவிசார் அணிசேர்க்கை "அனைத்தையும் தலைகீழாக மாற்றும்" என்கிறார் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் கவுதம் முகோபாத்யாயா.
காபூலில் இருந்த ஜனநாயக அரசு, மேற்கத்திய நாடுகள், மற்றும் இந்தியா போன்ற பின ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஓர் கூட்டணியாக ஆப்கானிஸ்தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் "மகா ஆட்டத்தின்" புதிய ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை உலகம் இனி பார்க்கக்கூடும்
இதை இந்தியாவுக்கு இழப்பாகவும் பாகிஸ்தானுக்கு பெரிய வெற்றியாகவும் பலர் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் மேலோட்டமான பார்வை என்கிறார் இந்தியாவின் முன்னாள் அரசுமுறை அதிகாரி ஜிதேந்திரநாத் மிஸ்ரா. ஏனென்றால் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையை தாலிபன்கள் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. இது பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது.
"தங்களது எல்லையை தாலிபன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கே முன்னுரிமை அளிக்கும்" என்று கூறினார் முகோபாத்யாயா..
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி அமைவது இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு உத்திசார் ஆதாயத்தை அளிக்கிறது என்பதும் உண்மைதான்.
"இஸ்லாமாபாத் தான் எப்போதும் விரும்பிவந்த ஒன்றை இப்போது பெற்றிருக்கிறது" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் சிந்தனைக் குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன். அது தன்னால் எளிதில் செல்வாக்குச் செலுத்த முடிகிற ஓர் ஆப்கானிஸ்தானிய அரசாங்கம்.
"ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய கேந்திர இலக்குகள் உள்ளன" என்று கூறுகிறார் குகல்மேன். "இந்த நேரத்தில் அது தன்னை மிகப்பெரிய வெற்றியாளராக பார்க்கிறது."
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு அல்லது ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியுடன் தங்களுக்கு இருந்த மந்தமான உறவுகளால் பாகிஸ்தான் கவலையில் இருந்தது. தங்களது பொருளாதார நிலையும் அவர்களுக்கு சிக்கலாக இருந்தது.
இப்போது தாங்கள் தான் வெற்றியாளர் என்று பாகிஸ்தான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. ஏனெனில் சீனாவுடனான "அனைத்துச் சூழல்" நட்பும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெய்ஜிங் அதன் வலிமையை காட்ட இப்போது தயங்கவில்லை. "சீனா தனது சொந்த விதிகளின்படி இப்போது ஆட்டத்தை ஆட முடியும்," என்கிறார் மிஸ்ரா.
சீனாவிற்கு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நோக்கங்கள் உண்டு. அதிகரித்துவரும் கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய சீனா நினைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமாக கிழக்கு துர்கஸ்தான் இஸ்லாமிய இயக்கம்(ETIM) ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதற்குத் தடை விதிக்க தாலிபன்களை சீனா வலியுறுத்தும். சீனாவில் இஸ்லாமியர் ஆதிக்கம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் அமைதியின்மைக்கு காரணம் இந்த இயக்கமே என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
சீனாவும் பாகிஸ்தானும் "ஆப்கானிஸ்தானில் ஒருவரது முதுகில் மற்றவர் சவாரி செய்யும்" என்று முகோபாத்யாயா கூறுகிறார். அதே நேரத்தில் கடந்த காலங்களில் மற்ற உலக வல்லரசுகளைப் போல எந்த வலையிலும் சீனா விழுந்துவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
ரஷ்யாவும் ஈரானும் ஒரே பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. அவை தங்களது தூதரகங்களைக் காலி செய்யவில்லை. இரு நாடுகளின் தூதர்களும் காபூலில் இன்னும் பணியாற்றி வருகிறார்கள்.
ஆக, இந்தியா இப்போது என்ன செய்யலாம்? பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மிகப்பெரிய பங்கு வகித்ததில்லை. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது. கல்வி, வேலை அல்லது மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள்..
"இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு நல்ல வாய்ப்புகள் என்று ஏதுமில்லை. மோசமானவை அல்லது மிக மோசமான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன" என்று கூறுகிறார் மிஸ்ரா.
தாலிபன் அரசை அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது இப்போது இந்தியா முன்னிருக்கும் மிகப்பெரிய சவால். ரஷ்யாவும் சீனாவும் தாலிபன்களின் அரசை ஏற்றுக்கொள்ளும்போது, இந்தியாவின் நிலை கடினமாகிவிடும். 1999-ஆம் ஆண்டைப் போல தாலிபன் அரசை பாகிஸ்தான் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாலிபன்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியைத் திறந்து வைப்பதே இந்தியாவுக்கு இருக்கும் சிறந்த வழி. ஆனால் தாலிபன்களுடனான இந்தியாவின் உறவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால் இது கசப்பானதாகவே இருக்கப் போகிறது.
1999-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இந்தச் சம்பவம் இந்தியர்களின் நினைவில் செதுக்கப்பட்டிருக்கிறது. 1996 மற்றும் 1999 க்கு இடையேயான கால கட்டத்தில் தலிபான்களுடன் சண்டையிட்ட வடக்குக் கூட்டணி எனப்படும் ஆயுதக் குழுவுடன் இந்தியா எப்போதும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.
தாலிபன்கள் காபூலைக் கைப்பறிவிட்டதால், பிராந்தியம் ஸ்திரமாக இருக்கவும், சொந்த நலனைப் பாதுகாக்கவும்கடந்த காலக் கசப்புகளை ஒதுக்கிவைக்கவே இந்தியா விரும்பும். தாலிபன்கள் வெற்றி பெற்றிருப்பதால் கிடைத்திருக்கும் ஊக்கத்தைப் பயன்படுத்தி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தாய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற கவலையும் இருக்கிறது.
"இந்தியா கத்தி மீது நடக்க வேண்டிய தருணம் இது" என்கிறார். லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், ஆப்கானிஸ்தான் பற்றிய புத்தகத்தின் ஆசிரியருமான அமலேந்து மிஸ்ரா
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியம், முஜாஹிதீன்களின் அடுத்த இலக்காக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய ஓர் உத்தி இந்தியாவுக்குத் தேவைப்படலாம்.
தாலிபான்களுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்பதுடன், தாலிபன் எதிர்ப்பு அணியுடன் பணியாற்றுவதில் எந்த அளவுக்கு ஆர்வங்காட்ட வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தாலிபான்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஓர் அணியைத் திரட்ட மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. தாலிபன் அரசுக்கு எதிரான ஒரு கூட்டணிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் வடக்குக் கூட்டணி மீண்டும் அணி சேர்ந்து தாலிபன்களுக்கு எதிராகச் சண்டையிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதேபோல அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டிக்கான களமாக ஆப்கானிஸ்தான் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே இந்தியாவுக்கு எளிதான வழிகள் ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவின் முடிவுகள் பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
சர்வதேச ஊடகங்களில் சில நாள்களாக அதிகளவு பேசப்பட்ட பெயர் தலிபான். ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.
அமெரிக்கப்படைகள் பின்வாங்கப்பட்டதன் விளைவாக, ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள் தற்போது அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்க கட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிடியில் தற்போது நாடு சிக்கியுள்ளது மேலும் அவர்களை வாட்டி வதைக்கவே செய்யும் என்று அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பெண்கள் உள்பட அந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்த அச்சம் அண்டை நாட்டின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியன் நாடுகளுக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு சோவியத் யூனியன் ஆதரவு என இரண்டு பக்கங்களில் நின்றன.
அப்போது, சோவியத் யூனியனின் ஆதரவோடு 1978ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், ஓராண்டில் அவர்களது ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சோவியத் யூனியன் ஆப்கனுக்குள் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆதரவோடு சோவியத் படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை மேற்கொள்ள தொடங்கின.
சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேல் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சோவியத் யூனியன் படைகள் 1989ஆம் ஆண்டு பின் வாங்கின.
1992 முதல் முஜாகிதீனின் 7 இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே 1994ஆம் ஆண்டு முஜாகிதீனின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து முல்லா ஓமர் தலைமையில் தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்.
தலிபான்களின் தொடர் தாக்குதலால், 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 26இல் தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்டது. முல்லா ஓமர் தலைமையிலான தலிபான்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பையேற்றனர்.
முல்லாவின் ஆட்சியில், கடுமையான பிற்போக்குவாத செயல்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றை மீறினால் மரண தண்டனையும் விதித்தனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான்களின் பாதுகாப்பில் இருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை பொறுப்படுத்தாமல் இருந்த ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்க படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.
ஆனால், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பிற்கும், நாட்டு மக்களின் படிப்பறிவை மேம்படுத்தவும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை.
இதனால், தலிபான் அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேரத் தொடங்கியதன் விளைவு மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.
2018ஆம் ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அவ்வப்போது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினாலும், இறுதியில் தலிபான்களின் கைகளே ஓங்கின.
பிப். 29, 2020இல் அமெரிக்கா - தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ஊடகப் பிரிவுத் தலைவர் தாவா கான் மேனாபால், இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனியல் சித்திகி உள்ளிட்டோரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
ஆனால், ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதலில் மட்டும் ஈடுபட்டனா்.
கடந்த 10 நாள்களிலேயே பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. இந்த நிலையில், தலைநகா் காபூலின் புறநகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
இதனிடையே, தலைநகரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்த விரும்பாததால் ஆட்சிப்பொறுப்பை விட்டு செல்வதாக தெரிவித்த அதிபா் அஷ்ரஃப் கனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். மேலும், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
மேலும், இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தலிபான் அரசுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு அளித்திருப்பது, இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தலிபான்களால் பிற நாட்டினருக்கு ஒருபுறம் பிரச்னை இருந்தாலும், சொந்த நாட்டை மீண்டும் பிற்போக்குத்தன்மைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
வரலாற்றின் நாற்சந்தியில் ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய ஓடுதளம். அமெரிக்க போர்த்தளவாட விமானம் 640 பேருடன் வானில் பறக்க ஆயத்தமாகிறது. விமானத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் நிற்கிறார்கள். விமானத்தின் இறக்கைகள், டயர்களுக்கு மேல் என எங்கும் மக்கள் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள். விமானம் வானில் பறக்க, 500 அடி உயரத்திலிருந்து மூன்று நான்கு பேர் விழும் காட்சிகள் நேரலையில் வெளியாகி, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. நாம் வாழும் காலத்தின் மிக அவலமான காட்சி அது!
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிய ஒரு வாரத்துக்குள் அவர்கள் இருபது ஆண்டுகளாக உருவாக்கிய அரசும் ராணுவமும் சீட்டுக்கட்டு மாளிகையைப்போல் சரிந்து விழுந்தன. ஆப்கன் ராணுவம் படிப்படியாக தாலிபன்கள் வசம் சரணடைந்தது. தாலிபன் படைகள் வடக்கிலிருந்து ஒவ்வொரு நகரையும் கைப்பற்றி காபூல் நோக்கி வந்தன. காபூல் நகரமே, தன்னை தாலிபன்கள் வசம் ஒப்படைப்பதற்காகக் காத்திருந்தது போலவே காட்சியளித்தது. 2001-ல் அமெரிக்கா ஆப்கன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 167 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இருப்பினும், இந்தப் படைகளால் ஒரு சில தினங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஏன் இவை எல்லாம் நடைபெறுகின்றன?
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக நாடுகள் தங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தி, நவீன அரசுகளின் வழியே பலன்களை மக்களுடன் பகிர தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தன. அதுபோலவே ஆப்கானிஸ்தானும் ஒரு குடியரசாக மலரத் தொடங்கியது. நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், நவீன தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பெண்களுக்குக் கல்வி என புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் வாழும் பஸ்தூன் பழங்குடிகளின் தலைமையால் நவீன மாற்றங்களை ஏற்க முடியவில்லை. இதற்கு எதிர்வினையாக அங்கு 1970-களின் இறுதியில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது ஆப்கன் அரசு உதவி நாடியதும், ரஷ்யப் படைகள் உள்ளே நுழைந்தன.
மறுபக்கம் ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பஸ்தூன்களின் படைகளுக்கு ஆயுதங்களைக் கணக்கின்றி கொடுத்தன. `முஜாஹிதீன்கள்’ என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்தப் படைகளுக்கு பணமும் ஆயுதங்களும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும் அமெரிக்கா செய்தது. 1988-ல் வெளியான சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘ராம்போ 3’-ல், வீரம் செறிந்த யுத்தத்தைச் செய்துகொண்டிருக்கும் முஜாஹிதீன்களிடம் சென்று ஆயுதங்களை வெற்றிகரமாகக் கொடுப்பதுதான் கதாநாயகனின் பணி.
முஜாஹிதீன்கள், ஆப்கன் அரசு, ரஷ்யப் படைகள் எனும் இந்த முக்கோண யுத்தத்தில் 1982-ல் மூன்று கோடி மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர். ஒன்றரைக் கோடி மக்கள் இரானுக்குச் சென்றார்கள். தெற்கு இரானின் ஒவ்வொரு நகரத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழும் ஆப்கன் அகதிகளை நான் நேரில் சென்றபோது பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலை அவலத்திலும் அவலம்!
1986-ல் கார்மல், 1992-ல் நஜிபுல்லா எனத் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள்... பிறகு புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள் ஏற்பட்டு 1994-ல் ஆப்கானிஸ்தான், தாலிபன் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தாலிபன்கள் ஷரியத் எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தினர். 2001-ல் தாலிபன்களின் தலைவரான முல்லா முகம்மத் ஒமர் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்க்க உத்தரவிட்டார். பெண்கள் பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைக்குச் செல்வதைத் தடை செய்தனர். இவற்றை எதிர்த்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கனில் உள்ள ‘அல்கொய்தா’தான் இதைச் செய்ததாகக் கருதியது. அமெரிக்கப் படைகள் ஆப்கன்மீது பெரும் தாக்குதலைத் தொடங்கின. 2002-ல் அமெரிக்கா அங்கு ஒரு காபந்து அரசை உருவாக்கியது. அதன் பின்னணியில் 2002-ல் தேர்தல் மூலம் ஹமித் கர்ஸாய் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2009-ல் மீண்டும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றார். 2014 மற்றும் 2019-களில் அஷ்ரஃப் கானி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நான்கு தேர்தல்களுமே நியாயமாக நடத்தப்பட்டனவா என்கிற சந்தேகங்கள் ஆப்கனில் வலுவாகவே இருக்கின்றன. 2002 முதல் 2021 வரை அமெரிக்கா நிறுவிய பாவைக்கூத்து ஜனாதிபதிகளின் கீழ் பலவீனமான, ஊழல் மலிந்த அரசுகள்தான் ஆப்கனை ஆட்சி செய்தன. அப்போதும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பல தொடரவே செய்தன.
2015 முதலே ரஷ்யா, இரான் ஆகிய நாடுகள் தாலிபன்களுக்குத் தங்களின் உதவிக்கரத்தை நீட்டின. வேறு குழுக்கள் அங்கு வலுப்பெறுவதைத் தடுக்கவே ராஜதந்திரமாகச் செய்வதாக அவர்கள் கருதினார்கள். அதேசமயம், அமெரிக்க உளவுத்துறைக்கு தாலிபன்கள் வலுப்பெற்றுவருவது பற்றிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்காக அமெரிக்காவுக்கும் தாலிபன் தலைமைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் தோஹாவில் 2020, பிப்ரவரியில் கையெழுத்தானது. அதன்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்துவந்த போர் முடிவுக்கு வந்தது. அடுத்த 14 மாதங்களில் அதாவது, ‘செப்டம்பர் 2021-ல் அமெரிக்கா தனது படைகளை முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ளும்’ என்று இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தாலிபன்களிடம் எவ்வகையான சலுகைகளையும் அமெரிக்காவால் பெற முடியவில்லை.
மார்ச் 2021-ல் மாஸ்கோவில் நிகழ்ந்த சர்வதேச அமைதிக் கருத்தரங்கில் தாலிபன்களின் தலைவர்கள் பத்துப் பேர் கலந்துகொண்டனர். தாலிபன்கள் கை ஓங்கியதிலிருந்தே அண்டை நாடுகள் தாலிபன் தலைமையுடன் நெருக்கம் பாராட்டத் தொடங்கின. பல நாடுகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த சில மாதங்களாகவே தாலிபன்களின் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இன்னொரு பக்கம் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி ராணுவத் தலைமையையும் அதிகாரிகளையும் மாற்றிக்கொண்டேயிருந்தார். நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ராணுவ வீரர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், ராணுவத்தின் தலைமை சுகபோக வாழ்வை அனுபவித்துவந்தது. ராணுவத்துக்கான நிதி, ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை காபூலிலிருந்து கிளம்பினாலும் கள வீரர்களை வந்தடையவில்லை. ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டு கள்ளச்சந்தைக்கு வந்தன. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களெல்லாம் கள்ளச்சந்தையின் மூலம் தாலிபன்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தன என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள். ராணுவத்தின் வலிமை என்ன என்பதை அறிந்த ராணுவ வீரர்கள், மெல்ல தாலிபன்கள் வசம் சரணடைவதையே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் செயலாகக் கருதினார்கள்.
2021, செப்டம்பர் மாதம்தான் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகத் திரும்ப வேண்டும். ஆனால், ஒரு மாதம் முன்னராக, ஆகஸ்ட் முதல் வாரமே தங்களின் படைகளோடு, உளவுப்பிரிவையும் அழைத்துக்கொண்டது அமெரிக்கா. அவர்கள் வெளியேறிய ஒரே வாரத்தில், வடக்கிலிருந்து தாலிபன்கள் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றிவந்தனர். ஆகஸ்ட் முதல் வாரம் தாலிபன் படைகள் ஆப்கனின் வடக்கு எல்லைப்புற மாகாணங்களான குந்தூஸ், சர்-ஏ-புல், ஜன்ஜான்- ஐக் ஆகியவற்றைக் கைப்பற்றின. கான்சி மாகாணத்துக்குள் தாலிபன்கள் நுழைந்தபோது, அதன் ஆளுநர் அலுவலகத்தின் சாவிக்கொத்தைப் பூச்செண்டுகளுடன் தாலிபன்கள் வசம் வழங்கினார். ஆகஸ்ட் 14 அன்று ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி தனது மாளிகையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று, அங்கிருந்து தனது நெருங்கிய சகாக்களுடன் உஸ்பெகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.
பாலஸ்தீன அழிப்பு, அரபு உலக எண்ணை வளக் கொள்ளை என விரிந்த அமெரிக்காவின் பார்வையில் ஆப்கானிஸ்தானும் ஒரு பலிகடாதான். ஆப்கானிஸ்தான் மக்கள் இந்த ஆட்டத்தில் ஏதும் அறியாது தங்களின் தலைமுறைகளை, வாழ்க்கையைத் தொலைத்து நிர்கதியாக நிற்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் செறிவிழந்த யுரேனியத்தால் செய்யப்பட்ட குண்டுகளை அமெரிக்கா பாவித்ததன் விளைவாகக் குழந்தைகள் இன்றும் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
இருபது ஆண்டுகளாக இவ்வளவு கோடிகளைச் செலவிட்டு அமெரிக்கா எதைச் சாதித்தது? அதைவிட விலை மதிக்க முடியாதது, அங்கு ஆறுபோல் ஓடிய மனித ரத்தம். இந்த இருபது ஆண்டுகளில் அங்கு இரண்டரை லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளியுறவுக் கொள்கை எனும் பெயரில் தங்களின் அகம்பாவத்தை நிரூபிக்க ஆப்கானிஸ்தானின் வரலாற்றையே பாழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்போதும் அமெரிக்காவின் தோல்வியை விவாதிப்பதைவிடவும், தாலிபன்களைக் கிண்டல் செய்யவே உலக ஊடகங்கள் நம்மைப் பயிற்றுவித்திருக்கின்றன. நிச்சயம் தாலிபன்கள் ஒன்றும் ஆப்கானிஸ்தானை நவீனத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லைதான். அடிப்படைவாதிகள் உலகெங்கும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கியே அழைத்துச் செல்வார்கள் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது.
ஆப்கன் பல்வேறு பழங்குடிகள் வாழும் நாடு. இதில் பஸ்தூன் பழங்குடிகளே 40 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இப்போது தாலிபன்கள் வெறும் பஸ்தூன்களின் அமைப்பாக இல்லாமல் டாஜிக்ஸ், ஹசாரஸ் முதலான பிற பழங்குடியினரும் கலந்த அமைப்பாக வலுப்பெற்றிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசு உருவாகி, அது எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதைக் காண இந்த உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இதில் என்ன மாதிரியாகப் பங்காற்றவிருக்கிறார்கள் என்பதே புவியரசியலை நிர்ணயிக்கும்.
காபூல் நகரத்தில் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் பதாகைகளை ஏந்தி தாலிபனின் ஆயுதம் ஏந்திய படைகளுக்கு முன்பாக போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு பதிலாகக் கிடைக்கவிருப்பது நல்ல முடிவுகளா அல்லது தோட்டாக்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்