by சிவா Yesterday at 23:26
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 22:21
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 22:18
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Yesterday at 22:12
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 21:59
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 21:56
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Yesterday at 21:48
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:23
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:52
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Yesterday at 15:09
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Yesterday at 14:57
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 2:35
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 2:01
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 1:45
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 1:22
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Wed 1 Feb 2023 - 23:37
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44
» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42
» தேசியச் செய்திகள்
by சிவா Wed 1 Feb 2023 - 15:32
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48
» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09
» மதுரகவியாழ்வார்
by Admin Tue 31 Jan 2023 - 5:48
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue 31 Jan 2023 - 5:25
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue 31 Jan 2023 - 4:24
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue 31 Jan 2023 - 4:10
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue 31 Jan 2023 - 4:05
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Guest. |
| |||
Aathira |
|
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
• Share
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்
ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.
பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.
பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்
அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post

".. தாலிபான்கள் செத்த பெண் உடலைக்கூட விடாமல், அதை வன்புணர்வு செய்கிறார்கள்,..!"
: தப்பி வந்த ஆப்கான் பெண் போலீஸ்!
----------------
அதுனால என்ன? ...
அவுங்க எவ்ளோ நல்லவுங்களா,..
பத்திரிக்கைக் காரங்களுக்கு, பேட்டி எல்லாம் கூட தர்றாங்க?
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தையெல்லாம்
பெரிசுபடுத்தக் கூடாது!
-------------------
ம்ம்ம்... நெக்ஸ்ட்!
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
"அவர்களுக்கு உலகின் எந்த மொழியில் பேசினாலும் புரியாது, அவர்களுக்கு புரியும் ஒரே மொழி அடி ஒன்றுதான். அதனால்தான் அந்த மொழியில் மட்டும் பேசிகொண்டிருக்கின்றோம்"
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 04/02/2010
அந்நாட்டு பெண்டீர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 04/02/2010
தனக்கு சுகபோகம் கொடுப்பவரும்
தனது குடும்பத்தை நடத்துபவரும் பெண் என்பதை மறந்து
கொடுமைகள் பலவற்றை கட்டவிழ்த்து விடுதல் சரியல்ல.
உலகில் உள்ள எந்த மதமும் மற்றவர்களை கொடுமை படுத்த
அனுமதிப்பதில்லை.கொள்கைகளை சரியாக புரிந்துகொள்ளாத
அரைவேக்காடுகள் ஆளுகையில் இருந்தால் இதுவும் நடக்கும்
இதற்கு மேலும் நடக்கும்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் விமானங்களை அனுப்பி மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.
அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் விமானத்தை கடத்தியது. விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அச்சம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபாகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் இந்த மாத இறுதிக்குள் மொத்தமாக வெளியேற உள்ளது. இந்நிலையில் தலீபான்கள் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெற தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் தலீபான்கள் பாகிஸ்தானை கைப்பற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்படி கைப்பற்றினால் அங்குள்ள அணு ஆயுதங்கள் அவர்கள் வசம் செல்லும். இதனால் உலகளவில் பெரும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தலீபான்கள் கையில் அணு ஆயுதம் கிடைக்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பிடனிடம் செனட் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 04/02/2010
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
தலிபான்களை பாராட்டிய அமெரிக்கா... படைகள் வெளியேற உதவியதாக தகவல்...
-

-
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு அளித்ததற்கான தாலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
இதன் பின்னர் 20 ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தன. இந்நிலையில் அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்றைக்குள் முழுப் படைகளையும் வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
அதன்படி அந்நாட்டில் முகாமிட்டிருந்த கடைசி ராணுவக் குழுவும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது. மேலும் அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி மாலை மூன்றரை மணிக்கு முன்னதாக கடைசி சி17 ராணுவ சரக்கு விமானமும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு விட்டதாக அமெரிக்காவின் மத்திய ராணுவ காமண்டர் ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
மேலும் மோதல்களுக்கு இடையேயும், படைகள் வெளியேற தலிபான்கள் அனைத்து விதமான உதவிகளையும் செய்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார். கடந்த 17 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதால் விமான நிலையத்துக்குள் நுழைந்த தலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாலமுரசு
நேரடி ஒளிபரப்பின் போது துப்பாக்கியுடன் ஸ்டூடியோவுக்குள் புகுந்த தாலிபான்கள்! வீடியோ வைரல்
-

-
ஆப்கானிஸ்தானில் பிரபல டோலோ சேனலில் செய்தி வாசித்துக்
கொண்டிருந்த போது தாலிபன்கள் துப்பாக்கிகளுடன் ஸ்டூடியோவுக்கு
நுழைந்து போஸ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டோலோ சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது தாலிபன்கள்
துப்பாக்கிகளுடன் ஸ்டூடியோவுக்கு வந்ததை கண்டு செய்தி வாசிப்பாளர்
அதிர்ச்சி அடைந்த நிலையில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தாலிபான்கள்
பயப்படாமல் செய்தி வாசிக்குமாறு அவரிடம் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை டோலோ நிறுவனம் அப்படியே
நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் சர்வதேச ஊடகங்களும் ஒளிபரப்பின.
இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி
வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தாலிபான்களுக்கு கண்டனங்களைத்
தெரிவித்து வருகின்றனர்.
மாலைமுரசு
அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான்கள்
-

-
ஆப்கனில் தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள
அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா
இத்தாலி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
“எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில
பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பெண்கள் மருத்துவ
மனைகளில் செவிலியராகவும், காவல்துறையிலும் பணியாற்ற
அனுமதிக்கப்படுவார்கள்.
அமைச்சரவையில் உதவியாளராக இருக்க அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தலிபான்கள் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில்
பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆப்கானிஸ்தானைப் பொருளாதார ரீதியாக
வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா
எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை
பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா
தயாராக இருக்கிறது” என்று சபிஹுல்லா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாகவே சீனாவின்
முக்கிய அமைச்சர்களுடன் தலிபான்கள் ஆலோசனை நடத்தினர் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுடனான
(தலிபான்கள்) நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம் என்று சீனா சமீபத்தில்
கூறியது.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்,
அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே
கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப்
பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும்
கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள்
வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி
வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்து தமிழ் திசை
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்