புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
30 Posts - 55%
heezulia
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
1 Post - 2%
jairam
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
1 Post - 2%
Manimegala
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
12 Posts - 4%
prajai
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
9 Posts - 3%
Jenila
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
3 Posts - 1%
jairam
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10கிரிக்கெட் --3ம் நாள். Poll_m10கிரிக்கெட் --3ம் நாள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் --3ம் நாள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 04, 2021 6:24 pm

மும்பை: மும்பையில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் 10 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய நியூசி., அணி, அஸ்வின், முகமது சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டிரா ஆக தொடர் 0-0 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120, சகா 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. மயங்க் 150 ரன்களிலும், சகா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அஸ்வின், ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 52 ரன்களும், ஜெயந்த் யாதவ் 12 ரன்களிலும், முகம்மது சிராஜ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அஜஸ் படேல் சாதனை
இந்த போட்டியில் 47.5 ஓவர்களில் 119 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஜஸ் படேல் படைத்தார்.

இதற்கு முன்பு பிரிட்டனின் ஜிம் லகர், கடந்த 1956ம் ஆண்டில் மான்செஸ்டரில் நடந்த ஆஸி.,க்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் சாய்த்தார்.

இந்தியாவின் அனில் கும்ப்ளே, கடந்த 1999ம் ஆண்டு, டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் எடுத்து சாதனை படைத்தனர்.

இன்று (டிச.,4) சாதனை படைத்த அஜஸ் படேல், 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். கடந்த 1988 ம் ஆண்டு அக்டோபரில் மும்பையில் பிறந்த அஜஸ் படேல், பிறந்த மண்ணிலேயே சாதனை படைத்துள்ளார். அஜஸ் படேலுக்கு கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நியூசி., திணறல்
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை துவக்கியது. ஆரம்பம் முதலே, இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக ஜேமிசன் 17 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து லோதம் 10 ரன்கள் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆரம்பத்தில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி லோதம் , வில் யங் மற்றும் ரோஸ் டெய்லர் விக்கெட்களை சாய்க்க பின்னர், அஸ்வின் பந்துவீச்சை நியூசிலாந்து அணி சமாளிக்க முடியவில்லை. நிக்கோலஸ், டாம் பிளண்டப், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்விலே ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தினார். அக்சர் படேல் 2 , ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 2வது இன்னிங்சை துவக்கி யது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரராக வந்த புஜாரா 29, மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 04, 2021 6:36 pm

மதியம் 12.30 மணிக்கு டிவி நிறுத்திவிட்டு
மதிய உணவு உண்டு ,தினசரி படித்து, சிறிது இளைப்பாறி
3-30 டிவி பார்த்தால் நியூசிலாந்து 62க்கு 9 விக்கெட் இழப்பு .அடுத்ததும் உடனே
அவுட்.. கடைசி விக்கெட் வீழ்ந்ததைதான் பார்க்கமுடிந்தது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 05, 2021 8:27 pm

கிரிக்கெட் 3ம் நாள் --இந்தியா  வெற்றியை நோக்கி
மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின் 'சுழல்' ஜாலம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன் முன்னிலை பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால்(62), புஜாரா(47), சுப்மன்(47), கேப்டன் கோஹ்லி(36) கைகொடுக்க, இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன் என்ற நிலையில் 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்தின் அஜாஸ் படேல், இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸ் முன்னிலை (263 ரன்) சேர்த்து நியூசிலாந்துக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதனை விரட்டிய நியூசிலாந்து அணி, அஷ்வின் 'சுழலில்' ஆட்டம் கண்டது. இவரது வலையில் லதாம்(6), யங்(20), ராஸ் டெய்லர்(6) அவுட்டாகினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மிட்சல்(60), அக்சர் பந்தில் வீழ்ந்தார். நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து, 400 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
நாளை(டிச.,06) எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி, சுலப வெற்றி பெற இந்தியா காத்திருக்கிறது.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 06, 2021 4:59 pm

கிரிக்கெட் 4ம் நாள்,
INDvNZ, Test, India, Win, NewZealand, இந்தியா, நியூசிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், வெற்றி,
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன் முன்னிலை பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான நேற்று (டிச.,05) இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை (263 ரன்) சேர்த்து நியூசிலாந்துக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதனை விரட்டிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து, 400 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் அஷ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் மொத்தமாக சிக்கினர். முடிவில் நியூசி., அணி 167 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஷ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட், அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
14 தொடர் வெற்றி
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி, 14 தொடரிலும் வென்று சாதித்துள்ளது.
முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக