Latest topics
» சிங்கமுத்து சேர்வை கோன் வரலாறு
by Joseph28 Today at 1:15 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

'பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும்' - ப.சிதம்பரம்

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 25, 2022 9:34 am

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.


அந்தப் பேட்டியில் ப.சிதம்பரம், "5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பமும் கூட. அந்தத் தேர்தல் நடைபெற அதிகபட்சம் ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியமானது. அதுவரை சோனியா காந்தி தலைமையில் தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம். ஜி 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரியல்ல. அவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. ஆனால் பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மீது மட்டுமில்லை ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினர் மீது உள்ளது. அதனால் இந்தத் தேர்தல் தோல்விக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மட்டுமே பொறுப்பாகாது. இப்போதே நிரந்தரத் தலைவரை அறிவிக்கக் கோருகிறார்கள். நாங்கள் ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆகையால் இப்போது முதல் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு ஏதும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். ஜி 23 தலைவர்களிடம் கட்சியை பிளவு செய்துவிட வேண்டாம் என்றும் நான் கோரிக்கை வைக்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தி வளைந்து நெளிந்து கொடுத்தே போக வேண்டும். இது மம்தாவுக்கும் கேஜ்ரிவாலுக்கும் கூட பொருந்தும். ஒவ்வொரு மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.

காங்கிரஸின் பலவீனமாக நான் பார்ப்பது மாநில அளவிலான பலவீனங்களே. நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்துள்ளது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்துவிட்டு முழுமையாக புதியதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த அமைப்பு சார்ந்த பலவீனத்தை நான் தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதையே ஜி 23யின் குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் கூட வலியுறுத்துகின்றனர்.

நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. வெறும் தொண்டர்கள் தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்ட, தேர்தல் அரசியலில் ஈடுபடும் நேர்த்தி கொண்ட தலைவர்களை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களில் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். மிக முக்கியமான அவர்கள் 40, 50 அதிகபட்சமாக 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். அதே போல் வட்ட அளவிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றால் கட்சி கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால் தான் மீள் கட்டமைப்பு சாத்தியமாகும்" என்றார்.

நன்றி தமிழ் ஹிந்து.
---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 25, 2022 9:37 am

பஞ்சாபில் காங்கிரஸிற்கு மாற்று என்று சொன்னதால்தான் ஆம் ஆத்மி ஜெயித்தது. அப்பிடி இருக்கையில் காங்கிரஸ் விரும்பினாலும் ஆம் ஆத்மி அவர்களை சேர்த்துக்கொள்ளாது.
அப்பிடி சேர்த்துக்கொண்டால் ---அதுவே ஆம் ஆத்மீக்கு பலவீனமாகலாம்.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram likes this post

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக