ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Today at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

Admins Online

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Admin on Sun Sep 28, 2008 1:24 pm

எத்தகைய சுத்தமானவருக்கும் வாயில் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கும். வாய் சுத்தம் மிகவும் முக்கியமானது. வாய் சுத்தம் இல்லாவிட்டால் பலவித நோய்கள் உண்டாகும். சின்ன பிள்ளைகளுக்கு பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் வரும். நாற்பது வயதாகிவிட்டால் தொடர்பான நோய்கள் வரும். பாதிப்பு நீரிழிவினாலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பால் இதய நோய்களும் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வாயினுள் அதிகமான பாக்டீரியாக்கள் வளருவதாக சொல்கிறார்களே அது ஏன்? என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். வாயிலிருந்து சுரக்கும் திரவங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். இது பாக்டீரியா போன்ற பிற கிருமிகளும் வளர்வதற்கு ஏற்றதாக இருப்பதால்தான் வாய்க்குள் கிருமிகள் அதிகம் உருவாகின்றன. இவை ரத்தநாளங்கள் வழியாக சென்று ரத்தக் கொழுப்பை உறைய வைத்து ரத்தத்தை உறையச் செய்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரச்சினையுள்ளவர்களின் ரத்தத்தில் பைப்ரினோஜென் (fibrinogen) என்ற பொருள்தான் ரத்தத்தை உறைய செய்துவிடுகிறது.

பற்களை (வாயை)பாதுகாப்பதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். அதை எந்த வயதிலிருந்து தொடங்குவது என்பதுதான் பிரச்சினையா? பல் முளைக்க ஆரம்பிப்பதில் இருந்தே பற்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுக்கு முளைப்பது பால் பற்கள். இவற்றின் எண்ணிக்கை -20. இவை விழுந்து முளைப்பதுதான் நிலைப்பற்கள். இவற்றின் எண்ணிக்கை-32. பால் பற்கள் மெல்லுவதற்கு முக்கியம். உரிய நேரத்தில் இவை விழுந்து விட்டால் அடுத்து வரும் பற்கள் இடைவெளியை நோக்கி வளர்ந்து இடுக்குப் பற்களை உருவாக்கும். இதனால் மன அளவிலும் பாதிப்பு ஏற்படும்.


பால் பற்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை எதையாவது சாப்பிட்டால் ஈரில் குத்தி வலிக்கும் என பயந்து சாப்பிட மறுக்கும். இதனால் ஊட்டச்சத்துக்குறைவு உண்டாகும். பால் பற்கள் திடமாக இருக்கவேண்டுமானால் பிள்ளைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை தரவேண்டும். இது தாடை எலும்பையும் உறுதியாக வைத்திருக்கும். பல் பாதிப்பு என்றாலே முதலில் வருவது பற்சிதைவுதான். இதற்கு முக்கியக் காரணம், பற்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள குழிகளிலும், பற்களின் இடையில் உள்ள சந்துகளிலும் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை சுரப்பதுதான்.


Last edited by இளங்கோ on Sun Sep 28, 2008 1:48 pm; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty Re: பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Admin on Sun Sep 28, 2008 1:26 pm

பற்சிதைவு வந்துவிட்டால் பற்களின் மேற்புறம் பழுப்பாகவோ, கருப்பாகவோ நிறம் மாறும். நோயாளியின் பற்கள் மீது குளிர்ச்சியாகவோ, சூடாகவோ, இனிப்பாகவோ எது பட்டாலும் உறுத்தல்கள் ஏற்படும். பாதிப்பு பற்கூழை அடைந்துவிட்டால் அங்குள்ள நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை சிதைந்து வலியெடுக்கும். பற்களை பிடித்துள்ள அத்தனை கட்டமைப்புகளும் ஆட்டம் கண்டுவிடுவதோடு, வலி, வீக்கம், சீழ் அல்லது ரத்தம் கலந்து வருதல் போன்றவை ஏற்படும். இவற்றை தடுப்பதற்கு பால் பற்களானாலும் சரி, நிலைப் பற்களானாலும் சரி, அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

பற்சிதைவு வராமல் இருக்க, புரோட்டின் உள்ள பழங்கள், சாலாடுகள், கொட்டைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். சாப்பிட்டதும் பற்களை சுத்தமாக கழுவவேண்டும். கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து) பொருட்களை தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடலாம். உணவில் கடைசியாக இனிப்பு, ஐஸ்கிரிம் ஆகியவற்றை சாப்பிடாமல் பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். தினமும் இருவேளை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பற்களை குச்சியால் குத்துவது போன்றவற்றை செய்யாமல், கறைகள் இல்லாமலிருக்க மருத்துவரை நாடி, பற்சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் பற்சிதைவுக்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணம். குழந்தை அழும்போது பால் புட்டியை அதன் வாயில் திணித்துவிடுவார்கள். குழந்தை அதை வாயில் வைத்துக் கொண்டே உறங்கும். இதனால் பல் முளைக்கும்போதே பாதிக்கப்பட்டு சிதையும். குழந்தைகளுக்கு புட்டிப்பால் புகட்டுவதை தவிர்க்கவேண்டும். பாலில் அதிகமாக சர்க்கரை சேர்ப்பதையும் விடவேண்டும். இந்த பிரச்சினைக்கு நர்சிங் பாட்டில் டீகே (Nursing bottle decay) என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டரை வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை நாமே தவிர்த்து விடலாம்.


Last edited by இளங்கோ on Sun Sep 28, 2008 1:47 pm; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty Re: பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Admin on Sun Sep 28, 2008 1:27 pm

கிருமிகள் எப்படி பற்களை பாதிக்கும்? நல்ல கதையாக இருக்கிறதே என்பவர்களும் உண்டு. நாம் சாப்பிடும் பழங்கள், பால், ரொட்டிகள், காய்கறிகள் ஆகியவற்றில் சர்க்கரையும், ஸ்டார்ச்சும் உண்டு. உணவுத்துகள்கள் பற்களில் ஒட்டும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மீது செயல்பட்டு அமிலங்களை உருவாக்கி பல்லின் எனாமல் பகுதியை அரிக்க ஆரம்பிக்கும். உண்ட உணவுத் துகள்கள் நீண்டநேரம் வாயிலிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகும். சாப்பிட்டதும் வாய் கொப்புளிக்கும் பழக்கத்தால் இதை சரிசெய்யலாம். சரி, பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வீர்கள்?

ஈறு பிரச்சினையால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 90% பேர் பாதிக்கப்படுகிறார்கள். பற்களின் மேல் படிந்துள்ள கிருமிகள் பற்களைச் சுற்றி கறையாக உருவெடுக்கும். தேனடை போன்று ஒட்டிக் கொள்ளும் பாக்டீரியாக்களுடன் மேலும் மேலும் பாக்டீரியாக்கள் சேரும். இதனோடு புகைப்பழக்கம் மற்றும் பான்மசாலா போன்றவற்றை சுவைக்கும்போது அந்த கறைகளும் சேர்ந்துகொண்டு பற்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் இந்த காரணங்களே நோயை அதிகப்படுத்தி தவிர, பல் எலும்புவரையில் பாதிப்பை உண்டாக்கி தொல்லை தரும்.


ஈறுகள் பற்களை கவசம்போல மூடி பாதுகாக்கின்றன. இல்லாவிட்டால் பற்கள் எலும்போடு ஒட்டிக்கொண்டு எலும்புக்கூடுபோல தெரியும். பாதிக்கப்படும்போது அழற்சி அதாவது சிவந்து வீங்கும். ஈறை தொடும் போது அல்லது பல் தேய்க்கும்போது ரத்தம் வரும். இவ்வாறு இருந்தாலே ஈறில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை தெரிந்துகொள்ளலாம். கவனிக்காமல் விடும்போதுதான் பற்சிதைவு, பல்தண்டு சிதைதல்,பற்கள் ஆடுதல், வாய் துர்நாற்றம், பற்கள் விழுதல் என பல பிரச்சினைகள் வரும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty Re: பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Admin on Sun Sep 28, 2008 1:45 pm

ஈறு நோய்களில் அழற்சி முதலாவது. வீங்கி ரத்தம் வருதல். இதை நாமாகவே சரிசெய்துகொள்ளலாம். கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் [Periodontitis (pyorrhea)]எனப்படும் நோயாக மாறும். பிரியோடான்டிஸ் நோயில் பல்லைப்பிடித்திருக்கும் எலும்புகள் பாதிக்கப்படும். மூன்றாவது அட்வான்ஸ்ட் பிரியோடான்டிஸ். இதனால் ஏற்கனவே பல பற்கள் இழப்பும், பல் தண்டு இழப்பும் உண்டாகும். மூன்றாவது நிலையில் ள் சிதைந்து பற்களின் இடையே நிறைய இடைவெளி தோன்றும். இந்த மூன்று நிலைக்கும் சிகிச்சைகள் உள்ளன. மூன்றாவது நிலைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.


ஈறில் ரத்தம் வருவது ஒரு சீரியசான பிரச்சினை. பிரஷ்ஷை வேகமாக வைத்து தேய்ப்பதாலோ, பற்குழிவினாலோ, ஈறுகளை பாக்டீரியாக்கள் தாக்குவதாலோ உண்டாகும். லுகேமியா (Leukemia) எனப்படும் ரத்தப்புற்று, ரத்தக் கோளாறுகள், ரத்த செல் தட்டுக்கள் பிரச்சினை, ரத்தத்தை இளக்கும் மருந்துகள், வைட்டமின் சி மற்றும் கே குறைபாடுகள், கர்ப்பம், பருவநிலை மாறுதல், ரசாயன நொதிகள் போன்றவற்றின் காரணமாக ஈறில் ரத்தம் வரும். பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈறில் ரத்தம் வருவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சை தேவை.


பல் சார்ந்த நோய்களால் வேறுவித நோய்களும் வருவதாக ஆரம்பத்தில் பார்த்தோமல்லவா? அவற்றுள் முக்கியமானது பல்மொனரி ஆக்டினோமைகோசிஸ் (Actinomycosis) என்ற நோய். இது அக்டினோமைசெஸ் இஸ்ரேலி (Actinomyces israeli) என்ற பாக்டீரியாவால் வருகிறது. வாய் மற்றும் உணவுக் குழாயில் காணப்படும் இப்பாக்டீரியா மார்பு, வாய், தாடை மற்றும் இடுப்புப் பகுதி நோய்கள் வரக்காரணமாகிறது. இந்நோய் வந்தால் எடைகுறைவு, காய்ச்சல், கோழையுடன் கூடிய சளி, தொடர் மூக்கு ஒழுகல், இரவில் வியர்த்தல், மூச்சிரைப்பு, மார்பு வலி ஆகியவை வரும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty Re: பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Admin on Sun Sep 28, 2008 1:51 pm

ஈறு நோய்கள் வராமல் தடுக்கவேண்டுமானால் பற்களை சுத்தமாக்கி, ஈறுகளை மசாஜ் செய்யவேண்டும். உணவுக்குப் பிறகு வாயை கொப்புளிக்கவேண்டும். பற்களை மேலும் கீழும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். புகைத்தல், பான்பராக் மெல்லுதல் ஆகியவற்றை விடவேண்டும். ஊசி, குண்டூசி கொண்டு பற்களை குத்துவது, உணவுத் துணுக்குகளை இவற்றால் எடுப்பது ஆகியவற்றை செய்யக்கூடாது. சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். முறையாக பல் மருத்துவரை அணுகி பல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி பல் மருத்துவரிடம் சுத்தம் செய்வதால் பற்சிதைவு ஏற்படும் என்பது தவறான கருத்தாகும்.


தெற்றுப் பற்கள் சிலருக்கு இருப்பதை அறிவீர்கள். இதற்கு காரணம், பரம்பரை, சிறுவயது நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள், வாய் வழியே சுவாசிப்பது, வாய் சூப்புதல், உதடு கடித்தல், குறித்த காலத்திற்கு முன்பே பால்பற்கள் விழுந்துவிடுதல், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் பால்பற்கள் விழாத நிலை, அதிகப்படியான பற்கள் இருப்பது அல்லது குறைவான பற்கள் இருப்பது போன்றவற்றால் தெற்றுப்பற்கள் வருகின்றன. இவற்றால் பேச்சுக் குறைபாடுகள், வாய் சுத்தம் செய்ய இயலாமை, பற்சிதைவு, நோய்கள் போன்றவை தோன்றுகின்றன.


வாயில் தோன்றும் பிரச்சினைகளுள் முக்கியமானது வாய்ப்புற்றுநோய். புற்றுநோயாளர்களுள் 7 சதவிகிதம் பேர் வாய்ப்புற்றுநோயால் இறக்கிறார்கள். வாயில் ஏற்படும் புண்கள், புகைப்பழக்கம், பான் மசாலா, குட்கா போடுதல், புகையிலை மெல்லுதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கு காரணம் என கூறப்படுகிறது. துவக்கத்தில் வாயில் வலியற்ற புண்கள் தோன்றும். இரண்டு வாரத்திற்கு மேலும் ஆறாத புண்கள், உண்ண-குடிக்க-விழுங்க சிரமம், ஆகியவை வாய்ப்புற்றுநோயின் சில அறிகுறிகள். லூக்கோபிளேக்கியா, வாய் கன்ன சளிச்சவ்வு புற்று ஆகியவை இவற்றில் முக்கியமானவை.


வாய் பகுதியில் தோன்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல் மருத்துவர் இருக்கிறார் என்பதால் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. யானை பல் தேய்க்கிறதா? நாம் ஏன் தேய்க்கவேண்டும் என்பது போல வெட்டி வேதாந்தம் பேசி பற்களை சுத்தம் செய்யாமல்விடாதீர்கள். தற்போது பற்களில் ஏற்படும் அனைத்துவித குறைபாடுகளை நீக்கி, பற்களையும் முகத்தையும் அழகுபடுத்தும் அதிநவீன பல்-முக சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

https://www.eegarai.net

Back to top Go down

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Empty Re: பல் நலம் காத்து பல்லாண்டு வாழ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum