புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 16, 2022 4:57 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’

1 . ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ – இந்தத் தலைப்பைப் பார்த்ததும், கடவுளிடம் கந்தசாமிப் பிள்ளை ஏதோ காரசாரமாகக் கேட்டு மடக்குவார்; உங்கள் படைப்பில் இவ்வளவு கோளாறுகள் உள்ளனவே? என்று கேள்வி போடுவார்! ; அல்லது கடவுள் கந்தசாமிப் பிள்ளைக்கு நல்ல நேர்வழி எது என்று விவரிப்பார் ; எதற்காகப் படைப்புகள் நேர்கின்றன என்று கடவுள் விளக்குவார் என்றெல்லாம் எதிர்பார்ப்போம்! ஆனால் ஏமாற்றமே மிச்சம்!ஆனால் நேரடியாக நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனினும் , சிறுகதைக் கட்டுக்கு உட்பட்டுப் பல கருத்துகளைச் சாற்றி, இறுதியில் நாம் மனநிறைவுகொள்ளச் செய்துவிடுகிறார் புதுமைப்பித்தன்!

2 . கந்தசாமிப் பிள்ளையைச் சந்திக்கிறார் கடவுள்; ‘பூலோகத்தைப் பார்க்க வந்தேன்’ என்பது மட்டும்தான் அவர் தெரிவித்தது. கடவுளுக்கு இந்த உலகு ஒத்துப்போகவில்லை! இந்த உலகு அதற்கென்று பல விதிகளை வகுத்துக்கொண்டுள்ளது! அந்த விதிகளுக்கு முரணாக வாழ்வது இயலாது! ஆகவே வந்த வழியே திரும்புகிறார் கடவுள்! இதுதான் கதைக் கருத்து!

3 . கடவுளைச் சிவனாகவே காட்டுகிறார் புதுமைப் பித்தன்; கடவுளின் கண்டத்தில் கறுப்பு மறு, ‘கூத்தன்’ என்ற பெயர், சடை முடி இப்படி எல்லாமே சிவன் தொடர்பான காட்சிகளே வருகின்றன! கதை எழுதுபவர் ஏதோ ஒரு கடவுளை மட்டும் பேசினால்தானே கதை கரையேறும்? ஆகவே இதைத் தவறென்று கூற முடியாது!

4 . கந்தசாமிப் பிள்ளையை ஒரு சாதாரண வருவாய்க்காரராகவே படைத்துள்ளார் ஆசிரியர். அவர் ஒரு சித்த மருத்துவ இதழின் ஆசிரியர் ; வைத்தியமும் பார்ப்பவர். சென்னை எஸ்பிளனேட் பகுதியிலிருந்து திருவல்லிக்கேணிக்கு எப்படிச் சென்றால் எவ்வளவு மிச்சமாகும் என்று கணக்குப் பார்க்கும் நிலைதான் அவரது! அவரின் கணக்கு :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ Qaa3HEv

ஆனால் இது கற்பனையானது என்று யாரும் நினைக்க வேண்டாம்! இது 1943இல் எழுதப்பட்ட சிறுகதை; விடுதலைக்கு முந்தைய காலம்! அந்தக் காலத்தில் காலில் செருப்பு இல்லாமல்தான் அலுவலக ஊழியர்கள் பலர் பணிக்கு வருவார்கள்! இப்படிப் போனால் காலணா மிஞ்சும் , அப்படிப்போனால் அரையணா மிஞ்சும் என்று கணக்குப் பார்த்த காலக்கட்டம் அது! ஆகவே இதைப் பொறுத்தவரை வெகு சிறப்பாகச் சித்திரித்துள்ளார் புதுமைப்பித்தன்!

5 . திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போறது? – கடவுள் கேட்டார். அக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ MT3uUKm

தமிழகம் பழமொழிகளால் நிறைந்தது: இவை தெரியாமல் வரும் புதியவருக்கு – கடவுளுக்குச் – சிக்கல் வரத்தான் செய்யும் ! பழைய தமிழும் வளரும் புதிய தமிழும் கலக்கும் போது யாருக்கும் சிக்கல் வரத்தான் வரும் என்று ஆசிரியர் காட்டுவதாகக் கருதலாம்.
என் நண்பர் ஒருவர் கிராமத்திற்குச் சென்றவர்; அவ்வூர்ப் பேருந்து நிறுத்ததில் நின்றுகொண்டு , ‘உங்கள் ஊரில்தான் இருக்கிறேன்; வீட்டுக்கு எப்படி வருவது?’எனக்கேட்டார் அலைப்பேசியில்; கிராமத்து நண்பர் , ‘மேக்காலே ஒரு ரோடு போகுதில்லையா? அதிலே வா’ என்றார். நண்பர் நொந்துவிட்டார்! ‘மேக்காலே என்றால் என்ன?’ எனக் குழம்பித் தவித்துப் பக்கத்து ஆட்களிடம் கேட்டுத் தெளிந்தார்!
6 . கடவுள் தண்ணீர் கேட்டார் கந்தசாமிப் பிள்ளையிடம். அதற்குப் பிள்ளை என்ன சொன்னார்?
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ HhD1Doz

உலகம் முழுதும் வணிகமய மாகிவிட்டது! மனிதப் பண்புகள் மறைந்து வருகின்றன என்று காட்டும் இடம் இது!
7 . கடவுளும் பிள்ளையும் ஓட்டலில் காப்பிக்கு ‘ஆர்டர்’ செய்ததைப் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ FQRoG4k

உலகில் , எல்லாவற்றிலும் பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்துபுகுத்து என்று புகுத்தி இயல்பு வாழ்வைக் கெடுத்துவிட்டார்கள் என்ற ஆசிரியர் குரல் இங்கு கேட்கிறது! ஒவ்வொருவரும் எனக்கு உன்னைவிட அதிகம் தெரியும் என்று காட்ட விரும்பும் சூழலையும் ஆசிரியர் கோடிடுகிறார்!
8 . ‘சுகாதாரம் என்றால் என்ன?’ எனக் கடவுள் கேட்கிறார் பிள்ளையிடம் ஓட்டலில். இவ் வினாவில் , இயற்கையான நல்ல உலகத்தை மக்களின் பழக்கங்களே கெடுத்துள்ளன என்ற ஒரு சாடலும் உள்ளது.
9 . கடவுளின் விரலில் ஒட்டிய எச்சில் காப்பியை, மேஜையின் கீழே நீரூற்றிக் கழுவச் சொல்கிறார் பிள்ளை. இதனால், உலகில், மனிதர்களே சட்டம் போடுவார்கள், பிறகு அவர்களே அதை மீற வழியும் காண்பார்கள் என்று நகைக்கிறார் புதுமைப்பித்தன்.
படிப்பவர்கள் வெளிப்படையாகச், சொன்ன மாத்திரத்தில் சிரிக்கும் வெடிச்சிரிப்பு எதையும் ஆசிரியர் தரவில்லை; ஆனால் மனதுக்குள் நகைக்கும் நகைப்பைத் தருகிறார்!
10. சிக்கிரிப் பொடிபற்றிக் கடவுளுக்கு இப்படி விளக்குகிறார் கந்தசாமிப் பிள்ளை:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ AMgY4sr

கடவுள் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றுபவர்கள் அன்றும் மிகுதி! இன்றும் மிகுதி!மிகுதி! ஆனால் ‘மேதாவிகள்’ என்று சொல்லிக்கொள்வோர் யாரும் இதுபற்றி மூச்சு விடமாட்டார்கள்!
11. ஒரு ஓட்டல்காரர் பத்து ரூபாய்க் கள்ள நோட்டைக் கடவுளுக்குத் தந்துவிடுகிறார் , தெரிந்தே; ‘கடவுள்’ அல்லவா? தெரிந்துகொண்டார்! அந்த நோட்டைக் கிழித்தெரிந்துவிட்டார்! ‘ஏன் கிழித்தீர்? நானாக இருந்தால் அவரோடு சண்டைபோட்டிருப்பேன்!’ என்று கந்தசாமிப்பிள்ளை கேட்கவே, ‘நீங்கள் காபிப் பொடியில் சிக்கிரி கலப்பதை ஏற்றுக்கொண்டீர்கள் அல்லவா? அதைப் போல நானும் கிழித்துப்போடுவதோடு நிறுத்துவதற்கு உடன்பட்டேன் என வைத்துக்கொள்ளும்!’ என்று கடவுள் பூசி மெழுகிறார்.
பொய் பித்தலாட்டங்கள் நம்மைச் சுற்றி நடப்பது பலருக்கும் தெரிகிறது; ஆனால் அவற்றை அனுமதித்துக்கொண்டே போகிறோம்!- இதுதான் புதுமைப்பத்தன் கூறவருவது! ‘எவனும் எக்கேடும் கெட்டுவிட்டுப் போகட்டும்; நம் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவோம்’ என மக்கள் நினைப்பதை 1943இலேயே சாடியுள்ளார் புதுமைப்பி த்தன்!
12 . கந்தசாமிப் பிள்ளை, தனது வைத்தியப் பத்திரிகைத் தொழிலை விளக்குமுகத்தான் சில தொழில் இரகசியங்களைப் போட்டு உடைக்கிறார்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ YJHx5Yf

உண்மையான பேச்சு!
பல பேராசிரியர்கள் பாடம் நடத்துவது இப்படித்தான்! ‘நாம் நடத்துவது போலவும் இருக்கவேண்டும்! ஆனால் யாருக்கும் எதுவும் புரியக்கூடாது! அதுவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அறவே புரியக்கூடாது! ’ என்ற கபட எண்ணத்துடன்தான் பாடம் நடத்துகின்றனர்!
கந்தசாமிப்பிள்ளை வாய் மூலமாகப் புதுமைப் பித்தனே நேரடியாகக் குமுறும் இடம் இது!
பாத்திரங்களின் நடவடிக்கைகளால் நாம் உணருமாறு செய்வது ஒரு சிறுகதை உத்தி ; ஆசிரியரே பாத்திரங்களுக்குள் புகுந்து விளாசுவது இன்னொரு சிறுகதை உத்தி!

13 . ரிக்ஷாக்காரனுக்குக் கூலியாக ஒரு ரூபாய் கொடுத்தார் கடவுள்; ‘நீங்க நல்லா இருக்கணும் சாமி!’ என்றா ரிக்ஷாக்காரன். உடனே கந்தசாமி சொன்னதையும் கடவுள் பதில் சொன்னதையும் படிப்பீர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ JVDOWJ5

கவனியுங்கள்!
ஒரு ரிக்ஷாக்காரன் ‘ஆசீர்வாதம்’ செய்யக்கூடாதாம்! இதுதான் இன்றுவரை ‘மேட்டுக்குடி’ என்று தம்மைத் தாமே கருதிக்கொண்டிருப்போர் மனநிலை! கீழ் மட்டத்திலிருந்து மேலே சில தலைவர்கள் மேலே வந்தாலும், அவசரம் அவசரமாக இந்த ‘மேட்டுக்குடி’ யாரே அவர்களைப் போய்ச் சூழ்ந்துகொண்டு, மேலே விழுந்து, உதவுவதுபோல நடித்துத், தங்கள் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர்! ஆனால், நம் கதையில், கடவுள் , ‘ரிக்ஷாக்காரன் ஆசீர்வாதம் செய்யக்கூடாதா?’ என்று கேட்பது , புதுமைப் பித்தன் சமுதாயத்திற்குக் கூறவந்த கருத்து!

14 . ‘நான் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன்’ என்று ரிக்ஷாக்காரன் கூற, ‘தெரியும்டா நீ கள்ளுத்தண்ணிக்குக் கட்டுப்பட்டவன்’ என்று திட்டுகிறார் பிள்ளை; அப்போது ரிக்ஷாக்காரன் சொல்வது-
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ LVfkZQT

‘கள்ளுத் தண்ணி’ என வந்ததைக் கவனித்தீர்கள்? அன்று கள்ளுதான் ‘குடிமகன்’களுக்கு! காங்கிரஸ்காரர்களும் ‘கள்ளுக்கடை மறியல்’தான் செய்தார்கள்! இப்போது சொல்வதானால் ‘டாஸ்மாக்’ என்ற சொல்லைப் போட்டிருப்பார் ஆசிரியர்!
ரிக்ஷாக்காரன் சொல்வதில் உள்ள நியாயத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்! நாள் முழுதும் வெயிலில் பாடுபடுபவன் இரவில் ‘பானம்’ குடித்தால்தான் காலையில் எழுந்திருந்து வேலைக்குப் போகமுடியும்; சரி! ‘இது தேவையில்லை;’ நாள் முழுதும் வேலை பார்த்தாலும் அடுத்த நாள் வேலைக்குப் போக நாங்கள் வழிகாட்டுகிறோம் ’ என்று மருத்துவர்கள் ஏதாவது வழியைக் கண்டுபிடிக்கிறார்களா? அணுகுண்டு தயாரிப்பதில் காட்டும் கவனத்தில் கொஞ்சமாவது , மக்களை நல்வழிப்படுத்துவதில் காட்டக்கூடாதா?
ரிக்ஷாக்காரன் , ‘கடவுளுக்குக் கண்ணில்லை; அவன் உன்னைப் பேசவைத்தான், என்னைக் கேட்கவைத்தான்!’ என்று கூறியதைக் கேட்டுக் கடவுள் சிரித்ததாகக் காட்டுகிறார் ஆசிரியர்! அந்தச் சிரிப்பில் , ‘மக்களாகவே ஒரு வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது ஒரு வர்க்கத்திற்கு வசதியாக உள்ளது; இன்னொரு வர்க்கத்திற்குக் கேடாக உள்ளது அது!இதற்குப் படைத்தவன் நான் என்ன செய்வேன்? ’ என்பதுதான் பொருளாகக் காணப்படுகிறது.

15 . கந்தசாமி வீட்டுக் குழாயில் தண்ணீர் வராததை மறக்காமல் எழுதுகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ TTMEJIv

1943 தமிழகத்து நிலைதான் ஏறக்குறைய இன்றும் தமிழகத்தில் உள்ளது! ஆனால் பேச்சு மட்டும் அரசியல் வாதிகளிடம் அதிகரித்துள்ளது! இதில் ஒரு ‘முன்னேற்றம்’ என்னவென்றால், மக்களின் கோரிக்கையை வைக்கும் ஆளையே குழியில் தள்ளுவது!
16 . மக்கள் , ‘எதற்காகச் செய்கிறோம்? அவசியம்தானா? அறிவுக்கு உகந்ததா?’ என்றெல்லாம் பார்க்காமலேயே மற்றவர்களைப் பார்த்து அப்படியே கண்மூடித்தனமாக எதையும் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்ற ஆசிரியரின் கவலையைப், பிள்ளையின் மனைவி, ‘கைலாசவரத்துப் பெரியப்பா’ காலில் விழுந்து வணங்குவதாகக் காட்டுவதிலிருந்து அறியலாம் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ GJfkqoo

17 . வாசலில் உள்ள அரிசி மூட்டையை வீட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் அல்லாடுகிறார் பிள்ளை; கடவுள்தான் தூக்கிச்சென்று வீட்டுக்குள் வைக்கிறார் ! – இந்தக் காட்சியால் , மக்களில் ஒரு பகுதியினர் உடல் உழைப்பைச் செய்யமுடியாது போய்விட்டனர் என்று காட்டுகிறார் ஆசிரியர்!
இவ்வாறாகச், சமுதாயமானது ஏன் இப்படி இருக்கிறது? என்று பலமாகச் சிந்தித்த புதுமைப் பித்தனின் சிந்திப்பின் ஆழம் நமக்கு விளங்குகிறது!
18.கடவுளிடம் ‘ஜீவிய’ சந்தாத் தொகையாக 25 ரூபாய் கேட்கிறார் கந்தசாமிப் பிள்ளை; ‘இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு ?’ என்று வினாத் தொடுக்கிறார் கடவுள்; ஆனால், இதற்குச் சரியான பதிலைச் சொல்லமுடியவில்லை கந்தசாமிப்பிள்ளையால்! பிள்ளை, பதிலுக்கு இப்படிக் கடவுளை மடக்குகிறார் - ‘நெய் முதல் நல்லெண்ணெய் வரை எல்லாம் கலப்படம்தானே இங்கு? இது உமக்குத் தெரியாதா?’.
கடவுளால் பதில் சொல்லமுடியவில்லை!
கடவுள் மௌனத்திற்குக் காரணம் – ‘நான் எல்லாம் உண்மையாகத்தான் படைத்தேன்; நீங்கள் எல்லாவற்றிலும் கேடு செய்துவிட்டு என்மீது பழி போடுகிறீர்களா?’ என்று மனதுக்குள் நினைப்பதுதான்!
1943இலேயே கலப்படத்தைப் பற்றிக் கவலைப்பட்டுள்ளார் புதுமைப் பித்தன்! இன்று கலப்படம் வெகுவாக முன்னேறியுள்ளதே தவிரக் குறைவது என்ற பேச்சுக்கே இடமில்லை! முன் அரிசியில் கல்லைக் கலந்தார்கள் என்றால் இப்போது கலப்பதற்கென்றே பொடிக்கற்களைத் தயாரிக்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள்! கேவலம் என்னவென்றால், இதற்கு அரசிடம் அனுமதியும் வாங்கிவிடுகிறார்கள்! சர்க்கரையில் ரவையைக் கலப்பது, மிளகில் அந்திமந்தார விதையைக் கலப்பது, நெய்யில் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கலப்பது டீத் தூளில் கண்ட பொடியையும் கலப்பது, இப்படிச் சொல்லில் அடங்காத கலப்படங்கள் இன்று அமோகம் ! அமோகம்!
இன்னொன்று!
நடுத்தர மக்களுக்கென்று ஒரு சிந்தனை வட்டம் உள்ளது! அதைவிட்டு வேறு சிந்திக்க முடியாது அவர்களால்; ஏனெனில் வேறு சிந்தித்தால் உள்ளதும் போய்விடும் என்ற அச்சம்தான் காரணம்! இதற்கு இயையவே, பிள்ளை , கடவுளைக் கண்டாலும் , அவருக்கு ஆண்டுச் சந்தாத் தொகை வந்தால் அதுபோதும் என்ற நினைப்பில் இருக்கிறார்! 1943ஐ ஒட்டிய காலக் கட்டத்தில் பல இதழ்கள் நடத்தியவர்களின் நிலையும் அவற்றில் பணிபுரிந்தோரின் நிலையும் இதுதான்!
இவ்வகையில் புதுமைப்பித்தன் , தன் மனச்சாட்சிக்குத் துரோகம் எதையும் செய்யவில்லை என்றே நாம் மதிப்பிட வேண்டும்!
18 . ‘கருடப் பச்சை, கருடப்பிச்சு’ என்ற சொற்களில் எது சரி என்று கடவுளைக் கந்தசாமிப் பிள்ளை கேட்கக் கடவுள் கூறும் பதில் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ HA3MMq8

கடவுள் மீதோ , விதியின் மீதோ பழியைப் போட்டு அநியாயங்களை மக்கள் செய்யக்கூடாது! – என்று அறைகிறார் புதுமைப் பித்தன் இங்கே!
19 . திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் , ‘நடன மங்கை பார்வதி கறுப்பாக இருக்கிறாளே’ என்று மேனி நிறத்தை ஆட்சேபிக்கிறார்! அந்தக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ 8jfNI6h

‘நடனமங்கை என்றால் சிவப்பாகத்தான் இருக்கவேண்டும்’ என்ற குருட்டுத்தனமான எண்ணத்தைக் கடிகிறார் ஆசிரியர்! அது மட்டுமல்ல, கலை என்றாலே என்ன என்று தெரியாத ‘சாஸ்திரி’ , அந்தச் சங்கத்துக்குப் பல ஆண்டுகள் தலைவராம்! இப்படித்தான் அன்று இருந்தது நம் நாடு!இன்று ? அதைவிட மோசமாக இருக்கிறது! கிரிக்கெட் மட்டையையே பார்த்திராதவர்கள் , அதன் சங்கத் தலைவராக இருக்கிறார்! பணம் அவரிடம் உள்ளதாம்! அரசு ஆதரவு அவருக்கு இருக்கிறதாம்! ‘திவான் பகதூர்’ பட்டத்தை ஆங்கிலேய அரசு சிலருக்குக் கொடுத்து, மக்களிடம் ஓர் எழுச்சி வராமல் பார்த்துக்கொண்டது அன்றைய ஆங்கில அரசு! இன்றும் அதே ஆயுதத்தைத்தான் மக்களைச் சரிக்கட்ட ‘மேலோர்’ பயன்படுத்துகின்றனர்! இவற்றுக்கெல்லாம் ஒரு சிந்தனைக் களத்தை அன்றே புதுமைப் பித்தன் கொடுத்துள்ளார் என மதிப்பிடலாம்!
20 . இறுதியில், ‘உங்களிடம் எல்லாம் சேர்ந்து வாழ முடியாது! எட்டி நின்று வரம்தான் கொடுக்கலாம்!’ என்ற முடிவுக்கு வருகிறார் கடவுள்!
கடவுள் தந்த உரூபா இருபத்தைந்தை வெகு மகிழ்வாக வாழ்நாள் உறுப்பினர் சந்தாவாக வரவு வைத்துக்கொள்கிறார் கந்தசாமிப் பிள்ளை!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ 2CNqtOp

இதுதான் கதையின் உச்சம் (climax)!
21 .ஏற்படுத்தப் பட்டிருக்கிற நம் மக்களின் வாழ்வைப் பல கோணங்களில் வடித்துள்ளார் ஆசிரியர்! பல தரப்பு வர்க்கங்களை மக்கள் தந்திரமாக உருவாக்கிக் கொண்டுள்ளதைச் சித்திரித்துள்ளார்!
கந்தசாமிப் பிள்ளை, நடுத்தர வர்க்கப் பிரதிநிதி; இவரே ஒருவகையில் சமுதாயத்தில் ‘அமுக்கப்பட்டவர்’தான்! ஆனால் இவர் தனக்குக் கீழே இன்னொரு பிரிவாரை அமுக்க எத்தனிக்கிறார்! ரிக்ஷாக்காரனோடு இவரின் புழக்கம் இதைக் கூறுகிறது! எதையுமே விளங்கிக் கொள்ளாமல் ஒருபகுதி மக்கள் இருப்பதற்குப் பிரதிநிதிதான் பிள்ளையின் மனைவி!
இப்படியாகச் சமுதாயத்தின்பால் தனக்கு இருக்கும் சினத்தைக் கொட்டியுள்ளார் புதுமைப் பித்தன்; ஆனால் தேவையான வேகத்தில், தேவையான வெப்பத்தில் கொட்டவில்லை! இதற்கு முதற் காரணம் சிறுகதை என்ற வடிவம்தான்; சிறுகதைக்கான சுவை குறையாமல் எழுதவேண்டுமே! இரண்டாவது காரணம் கதையை வெளியிட்ட ‘கலைமகள்’ இதழ்.
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram and Rajana3480 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக