புதிய பதிவுகள்
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Today at 10:29 pm

» எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?
by சிவா Today at 10:26 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 10:22 pm

» வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
by சிவா Today at 10:13 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 10:01 pm

» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by சிவா Today at 9:53 pm

» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Today at 9:47 pm

» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Today at 9:18 pm

» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Today at 6:47 pm

» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:59 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
106 Posts - 57%
T.N.Balasubramanian
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
31 Posts - 17%
heezulia
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
22 Posts - 12%
Dr.S.Soundarapandian
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
திருமதி.திவாகரன்
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
M. Priya
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Balaurushya
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
rockdeen
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
72 Posts - 60%
T.N.Balasubramanian
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
19 Posts - 16%
heezulia
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
12 Posts - 10%
Dr.S.Soundarapandian
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
4 Posts - 3%
திருமதி.திவாகரன்
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
shivi
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
rockdeen
நபி மருத்துவம் Poll_c10நபி மருத்துவம் Poll_m10நபி மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நபி மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90034
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2023 7:59 pm

நபி மருத்துவம் திராட்சை


திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி பெருமானார் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா (ரலி) கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.

உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.

சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது. (அபூநயீம்)

உங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.

எங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா? என்று நபி பெருமானிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி (ரலி) என்பவர் கேட்டார். …குடிக்க வேண்டாம்† என்று அதற்கு பதில் கிடைத்தது.

திராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத்திர்மிதீ)

சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்ப தில்லை. (அபூநவீம் பதஹுல் கபீர்)

திராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி நாயகம் தெளிவாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம். 100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.

இந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.

திராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.





நபி மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90034
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2023 8:01 pm

நபி மருத்துவம் - ஜவ்வரிசி


இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.

பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் "தல்வீணா" என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை "தல்வீனா" கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம்.

சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க "தல்வீனா" கஞ்சியைக் குடிக்க பெருமானார் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். முகத்தைத் தண்ணீரால் கழுவினால் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல் "தல்வீனா கஞ்சி" வயிற்றைச் சுத்தம் செய்கிறது என்று பெருமானார் கூறியதை ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

போர்க்காலத்தில் அரபு ராணுவ வீரர்கள் பார்லியையும், பேரீச்சம்பழங்களையும் உடன் கொண்டு செல்வார்கள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஊட்டச் சத்தும், புத்துணர்வும் கிடைக்கின்றது என்று அரேபியர்கள் கூறுகின்றனர்.

ஒரு பங்கு பார்லி, ஐந்து பங்கு தண்ணீர் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து அது கால் பாகமாகச் சுண்டிய பின் பயன்படுத்தலாம் என்று இப்னு கய்யூம் (ரஹ்) கூறியிருக்கிறார்.

சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதை ஜாதுல்மாத் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இறைவே தங்களான தவாரத். இஞ்சீல் ஜபூர் ஆகியவைகளில் ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.



யுனானி மருத்துவம்


ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர்த்தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம். மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்





நபி மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90034
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2023 8:02 pm

நபி மருத்துவம் - வில்வம்


நபிநாயகம் அவர்கள் வில்வப் பழத்தைப் பல இடங்களில் சிறந்த மருந்து என்று கூறியிருக்கின்றார்கள்.

வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.

வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.

இறைவன் அனைத்து நபிமார்களையும் வில்வப்பழத்தை சாப்பிட வைத்துள்ளான். ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும். பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும் என்று ஜாமிஃகபீரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,சுருள்களை அவிழ்க்கவும் வில்வப்பழம் பயன்தரும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.

மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.

கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.

அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.

கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம். அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம்.





நபி மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 90034
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 16, 2023 8:03 pm

நபிமருத்துவம் வெந்தயம்


வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்;; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.





நபி மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8438
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 17, 2023 1:00 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1284
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Jan 19, 2023 9:07 pm

நபிகள் சொன்னவை, பயன்தரும் உடல்நலக் குறிப்புகள்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக