சென்னை சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.. 
ரத்த மாதிரிகள் சொல்வது என்ன? 
கூடவே பரவும் டெங்கு.. உஷார்! 
 சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். சென்னையில் கடந்த ஒரு மாதமாக ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ப்ளூவால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இது எந்த வகையான ப்ளூ என்பதையும் கண்டறிய முடியவில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். 
 ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த அறிகுறிகள் 3 நாட்களுக்கு இருக்கின்றன. 
 காய்ச்சல் 
எனவே காய்ச்சல் என வருவோருக்கு நாங்கள் அவர்களது ரத்த மாதிரி, சளி மாதிரியை எடுத்து மருத்துவ ஆய்வுக்குள்படுத்தியதில் இன்ப்ளூயன்ஸா ஏ, எச்1என்1 வைரஸ் இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவருகிறது. கொரோனா அறிகுறிகள் போல் இருப்பதால் கொரோனா சோதனையும் செய்கிறார்கள். கொரோனா ஆனால் அந்த சோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என வருகிறது. அது போல் ப்ளூ நெகட்டிவ் என வருகிறது. மருத்துவமனைக்கு காய்ச்சலால் வரும் நபர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட பரிசோதனை செய்யப்படுகின்றன. வயதானவர்களாக இருந்தால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். காய்ச்சல் பாதித்தோர் இந்த காய்ச்சல் பாதித்தோர் விரைந்து குணமடைகிறார்கள். ஆனால் தீவிரம் ஏதும் இல்லை. என்ன ஒன்று தற்போது டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொதுவாக சீதோஷ்ணம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது இது போன்ற ப்ளூ காய்ச்சல்கள் வருவது இயற்கைதான் என்கிறார்கள். பீதி வேண்டாம் 
 தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் இந்த காய்ச்சல் வந்துள்ளது. கோடைக்காலத்தில் நீரால் ஏற்படும் நோய்கள், உணவினால் ஏற்படும் நோய்கள் வரும். இந்த காய்ச்சலால் மக்கள் பீதியடைய வேண்டாம். காய்ச்சல் ஒரு நாளுக்கு மேல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தாலோ அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். எனவே காய்ச்சல் ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து கொள்வது பிறருக்கு காற்று மூலம் பரவாமல் தடுக்கப்படும். மேலும் இந்த ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் விருப்பப்பட்டால் செலுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.