புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
26 Posts - 39%
prajai
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

manikavi
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_m10நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Sat Feb 04, 2023 4:38 pm

நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்

நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Buuvod10
நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு Uthaya10

”தொன்மத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு ஒன்றிலிருந்து மற்றது வருவது என்ற நிலையில் மட்டுமல்ல. இந்த உறவு இலக்கியங்களில் கட்டுக்கோப்பு சம்பந்தப்பட்டது. மூலப் படிவங்கள், படிமங்கள் சம்பந்தப்பட்டவை மட்டுமல்ல. இலக்கிய வகைகள் சம்பந்தப்பட்டவையும் ஆகும்” என்பார்
நார்த்ராப் ப்ரை (Northrop Frye)

பரந்து விரிந்த நிலையில், இலக்கியக்கூறுகளும் வடிவங்களும் மாறுபட்ட வளர்ச்சியினைக் கொண்டிருக்கிறது எனினும், அதன் உள்ளீடுகள் துன்பத்தின் கூறுகளாகவே அமைந்திருக்க வாய்ப்புண்டு. மானுட சமூகத்தின் கற்பனை ஓட்டத்தின் முடிவும், தொடக்கமும் தொல்மூலப்படிவங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் என்பதே உளவியல் வெளிப்பாடாகும்.

முதன் முதலாக எழுந்த நாட்டுப்புற இலக்கியங்களே, இன்றைய பல்வேறு இலக்கிய வடிவங்களின் ஆதி வடிவமாக இருந்திருக்க முடியும். சிந்திக்கவும், எண்ணத்தைப் பரிமாறவும், விளைந்த மகிழ்ச்சியும் ஏற்படுத்திய உளக்கூறுகள் தான் எக்காலமாயினும் வெளிப்படும். அதனடிப்படையில், நாட்டுபுற இலக்கியத்தின் சாயல், இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட்டு நிற்கும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில், நாட்டுப்புற இலக்கியங்கள், பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. மற்றொருபுறத்தில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் களஆய்வில் பெறப்பட்டு மாபெரும் பதிவுகளைப் பெற்றிருக்கின்றன. கலைஞர்கள் ஒருபுறம் மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இக்காலத்திலும் நிறைந்து கிடக்கின்றன.

’நாட்டுப்புறப்பாடல்கள்’ எனும் வகையில், உலக அளவில் 1831 ஆம் முதல் சேகரிக்கப்பட்டுள்ளன. 1871 இல் சார்லஸ் இ கோவர் (Charles E. Gover) எனும் ஆங்கிலேயர் “FOLK SONGS OF SOUTH INDIA” எனும் தலைப்பில், தாம் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களை வெளியிட்டார். இந்நூலில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இப்பாடல்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அறிஞர்கள் பல நூறு தொகுப்புகளைத் தமிழில் கொண்டு வந்தனர். தமிழகம் முழுவதுமான சேகரிப்புக்களாக நாட்டுப்புற பாடல்கள் இருந்தன.

நா.வானமாமலை, கி.வ.ஜ. க.கிருஷ்ணசாமி, ஆறு, இராமநாதன், செ.அன்னகாமு, தமிழண்ணல், சு.சண்முகசுந்தரம், த.கனகசபை, சா.சவரிமுத்து போன்றோரின் கடும் உழைப்பால் நாட்டுப்புற இலக்கியங்கள் பெருமளவு பாதுகாக்கப்பட்டு தொகுப்புகளாக நூல் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழில் பெருமளவு கிடைப்பதற்கு மேற்கண்ட அறிஞர்கள் காரணமாவார்கள்.

நாட்டுப்புறவியல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் சு.சக்திவேல் ஆவார். இவருக்குப் பின், தொகுத்த நூல்படைப்புகளை ஆய்வு செய்து அவைகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதார நிலைகள் எவ்வாறு பாடல்களில் ஊடுருவியுள்ளன. கற்பனை நயம் மிக்கதான முன்மாதிரிகள் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற பல நூறு நாட்டுப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

இவற்றின் பாதையில் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாறு நாட்டுப்புற இலக்கியங்களையும் கவனித்து தன்னில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் தனித்தனியாகப் பாடிய பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் பழக்கத்தில், மாறுபாடாகத் தொகுப்பு முழுவதும் தாமே இயற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கம் செய்வதும், 21- ஆம் நூற்றாண்டில் தொடங்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க வாழ் தமிழரான, பன்முகத் திறமை வாய்ந்த தாழை இரா உதயநேசன் அவர்கள் எழுதிய ”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” எனும் அரியதொரு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதில் உள்ள அனைத்துப் பாடல்களும் இவரே எழுதியது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், மண்மனம் மாறாது, பண்பாடு மாறாது, கலாச்சாரம் மாறாது, உணர்வுகள் மாறாது இத்தொகுப்புப் பாடல்களை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பாடலும், தனித்தனியாக இசையமைத்துப் பாடி, இசைத்தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தொகுப்பாக இது வந்துள்ளது.

நவீன புத்தகக் கட்டமைப்பில், பழம்பெறும் உணர்வுகளைப் பேசும் அற்புதமான பாடல்களின் தொகுப்பே இந்நூலாகும். கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான வாழ்வை வாழும் கிராமத்தாரின் வாழ்வியல் கட்டமைப்பை அப்படியே நூலின் முகப்பு ஓவியமாக வரைந்து, அதில் நவீனத்துவ அச்சுப்பதிப்பை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார் தாழை இரா. உதயநேசன்.

பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள இருபாடல்கள் ”சாமக்கோழி கூவிடுச்சு” ”மாமன் மக” எனும் இரு இசை ஆல்பமாகத் தற்பொழுது வெளிவந்துள்ளன என்பது ஒரு சிறப்பாகும். இது போன்று இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும், தனி இசை ஆல்பமாக வெளி வந்தால் தமிழிசை இன்னும் பெருமைக்குரியதாக மாறும்.

மனதை அப்படியே நாட்டுப்புற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்லும் பாடல் வரிகளைக் கொண்டுள்ளது இந்த இரண்டு இசை ஆல்பங்களும். தனித்துவமிக்க ரசனையும். மேலான அன்பும், காதலும், இவ்விரு பாடல்களிலும் மிகுந்திருக்கின்றன.

”பூவோடு பேசும் பூஞ்சிட்டு” நூலில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், படிப்போரின் உள்ளத்தைக் கரைத்துத் துள்ளிக் குதித்துக் கிராமத்துச் சாயலை நம்க்குள் ஊட்டித் தன்னிலை மறக்கச் செய்கின்றது என்று கூறினால் அது தவறாகாது. படிப்பவர்கள் யாரும் இந்த உணர்விலிருந்து மாற முடியாது என்பதும் தவறாகாது. இலக்கியத்தின் பாதிப்பு இல்லாதவர்கள் ரசனை உடையவர்களாக இருக்க முடியாது.

இப்பாடல்களில், காதல் பாடல்கள் அதிகமாக உள்ளன. அதில் தலைவன் கூற்றாக அமையும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. திருமணத்திற்கு முந்தைய காதல் எதிர்பார்ப்பும், உற்சாக மனநிலையும், அழகை மெச்சும் ரசனையும், உண்மை மனப்போக்கை வெளிப்படுத்தும் வெளிப்பாடும், ஆங்காங்கு கொட்டிக் கிடக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத காதல் ரசம் இழையோடுகின்றன. குறிப்பாக இந்நூலில் காணலாகும் நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் அவை யாவன:

1.காதல்
2.அம்மா
3.விவசாயி
4 கிராம அழகு
5. சமூகப் பிரச்சனை
என்பதாகும். இதில் சமூகப் பிரச்சனையில் பெண்ணுரிமை குறித்த பாடலான ’வளையல் குலுங்கக் கும்மியடி’ எனும் பாடல் மிகச் சிறப்பான பாடல் ஆகும். வெறும் வெற்று வார்த்தைகளாக அமைந்து விடாமல், எதிர்காலச் சிந்தனை, சமூகத்தீர்வுகள், காலமாற்றம், மகிழ்ச்சி இவைகளோடு கூடியவைகளாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

ஆத்தோர ஆலமரம், நுங்கு வண்டி, ஊர்த் திருவிழா, தென்னை மரம், காய்கறிக்காரம்மா போன்ற காட்சிகளின் வெளிப்பாடுகள் கிராம அழகைப் போற்றிப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளன. நவீன உலகச் சாயல் மற்றும் உவமை எண்ணப்போக்கு போன்றவை எங்கும் பயன்படுத்த ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கிராமத்து வார்த்தைகளான வெசனப்பட்டு, மொறச்சு, சீர்செனத்தி, வெரசா என்பன போன்ற வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய மரபில் முழுத்தொகுப்பும் அமைந்துள்ளன. இதனைத் தனிப்பெரும் ஆய்வாக ஆய்வு செய்யலாம். சமூகப் பிரச்சனைகள் இல்லாத நாடாக நம் நாடு இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் பெரும் கனவாக இருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது. அதனை,

”மேல் ஜாதி கீழ் ஜாதி
கல்யாணம் செஞ்சுப்புட்டா
ஆத்திரம் பெருகுது
ஆணவக் கொலை நடக்குது”

எனும் இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

காதலியைப் பல்வேறு உவமைகளால் உருவகங்களால் காதலன் அழைக்கின்றான். அவை சொல்ல வரும் செய்திகளுக்கு மிகப் பொருத்தமானவைகளாக அமைந்திருக்கின்றன. அவ்வாறு எழுதும் வார்த்தைகளை மட்டும் தனியே எடுத்து அவை பொருந்துமாற்றைத் தனித்த பெரும் ஆய்வாக ஆய்வு செய்யும் அளவு பொருத்தமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன. அவைகளில், தங்கரதமே, செந்தேனே, அன்னக்கொடியே, பொன்மானே, பூவிழியே, ஆவாரம்பூவே, கண்மணியே, தும்பை பூச் சித்திரமே, செங்காட்டு முந்திரியே, கோவைப்பழ உதட்டழகி, கொய்யாப்பழ நிறத்தழகி, தோகை மயிலு நடனக்காரி, செவ்வாழை சிரிப்புக்காரி, வஞ்சரம் மீனு கண்ணுக்காரி என்பன சிலவாம்.

தேர், ரத்தினம், மரிக்கொழுந்து, கொலுசு, நதி, அலை போன்ற சொல்லாடல்கள், பாடல் தொகுதி முழுவதும் மிகுதியாகக் கையாளப்பட்டுள்ளன. இவை தாழை இரா.உதயநேசன் அவர்களின் மந்திரச்சொற்களாக இனம் காணலாம். காதலர்களுக்குள் அடங்காத அன்பு இருப்பதை,

”நெஞ்சுக்குள்ள உன்னத் தானே
நெனைப்பாக வச்சேண்டி

உன் மேல தூசி பட்டா
கருவாடா காயி ரேண்டி”

சிரிப்புல சிக்கி தான்
செலந்தியா தவிக்கிறேன்டி

கட்டிவச்ச மல்லி யாட்டம்
வஞ்சிக்கொடி வாழுறேனே

உதட்டோரச் சிரிப்பால
பச்ச குத்திப் பாக்குறியே

என ஆசிரியர் பாடல்புனைந்துள்ளார். புனைவுகள் எதார்த்த புனைவுகளாக அழகூட்டி நிற்கின்றன.

“’சொல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்குரை” ( குறள்-1151)

எனும் திருக்குறளுக்கு ஒப்ப காதலி காதலனைப் பார்த்து,

”ஆச மச்சானே
ஏங்க வைக்காத
ஒத்தையில தவிக்க விட்டு \
வேடிக்க பார்க்காத”

என்னும் பாடல் வரிகள் காதலின் வலியை உணர வைக்கின்றன. இதே போன்ற வேதனையை அனுபவிக்கும் காதலி,

”அத்தமக பூத்திருக்கேன்
ஆத்தோரம் காத்திருக்கேன்
சேத்துக்குள்ள மீனாட்டம்
செவ்வந்தி துடிக்கிறேனே

வெளக்க அணைச்சுப்புட்டு
விடல புள்ள உறங்கினாலும்
வளச்சுப் புடிச்சுகிட்டு
வெரலால வருடுறியே”

என்று தன்னுடன் இல்லாத தலைவனின் இல்லாமையால் தான் படும் வேதனையை அப்படியே ஆசிரியர் வார்த்தைகளால் வடித்துள்ளார்.

தனித்த நிலையில் ஒவ்வொரு பாடலும், சங்க இலக்கியப் பாடல்களின் தன்மையைப் பெற்றுள்ளன என்னும் வகையில் தனித்த ஆய்வு செய்யும் அளவு சிறந்த கட்டமைப்பை இத்தொகுப்பின் பாடல்கள் ஒவ்வொன்றும் பெற்றிருக்கின்றன.

இலக்கிய வரலாற்றில் தனித்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடித் தொகுத்த நூல்களில் முதலாவதாக இந்நூல் எண்ணப்படவும் பதிவு செய்யப்படவும் வேண்டும். பாடல்கள் அனைத்தும் தனித்த தமிழிசை ஆல்பமாகவும் வெளிவந்து தமிழிசைக்குப் பெரும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.

நூல் பெயர்: பூவோடு பேசும் பூஞ்சிட்டு
ஆசிரியர்: தாழை இரா உதயநேசன்
வெளியீடு: கலை உதயம் பதிப்பகம்,
10- முதல் தெரு, ஸ்ரீ ராமாபுரம்
ஆம்பூர் -635820
நூலின் விலை :150
நூலின் பக்கங்கள் :ரூபாய் 148

நன்றி புக் டே

கட்டுரை: பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேக்ரன்)
தமிழ்ப்பேராசிரியர்
திருநின்றவூர்

சிவா and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 4:45 pm

பூவோடு பேசும் பூஞ்சிட்டு - புத்தகத்தின் தலைப்பு கூட கவிதையாகத்தான் உள்ளது. பாடல்களும் அற்புதமாக உள்ளது.

சிறந்த புத்தக பரிந்துரைக்கு நன்றி.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

தங்களின் வாழ்த்துக்களால் பெருமை அடைகிறேன். தங்களைப் போல் நிறைய எழுத விரும்புகிறேன்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக