புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 4:59 pm


கண்களுக்குள் ஒரு திரவம் இருக்கிறது. அதன் பெயர் அக்வஸ் ஹியூமர். அந்த திரவமானது கண்ணுக்குள் ஒரு சுற்று வந்து கண்ணிலிருந்து வெளியேறி விடும். அப்படி வெளியே போகும் இடம் தான் ஆங்கிள். அது எப்போதுமே திறந்த நிலையில் இருக்கும். சிலருக்கு குறுகலாக இருக்கும் அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கும். அப்போது அக்வஸ் ஹியூமர் திரவம் வெளியேறாமல் கண்ணிலேயே தேங்கி விடும். அப்படியானால் கண்ணுக்கு அழுத்தம் ஏற்படும். அது கண்ணில் உள்ள நரம்புகளைப் பாதுகாக்கும். நரம்புகள் பாதிக்கப்பட்டால் அந்த கண்ணில் பார்வை திறன் குறைபாடு வரும்.

இது நேரடியாகப் பார்ப்பவற்றை தெளிவாகக் காண்பிக்கும். பக்கவாட்டில் உள்ளவற்றை மங்கலாகக் காண்பிக்கும். நாட்கள் ஆக ஆக பக்கவாட்டில் தெளிவாகத் தெரியும் பிம்பத்தின் அளவு குறைந்து கொண்டே வந்து பார்வை ஒரு குறிப்பிட்ட சுருங்கிய கோணத்தில் குறுகலாக மட்டுமே தெரியும். இதன் பெயர் டனல் விஷன், டியூபிலர் விசன்.

இது பரம்பரையாக வரக்கூடிய கண் பிரச்சனையாகும். பெற்றோருக்கு இப்படியான பிரச்சனையிருந்தால் பிள்ளைகள் கண்டிப்பாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண்ணின் விழித்திரை, கண்ணின் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்து பக்கப்பார்வை எவ்வாறு உள்ளது, கண் நீர் அழுத்த நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும். ஸ்டிராய்டு சம்பந்தப்பட்ட மாத்திரைகள், ஸ்பிரே, லோசன் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வதால் கண் நீர் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது.

- டாக்டர் கல்பனா சுரேஷ் @ நக்கீரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:00 pm

விழித்திரை விலகல் என்றால் என்ன?


ரெட்டினா என்கிற விழித்திரை கண்ணுக்குள் இருக்கிற ஒரு லேயர். அதன் வழியாகத்தான் ஒளியானது கண்ணுக்குள் சென்று அங்கிருந்து நரம்புகளுக்கு சென்று மூளைக்கு செல்கிறது அதன் வழியாகத்தான் நாம் அந்த ஒளியைப் பார்க்கிறோம். கண்ணுக்குள் பத்து வகையான லேயர் உள்ளது. அது சில சமயம் விலகல் தன்மை அடையும். கண்ணின் பவரானது மைனசில் இருப்பவர்களுக்கு விழித்திரையானது மெலிந்து இருக்கும். அதனால் விழித்திரையில் ஓட்டை ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த லேயர்களெல்லாம் பிரிய வாய்ப்பு ஏற்படும்.

உடலில் இரத்த அழுத்தம் அதிகமானால் அது விழித்திரையை பாதிக்கும். கண்களுக்குள்ளேயே கேன்சர் கட்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் விழித்திரை பாதிக்கும். கண்ணில் அடிபட்டால் கண்ணில் விழித்திரை விலகும். கண்ணின் மையப்பகுதியில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பார்வை போய் விடும். அதைத் தவிர்க்க அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய முடியும். விழித்திரை விலகல் என்பது இவ்வகையான காரணங்களால் ஏற்படுவது தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:00 pm

பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி போட பிடிக்கவில்லை என்றால் வேறு என்ன சிகிச்சை செய்யலாம்?



கண்ணாடி போடப் பிடிக்கவில்லை என்றால் வேறு வழியிலான தீர்வு முறைகள் எல்லாம் உள்ளது. கான்டாக்ட் லென்ஸ். அதை கருவிழி மேல் ஒட்டுவது. அது நிரந்தமாக ஒட்டிக் கொள்வது இல்லை. தினமும் போட்டுக் கொள்ளலாம். சுத்தம் செய்யலாம், பிறகு போட்டுக் கொள்ளலாம். எட்டு மணி நேரம் வரை கண்களில் வைத்துக் கொள்ளலாம். அது கண்ணாடி போட விரும்பாதவர்களுக்கு மட்டும்.

இளம் வயதினராக இருந்தால் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அது நிரந்தரமானது. ஆனால், கண்ணாடியே போட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடாது என்பதை உறுதியாக மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஏனெனில் நாற்பது வயதிற்கு மேல் கிட்டப்பார்வை குறையும். அது அனைவருக்கும் முதுமையினால் வரக்கூடியதே. அதற்கு முன்னால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டால் இளம் வயதில் லேசர் சிகிச்சை செய்து சரி செய்யலாம்.

கண்ணாடியே போடமாட்டேன் என்று அடம்பிடித்தால் கண் மிகவும் கடினமாக பாதிக்கப்படும். தலைவலி, கண் கட்டி ஏற்படும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு தூரத்தில் வருகிற வாகனங்கள் தெரியாமல் போகும். டிவி பார்க்கும் போது தெளிவாக தெரியாது. திரையரங்குகளில் படம் தெரியாது.

டிஜிட்டல் திரைகளில் கவனம் செலுத்தி அதிக நேரம் வேலை செய்பவர்கள் கண்ணாடி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் லேசர் சிகிச்சையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி போடாமல் இருப்பது எந்த விதத்திலும் பயன் தராது. கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:01 pm

கண்களில் தாய்ப்பாலை ஊற்றக்கூடாது; ஏன்?



கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ; உறுத்தல் ஏற்பட்டாலோ உடனடியான முதல் உதவி மருத்துவமாக தாய்ப்பாலை கண்களுக்குள் விடுவது; மூலிகை இலை என எதையாவது நசுக்கி அதன் சாற்றை கண்களில் ஊத்துவது மற்றும் எண்ணெய் விடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள். அதை தவிர்த்தே ஆக வேண்டும். ஏனெனில் அவற்றில் என்ன மாதிரியான சத்துகள் உள்ளது என்பதையும் பலவிதமான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் இருக்கலாம் அவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் செய்யக் கூடாது. அது நன்மை தராது.

குறிப்பாக தாய்ப்பால் இனிப்பு சுவை மிகுந்தது; இனிப்பு என்பது வளர்வதற்கு உதவி செய்யும் தன்மை கொண்டது. கண்ணில் உள்ள பாக்டீரியா, வைரஸ்களை வளரச் செய்யும். இதனால் கண் செப்டிக்காகி சீழ் பிடித்து கண் பார்வையே பறிபோகும் தன்மை உடையது. கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தையும் பாதிக்கும். பாதிக்கப்பட்ட பிறகு ஒரே தீர்வாக கண்ணையே மாற்றியாக வேண்டிய சூழல் ஏற்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:01 pm

சோம்பேறி கண் என்ன பிரச்சனையை உருவாக்கும்?



கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அதை சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதில் குறிப்பாகச் சோம்பேறி கண் என்றால் என்ன? அதற்கான மருத்துவம் என்ன என்பதைக் கேட்டோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

சோம்பேறி கண் என்பது இரண்டு கண்களில் ஒரு கண்ணில் நூறு சதவீதம் பார்வை நன்றாக இருக்கும். மற்றொரு கண்ணில் பார்க்கும் திறன் குறைபாடு ஏற்படும். இதன் பெயர்தான் சோம்பேறி கண் எனப்படும். இது குழந்தைகளுக்கு ஏற்படுகிற பிரச்சனை. இதை அவர்களால் சொல்லக்கூடத் தெரியாது. பெரியவர்கள் தான் கண் மருத்துவரிடம் காண்பித்துப் பரிசோதித்து கண்ணாடி அணிய வேண்டும்.

கண்களைத் திறந்து பார்க்கும்போது இரண்டு கண்களையும் தான் திறந்து பார்ப்போம். ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க மாட்டோம். குழந்தைகளுக்கு அப்படிப் பரிசோதித்தும் பார்க்கக் கூட தெரியாது. அப்படி இரண்டு கண்களில் ஒரு கண் வழியாக மட்டுமே பார்ப்பதால் நமக்கு அந்த ஒரு கண் மட்டும் அதிகம் வேலை செய்யும்; மற்றொரு கண் வேலை குறைந்து மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும்.

தொடர்ச்சியாக இப்படி ஒரு கண் மட்டுமே தெளிவாகத் தெரிவதால் மங்கலாகத் தெரிய வருகிற மற்றொரு கண்ணால் பார்க்கப்படுகிற பிம்பங்களை நமது மூளை எடுத்துக் கொள்ளாது. அப்படியாக மாறி விடுகிற கண்ணைத் தான் மருத்துவத்தில் சோம்பேறி கண் என்கிறார்கள்.

இதை சரி செய்ய கண் மருத்துவரை அணுகி குறைபாடு ஏற்பட்டுள்ள கண்களுக்குத் தகுந்த பவர் உள்ள கண்ணாடியை பரிந்துரைப்பார்கள். அதை வாங்கி பயன்படுத்தும் போது மங்கலாகத் தெரிகிற பிம்பங்கள் அதற்கப்புறம் தெளிவு பெறும்; அதை நமது மூளை ஏற்றுக் கொள்ளும். கண்ணாடி தான் இதற்கு ஒரே தீர்வு. கண்ணாடி வேண்டாம் என்றால் லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:04 pm

சிறுவர்களை பள்ளியில் சேர்க்கும்போது கண்களை பரிசோதிக்க வேண்டும்; ஏன்?



சின்ன குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது கண்களை பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு கண் குறைபாட்டை சொல்லத் தெரியாது. பெற்றோர்கள் கண் மருத்துவர்களை அணுகி பரிசோதித்து குறைபாடு ஏதாவது இருந்தால் ஆரம்பத்திலேயே கண்ணாடி அணிவித்து கண் வளர்ச்சி தன்மையை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்திலேயே பரிசோதிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் ஒரு கண்ணில் குறைபாடு இருந்தாலும் கூட அது ‘சோம்பேறி கண்’ என்ற நிலையை அடையும். ஃபோனை அதிகம் பயன்படுத்த விடாதீர்கள். அதனால் கண்களில் கட்டியெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வகை கட்டிகள் சூட்டுக் கட்டிகள் ஆகும். 18 வயது வரை அதிகம் ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பிறகு கண் வளர்ச்சித் தன்மை நிலைபெற்றுவிடும்.

டாக்டர் கல்பனா சுரேஷ் @ நக்கீரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 5:08 pm

கண்புரை அறுவை சிகிச்சை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது



50 வயதிற்கு மேல் உள்ளவர்கள், கண்புரை எனப்படும் கண் நோயை உருவாக்கி இருப்பதாக மருத்துவரிடம் இருந்து கேட்க வாய்ப்புகள் அதிகம். இந்த கண் நிலையின் கீழ், கண்களுக்குள் உள்ள லென்ஸ் மேகமூட்டமாக இருக்கும், மேலும் நோயாளி கண்கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது லேசிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாத பார்வை மங்கலை அனுபவிக்கிறார்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு சிறந்த வேட்பாளர் யார்?



கண்புரை இருப்பது எப்போதும் உங்கள் பார்வையை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை தேவை என்று அர்த்தமல்ல. கண்புரை நோயால் கண்டறியப்பட்ட பல நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடி அல்லது உருப்பெருக்கி லென்ஸைப் பயன்படுத்தி பொருட்களை தெளிவாகப் பார்க்கிறார்கள்.

உங்கள் மருத்துவரின் சந்திப்பை தாமதப்படுத்தினால், காலப்போக்கில் கண்புரை அதிகரிக்கிறது. கண்ணை கூசும், ஒளி உணர்திறன், நிறங்களின் மந்தமான தன்மை, விளக்குகளைச் சுற்றியுள்ள ஒளிவட்டம், மங்கல், பொருட்களைச் சுற்றியுள்ள நிழல் போன்ற பிற பார்வை சிக்கல்களை நீங்கள் தொலைவில் அல்லது அருகில் உள்ள பொருட்களைப் பார்க்க ஆரம்பிக்கலாம். நீங்கள் படிக்க, எழுத அல்லது கணினி முன் வேலை செய்வதில் சிரமத்தை அனுபவிக்கலாம்.

இந்த கட்டத்தில், நீங்கள் இன்னும் அறிகுறிகளைப் புறக்கணித்தால், கண்புரை மோசமடையக்கூடும், மேலும் நீங்கள் கண்புரையின் மேம்பட்ட வடிவத்தை உருவாக்குவீர்கள். அதைத் தொடர்ந்து வரும் மோசமான பார்வை, இரவில் வாகனம் ஓட்டுவது அல்லது உங்கள் லேப்டாப் அல்லது மொபைல் திரையில் வேலை செய்வது போன்ற உங்கள் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதையும் கடினமாக்கும்.

இந்த கட்டத்தில், கண்புரை அறுவை சிகிச்சை மட்டுமே உங்கள் பார்வையை சரிசெய்வதற்கான ஒரே வழி. மருத்துவமனையில் உள்ள எங்கள் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் விரிவான கண் பரிசோதனை மூலம் உங்கள் கண்ணின் ஆரோக்கியத்தை பரிசோதித்து மதிப்பீடு செய்வார். கண்புரை தீவிரமடைந்து, அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துவது உங்கள் கண்களில் அல்லது உங்கள் வாழ்க்கைத் தரத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தினால் மட்டுமே கண்புரை கண் நிபுணர் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பார்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு நான் எவ்வாறு தயாராக வேண்டும்?


நீங்கள் எங்கள் கண் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் கண்ணின் வடிவம் மற்றும் அளவை அளவிட எங்கள் மருத்துவர் சில சோதனைகளை நடத்துவார். இந்த சோதனைகள் அறுவை சிகிச்சைக்கு சிறந்த செயற்கை லென்ஸை தேர்வு செய்ய கண் நிபுணருக்கு உதவுகின்றன. உங்களை தயார்படுத்த சில குறிப்புகள் எங்கள் நிபுணரால் பகிரப்படும் கண்புரை அறுவை சிகிச்சை. அறுவைசிகிச்சைக்கு குறைந்தது 3-4 மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்.

கண்புரை அறுவை சிகிச்சையின் போது என்ன எதிர்பார்க்க வேண்டும்?



வலியற்ற அனுபவத்திற்கு, உங்கள் மருத்துவர் உங்கள் கண்களுக்கு மரத்துப்போன கண் சொட்டுகளைப் பயன்படுத்துவார். ஆனால் செயல்முறை முழுவதும் நீங்கள் விழித்திருப்பீர்கள். நீங்கள் ஓய்வெடுக்க உதவுவதற்கு மட்டுமே உணர்ச்சியற்ற முகவர் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அறுவை சிகிச்சைக்கு தயாரானதும், கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் கார்னியாவின் (உங்கள் கண்ணின் முன் வெளிப்படையான பகுதி) பக்கத்தில் ஒரு சிறிய வெட்டு செய்வார். இந்த படிநிலையைச் செய்ய லேசர் பயன்படுத்தப்படலாம்.

கண்புரையை குழம்பாக்கி மெதுவாக உறிஞ்சுவதற்கு இந்த கீறல் வழியாக ஒரு சிறிய கருவி அனுப்பப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மடிக்கக்கூடிய லென்ஸை (பிளாஸ்டிக், சிலிகான் அல்லது அக்ரிலிக்) கண்ணின் உள்ளே வைப்பது அடுத்த படியாகும். நான்
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவீர்கள். நீங்கள் மருத்துவமனைக்கு வரும்போது, உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒருவர் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கண்புரை அறுவை சிகிச்சையால் ஏதேனும் ஆபத்து உள்ளதா?


மற்ற அறுவை சிகிச்சையைப் போலவே, கண்புரை அறுவை சிகிச்சையும் சில அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, உங்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு சிறந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். தொடர்புடைய சில அரிதான ஆனால் சாத்தியமான அபாயங்கள் கண்புரை அறுவை சிகிச்சை சேர்க்கிறது:

வீக்கம்

கண் தொற்று

இரத்தப்போக்கு

ரெடீனா தனியாக வந்து விடுவது

தொங்கும் இமை

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 12-24 மணி நேரம் நீடிக்கும் கண் மீது கடுமையான அழுத்தம்

கண் நிலைகள், கண் சிகிச்சைகள் மற்றும் கண் தொடர்பான கவலைகள் பற்றி மேலும் அறிய, எங்களுடைய நன்கு செயல்பட்டவர்களிடம் தயங்காமல் கேளுங்கள் கண் நிபுணர்கள். மேலும் விவரங்களுக்கு, நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் சந்திப்பைத் திட்டமிடலாம்.

டாக்டர் வந்தனா ஜெயின்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm

கண்ணான மருத்துவ தகவல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக