புதிய பதிவுகள்
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Today at 1:24 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am
» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm
» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm
» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm
» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm
» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm
by சிவா Today at 1:24 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am
» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm
» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm
» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm
» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm
» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
Page 1 of 1 •

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் எனும் இந்திய ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பிறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி.
அவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற பெயரில் எடுத்து வெளியிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், இந்த ஆண்டுக்கான திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இதில், ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு இந்தியாவின் "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" படம் ஆவணப்படமும் போட்டியிட்டது.
இந்நிலையில், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆஸ்கர் வென்று சாதனை படைத்துள்ளது.
முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்க விருதை பெற்றனர்.
குறிச்சொற்கள் #The_Elephant_Whisperers #தி_எலிபென்ட்_விஸ்பரர்ஸ் #பொம்மன் #பொம்மி #நீலகிரி_மாவட்டம் #முதுமலை #ஆவணப்படம் #ஆஸ்கார்_விருது |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“ஆஸ்கர் விருது கெடச்ச இந்த நேரத்துல கூட ரகு இல்லையே!” – நெகிழும் பொம்மன் பெள்ளி

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.
"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது பொம்மன் நெகிழ்ந்து கூறினார்.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுளது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.
யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.
ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.
ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றபோது பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோதும் பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது.
யானையுடன் சென்றுகொண்டே பொம்மன் நம்மிடம் பேசியபோது, “இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்,” என்று கூறினார்.

“இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஆஸ்கற் தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்துள்ளது.
அதுகுறித்துப் பேசியவர், “அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்கிறார் பொம்மன்.
ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்துப் பேசிய பொம்மன், “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆஸ்கர் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது,” என்றார்.
இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது விருது ஏற்புரையில், “இன்று நான் இங்கு நிற்கிறேன். நமக்கும் நமது இயற்கை உலகுக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும் மற்ற உயிரினங்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் பச்சாதாபத்திற்காகவும் இறுதியாக சகவாழ்வுக்காகவும் பேசுகிறேன்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் குணீத் மோங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய தயாரிப்புக்கான முதல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ். இதற்கு முன்பு 1969இல் வெளியான தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட், 1979இல் வெளியான ஆன் என்கவுன்டர் வித் ஃபேசஸ் ஆகிய இரண்டு படங்கள், சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்திய மக்கள் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.
“நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்,” என்று ஒரு பயனர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், “இந்த விருதை தனது தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணித்ததற்காக” இயக்குநரை பாராட்டியுள்ளார்.
குறிச்சொற்கள் #The_Elephant_Whisperers #தி_எலிபென்ட்_விஸ்பரர்ஸ் #பொம்மன் #பொம்மி #நீலகிரி_மாவட்டம் #முதுமலை #ஆவணப்படம் #ஆஸ்கார்_விருது |
பிபிசி தமிழ்
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34583
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள்
ஆனால் ஊடகங்களில் வந்த மாதிரி தெரிவதில்லை.ஒரு வேளை நாளைப்பதிவுகளில் வருமோ?




ஆனால் ஊடகங்களில் வந்த மாதிரி தெரிவதில்லை.ஒரு வேளை நாளைப்பதிவுகளில் வருமோ?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள்![]()
![]()
![]()
![]()
ஆனால் ஊடகங்களில் வந்த மாதிரி தெரிவதில்லை.ஒரு வேளை நாளைப்பதிவுகளில் வருமோ?
இந்த ஆவணப்படத்தில் கவர்ச்சியாக ஏதாவது இருந்திருந்தால் துள்ளிக் குதித்து தலைப்பு செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் இதில் வயதானவர்களும் யானைகளுமே உள்ளன. அதனால் அவர்கள் கவனத்தை இந்த ஆவணப்படம் ஈர்க்கவில்லை என நினைக்கிறேன்.
நெஞ்சைத் தொடும் கதை! கருத்தாழமிக்க படம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி
"தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி என்று பொம்மன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டுநாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், எதையும் எதிர்பார்க்காமல் கடமையே கண்ணாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த யானைகளின் குட்டிகளை வனத் துறையினருடன் சேர்ந்து தேடும் பணியில் பொம்மன் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தாயைப் பிரிந்து, உடலில் காயங்களுடன் வால் வெட்டுப்பட்டு, இறக்கும் நிலையில் இருந்த ஒரு குட்டி யானை காட்டுக்குள் மீட்கப்பட்டு காட்டுநாயக்கர் பழங்குடியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைக் காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என பலரும் நினைத்த நிலையில் என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி அந்த யானைக் குட்டியை பராமரிக்கத் தொடங்கினேன்.
அந்த யானைக் குட்டிக்கு "ரகு' என பெயர் சூட்டி எங்கள் குழந்தையைப்போலவே பராமரித்து வந்தோம். நான் சொன்னதுபோலவே அந்தக் குட்டியை இயல்பான உடல்நிலைக்குத் தேற்றினோம். அதன் பின்னர், ரகுவுக்குத் துணையாக "பொம்மி' என்ற பெண் குட்டி யானையைப் பராமரிக்க வனத் துறையினர் கொடுத்தனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த நானும் பெள்ளியும் 50 வயதைக் கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்தோம். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டோம். பொம்மன், பெள்ளி, ரகு, பொம்மி என நால்வரும் ஒரு குடும்பமாக மாறினோம்.
நாங்கள் யானைகளின் மீது கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்புதான் "தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்றதை உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். இத்தனை பெரிய வரவேற்பும், விருதும் எங்கள் கதைக்கு கிடைக்கும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை.
இயக்குநர் கார்த்திகியும், அவருடைய நண்பர்களும் முதுமலைக்கு அடிக்கடி வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்கத் தொடங்கிய காலத்தில் வந்தனர். அப்போதுதான் இந்த குட்டி யானையுடன் சேர்த்து உங்களை வைத்து ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவண குறும்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். 2 ஆண்டுகள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.
எங்களுக்கு ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், எங்களைப் பலரும் சந்தித்துப் பாராட்டி பேசும்போது புதிராக இருக்கிறது. இதற்காக இயக்குநர் கார்த்திகிக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
தற்போது குட்டி யானைகள் ரகு, பொம்மி ஆகியவற்றை வேறு பாகன்களின் பராமரிப்பில் வனத் துறையினர் விட்டுள்ளனர். அந்த குட்டிகளை நினைக்கும்போதெல்லாம் எங்கள் குழந்தைகளை இழந்ததுபோல வேதனை அடைகிறோம் என்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
’The Elephant Whisperers’ - திரைப்பட விமர்சனம்

இயக்குநர் கார்த்திக்கி கொன்செல்வேஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப் படம் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ . இந்தப் படத்தை நீங்கள் பார்த்து முடிப்பதற்குள், நம்மை இதமாக வருட வைக்க ஒரு தும்பிக்கை வராதா என்று தோன்ற வைக்கும். அப்படியான, உணர்வுகளைக் கடத்திவிடும்.
முதுமலையில் வாழந்துவரும் தம்பதியான பொம்மன் - பெல்லி இருவரும் முதுமலைக் காட்டுக்குள் தனித்துவிடப்படும் யானைக் குட்டிகளை வனத்துறை மூலமாக எடுத்து வளர்க்கிறார்கள். அப்படி, அவர்கள் எடுத்து வளர்க்கும் ரகு எனும் யானை, அதன்பிறகு வந்து சேரும் அம்மு எனும் யானை இரண்டையும் சுற்றியே மொத்த ஆவணப் படமும் நகர்கிறது.
யானை மீது அதீத காதலுடன் இருக்கும் தம்பதியின் வாழ்க்கை முறை, ஒரு யானையை வளர்த்துவிட்டு அதைப் பிரியும் போது ஏற்படும் சோகம் என லைஃப்ஸ்டைல் டாக்குமெண்ட்ரி பார்த்த உணர்வை இந்த ஆவணப் படம் கடத்தும். உண்மைக்கு நெருக்கமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுவது எளிது. ஆனால், உண்மையை அப்படியே திரையில் கொண்டுவருவதென்பது அத்தனை சுலபமான விஷயமல்ல. உண்மையை உணர்வாக காகிதத்தில் எழுதிவிடலாம். அதி நுட்பமாக நடிக்க வைத்துவிடலாம். ஆனால், ஒரு உண்மை வாழ்க்கையை திரையில் உயிர்ப்புடன் கொண்டுவருவதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த முழு ஆவணப் படத்தையும் பார்த்து முடிக்கும் போது முதுமலை காட்டுக்குள் போய்விட்டு திரும்பிய உணர்வை ஏற்படுத்தும். ஒரு காட்சியில் பொம்மன் மரத்தில் ஏறி வெட்டுகிறார். அது கீழே விழும்போது பெல்லி நகர்ந்து கொள்கிறார். ஆனால், கேமிரா அப்படியே இருக்கிறது. மரக்கிளை கேமிரா மீது விழுகிறது. அந்த அளவுக்கு close to reality உணர்வுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.
ஒரு ஆவணப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, அது நமக்குள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும், சமூகம் சார்ந்த ஒரு ஆவணப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது நமக்குள் ஏதோ ஒரு உணர்வைக் கடத்தியிருக்க வேண்டும். ஒரு டாக்குமெண்டரி தரும் அனுபவம் தனித்துவமானது. இந்த ஆவணப் படத்தைப் பொறுத்தவரை, ரகுவைப் பிரிந்து தம்பதி உடைந்து அழும் இடத்தில், நிச்சயம் ஆடியன்ஸூக்கும் சோகம் கடத்தப்படும். தினசரி வாழ்க்கையில் கொந்தளிக்கும் ஒரு லைஃப்ஸ்டைலில் ஓடிக்கொண்டிருக்கும் நபர்களை, இந்த 40 நிமிட ஆவணப் படம் சில கேள்விகளை கேட்கும்.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என அனைத்துமே அசத்தல். எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத மேக்கிங். 'நாங்க எங்களுக்குத் தேவையானத காட்டுலயே எடுத்துக்குறோம், தேவையில்லன்னா எடுக்குறதே இல்லன்னு’ பெள்ளி சொல்வதும், மற்றொரு இடத்தில், ‘என்ன எல்லாரும் யானைகளோட அம்மான்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொல்வதாகட்டும், ’யானையும் சாமியும் எங்களுக்கு ஒண்ணு தான்’ என பொம்மன் சொல்லுவதாகட்டும் என பல இடங்கள் மனதை நெகிழவைக்கும்.
ஒரு காட்சியில் பெள்ளி தன்னுடைய பேத்திக்கு கதை சொல்லும் போது intercut-ல் ரகுவை காட்டுவார்கள். அந்த காட்சியில் பேத்திக்கு மட்டும் கதை சொல்லாமல், மகன் ரகு-வுக்கும் கதை சொல்லியிருப்பார்கள். சுவாரஸ்யம் என்னவென்றால், அந்தக் கதையும் ஒரு யானையைப் பற்றியது தான்.
ஆஸ்கரில் இந்தியப் படம். அதுவும், நம்ம தமிழ்நாட்டு காட்டைப் பற்றிய ஒரு படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்வு. நிச்சயம் பார்க்கலாம். புது உணர்வு தரும். |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
விருதை வென்றது யானையின் அன்புதான்!
மனிதனுக்குப் பல தத்துவங்களைச் சொல்லித் தரும் யானையின் ஆவணப்படம்!
மனிதனுக்குப் பல தத்துவங்களைச் சொல்லித் தரும் யானையின் ஆவணப்படம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1