புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் Poll_c10ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் Poll_m10ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 5:28 pm

ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் SAUB4Gp

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் 142 நாள்கள் கழித்து ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருப்பதும், அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கும் காரணமும் பெரும் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. `மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம்' என்பதே கவர்னர் எழுப்பியுள்ள கேள்வியாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்ளும் சமூக அவலத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு நீண்ட காலமாக எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டம், உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. திறமை அடிப்படையில் ஆடப்படும் விளையாட்டுகளை சட்டப்படி தடை செய்ய முடியாது. அதிர்ஷ்டம் அடிப்படையில் ஆடப்படும் விளையாட்டுகளையே தடை செய்ய முடியும். இந்த எல்லைக்கோடு தெரியாத குழப்பத்துடன் அந்தச் சட்டம் இருந்தது என்பதே காரணம். அப்போதுகூட, `இப்படி ஒரு சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

பாரம்பரியமான சூதாட்டத்தைத் தடை செய்வதுபோல ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய முடியுமா என்பதே குழப்பமான விஷயமாக இருக்கிறது. என்றாலும், ஏற்கெனவே மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. திறமை அடிப்படையில் ஆடப்படும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று பழைய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருப்பதே இதற்குக் காரணம்.

இந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வரைவு விதிகளை வெளியிட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக மத்திய அரசு இந்த விதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை, எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு உதவி செய்தால், முறையான சட்டத்தைக் கொண்டு வர முடியும்'’ என்றே குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்பே உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில், மனநல நிபுணர், தொழில்நுட்ப வல்லுநர் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழு விசாரித்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இப்படி ஒரு மசோதாவைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியிருந்தது. இதே விஷயத்தில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர் இப்போது மசோதாவைத் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு புரியாத புதிர்தான்.

ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக இதுவரை தமிழகத்தில் 44 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பலரின் உயிரைப் பறிக்கும் இந்தக் கொடிய விளையாட்டைத் தடை செய்வதற்கான முயற்சிகள் அரசியல் சூதாட்டத்தில் சிக்கிவிடக்கூடாது.

குறிச்சொற்கள் #ஆன்லைன்_சூதாட்டம் #சூதாட்டம்
விகடன்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக