புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? Poll_c106 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? Poll_m106 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 3:37 pm



உ.பி-யின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு இந்தியாவுக்கே மாடலாக மாறியிருக்கிறது. ஏன், உலகத்துக்கே இது மாடலாக மாறியிருக்கிறது

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எந்த வகையான குற்றத்தை எடுத்துக்கொண்டாலும், முன்வரிசையில் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். அத்தகைய மாநிலத்தை, 10,000-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் செய்து, ‘அமைதிப் பூங்கா’வாக முதல்வர் #யோகி மாற்றிவிட்டார் என்ற பிரசாரத்தை பா.ஜ.க-வினர் முன்னெடுத்துவருகிறார்கள். ஆனால், உண்மையான உ.பி-யின் முகம்தான் என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்களின்போது, சட்டம்- ஒழுங்கு பெரிய பிரச்னையாக எதிரொலிக்கும். 2012 முதல் 2017 வரையிலான அகிலேஷ் யாதவ் ஆட்சியில் குண்டர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்ததாக 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெரிய அளவுக்குப் பிரசாரம் செய்தது. அந்தத் தேர்தலில் பெரும் வெற்றியைப்பெற்ற பா.ஜ.க., யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது. `உ.பி-யில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவேன்’ என்று சபதமெடுத்தார் யோகி. அங்கு, 2022 தேர்தலிலும் வெற்றிபெற்று ஆறு ஆண்டுகளாக யோகி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் சமீபத்தில், “உ.பி-யில் குற்றங்கள் குறைந்துவிட்டன” என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘தீமைகளை அழிக்கும் கிருஷ்ண பகவான்!’


அண்மையில் கோரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது, “முதல்வர் #யோகி_ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டார். பூமியில் தீமைகளை அழிக்க வந்த கிருஷ்ண பகவான்தான் யோகி” என்று பேசினார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, “பா.ஜ.க ஆட்சியில் உ.பி-யின் முகம் மாறியிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார். “யோகி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. டெலஸ்கோப் மூலமாகக்கூட ‘பாகுபலி’யைக் காண முடியவில்லை. உ.பி-யில் எங்கு பார்த்தாலும் ‘பஜ்ரங்பலி’யைத்தான் பார்க்க முடிகிறது”என்றார் அமித் ஷா.

‘உ.பி-யின் தோற்றம் மாறிவிட்டது!’


பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தமது ஆட்சியைப் புகழும்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் சும்மா இருப்பாரா... “உ.பி-யின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு இந்தியாவுக்கே மாடலாக மாறியிருக்கிறது. ஏன், உலகத்துக்கே இது மாடலாக மாறியிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி குறித்துப் பேசும்போது, உடனடியாக நம் நினைவுக்கு வருவது உ.பி மாடல்தான். சமீபத்தில், ஒரு பள்ளி மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த மாணவி, ‘சூரியன் மறைந்த பிறகு எந்த பயமும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறது’ என்று உ.பி-யின் சட்டம்-ஒழுங்கைப் பாராட்டினார்” என்று பெருமையுடன் பேசினார் யோகி. உண்மையில், உ.பி-யின் சட்டம்-ஒழுங்கு அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா?

பாலியல் வன்கொடுமை மாடல்!


பெண்களைக் கடத்திச் செல்வது, கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, கடைசியில் கொலைசெய்து மரத்தில் தொங்கவிடுவது போன்ற குற்றங்கள் உ.பி-யில் தொடர்ந்து நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. 2020-ம் ஆண்டு, ஹத்ராஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. உ.பி-யில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், தன் வீட்டில் வேலை செய்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரமும் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லக்கிம்பூர் கேரிக்கு அருகேயுள்ள நிகாசன் என்ற கிராமத்தில் இரண்டு சிறுமிகள் (சகோதரிகள்) கொலைசெய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரப் புகைப்படத்தைக் கண்டு இந்தியாவே கொதித்தது. நூற்றுக்கணக்கான சம்பவங்களில், ஒருசிலதான் தேசிய அளவில் கவனம் பெறுகின்றன. மற்றவை ‘லோக்கல் லெவலிலேயே’ அமுக்கப்படுகின்றன. இப்படி, பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலையும் செய்யும் பாணியில் கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 48 சம்பவங்கள் உ.பி-யில் பதிவாகியிருக்கின்றன. 2022 - 2023-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் வெளியாகும்போது, இன்னும் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வரலாம். ஆனால், “பெண்களும், எருமைகளும், மாடுகளும் உ.பி-யில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்” என்று எகத்தாளமாகப் பேசிவருகிறார் முதல்வர் யோகி.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்!


நடக்கும் குற்றங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இருக்கிறது உபி-யில். யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு, அங்கு 12 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். 48 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள்மீது 138 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் பத்திரிகையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக, ‘பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான குழு’ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ‘யோகி முதல்வரான பிறகு, நவீன் குப்தா, ராஜேஷ் மிஸ்ரா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் 2017-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டு, ராகேஷ் சிங், சூரஜ் பாண்டே, உதய் பாஸ்வான், ரத்தன் சிங், விக்ரன் ஜோஷி, பராஸ் அஸ்லம், சுபம் மணி திரிபாதி ஆகிய ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்துச் செய்திகள் வெளியிட்டதற்காக மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்’ என்கிறது அந்த அறிக்கை.

உபி-யில், யோகியை ‘புல்டோசர் பாபா’ என்று அழைக்கிறார்கள் “அமைதி, வளர்ச்சி ஆகியவற்றின் குறியீடாக புல்டோசர் இருக்கிறது” என்கிறார் யோகி. “உ.பி-யில் கடந்த ஆறு ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில், 179 கிரிமினல்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்கிற தகவல் அரசுத் தரப்பிலிருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையால், கிரிமினல்களும் மாஃபியாக்களும் உ.பி-யைவிட்டு ஓடிவிட்டார்கள் என்று பெருமையுடன் பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள்.

அமைதிப் பூங்காவில் எதற்கு புல்டோசரும் என்கவுன்ட்டரும்?

விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

புல்டோசர் அவசியம்தான்.

அவசியம் ஏற்படும் போது உபயோகிக்க அண்டை மாநிலத்திற்கா ஓடமுடியும் ?

அண்டை மாநிலம் எதிர் கட்சியினர் ஆண்டுகொண்டு இருந்தால் தேவை ஏற்படும்போது 

அது கிடைக்குமா?

எல்லாம் இருக்கவேண்டும். அவசியம் என்றால் உபயோகிக்கவேண்டும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக