புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா? Poll_c10அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா? Poll_m10அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 27, 2023 4:19 pm

அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா? Eegarai-net

'அழகு சார்பு'டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் ஹெமர்மேஷ் இந்த "அழகு சார்பு" பற்றி பல ஆண்டுகளாகப் படித்து வருகிறார்.

“அழகாக இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகம். இவர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதும் எளிது. அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமைகின்றன. சிறப்பு சலுகைகளும் அதிகம் கிடைக்கின்றன,” என்கிறார் டேனியல்.

"நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட தங்களை மிக அழகாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். அதன்மூலம் அதிக சலுகைகளைப் பெற முயல்கிறார்கள்," என்று அவர் விளக்கினார்.

"பல்கலைக்கழகங்களில் உங்கள் அறிவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அழகுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அழகான பொருளாதார வல்லுநர்கள் மற்றவர்களை விட சற்றுக் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று ஹெமர்மேஷ் கூறினார்.

அழகான தோற்றத்தின் காரணமாக ஒருவர் தன் வாழ்நாளில், சராசரியாக 1.9 கோடி ரூபாயை பிறரை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று அவர் மதிப்பிட்டார். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 20 அமெரிக்க டாலர்கள் கூடுதலாக அவர்களுக்கு கிடைக்கிறது என்று கணக்கிட்டார்.

அதே போல அழகாக இருக்கும் ஹெட்ஜ் ஃபண்ட்(hedge fund) மேலாளர், முதலீட்டு வங்கியாளரின் சம்பளத்துடன் அழகு குறைவாக உள்ளவரின் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

பாலின பாகுபாடும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் விளக்கினார். அழகான பெண்களை விட அழகான ஆண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று அவரின் ஆய்வு மூலம் கணித்துள்ளார். அழகாக இருக்கும் ஆண்களுக்கும் பிற ஆண்களுக்கும் இடையே 10 சதவீதம் வரை ஊதியத்தில் வித்தியாசம் இருக்கிறது. இது பெண்களிடையே 5% ஆக இருக்குறது.

ஆளுமை, புத்திசாலித்தனம், கல்வி, வயது, பாலினம், இனம் போன்ற காரணிகளும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

அழகு என்றால் என்ன?எது அழகு என வரையறுப்பது மிகவும் கடினம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், டேனியல் இதற்கு உடன்படவில்லை. யார் அழகு, யார் குறைந்த அழகு என்பதில் பலரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர் என்றார்.

“நீங்களும் நானும் தெருவில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். சுமார் பத்து பேர் அங்கே இருக்கிறார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு பேர் மிகவும் அழகாக இருக்கிறார்கள். இதில் பலருக்கும் ஒரே கருத்துதான் தான் இருக்கும்.“

அழகு சார்பின் மீது இனம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“சாதி, இனம், பிரிவு என வெவ்வேறு வகைகளாக பிரிந்திருந்தாலும் அழகு என்ற விஷயத்தில் ஒரே பார்வைதான் இருக்கிறது. அழகான கருப்பின பெண், உலகம் முழுவதும் உள்ள நபர்களால் பிரமிப்பாக பார்க்கப்படுகிறார். ஆசியா, ஐரோப்பிய பெண்கள் விஷயத்திலும் அழகு இப்படித்தான் செயல்படுகிறது,“ என்றார் டேனியல்.

உடல் பருமன்அழகாகத் தெரிய லிப் ஃபில்லர், போடாக்ஸ் போன்ற அழகு சிகிச்சைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இருப்பினும், இவை அழகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என டேனியல் குறிப்பிடுகிறார்.

"இது அழகை அதிகரிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அழகான ஆடைகளை அணிவது, விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது, தலைமுடியை அலங்கரிப்பது போன்றவற்றையும் செய்கிறார்கள்.

ஆனால், ஷாங்காயில் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அழகுக்காக அதிகம் செலவு செய்பவர்கள், குறைவாக செலவு செய்பவர்களை விட சிறப்பான தோற்றத்தில் இருப்பதாக தெரியவில்லை,'' என்கிறார்.

அழகுக்கும் வேலைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை, எடை முக்கிய பங்கு வகிக்கிறது என்று எழுத்தாளர் எமிலி லாரன் கூறுகிறார்.

இனம், பாலினம், உடல் குறைபாடு, வயது ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களை பல நாடுகள் இயற்றியிருந்தாலும், அழகு விஷயத்தில் இவை எதுவும் செயல்படவில்லை என்று எமிலி கூறினார். இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

"பருமனானவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் ஃபேட் ஃபோபியாவும்(Fat phobia) ஒரு இனவெறி" என அவர் கூறினார்.

"அடிமைத்துவம் தொடங்கியபோது, ​​வெள்ளைப் பெண்கள் தங்களை கறுப்பினப் பெண்களிடமிருந்து வித்தியாசப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். அதற்காக, ​​ஒல்லியாகத் தெரிவதுதான் இதை தீர்க்கும் என்ற முடிவுக்கு வந்தனர்,'' என்கிறார் கனடாவைச் சேர்ந்த எமிலி.

இன்றும் விளம்பரங்கள், திரைப்படங்களில் பருமனாக இருப்பவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும், புத்திசாலித்தனம் குறைந்தவர்களாகவும் காட்டப்படுவதாக அவர் கூறினார்.

"ஒல்லியான நபர்களுடன் ஒப்பிடும்போது பருமான உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள் அதிக சம்பளம் பெறுவது குறைவு," என்று எமிலி விளக்கினார்.

அறிவியலும் இந்தக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போவதாகத் தெரிகிறது. பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்துள்ளது.

இந்த ஆய்வில், பருமனான மற்றும் ஒல்லியான நபர்கள் காலியிடங்களுக்கு ஒரே மாதிரியான விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். இதில், வேலை வாய்ப்பு நிறுவனங்கள் ஒல்லியாக இருக்கும் நபர்களை நோக்கியே அதிக நாட்டம் காட்டுகின்றன.

மறுபுறம், உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. அதனால் உடல் பருமன் பற்றிய நமது சார்புநிலையை மாற்ற இதுவே சரியான நேரம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒன்றும் புதிதல்லஅழகு சார்பு ஒன்றும் புதிதல்ல. தலைமுறை தலைமுறையாக நம்மை அது பாதித்து வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சமூகத்தில் அழகு மேலோங்குவதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாகவும், இன்று ஃபேஷன் துறையில் எதிர்பார்ப்புகளும் மாறி வருவதாகவும் மார்க்கி கூறுகிறார்.

"இன்று, தனித்தன்மையுடன் இருக்கும் மாடல்கள், கலைஞர்கள், நடிகர்கள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்," என்று அவர் கூறினார்.

"இந்த புதிய போக்கு, அருமையாக இருக்கிறது," என்றார்.

(இந்த கட்டுரை பிபிசி உலக சேவையின் "பிசினஸ் டெய்லி" என்ற வானொலி நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)பிபிசி தமிழ்


கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக