புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Poll_c10வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Poll_m10வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 3:57 am

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Neem

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை. இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது.

இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.

அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்:


வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் சரியாகிவிடும்.

ஐந்து கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.

மூன்று கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.

நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.

ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம் இது நல்ல பலன் கொடுக்கும்.

குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணமாகும். வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் இவற்றைக் குணமாக்கலாம். அல்லது வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து சாப்பிட்டால் வாந்தி ஏப்பம் நீங்கும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

தோல் சம்மந்தப்பட்ட சொறி, சிரங்கு முதலானவற்றைக் குணமாக்கும். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

ஜீரணத்தை அதிகரித்து பசியைத் தூண்டும். பித்தத்தைப் போக்கும். இதற்கு வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.

உடல் எடையை குறைக்கும். வேப்பம் பூவை ஒரு கைப்பிடி எடுத்து அதனை நீரில் ஊறவைத்து பின்னர் அந்நீரை தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

காதில் சீழ்வடிதல் குணமாகும். வேப்பம் பூவை நீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியை காதில் படும்படி பிடித்து வந்தால் காதில் சீழ் வடிதல் குணமடையும்.

தொண்டைப் புண்ணைச் சரிசெய்ய உதவுகின்றது. வேப்பம் பூ சிறிதளவு உண்டு வந்தால் தொண்டைப்புண் நீங்கும்.

குடலில் உள்ள கிருமிகள் மற்றும் குடற் புழுக்களை அழிக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பம் பூவைக் கஷாயமாக வைத்துக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலேரியா காய்ச்சலைக் குணமாக்கும். வேப்பம் பூ உடலிலுள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.

புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். சிறிதளவு வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகாய் வைத்து அரைத்து சுண்டக்காய் அளவு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்துடன் வெளியேறிவிடும்.

பசியின்மை மற்றும் உடற்தளர்ச்சி நீங்கும். உலர்ந்த வேப்பம் புவை 50 மி.லி குடிநீர் விட்டு மூடிவைத்து பின் வடிகட்டிக் குடித்துவர பசியின்மை, உடற்தளர்ச்சி நீங்கும்.

நாக்கில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை நீக்கும். வேப்பம் பூவைத் தண்ணீரில் ஊறவைத்து அந்நீரைப் பருகுவதால் அல்லது அந்நீரால் வாயைக் கொப்பளித்தால் இப்பிரச்சினை நீங்கும்.

அல்சரைக் குணமாக்கும் தன்மை வேப்பம் பூவிற்கு உண்டு.

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Barrab10

வேப்பம் பூ சூப்!


தேவையான பொருட்கள்:வேப்பம் பூ - 4 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

துவரம் பருப்பு வேக வைத்த நீர் - 2 டம்ளர்

துவரம் பருப்பு, நாட்டு சர்க்கரை, நெய் - தலா 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - ௨

சீரகம், புளி, தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:வேப்பம் பூவை நெய்யில் வறுக்கவும்; புளியை நீரில் கரைத்து வடிகட்டவும். துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும்.

புளிக்கரைசலில் பொடித்தவற்றை போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் துவரம் பருப்பு வெந்த நீர், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். பின், வறுத்த வேப்பம் பூவை கலக்கவும். இந்த கலவையில் நெய்யில் தாளித்த சீரகத்தை போடவும்.

சுவை மிக்க, 'வேப்பம்பூ சூப்' தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்; தெளிந்ததை சூப்பாக பருகலாம்; நல் ஆரோக்கியம் தரும்!

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Barrab10

பச்சடி:


தேவையானவை:வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

புளி - சின்ன நெல்லிக்காய் அளவு

நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

நெய் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :புளியைக் கெட்டியாகக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதனுடன் புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிக்கரைசலின் நிறம் சற்று மாறியதும், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளிக்கரைசல் கெட்டியானதும் வேப்பம் பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கெட்டியாக்கி இறக்கவும். வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய இந்தப் பச்சடி அதிக அளவு கசப்புத் தன்மை இன்றி இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Barrab10

வேப்பம் பூ துவையல்:


தேவையானவை:தேங்காய்த் துருவல் - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 3

புளி- சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல் ,காய்ந்தமிளகாய், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். தோசைக்கு மிகச்சிறந்த சைட் டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.


டிப்ஸ்:

வேப்பம் பூவை பதப்படுத்த முடியாதவர்கள் சீஸனின் போது பூவை சேகரித்துக் காயவைத்து பொடி செய்து வைத்துப் பயன்படுத்தலாம்.

வழக்கமாக நாம் செய்யும் ரசத்தில் வேப்பம் பூ அல்லது வேப்பம் பூ பொடியைத் தூவி இறக்க ரசம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

#வேப்பம்_பூ உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று என்பதால் மோரில் சேர்த்து தினமும் பருகலாம்.

சீஸனில் அதிகமான வேப்பம் பூ கிடைக்கிறது என்பவர்கள் உப்பு கலந்த மோரில் வேப்பம் பூவை ஊறவைத்து, வெயில் காயவைத்து வேப்பம் பூ வத்தலாக எண்ணெய்யில் பொரித்து எடுத்துப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம் பூவை உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:09 pm

சிலர் வீட்டு தோட்டத்தில் கிடைக்கும் /
தெருவில் விழுந்து கிடைக்கும் வெப்பம் பூவிற்கு இவ்வளவு மதிப்பா?

எங்கள் வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட வேப்பம்பூவை வாணலியில் சிறிது நெய் விட்டு
வறுத்து சாதத்துடன் கலந்து உண்போம்.
தமிழ் புத்தாண்டில் காய்ச்சிய வெல்லப்பாகில் தளிர் வேப்பம் பூவை கலந்து
ஒரு கொதி வந்தவுடன் எடுத்து உணவுடன் உண்பது இன்றும் உள்ள ஒரு பழக்கம்.
இனிப்பும் கசப்பும் கலந்த இந்த கலவை , வாழ்க்கை என்பது இனிப்பு,கசப்பு கலந்த
ஒன்று, என்று எடுத்துக்காட்டத்தான்.
 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31401
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  103459460 வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்  3838410834z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக