புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
296 Posts - 42%
heezulia
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_m10தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 8:45 pm

தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Hair-treatment

கேசத்தில் ஏற்படும் தொற்றுகள் காரணமாக ஸ்கால்ப்பில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி கொட்டிப்போகும் ‘புழுவெட்டு’ போன்ற பிரச்னைகளும், வழுக்கை பிரச்னையும் ஏற்படும்.

அழகான கூந்தலுக்கு ஆசைப்படாத பெண்கள் உண்டா? அதற்கு அடிப்படை கேசப் பராமரிப்பு. சிலருக்கு கேசம் தொடர்பான பிரச்னைகள் இருக்கும், அதற்கான தீர்வுகள், சிகிச்சைகளைத் தேடி ஓடிக்கொண்டிருப்போம். அதற்கு முன்ன தாக, நாம், நம் கேசத்தை பற்றி புரிந்துகொள்வது அவசியம்.

கேசத்தின் அமைப்பு, வகை, கூந்தல் ஆரோக்கியத்துக்கு எதிரான பிரச்னைகள், தீர்வுகள், பியூட்டி ட்ரீட்மென்ட்கள், டிப்ஸ் என இந்த இணைப்பிதழில் விரிவாக விளக்கு கின்றனர், திருச்சியைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் பவித்ரா மற்றும் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா.

உங்கள் கேசத்துக்கு ஊட்டமளிக்க 1, 2, 3... கேசம்... அமைப்பு இதுதான்!



`கெரட்டின்' (Keratin) என்பது உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் புரதம். இது கேசம், சருமம், நகத்தை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள உதவுவது. கேசத்தைப் பொறுத்தவரை சருமத்துக்கு வெளியே தெரியும் `கேசக் கற்றைகள்' (Hair Shaft), சருமத்தின் உள்ளே `ஃபாலிக்கிள்' (Follicle), `ஹேர் பல்ப்' (Hair Bulb), `ஹேர் ஸ்டெம்' (Hair Stem), `ஹேர் பல்ஜ்' (Hair Bulge) எனப் பல பகுதிகள் உள்ளன. இதில் `ஹேர் பல்ஜ்' மிக முக்கியமான பகுதி. இதில் உள்ள `ஸ்டெம் செல்' (Stem Cell) தான் `ஃபாலிக்கிள்' செயல்பட உதவுகிறது. இந்த ஃபாலிக்கிள்தான் கேசத்தை உருவாக்கு கிறது. ஒரு ஃபாலிக்கிளில் இருந்து மூன்று முடி வரை உருவாகும். சருமத்துக்கு உள்ளே உள்ள கேசம் உயிருள்ள பகுதி, வெளியே உள்ள கேசம் உயிரற்ற பகுதி.

முடி... பிரிவுகள்!



முடி மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை `வெல்லஸ் முடி' (Vellus Hair), `இன்டர்மீடியேட் முடி' (Intermediate Hair) மற்றும் `டெர்மினல் முடி' (Terminal Hair). வெல்லஸ் முடி என்பது, உடல் முழுக்கக் காணப்படும், பழுப்பு நிற சிறிய முடி. டெர்மினல் முடி தலையில், இமை களில், புருவங்களில் காணப்படும் அடர்த்தியான முடி. இது இரண்டுக்கும் இடைப்பட்ட வகை... இன்டர்மீடியட் முடி. இது வெல்லஸ் முடியாக இருந்து, பருவமெய்தும் வயதில் ஹார்மோன்களின் காரணமாக மறைவிடங்களில் டெர்மினல் முடியாக வளரத் தொடங்கும்.

கேச வளர்ச்சி சைக்கிள்!



கேச வளர்ச்சி, ஒரு சைக்கிளாக நிகழும். அதில் ஐந்து படிநிலைகள் உள்ளன. அவற்றில் முதல் மூன்று நிலைகள் முக்கியமானவை. முதல் நிலை, `ஆனஜென்' (Anagen). இது நீண்டகாலம் நீடிக்கும் நிலையும்கூட. இந்த முதல் நிலையில் வளரும் கேசம் 3 - 5 வருடங்கள் வரை நீடிக்கும். நம் தலை யில் இருக்கும் முடியில் 90% இந்த நிலையில்தான் இருக்கும்.

இரண்டாவது நிலை, `கேட்டஜன்' (Catagen). இது மாறுதலுக்கான நிலை. ஆனஜென் நிலை முடிவுறும்போது இந்த நிலை தொடங்கி, 10 நாள்கள் வரை நீடிக்கும். இப்போது கேச ஃபாலிக்கிள்கள் சுருங்கி, கேச வளர்ச்சி தாமதப்படும்.

மூன்றாவது நிலை, `டெலகன்' (Telogen). ஓய்வுக்காலமான இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். இப்போது கேசம் வளராது, உதிரவும் செய்யாது. ஃபாலிக்கிள்களில் புதிய முடிகள் உருவாக ஆரம்பித்திருக்கும்.

நான்காவது நிலை, `எக்ஸோஜென்' (Exogen). இது முடி உதிர்வு நிலை. இது 2 - 5 மாதங்கள் வரை நீடிக்கலாம். அதே நேரம், புதிய முடி ஹேர் ஃபாலிக்கிளில் இருந்து வளர ஆரம்பித்திருக்கும்.

தவிர, சில பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கேச வளர்ச்சி சைக்கிள் தடைபடும் `கெனோஜென்' (Kenogen) நிலை ஏற்படும். இது ஐந்தாவது நிலை.

முடி உதிர்வு... காரணங்கள்!



கூந்தல் பிரச்னைகளில் முடி கொட்டுவதுதான் பெரும்பான்மையினருக்கு ஏற்படுவது. இதற்கான முக்கியக் காரணங்களைப் பார்ப்போம்.

கேசத்தில் ஏற்படும் தொற்றுகள் காரணமாக ஸ்கால்ப்பில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி கொட்டிப்போகும் ‘புழுவெட்டு’ போன்ற பிரச்னைகளும், வழுக்கை பிரச்னையும் ஏற்படும்.

ஹார்மோன் சமச்சீரின்மை, கோவிட் போன்ற சில நோய்களின் தாக்கம், முடி உதிர்வை ஏற்படுத்தும்.

கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலத்தில் பெண்களுக்கு கேச உதிர்வு பிரச்னை ஏற்படும்.

புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போதும், உடலில் சில அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போதும் கேச உதிர்வு ஏற்படும்.

வெளிப்புறக் காரணிகளான காற்று மாசு, தண்ணீர் மாசு, கேசத்தை அலசும் தண்ணீரின் தன்மை போன்றவை கேச உதிர்வுக்குக் காரணமாகலாம்.

கேசத்தை அலசிய பின் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடன் வைத்திருப்பது, அடிக்கடி சீப்பைக்கொண்டு கேசத்தை சீவிக்கொண்டே இருப்பது, கேசத்துக்கு வெப்பம் கொடுத்து மேற்கொள்ளப்படும் அழகு சிகிச்சைகள் (Hair Straightening, Smoothening), கேசத்துக்கு நிறமேற்றும் செயல்முறைகள் (Hair Dye, Hair Colouring) போன்ற காரணங்களாலும் கேச உதிர்தல் ஏற்படலாம்.

உடல்நிலை, மருத்துவக் காரணங்களால் அன்றி ஏற்படும் கேச உதிர்வு பிரச்னைக்கு உடலின் சத்து குறைபாடு காரணமாக அமையும். தேவையான அளவு புரதச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை உட்கொள்ளாமல் இருப்பது, மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் திடீரென உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி டயட் மேற்கொள்வது, அதிகப்படியான விரதம் இருப்பது எனப் பல்வேறு காரணங்கள் இதில் அடங்கும்.

விரைவாக உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் டயட் ரகங்கள் கேச உதிர்வை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான கேசத்துக்கு... அடிப்படையாகச் செய்ய வேண்டியவை!



சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரதச்சத்து, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்துள்ள உணவு களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பழங்கள், நெல்லிக்காய், கீரை வகைகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரிடம் ஆலோசனை செய்யாமல் சத்து மாத்திரைகள், பவுடர்கள் என எதையும் உட்கொள்ள வேண்டாம்.

சர்க்கரை, மாவுச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உடல் எடையை விரைவாகக் குறைக்க மேற்கொள்ளப்படும் டயட்டை தவிர்க்க வேண்டும்.

அதிகமான கேச உதிர்வு, புழுவெட்டு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் தைலம், ஹேர் பேக் என வீட்டிலேயே சுய பராமரிப்பு செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

ஒவ்வொருவரின் கேசத்தின் தன்மை, பிரச்னை, காரணம் மாறுபடும் என்பதால், ‘எனக்கும் இப்படித்தான் இருந்தது, இதை பயன்படுத்தினதும் சரியாகிடுச்சு’ என்று மற்றவர் கூறும் டிப்ஸ், ஷாம்பூ, எண்ணெய் வகைகளைப் பயன் படுத்த ஆரம்பிக்க வேண்டாம்.

கீமோதெரபி காலத்தில்...!



புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும் காலத்தில் தலையில் உள்ள கேசம் மட்டுமல்லாது, புருவம், இமை வரை உடல் முழுக்க முடிகள் உதிரும். இதைத் தவிர்க்க இயலாது. சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் முடி வளரத் தொடங்கிவிடும். இதற்கான காலம் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடலாம். அப்போது கேச வளர என எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் பொறுமையாக இருக்க வேண்டும். சூரியனின் புற ஊதாக் கதிர்கள் படாதவாறு கேப், குடை பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைத்த உணவுகளையும் பின்பற்றி வர வேண்டும்.

இளநரை... சரிசெய்ய முடியுமா?



இந்தியாவைப் பொறுத்தவரை இளநரை என்பது 25 வயதுக்குள் ஏற்படும் கேசத்தின் நிற மாற்றம் ஆகும். இதற்கு மரபணு மிக முக்கியக் காரணமாக இருந்தாலும், சத்துக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மிக முக்கியமாக புகைப்பழக்கம் ஆகியவை இளநரை ஏற்படுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மரபு காரணத்தைப் பொறுத்தவரை, பெற்றோர்களுக்கு இளநரை இருந்தால் குழந்தைகளுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் பிறக்கும்போதேகூட நரையுடன் பிறப்பதும் நடக்கும். வெளிப்புறக் காரணிகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கம், காற்று மாசுபாடு போன்றவையும் இளநரையை ஏற்படுத்தலாம்.

சத்துக்குறைபாடு, புறக்காரணிகள் எனச் சில காரணங்களால் ஏற்படும் இளநரையை மட்டுமே சிகிச்சை மூலம் சரிசெய்ய இயலும். மரபு உள்ளிட்ட மற்ற காரணங்களால் ஏற்படுவதை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே வீட்டு மருத்துவம், கை வைத்தியமும் அதற்கு பலன் தராது என்பதால் முயற்சி செய்ய வேண்டாம். சிலருக்கு இளநரையைக் குறைப்பதற்கும், அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதற்கும் சிகிச்சையளிக்க இயலும்.

இளநரை ஏற்படும்போது ஆரம்பக் காலக்கட்டத்திலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும். தேவையான ரத்தம் மற்றும் பிற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். காரணம் கண்டறியப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும். சரிசெய்யக்கூடிய இளநரைக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன் பின்வருபவை கைகொடுக்கும்....

காப்பர், ஜிங்க், புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயில், காற்று, மாசுகளில் இருந்து கேசத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதை நிறுத்த வேண்டும்.

தினமும் எண்ணெய் வைக்க வேண்டுமா?



எண்ணெய் வைத்த தலையோடு வெளியே சென்றால் காற்றில் கலந்துவரும் மாசு எல்லாம் தலையில் அப்படியே படியும், பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும் என்பதால் தவிர்க்கலாம்.

சிலர் தினமும் உறங்கச் செல்லும் முன் எண்ணெய் வைத்து, மறுநாள் தலைக்குக் குளிப்பார்கள். ஆனால், இந்த எண்ணெய் தலையணை உறைக்குத்தான் செல்லும் என்பதால் பயனற்றுப் போகும்.

தினமும் குளிப்பதற்கு 20, 30 நிமிடங்களுக்கு முன் கூந்தலில் எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. எண்ணெயைக் கூந்தலில் மட்டுமல்லாது ஸ்கால்பிலும்படும்படி அப்ளை செய்யவும்.

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செம்பருத்தி எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களை கூந்தலுக்குப் பயன் படுத்தலாம்.

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் பலன் தரும்.

வலிமையிழந்த கூந்தல் உள்ளவர்கள் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்.

பட்டுப்போன்ற கேசத்துக்கு செம்பருத்தி எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

உடல்சூடு உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

பொடுகுப் பிரச்னைக்கு அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது லாவண்டர் ஆயிலைக் கலந்துகொள்ளலாம். வேப்பெண்ணெய் பயன்படுத்தலாம்.

எண்ணெய்ப்பசை கேசமும் வறண்ட கேசமும்... எப்படி பராமரிக்க வேண்டும்?



எண்ணெய்ப்பசை கேசம்:

கேசம் எண்ணெய்ப்பசையாக முக்கியக் காரணமாக இருப்பது, எண்ணெய் சுரப்பிகள். இவை இயல்பான அளவுக்கு அதிகமாகச் சுரப்பதுதான் கேசத்தை எண்ணெய்ப்பசையாக மாற்றுகிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள்தான் பொடுகு பிரச்னைக்கும் காரணம். பொடுகுப் பிரச்னை இருப்பவர்களுக்கு, பெரும்பாலும் எண்ணெய் பிசுபிசுப்புடன் கூடிய கேசப் பிரச்னை இருக்கும்.

பொதுவாகத் தலைக்கு எண்ணெய் வைக்கும்போது, இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ச் சுரப்பிகளின் பணி துரிதப்படுத்தப்படும். எனவே எண்ணெய் வழிவது, பொடுகுப் பிரச்னைகள் இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை தவிர்ப்பது நல்லது. அது அந்தப் பிரச்னைகளை அதிகமாக்கும். தேவையெனில் ஸ்கால்ப்பில் வைக்காமல் கேசத்தில் மட்டும் படுமாறு வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்தப் பிரச்னை உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று நாள்களாவது தலைக்குக் குளிப்பது நல்லது. ஷாம்பூவை மாற்றி மாற்றி பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஷாம்பூவை வாங்கிப் பயன்படுத்தலாம். பொடுகுக்கு ஸ்கால்ப் பிரச்னை தாண்டி ஹார்மோனும் சமநிலையின்மையும் காரணமாக இருக்கலாம் என்பதால், அதை மருத்துவ ஆலோசனையின் மூலம் அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

வறண்ட கேசம்:  

போதிய பராமரிப்பு இன்மையே கேசம் வறண்டுபோக முக்கியக் காரணம். தண்ணீரின் தன்மையும், மாசுகளும், தலையை அடிக்கடி சீவிக்கொண்டு இருப்பதும் பிற காரணங்கள். கூந்தல் வறட்சிக்கு கவனம் கொடுக்காமல் விட்டால் உடைந்து சேதமாகிவிடும். வறண்ட கேசம் உள்ளவர்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூடாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெயில், மாசு கேசத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். கேசத்துக்கு சீரான இடைவெளியில் எண்ணெய் வைக்க வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும். மைல்டு ஷாம்பூவுடன் நிச்சயமாக கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தும்போது ஸ்கால்ப்பில் பயன்படுத்தாமல் கூந்தலில் மட்டும் அப்ளை செய்து, 3 - 5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பின்பு அலச வேண்டும்.

ஷாம்பூ... வழிகாட்டி!



pH மதிப்பு 4.5 - 5க்குள் இருக்கும் ஷாம்பூவாக பார்த்து வாங்கவும். சல்ஃபர் குறைவாக இருக்கும் ஷாம்பூவை பயன்படுத்த வும்.

புரோட்டீன் ஷாம்பூ கூந் தலுக்கு போஷாக்கு தந்து அழகாக்கும்.

பொடுகு போன்ற `ஸ்கால்ப்' (Scalp) பிரச்னைகளுக்கு, வறண்ட கூந்தல், நுனிப் பிளவு போன்ற `நான் ஸ்கால்ப்' (Non Scalp) பிரச்னைகளுக்கு என்று அது அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

பொடுகுப் பிரச்னைக்கு `ஜிங்க் ப்யூரதையான்' (Zinc Pyrithione) உள்ள ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ பரிந்துரைக்கத்தக்கது. இது பொடுகை அகற்று வதுடன் தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றையும் நீக்கும்.

மாய்ஸ்ச்சரைசிங் ஷாம்பூ பயன்படுத்தி வறண்ட கேசத்தினை சரிசெய்து மென்மையாக்கலாம்.

கலரிங், அயர்னிங் போன்றவற்றை செய்துகொண்டவர்கள் ரிவைட்டலைசிங் (revitalizing shampoo) ஷாம்பூ பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய்ப்பசை கூந்தல் உடையவர்கள் மைல்டு அல்லது ஜெல் வகை ஷாம்பூ பயன்படுத்தலாம்.

முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்களுக்கு வைட்டமின் அல்லது ஒமேகா கலந்த ஷாம்பூ ஏற்றது.

நார்மல் கூந்தல் உடையவர்கள் மைல்டு ஷாம்பூ பயன்படுத்தலாம்.

சுருள் முடி உள்ளவர்கள் ஸ்மூத்திங் வகை ஷாம்பூகளைப் பயன்படுத்தலாம்.

மெலிந்த கேசம் கொண்டவர்கள் முடியை அடர்த்தியாகக் காட்டும் `வால்யூமைசிங்' (Volumizing) ஷாம்பூ பயன்படுத்தலாம்.

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், ஸ்மூத்தனிங்... பராமரிப்பு முக்கியம்!



கேசத்தை சேதங்கள் நீக்கி பட்டுப்போலவும், நீளமாகவும் ஆக்கும் `ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்' (Straightening), `ஸ்மூத்திங்' (Smoothing), `ரீபாண்டிங்' (Rebonding), நீளமான கூந்தலை செயற்கையாக சுருளச் செய்யும் (Curling)... இப்படியான சிகிச்சைகளை பலரும் செய்து கொள்கிறார்கள்.

மேற்சொன்ன சிகிச்சைகள் பெரும்பாலும் கேசத்துக்கு வெப்பம் கொடுத்தும், ரசாயனங்களைப் பயன்படுத்தியும் செய்யப்படுகின்றன.

கேசத்தை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்றும் இந்தச் செயல்முறைக்குப் பின்னான பராமரிப்பு மிக முக்கியமானது.

செயற்கையாக செய்யக்கூடிய கெமிக்கல் தொடர்பான எந்த சிகிச்சையும் கண்டிப்பாக கேசத்தின் வலுவை இழக்கச் செய்து, கேச உதிர்வையும், உடைதலையும் ஏற்படுத்தக் கூடியது. அதனால் அதைக் குறைக்கும் பொருட்டு கேசப் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை. தலையை அலச நல்ல தண்ணீரைப் பயன்படுத்துவது, தரமான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கேசப் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவது, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஹேர் ஸ்பா செய்துகொள்வது என்று பின்பற்ற வேண்டும்.

ஹேர் ஸ்பா... கேசப்பொலிவு சிகிச்சை!



`ஹேர் ஸ்பா' (Hair Spa) என்பது பார்லர்களில் வழங்கப்படும் கேசப் பொலிவுக்கான சிகிச்சை.

இதில் ஸ்கால்ப்புக்கு நல்ல மசாஜ் கிடைப்பதால் ரிலாக்ஸ்டாக உணர்வது, கேசத்துக்கு ஈரப்பதம் தருவது, முடி உதிர்வதைக் குறைப்பது, கேசத்தின் சேதங்களை சரி செய்வது எனப் பல பலன்கள் கிடைக்கும்.

ஹேர் ஸ்பாவுக்கான பிரத்யேக க்ரீம்களை ஸ்கால்ப், கேசத்தில் அப்ளை செய்து, ஆழமான சுத்திகரிப்பு (Deep cleansing), வெப்பம் தருவது

(Steaming), மாஸ்க் (Masking) மற்றும் மசாஜ் (Massaging) எனப் பல ஸ்டெப்களில் சிகிச்சை வழங்கப்படும்.

இந்தக் கேசப் பராமரிப்பு பொறுமையாகச் செய்யப்படும் ஒரு சிகிச்சை என்பதால் ரிலாக்ஸ்டாக உணரவைக்கும். மசாஜ், ஸ்டீம் எனப் புத்துணர்வு கொடுக்கும். கேசத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும். ஸ்கால்ப்பின் துளைகளைத் திறந்து இறந்த செல்களை வெளி யேற்றவும், ரத்த ஓட்டம் சீராகவும் உதவும்.

கேசத்தின் வகை, கேசப் பிரச்னை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக் கான ஹேர் ஸ்பா சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படும்.

உதாரணமாக, பொடுகுக்கான ஹேர் ஸ்பா சிகிச்சை என்பது பொடுகு எதிர்ப்பு சிகிச்சை.

வறண்ட மற்றும் அரிக்கும் உச்சந்தலைக்கான ஹேர் ஸ்பா சிகிச்சை, ரிலாக்ஸ்டான அனுபவத்தைத் தரும். ஈரப்பதத்துடன் ஊட்டமளித்து வறட்சி, அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் உணர்விலிருந்து விடுவிக்கும்.

முடி உதிர்தலுக்குத் தீர்வளிக்கச் செய்யப்படும் ஹேர் ஸ்பாவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கேசப் பராமரிப்புத் தயாரிப்புகள் பயன் படுத்தப்படும். இது கேசம் மெலிந்து போவதற்குக் காரணமாக இருக்கும் மயிர்க்கால்களைத் தூண்டி, கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவை தவிர, கேசத்தின் நிறத்துக்கு, மென்மைக்கு எனப் பல ஹேர் ஸ்பா சிகிச்சைகள் செய்யப்படும்.

மாதம் இருமுறை அல்லது ஒருமுறை ஹேர் ஸ்பா சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

கெரட்டின் சிகிச்சை... கேசத்துக்கு ஊட்டச்சத்தா?



ஃபார்மால்டிஹைடு, க்ளைஸாலிக் ஆசிட் போன்ற கேசப் பராமரிப்புப் பொருள்களைக் கொண்டு, உடைந்த கேச இணைப்புகளை சரிசெய்து, கூந்தலை நீளமாகவும், பட்டுப்போலவும் ஆக்க கேசத்துக்குச் செய்யப்படும் சிகிச்சையே `கெரட்டின் ஹேர் ட்ரீட்மென்ட்' (Keratin Hair Treatment). பரட்டையாக (Frizzy) இருக்கும் கேசத்தைச் சீராக்கும் இந்த சிகிச்சை, நிரந்தரமற்றது (Semi permanent).

கெரட்டின் சிகிச்சை மற்றும் ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிகிச்சைதான். ஆனால், ஸ்ட்ரெயிட்டனிங்கில் கேசம் அடி முதல் நுனி வரை அயர்ன் செய்ததுபோல இருக்கும். கெரட்டின் சிகிச்சையில் அந்த நீள்தன்மையைவிட, கேசத்தின் மென்மைக்கும் பளபளப்புக்கும் முக்கியத்துவம் தரப்படும்.

கெரட்டின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் புராடக்ட்டை பொறுத்து, அது கேசத்தில் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது மாறுபடும். விரும்பினால் மீண்டும் மீண்டும் செய்துகொள்ளலாம்.

மிகவும் வறண்டு போன கேசம் உள்ளவர்கள் இதை மேற்கொள்ளலாம்.

கேசத்தின் நீள்தன்மைதான் முக்கியம் என்பவர்கள் கெரட்டின் சிகிச்சைக்கு பதில் ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

கெரட்டின் சிகிச்சைக்குப் பின்னர் அதன் பராமரிப்பும் மிகவும் முக்கியம். கெரட்டின் சிகிச்சை முடிந்த உடனேயே கேசத்தை அலசக் கூடாது. மூன்று நாட்களுக்குப் பின்னர் சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ கொண்டு அலச வேண்டும். கெரட்டினின் பலன்களை பாழாக்கும் வகையிலான கேசப் பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

கெரட்டின் சிகிச்சையில் வெப்பம், ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால் அதற்குப் பின்னான முறையான பராமரிப்புக் கொடுக்கவில்லை எனில், முடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்..!



தலைக்குக் குளிக்கும்போது சூடான அல்லது ஜில்லென்று இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் தேய்த்திருந்தால் வெது வெதுப்பான நீரிலும், இல்லை

யென்றால் சாதாரண நீரிலும் கேசத்தை அலசுதல் நல்லது.

எந்த ஷாம்பூவாக இருந்தாலும் தண்ணீரில் கலந்தே பயன்படுத்த வேண்டும், அப்படியே தலையில் பயன் படுத்தக் கூடாது.

ஷாம்பூவை சிறிது நேரத்தில் அலசி விட வேண்டும். ஸ்கால்ப்பில் படியாமல் நன்றாக அலச வேண்டும்.

வறண்ட கேசம் உள்ளவர்கள் நிபுணர் பரிந்துரையுடன் தரமான கண்டிஷனரை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கிக் கொள்ளலாம்.

தினமும் தலைக்குக் குளிக்கலாம்; பொடுகு, பரட்டை கேசம், வறட்சி, எண்ணெய்ப் பசை என கேசத்தின் தன்மைக்கு ஏற்ப ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்தவும்.

தலைக்குக் குளித்த பின்னர் ஈரத்துடன் நீண்ட நேரம் விடாமல் நன்றாக உலர்த்த வேண்டும்.

டிரையரை ஏதேனும் ஒரு நாள் அவசரத்துக்கு அல்லது விசேஷ இடங்களுக்குச் செல்லும்போது பயன்படுத்தலாம். வாடிக்கையாகப் பயன்படுத்தினால் அந்த வெப்பம் கேசத்தின் இணைப்புகளை உடைத்துவிடும்.

டிரையர் உபயோகிக்க வேண்டி வந்தால், முன்னதாக அதன் வெப்பத்தில் இருந்து கேசத்தை காக்கும் ஜெல், க்ரீம் போன்றவற்றை அப்ளை செய்த பின்னர் பயன்படுத்தவும்.

ஈரத்தலையில் சீப்பு கொண்டு சீவுவதை தவிர்க்க வேண்டும். அப்போது கேசம் மென்மையாக இருக்கும் என்பதால் சேதமாகும் வாய்ப்பு அதிகம். காய்ந்த பின்னர் பெரிய பல் சீப்பு கொண்டு சீவிவிட்டு, பின்னர் சின்ன பல் சீப்பை பயன்படுத்தி கேச அலங்காரம் செய்துகொள்ளவும். சிக்கான முடியில் சின்னப் பல் சீப்பை நேரடி யாகப் பயன்படுத்தி கேசத்தைப் பிடித்து இழுத்து சேதப்படுத்துதல் கூடாது.

கேசம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜிங்க் போன்ற சத்துகள் அடங்கிய உணவு களுடன் பழங்கள், இறைச்சி உணவுகள் என எடுத்துக் கொள்ளவும்.

தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகவும்.

7 - 8 மணி நேரத் தூக்கத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

வெளியே செல்லும்போது முடிந்த வரை கேசத்தை கவர் செய்து கொள்ளவும்.

கேசத்தை மிக இறுக்கமாகப் பின்னக் கூடாது. கேசத்துக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய க்ளிப் களை பயன்படுத்தக் கூடாது.

கேச நுனியை சீரான கால இடைவெளியில் ட்ரிம் செய்யும் போது, கேச நுனியில் இருக்கும் பிளவு மேல் நோக்கிப் பரவாமல் தவிர்க்கலாம்.

பொடுகு, முதி உதிர்வு, வழுக்கை என கேசத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கூந்தலின் அழகும் ஆரோக்கியமும் வளரட்டும்!

*****

பிரச்னைகள்... இரண்டு வகை!


கூந்தல் பிரச்னைகளை கேசப் பிரச்னை, கேசத்தை தாங்கியிருக்கும் சருமப் (Scalp) பிரச்னை எனப் பிரித்துக் கொள்ளலாம். இதில் கேசத்தில் ஏற்படும் பிரச்னையாக முடி உதிர்வு, உடைதல் போன்ற பிரச்னைகளும், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்னையாக பொடுகு போன்ற பிரச்னைகளும் உருவாகின்றன.

கர்ப்பகாலத்தில் கொட்டும் முடி... காரணங்கள் முதல் தீர்வுகள் வரை!



கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள் எனப் பல காரணிகளும் முடி உதிர்வுக்குக் காரணமாக அமையும். அதேபோல, அப்போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் கேச வளர்ச்சி அதிகரிக்கவும் செய்யும். நபருக்கு நபர் இவை மாறுபடும். பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் திடீர் வீழ்ச்சியால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தினமும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதை பார்த்து சில தாய்மார்கள் அதிர்ச்சியாகி அரண்டு போகலாம். ஆனால், இது இயல்பானதுதான். ஆறு மாதங்களுக்குள் சரியாகிவிடும்.

கர்ப்பகாலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் மருத்துவர் பரிந்துரைக்கும் சத்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். பிரசவத்துக்குப் பின் குழந்தைதான் முக்கியம் என தன்மீது கவனமிழக்கும் பெண்கள் பலர். குழந்தை, தாய் இருவரது நலனுமே முக்கியம் என்பதை உணர வேண்டும். தேவையான அளவு உறக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை என சாத்தியமான அடிப்படை பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை உணவுகள் தவிர்க்க வேண்டும். இப்படியான முழு உணவு, அந்தக் காலகட்டத்தில் ஏற்பட வாய்ப்புள்ள ரத்த சோகையை அண்டவிடாமல் தடுத்து தாய்மைக் கான ஆற்றலையும், பொலிவையும் கொடுக்கும். கூடவே கேசமும் ஆரோக்கியமாகும். கர்ப்பகாலம், பாலூட்டும் காலத்தில் கெமிக்கல் பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் கேசம் தொடர்பான எந்த சிகிச்சையையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

எண்ணெய்க் குளியல்... எப்படி மேற்கொள்ள வேண்டும்?!



கேசத்துக்கு வேறு எந்தப் பராமரிப்பைக் கொடுக்கவில்லை என்றாலும், சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும்... குறைந்தபட்சம் எண்ணெய்க் குளியல் மேற்கொள்வது பல நன்மைகளைக் கொடுக்கும். சைனஸ், எண்ணெய்ப்பசை உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின்பேரில் முடிவெடுக்கலாம்..

செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயைக் கொண்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் அல்லது ஒரு நாள் மட்டுமாவது தலைக்குத் தேய்த்து, மசாஜ் செய்து, சிறிது நேரம் வைத்திருந்து கேசத்தை அலச வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, அதற்குள் இந்தக் கிண்ணத்தை வைத்து எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும். அந்த இளஞ்சூடான எண்ணெயை, பஞ்சில் தொட்டு, கேசத்தை வகுந்து வகுந்து, எல்லா மயிர்க்கால்களிலும் படும்படி தடவிக்கொள்ளவும். பிறகு கேசத்திலும் நுனி வரை தடவிக்கொள்ளவும்,

குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு விரல்களைக் கொண்டு மெதுவாக ஸ்கால்ப் முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு ரிலாக்ஸ்டாக இருக்கவும்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் (தண்ணீர் சூடாக இருந்தால் கேசம் சேதமாகலாம்) அல்லது சாதாரண நீரில் எண்ணெய்ப் பசை முழுவதும் நீங்கும் வகையில் மைல்டு ஷாம்பூ கொண்டு நன்றாக அலசவும்.

எண்ணெய்க் குளியல் மூலம் கேசம் வளரும் என்பதைவிட, கேசம் ஊட்டம் பெறும். வறட்சியால் ஏற்பட்ட சேதங்கள் நீங்கும். மசாஜ் செய்யும்போது ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்.

கேர் கலரிங் செய்பவர்கள் கவனத்துக்கு...



ஹேர் கலரிங் (Hair Colouring) என்பது கேசத்துக்கு விரும்பிய நிறம் கொடுக்கச் செய்யப்படும் ஒரு செயல்முறை என்பதை அறிவோம். இது கோல்டன், பிரவுன், ரெட், கிரீன், ப்ளூ என பல நிறங்களில் மேற் கொள்ளப்படுகிறது. அதற்குத் தரமான பிராண்டுகளை பயன்படுத்த வேண்டும்.

ஹேர் கலரிங் செய்யும்போது கூந்தலின் நிறத்தில் (Pigmentation) மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கேசத்தில் நீர்ச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். இதனால் கூந்தலில் சில பிரச்னைகள் ஏற்படலாம்.

ஹேர் கலரிங் செய்த பின்னர் தண்ணீர் அதிக மாகப் பருகுவதும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

ஹேர் கலரிங் செய்தவர்கள் மாதம் ஒருமுறை, இருமுறை என ஹேர் ஸ்பா செய்துகொள்வது கலரிங் கேசத்துக்கு பராமரிப்பு தரும்.

கலரிங் செய்யப்பட்ட கேசத்துக்கு மருத்துவர்/அழகுக்கலை நிபுணர் பரிந்துரைக்கும் ஷாம்பூ, கண்டிஷனரையே பயன்படுத்த வேண்டும்.

ஹென்னா பயன்படுத்தும்போது...



அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெட்டனிங், கர்லிங் செய்துகொள்பவர்கள் ஹென்னா பயன்படுத்தும்போது முழுமையான பலன் கிடைக்காது. நரைமுடிக்கு ஹென்னா பயன்படுத்துபவர்கள், பிளைன் ஹென்னா பவுடருடன் பீட்ரூட் சாறு 4 டீஸ்பூன் கலந்து, தலையில் பேக் அப்ளை செய்து, 20 நிமிடங்களுக்குப் பின் கேசத்தை அலசினால் அழகான பர்கண்டி ஹேர் கலர் கிடைக்கும். அடர்த்தி, கண்டிஷனிங் காரணங்களுக்காக ஹென்னா பயன்படுத்துபவர்கள் ஹென்னா பவுடருடன் சிறிதளவு டீ-டிக்காக்‌ஷன் சேர்த்து கேசத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

குறிச்சொற்கள் #கூந்தல் #தலைமுடி #கேசபராமரிப்பு #இளநரை #ஷாம்பூ #ஹேர்_கலரிங் #முடி_உதிர்வு #கேசம் #முடி

விகடன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 11:27 pm

முடி வளர்ச்சிக்கான ரெசிப்பி!

தலைமுடி - முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள் Vikatan%2F2019-05%2Fd1003919-e9a6-48f9-bfe2-99d4ef7305af%2Fp24b.jpg?rect=0%2C11%2C600%2C338&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

அன்றாட வளர்ச்சிக்கும், வலுவான கூந்தலுக்கும் புரதம் மிகவும் அவசியம்...

அடர்த்தியான கூந்தல், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். ''நீளமான, வலுவான கூந்தலைப் பராமரித்தால் மட்டும் போதாது. சத்துக் குறைபாடுகூட, முடியின் தன்மையையும், வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கச் செய்துவிடும்.

தலைமுடிக்கான சமச்சீர் உணவை உண்பதன் மூலமே, ஆயுள் முழுவதும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்''.

''அன்றாட வளர்ச்சிக்கும், வலுவான கூந்தலுக்கும் புரதம் மிகவும் அவசியம். கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்றவை முடியின் தன்மையை மேம்படுத்தும்.

போஷாக்கான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். வைட்டமின் இ, தலையில் ரத்த ஓட்டத்தை சீர்செய்து, முடி கொட்டுவதைத் தடுக்கும். முடியின் நுனிப்பிளவைத் தவிர்க்கச் செய்யும். முடிச் சிதைவைச் சீர் செய்ய துணைபுரியும்.

முடி கொட்டுவதைத் தடுத்து முடி நன்கு வளரச் செய்வதற்கு உதவுகிறது துத்தநாகம். இரும்புச் சத்து, முடி ஆரோக்கியத்துடன் வேர் விட்டு வலுப்பெற்று வளர முக்கியமாகத் தேவைப்படுகிறது. முடியின் நிறமான கருமையை மெருகேற்றுவதுடன் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது செம்பு.

ஆரோக்கியமான வலுவான செல் இயக்கத்துக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இதனால், முடியின் ஆரோக்கிய வளர்ச்சியை மேம்படுத்த முடியும்'' .

முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்


தேவையானவை:

முருங்கைக் கீரை - 2 கப், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 2- 3, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரை கப் கொதிக்கும் உப்பு நீரில் பொடியாக நறுக்கிய முருங்கை கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை சீக்கிரமே வெந்துவிடும். வறுத்த கடலை மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றிரண்டாக அரைக்கவும். கீரை வெந்ததும் நீர் சுண்ட, சுருளக் கிளறவும். இதில், அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், வைட்டமின் ஏ சத்துக்கள் அடங்கியுள்ளன.

முளைகட்டிய பயறு சோயா கிரேவி


தேவையானவை:

முளை கட்டிய பாசிப் பயறு - அரை கப், மிகச் சிறிய சோயா உருண்டைகள் - கால் கப், இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 2, தக்காளி - 1, எண்ணெய் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகு, சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய் - 3, மஞ்சள்தூள் - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பயறைத் தனியாக வேகவிடவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவவும்.

எண்ணெயில் மிளகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயத்தைத் தனியாக வதக்கவும்.

மிளகு, சீரகக் கலவையை அரைத்து, அதில் வதக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ஓரளவுக்கு அரைக்கவும். வெந்த பயறில் சோயா, அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். புரதச்சத்து நிறைந்த உணவு இது.

கேரட் - தயிர் பச்சடி


தேவையானவை:

: கேரட் - 2, கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க, காய்ந்த மிளகாய் விதை - அரை டீஸ்பூன், சர்க்கரை - 2-3 தேக்கரண்டி, உப்பு - அரை சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிது, தயிர் - அரை கப்.

செய்முறை:

கேரட்டைத் துருவி, அதில் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

இதில் வைட்டமின் - ஏ சத்து அதிகம் உள்ளது.

கொட்டை பழக்கலவை


தேவையானவை:

அக்ரூட் - ஒரு பிடி, பாதம் - 10, பேரீச்சம்பழம் - 4, அத்திப்பழம் - 2.

செய்முறை:

அக்ரூட் மற்றும் பாதாம் பருப்பு ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறு துண்டுகளாக்கிய பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கி பரிமாறவும். இதில் ஒமேகா - 3, இரும்புச்சத்து, வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன.

முளைக்கட்டிய பயறு அடை


தேவையானவை:

முளைக்கட்டிய கொண்டைக்கடலை, மைசூர் பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, 3, உப்பு - தேவை யான அளவு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

காய்ந்த மிளகாய், உப்பு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை, ஊற வைத்த மைசூர் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடை பதத்துக்கு தண்ணீர் விட்டுக் கலக்கவும். அதிகம் எண்ணெய் விடாமல் அடை வார்த்து எடுக்கவும்.

அதிக புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவு இது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக