புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஸ்ரீ ராம நவமித் திருநாள் Poll_c10ஸ்ரீ ராம நவமித் திருநாள் Poll_m10ஸ்ரீ ராம நவமித் திருநாள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஸ்ரீ ராம நவமித் திருநாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 29, 2023 11:28 pm


ஸ்ரீ ராம நவமித் திருநாள் Sri-rama-navami

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.

சாஸ்திரங்களின்படி, ஸ்ரீராமரின் பிறந்தநாள் சைத்ரா மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது சைத்ர நவராத்திரியின் ஒன்பதாவது மற்றும் கடைசி நாள். ஆனால் இந்த ஆண்டு ராமநவமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புராணங்களின்படி, தசரத ராமர், சகலவிதமான ஸ்ரீராமர், சைத்ர சுத்த நவமி, புனர் பூச நட்சத்திரத்தின் கடக லக்னத்தில், துல்லியமாக அபிஜித் முஹூர்த்தத்தில், அதாவது மதியம் 12 மணிக்கு, நடுவில் பிறந்தார்.

ஸ்ரீ ராமநவமி விழா 2023 ம் ஆண்டில் மார்ச் 30 ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராமநவமியின் போது சிறப்பு யோகங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராம நவமி அன்று அமிர்த சித்தி யோகம், குரு புஷ்ய யோகம், சுப யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் உருவாகிறது.

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராம அவதாரம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ராமராக அவதாரம் எடுக்க வேண்டும் என முடிவு செய்த போது, அவர் இல்லாமல் எப்படி வைகுண்டத்தில் இருப்பது என மகாலட்சுமி, ஆதிசேஷன் உள்ளிட்ட அனைவரும் வருந்தினர்.

அவர்களின் துயரத்தை போக்குவதற்காக மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பெருமாளின் கையில் இருக்கும் சங்கும் சக்கரமும், பரதன் மற்றும் சத்ருகனனாக அவதாரம் எடுத்து, பெருமாளுடனேயே இருக்கும் பாக்கியத்தை பெற்றனர். ராமர் அவதரித்த தினத்தை நாள் ராமநவமியாக கொண்டாடுகிறோம்.

இந்த வருடம் ராம நவமி வியாழன் அன்று வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஸ்ரீராமர் விஷ்ணுவின் 7வது அவதாரம். விஷ்ணுவுக்கு வியாழன் மிகவும் பிரியமான வாரம்.. வியாழன் அன்று ராம்ஜன்மோத்ஸவா நடைபெறுவதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.ராம நவமி நாளில், ஒரு கிண்ணத்தில் கங்கை நீரை எடுத்து'ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ராம்சந்த்ராய ஸ்ரீ நம' என்று 108 முறை உச்சரிக்கவும். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும். இதனால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராமநவமி வழிபடும் முறைகள்



ஸ்ரீராமநவமி அன்று வீடு, வாசல், பூஜை அரை அனைத்தையும் சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ராம நவமி விரதம் இருப்பது எப்படி அன்றைய தினம் ஒரு வேளையாவது விரதம் இருந்து ஸ்ரிராமநாமத்தை உள்ளன்போடு சொல்ல வேண்டும். ராமநாமத்தை சொல்வதோடு மட்டுமல்லாமல் எழுதுவதும் மிக சிறந்ததாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் பல்வேறு சிறப்புகள் உண்டாகும். ராமநவமி அன்று ராமரை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ராம பக்தரான அனுமனை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாகும்.

சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் தீப ஆரதானை காண்பித்த பின்னர் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து நாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ராம பஜனைகள் நடைபெறுவதை கேட்கலாம். இறுதியாக ராமர், சீதா கல்யாண வைபோகத்தை கண்டுகளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சங்கடங்கள் உள்ளவர்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை கான வேண்டும். இதனால் திருமண தடைகள் அனைத்தும் தகர்ந்து விரைவில் திருமணம் நடைபெறும்.

அன்றைய தினம் ராம பக்த்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து நீர்மோர், பானகம் கொடுப்பது சிறப்பாகும்.

யார் வழிபாடு செய்யவேண்டும்?



இந்த ராமநவமி அன்று வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் விரதமிருந்து வழிபாடு செய்யலாம். திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ராமரை வணங்கி பிரார்த்தனை செய்யலாம். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் உள்ளவர்கள் ,பிரிந்து வாழ்பவர்கள் ராமநவமி அன்று ஸ்ரீராமரை வணங்கினால் இல்வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம். அண்ணன் தம்பி சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் நீங்க ராமநவமியன்று ராமரை வழிபடலாம்.

எப்படி வழிபடுவது


இராம நாமம் சொல்லுங்கள்



"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்"


என்பது கம்பரின் வாக்கு. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.

ராம நவமியில் தானம் கொடுங்கள்



ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன. இதைத்தவிர, பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.

ராமனின் அருள் கிடைக்கும்



பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

அனுமன் அருள் கிடைக்கும்



ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே


என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரைப் போற்றிப் புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும். அதாவது, " அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமனிடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது " என்று பார்வதிதேவியிடம் இராம நாமத்தின் மகிமையைச் சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம்.

ஆகவே, நாமும் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.

ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து, பெரியவர்கள் மூலமாக ராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று இராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று, மோட்சப் பேறு கிடைக்கும் என்பது நிச்சயம்.

குறிச்சொற்கள் #ஸ்ரீராமநவமி #ராமநவமி #ஸ்ரீராமர் #ஜெய்ஸ்ரீராம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 1:28 am

ஸ்ரீ ராம நவமித் திருநாள் Ramanavami

ராம நவமி அன்று என்னென்ன பாடல்களை பாடி வழிபடலாம் என்றால் ராமனுக்குள்ள ஸ்லோகத்தை சொல்லி தொடங்கலாம்

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

அதை அடுத்து கம்பனின் வரிகள் அவசியம், கம்பன் மிக சரியான பாடலை சில வரிகளில் பாடினான், மொத்த ராமாயணமும் அந்த சில வரிகளில் அடங்குகின்றது

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை"
இந்த பாடலை பாடிவிட்டு கீழ்வரும் ஸ்லோகத்தை சொல்லலாம்

"ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்"

பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்!
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்!!

மிகுந்த அழகு வாய்ந்தவரும், பாவங்களை போக்குகிறவரும், பக்தர்களின் மனதை மகிழச் செய்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்!
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்!!

ஜடாமுடி தரித்தவரும், எல்லா பாவங்களையும் நாசம் செய்கிறவரும், பயத்தை போக்குகிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கின்றேன்.

நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்!
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராம மத்வயம்!!

ஆத்மஸ்வரூபத்தை உபதேசிப்பவரும், கருணைக்கடலும், ஜனன மரண பயம் போக்குகிறவரும், எங்கும் பரவியிருப்பவரும், மங்களத்தை செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ஸ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்!
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹராம மத்வயம்!!

உலகங்களின் இருப்பிடமாய் இருப்பவரும், நாம ரூபமற்றவரும், எப்பொழுதும் உள்ளவரும், உருவமற்றவரும்,
அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பணிகிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்!
சிதேகரூப ஸந்தகம் பஜேஹராம மத்வயம்!!

சம்சார சமுத்திரத்துக்கு படகு போன்றவரும், எல்லா சரீரங்களிலும் வியாபித்தவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணாமூர்த்தியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

உலக சம்பந்தமற்றவரும், நிர்குணமானவரும், பாவமற்றவரும், அழிவற்றவரும், தேஜோரூபியும், இணையற்றவருமான ஸ்ரீராமனை கொண்டாடுகிறேன்.

பவாப்திபோத்ரூபகம் ஹ்யசேஷ தேஹகல்பிதம்!
குணாகரம் க்ருபாகரம் பஜேஹராம மத்வயம்!!

மகாவாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாயும், வியாபகமாயும் திகழ்பவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

மஹாவாக்ய போதகைர்விராஜமானவாக்பதை:!
பரம்ப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்!!

மங்களத்தைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறவி பயத்தை போக்குகிறவரும், அஞ்ஞானத்தை அழிக்கிறவரும், குருவும், இணையற்ற வருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

சிவப்தரம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்!
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்!!

மகாவாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாயும், வியாபகமாயும் திகழ்பவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ராமாஷ்டகம்படதி யஸ்ஸுகரம் ஸுபுண்யம்
வ்யாஸேன பாஷிதமிதம் ச்ருணுதே மனுஷ்ய:

மங்களத்தைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறவி பயத்தை போக்குகிறவரும், அஞ்ஞானத்தை அழிக்கிறவரும், குருவும், இணையற்ற வருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

வித்யாம்ச்ரியம் விபுலலௌக்யமனந்த கீர்த்திம்
ஸம்ப்ராப்யதேஹ விலயே லபதே சமோக்ஷம்!!

இதி ஸ்ரீ வியாஸ மஹரிஷி விரசிதம்
ஸ்ரீராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்.

வியாசரால் சொல்லப்பட்டதும், சுலபமானதும், புண்ணியத்தை தருவதுமான இந்த ராமாஷ்டகத்தை படிக்கிறவரும், கேட்கிறவரும், கல்வி, செல்வம், அளவற்ற சுகம், எங்கும் பரவு புகழை அடைந்து முடிவில் மோட்சத்தையும் அடைவார்.

இதனை பாடிவிட்டு கடைசியாக கை கூப்பி வணங்கி சொல்லலாம்

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||

"எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான். ‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார். அரக்கர்களுக்கு எமனாக விளங்கும் ஆஞ்சநேயரை வணங்குகிறேன்."


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 6:55 am

ஸ்ரீ ராம நவமித் திருநாள் Picsar38

ராம ராம ராம நாமம்
சாபம் தீர்க்கும் சங்கு தீர்த்தம்
பாவம் தீர்க்கும் யோகநாதம் ராம நாமமே!

ஜெயஜெயராமா ஜானகிராமா சீதாராமா சிவராமா
கோசலராமா கோதண்டராமா ராஜாராமா ரகுராமா

தசரதனின் தவமைந்தன் ரகுராமனே - அருள்
தவமுனிவன் குருகுலத்தில் குணசீலனே
மிதிலாபுரி சுயம்வரத்தில் யுவராமனே
சீதை முகம்நாண வில்லொடித்த சிவராமனே
தந்தை சொல்லுக்கு தியாக வனவாசம்
சென்ற ஸ்ரீராமனே - தாரம் தம்பியுடன்
தேசம் கடந்தாலும் பாசப்பரந்தாமனே
கல்லில் முள்ளில் நடந்தான் நாடாளும் ராஜாராமன்!

குகனோடு ஐவரான குலராமனே
வாயு மகனந்த அனுமானின் குருராமனே
பொய்மானால் பெண்மானைப் பிரிந்தாலுமே
மனம் கலங்காது தலைநிமிர்ந்த தவராமனே
வங்கக் கடல்தாண்டி வாழும்
ராவணன் பத்து தலை கொய்தவன்
ஒருத்தி மகனாக ஒருத்தி கரம்சேர்த்து
பண்பின் பொருள் சொன்னவன்
கோவில் சிலையாய் நெஞ்சில்
குடிகொண்ட கோதண்டராமன்!!!

கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக