புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 5:57 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1775
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 01, 2023 2:03 pm


நாளும் ஒரு நற்சிந்தனை
நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


வானதி பதிப்பகம், 23. தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 280 ; விலை : ரூ.300.
*****

நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். வழக்கறிஞராகத் தொடங்கி உச்சநீதிமன்ற நீதியரசர் வரை உயர்ந்தவர். நேர்மையானவர். காந்தியத்தை கடைபிடித்து காந்திய வழி நடப்பவர். ஒரு தீர்ப்பில் காந்தி அருங்காட்சியகம் சென்று சத்திய சோதனை நூல் படிக்க வலியுறுத்தியவர். மதுரை காலேஜ் ஹவுசில் நடந்த உலகத் திருக்குறள் பேரவையில் சிறப்புரையாற்றியவர். தெளிந்த நீரோடை போன்று உரை நிகழ்த்துபவர். மிகச்சிறந்த ஆளுமையாளர் எழுதி உள்ள வாழ்வியல் உணர்த்தும் அறநெறி போதிக்கும் அற்புத நூல் இது.

வானதி பதிப்பகம், பதிப்புச் செம்மல், மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் சிறப்பான பதிப்புரை வழங்கி உள்ளார். உச்சநீதிமன்ற நீதியரசராக இருக்கும் வெ.இராமசுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. உள்ளது உள்ளபடியே எழுதி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் வழக்கறிஞராக இருந்த போதிலிருந்து நீதிமன்றம் செல்வதற்கு நீதியரசர் இராம சுப்பிரமணியன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றதை மறக்காமல் எடுத்து இயம்பி நன்றியுடன் அணிந்துரை வழங்கி உள்ளார்.

நூலில் உள்ள எல்லாக் கருத்துக்களும் சிறந்தவை தான். கடைபிடித்தால் வாழ்க்கையில் சிறக்கலாம். உயரலாம். வாழ்வாங்கு வாழலாம். வாழ்க்கைக்குப் பயன்தரும் கருத்துக்களின் பொன்மொழிகளின் சுரங்கமாக உள்ளது. புகழ்பெற்ற அறிஞர்கள் சொன்னது, பேசியது, நூலாசிரியர் நீதியரசர் மேடையில் பேசியது என அனைத்தையும் தொகுத்து சிக்கனமான வரிகளுடன் தத்துவ விருந்தாக, துன்பம் நீக்கும் மருந்தாக, தன்னம்பிக்கை விதைக்கும் விதையாக வழங்கி உள்ளார்.

பதச்சோறாக நூலிலிருந்து சில வைர வரிகள் மட்டும் இங்கே மேற்கோள்களாக எழுதி உள்ளேன். படித்துப் பாருங்கள். நூலினை வாங்கி முழுமையாகப் படித்துப் பயன் பெறுங்கள்.

நம்மை விரும்புவோருக்காக வாழ வேண்டும்!
நம்மை வெறுப்போருக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்!

என்ன வாழ்க்கை என்று விரக்தி அடையாமல் நம்மை விரும்புபவர்களுக்காக வாழ வேண்டும். நம்மை வெறுத்தவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உந்துசக்தி தரும் ஊட்டக்கருத்துக்களை நூல் முழுவதும் வழங்கி உள்ளார். நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்கள் ‘ஆயிரம் ஹைக்கூ’ என்று நூலிற்கு நீண்ட நெடிய மதிபுப்ரை வழங்கி என்னை மகிழ்வித்தார்கள். பரபரப்பான நீதியரசராக இருந்த போதும் நேரம் ஒதுக்கி மதிப்புரை அனுப்பி வைத்தார். பண்பாளர், நெறியாளர். எளிமையானவர், இனிமையானவர், இப்படி எழுதிக் கொண்டே செல்லலாம். மிகச்சிறந்த மாமனிதர் நூலாசிரியர்.

ஆரோக்கியத்திற்கு வழிகள் ஏழு!

1. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது.

2. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது.

3. எப்போதும் திருப்தியாக இருப்பது.

4. எப்போதும் புன்னகையோடு இருப்பது.

5. எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது.

6. எப்போதும் பணியில் ஈடுபடுவது

7. எப்போதும் பணிவாக இருப்பது.

இந்த ஏழு வழிகளை வாழ்க்கையில் கடைபிடித்தால் நோய் வராது, நலமான வாழ்க்கை வசமாகும். கவலை, சோகம் மறந்து புன்னகையுடன் மனமகிழ்ச்சியுடன் தொடர்ந்து செயல்பட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும் என்பதை கவிதை நடையில் தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் ரத்தினச் சுருக்கமாக உணர்த்தி உள்ளார்.

அறுபது சொல்வது அனுபவ நிஜம் - அதை
இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்

மூத்தோர் சொல் அமுதம் என்பதை அழகாக எழுதி உள்ளார். அனுபவம் மிக்கவர்களான அப்பா, தாத்தா சொல்வதை மகன், பேரன் என்ற இளைய தலைமுறையினர் கேட்டு நடந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதை நன்கு உணர்த்தும் நற்கருத்து.

மரத்தின் பெருமை அதன் உயரத்தில் இல்லை
அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது
மலர்களின் பெருமை அதன் நிறத்தில் இல்லை
அதன் மணத்தைப் பொறுத்தது
மனிதனின் பெருமை அவனது பதவியைப் பொறுத்ததில்லை,
அவன் செய்கிற தொண்டைப் பொறுத்தது!

பெரிய பதவியில் இருப்பது பெருமை அல்ல, அப்பதவியின் மூலம் எவ்வளவு தொண்டை செய்தோம் என்பதே முக்கியம் என்பதை பல உவமைகளுடன் எடுத்து இயம்பியது சிறப்பு.

இயலாமல் தோற்பது வேறு
முயலாமல் தோற்பது வேறு
இயலாமல் தோற்பது இழுக்கு
முயலாமல் தோற்பது பேரிழுக்கு

முயற்சி திருவினையாக்கும் என்பதையும் முயலாமல் இருப்பது முட்டாள்தனம், இழுக்கு என்பதையும் குறைந்த சொற்களின் மூலம் நிறைந்த கருத்துக்களை வலியுறுத்தியது நன்று.

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது

எதையும் முயல வேண்டும், முயன்று தோற்றால் வருந்தாதே, அனுபவமாக எடுத்துக்கொள். அடுத்த முறை வெற்றி காண்பதற்கான பயற்சியாக அனுபவமாக எடுத்துக்கொள் என்று ஆறுதலான வார்த்தைகளின் மூலம் தோல்வியால் துவண்ட நெஞ்சத்திற்கு மருந்து தடவுகிறார்.

அடிபடாத தங்கம் ஆபரணம் ஆவதில்லை
துளை இடாத மூங்கில் புல்லாங்குழல் ஆவதில்லை
உளி படாத கல் சிலை ஆவதில்லை
சவால்கள் இல்லாத வாழ்க்கை சரித்திரம் ஆவதில்லை!

போராட்டம் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் போராடி வெல்ல வேண்டும். தோல்விக்கு துவளக் கூடாது. சவால்கள் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வென்று காட்டுவதே வாழ்க்கை என வலியுறுத்தியது சிறப்பு.

மலர்ந்த முகம் நந்தவனம்!
மலர்ச்சி இல்லாத முகம் ஒரு மயானம்!

முகத்தை மலர்ச்சியாக புன்னகை ஏந்தியபடி இன்புற்று இருப்பது சிறப்பு. உம்மென்றும், உர் என்றும் சோம்பி இருப்பது நன்றன்று என்பதை மிக நுட்பமாக எழுதி உள்ளார். நந்தவனம் மயானம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஒரு நல்ல பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
அருவியின் ஓசை! ஆற்றின் ஓட்டம்!
அலைகடலின் தாளம்!

இவை மூன்றும் கலந்ததாக இருக்க வேண்டும்

நூலாசிரியர் நீதியரசர் மு.கற்பக விநாயகம் அவர்களின் உரையும் மேற்கண்டவாறு தான் இருக்கும். பேச்சாற்றலால் சிகரம் தொட்டவர், எழுத்தாற்றலாலும் சிகரம் தொட்டுள்ளார். படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் கவலை, விரக்தி வரும்போதெல்லாம் மறுவாசிப்பு செய்து மனதை செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் சிறந்த நூல் இது. படிக்க, பாதுகாக்க பயன்படும் பண்பு வளர்க்கும் பண்பாளர் நூல். பாராட்டுகள், வாழ்த்துகள்.



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக