புதிய பதிவுகள்
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Today at 11:54 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
by E KUMARAN Today at 11:54 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
heezulia |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தேவதாசிகள் என்பவர்கள் யார்? தேவதாசி முறை எப்படி தோன்றியது?
Page 1 of 1 •

தேவதாசிகள் என்பவர்கள் யார்?
தேவதாசி முறை எப்படி தோன்றியது?
சங்க இலக்கியங்களில் தேவதாசிகளின் பங்கு என்ன?
சோழர் காலத்தில் தேவதாசிகளின் பங்கு என்ன?
#தேவதாசி என்ற சொல்லுக்கு இறைப்பணி செய்யும் பெண் என்று பொருள். தமிழில் தேவரடியார்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் மிகுந்த செல்வாக்குடனும், அந்தஸ்துடனும், நில உரிமைகளுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் #தேவரடியார்கள் பாடினி, விறலி என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள் முதலில் நமது பண்டைய சமூகத்தில் பொது மகளிர் என்று அறியப்பட்டவர்கள் இரு வகைகளாக சமூகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர்.
.அவையாவன,
1. திருமண நிலைக்கு வராமல் தன்னை பரத்தையர்களாக அறிமுகப்படுத்தி பிடித்த ஆண்களுடன் தொடர்பில் இருக்கும் பெண்கள். அதாவது ஆண்களின் காம இச்சையை போக்கும் பொது மகளிர். இந்த நிலையை தொல்காப்பியம் மூன்று நிலைகளாக வரையறுக்கும்.
2. தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டு ஆடல் பாடல் கலைகளில் தங்களை ஈடுபடுத்தி இறைவனுக்கு தன்னை அற்பணித்து கோயிலுக்கு திருப்பணி செய்து சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்து வந்த பெண்கள்.
தொல்காப்பியம் பரத்தையர்கள் பற்றி குறிப்பிடும்போது இல் பரத்தையர்கள் சேரி பரத்தையர்கள் காதல் பரத்தையர்கள் என்று வகைப்படுத்துகிறது. இதில் ஒவ்வொரு வகைக்கும் மிக நீண்ட விளக்கத்தை தரும் தொல்காப்பியர் இப்பெண்களை யாராவது கட்டுப்படுத்தினர் என்றோ #விலைமகள்கள் என்றோ யாராவது இப்படி செய்ய நிர்பந்தம் செய்ததாகவோ குறிப்பிடவில்லை. இதே கருத்தை தான் பிற சங்க இலக்கிய நூல்களும் சொல்கின்றன. இதன் அடிப்படையில் இந்த பரத்தையர்கள் என்பவர்கள் சுய சார்போடு அவர்களின் விருப்பப்படிதான் வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம். இப்படி சுயச்சார்புடன் தனது தேவையை தானே பூர்த்த செய்யும் ஒரு பெண்ணாக இருந்த #பரத்தையர்கள் தான் பிற்காலத்தில் தேவதாசிகளாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். ஏனெனில் பரத்தையர்கள் வேறு இசைக்கலைஞர்களான தேவரடியார்கள் வேறு என்பதே வரலாற்றின் பார்வை…!
இதன் அடிப்படையில் பண்டைய சமூகத்தில் அனைத்து மகளிருக்கும் கலை என்பது பொதுவானதாக இல்லை என்பதையும் இதற்காக ஒரு சமூகம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அதே சமயம் கலைஞர்களாக இருந்தவர்கள் அனைவரும் பரத்தையர்களாக இல்லை என்பதும் பரத்தையர்களும் கலைகளை அறிந்திருந்தனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக தொல்காப்பிய உரையில் இளம்பூரணர் கூறுகிறார், “பரத்தையர் யாவரெனில் அவர் ஆடலிலும், பாடலலிலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பெருளும் வெட்கி ஒருவர் மாட்டும் தாங்கார்” என்கிறார். அதாவது தனது கலைகளின் மூலம் ஆண்களின் பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்பவர்கள் தான் பரத்தையர்கள் என்கிறார்…!
“மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென” – அகநானூறு. |
“மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால் இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத் தொட்டு,ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி கெட்டதைப்” – பரிபாடல். |
விளக்கம் :
அதாவது காம வயலில் ஏர் பூட்டி உழுபவர்களுக்கு மூடியைத் திறந்து வைத்திருக்கும் கள்ளுக் குடம். கண்ணைக் கயிறாக்கி, ஆண்கள் தோளைக் கட்டிப் போட்டு, தன்னை யாழாக்கி, அவன் தன் நரம்புகளைத் தடவுமாறு செய்யும் பொதுமகள். என்பதுபோன்ற விளக்கங்களை தருகிறது. அதோடு ஆண்களின் காம இச்சையை பூர்த்தி செய்த இந்த பரத்தையர்கள் துணங்கை என்ற பெயருடைய நடனத்தை ஆடியதாக #சங்க_இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.உதாரணமாக,
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம் புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்; நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே” – கலித்தொகை. |
விளக்கம்:
நான் விலகி இருக்கும்படி விட்டுவிட்டதால் அழுகையிலிருந்து மீளாத என் கண்களிலிருந்து வழியும் நீர் பட்டு என் மகன் என்னை நெருங்காமல் அழுகிறான். நீயோ உனக்கு ஒத்த பெண்களை உன் வளமனைக்கு அழைத்து வந்து அவர்களோடு துணங்கை ஆடிக்கொண்டிருக்கிறாய். அந்த ஓசை என் காதுகளைத் தட்டுகிறது.“எற் புறங்கூறும் என்ப;தெற்றென வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் கண் பொர, மற்று அதன்கண் அவர் மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே” – குறுந்தொகை |
விளக்கம் :
வளைந்த தோளைத் தழுவிக்கொடு வளைக்கை மகளிரும் மைந்தரும் ஆடும் #துணங்கை_விழா வருகிறது அப்போது அந்த ஊரன் யாரைத் தழுவிக்கொண்டு ஆடுகிறான் என்பதை நான் பார்த்துவிடுகிறேன் என்று தோழி பரத்தையரை பார்த்து கூறுவதாக வருகிறது….!நாம் இதுவரை பார்த்தது ஆண்களின் காம இச்சையை போக்கும் பரத்தையர்களும் அவர்களின துணங்கை என்ற நடனத்தையும் விரிவாக கண்டோம். இனிமேல் கலைஞர்கள் அதாவது பொது மகளிரின் இரண்டாவது வகையான இன்று தேவரடியார்கள் என்று அழைக்கப்படும் சமூகமானது சங்க இலக்கியங்களில் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்…!
“துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை” – புறநானூறு. |
விளக்கம் :
பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை என்று மாங்குடி கிழார் கூறுவதில் பாணர்கள் என்பதே கலையை வளர்த்த சங்ககால சமூகமாகும். பொதுவாக பாணர்கள் ஒரே இடத்தில் இருந்து கலைகளை வளரக்கவில்லை மாறாக ஊர் ஊராக சென்று கலைகளை வளர்க்கும் திறன் உடையவர்கள். இதை பழமொழி நானூறு “பாண்சேரி பண் கிழக்குமாறு” அதாவது பாணர்கள் இருக்கும் இடத்திற்கு பாண் சேரி என்று பெயராம். அதாவது இந்த பாடலின் பின்னணி என்னவெனில் மிகுந்த அறிவுடையோர் இருக்கும் ஒரு சமையில் அறிவில்லாதவர் ஒருவர் நுழைந்து அறிவுரை கூறினால் எப்படி இருக்குமெனில் பாண் சமூகம் இருக்கும் இடத்தில் கலை அறிவில்லாதவர் சென்றால் கலையை வெளிப்படுத்தினால் எப்படி இருக்குமோ அதேப்போன்றது என்று பாண் சமூகத்தின் கலைத்திறனை எடுத்துக்கூறுகிறது பழமொழி நானூறு..!“பாணருளும் இசைப்பாணரும் யாழ்ப்பாணருளும் மணடைப்பாணருளுமெனப் பலராம்” – தொல்காப்பியம். |
அதாவது நச்சினார்க்கினியர் இதற்கு உரை எழுதுகையில் இசைக்கருவிகளுக்கு ஏற்ப பாணர்கள் பல்வேறு பெயர்களில் பல்வேறு குழுக்களாக இருந்ததாக கூறுகிறார்.!
“திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி, நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில், மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு” – மலைபடுகடாம். |
இப்படி பாண் சமூகத்தவர்கள் ஊர் ஊராக இசைக்கருவிகளைக்கொண்டு கலையை வளர்த்த தகவலை தருகிறார்கள். இப்படி பாண் சமூகத்தால் பெண்கள் இருந்ததையும் அவர்களை பாணினி, விறலி என்று அழைக்கப்பட்டதாகவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக,
“மறம் பாடிய பாணினி” (புறம்) “பாணினி பாடும் வஞசிக்கு” (புறம்) “சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து” (புறம்) |
பாணர்களின் கலையானது அவர்கள் உயிரோடு கலந்தது என்பதை புறப்பாடல் ஒன்று “பாணர் நரம்பின் சுகிரொடு” என்று குறிக்கிறது. மேலும் அகநானூற்றின் இந்த வரிகள் பாணர்கள் அரசர்கள் மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் தெரிய வருகிறது,
“எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்” |
விளக்கம் :
போரில் மாண்டுவிட்ட அரசனை பார்த்து அவனைத் தொழும் வகையில் பாணர் தம் தோளில் மாட்டியிருந்த ஊதுகொம்புகளை (இசைக்கருவி) நிலத்தில் கிடத்தினர். அந்தக் கொம்புகள் கிடப்பது போல, கொன்றை நெற்றுகள் நிலத்தில் கிடக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார். அதாவது அவர்கள் உயிருக்கும் மேலானதாக மதிக்கும் இசைக்கருவியையே வீசி எறியும் அளவுக்கு அரசர்கள் மீது பற்று கொண்டிருந்த தகவலை விளக்குகிறது.இப்படி தன்னை வரலாற்றில் ஈடுபடுத்திய பாண் சமூகத்தில் விறலி, பாடினி என்று அடையாளப்படுத்தியவர்கள் காப்பிய காலத்தில் கணிகையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் பல்லவர் காலத்தில் அடிகள்மார், மாணிக்கத்தார் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர். பின்னர் பக்தி இலக்கிய காலத்தில் கோயில்களிலும் தனது பங்களிப்பை காட்ட துவங்கினர் என்கிறது வரலாறு..!பக்தி இலக்கிய காலத்தில் தேவரடியார்களின் நிலை என்ன?
கோயில் என்று ஒன்று இருந்தால் அக்கோயிலுக்கு திருப்பணி செய்ய ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் கோவிலை பெருக்குதல் (திருஅலகிடல்) கோவிலைச் சாணமிட்டு மெழுகுதல் (திருமெழுக்கிடல்) பூஜைகளுக்குண்டான மலர்களை பறித்து மாலைகள் கட்டுதலோடு நில்லாமல் ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளின் மூலம்
இறைவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் மகிழ்வித்தார்கள். அதோடு அவர்களுக்கு தொண்டு செய்து கோயில் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளனர். இப்படி பணியாற்றாயவர்களுக்கு தலைக்கோலி என்ற பட்டப்பெயரும், நில தானங்களும் அளிக்கப்பட்டன…!
ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சைவசித்தாந்த இலக்கியங்களில் மிக மூத்ததாக கருதப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரத்தின் 56 ஆவது பாடலில் கோயில்களில் பணி செய்ய ஆடல் பாடலில் தேர்ச்சிப் பெற்ற கணிகையர் இருந்தார்கள் என்ற குறிப்பு உள்ளது,
“பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே” – திருமந்திரம். |
ஏழாம் நூற்றாண்டில் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரச பெருமான் திருவாரூர் திருவாதிரை நாள் குறித்து பாடிய பதிகத்தில், “அழகிய ஆபரணங்களை பூண்ட மார்பினையுடைய தேவலோகபெண்கள் போன்ற தளியிலார் காணப்படும் தெருக்கள் ” என்று தேவரடியார்களை தேவலோக பெண்களுக்கு ஒப்பிடுகிறார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் காஞ்சி முக்தீஷ்வரர் கோயிலில் 44 பெண்கள் ஆடல் பாடல் இசை நிகழ்ச்சி நடத்தினர். இவர்களுடன் பூஜை செய்ய பிராமணர் மூவர், மேளம் கொட்ட இருவர், ஸ்லோகம் சொல்ல ஐவர், உதவிக்கு 12 பேர் என 66 பேர் இருந்தனர். இவர்கள் குடியிருந்த பகுதிக்கு தளிப்பரிவாரம் என்று பெயர் இருந்தத செய்தியை ( S.i.i . Vol 4 – no 827) தருகிறது.மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் திருவல்லம் சிவன் கோயிலில் திருப்பணி செய்ய ஐந்து பெண்கள் இருந்துள்ளனர் என்பதையும் இவர்களை “மாணிகள் ஐவர் ” என (Ins 303 of 1901) இக்கல்வெட்டுச்செய்தி குறிப்பிடுகிறது….!
இந்த தேவதாசி முறை எங்கே தோன்றியது? இதன் வரலாற்றுப்பின்னணி என்ன என்பது பற்றி பல ஆய்வு நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த தேவதாசி முறையின் ஆரம்பமாக சிந்துசமவெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோவில் கிடைத்த ஒரு நடன மங்கையின் சிற்பத்தை கொண்டு இம்முறை உருவான காலமாக இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இங்கேயே இந்த இராஜராஜ சோழன் தான் தேவதாசி முறையை ஆரம்பித்தான் என்ற கட்டுக்கதை உடைந்துவிடுகிறது….!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்தபோது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக கூறப்படுபவற்றின் உண்மைத் தன்மை என்ன?
1. தேவதாசிகள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
2. ஒரே தனிப்பட்ட சாதியில் இருந்து வந்தவர்களே தேவதாசிகளாக இருந்தனர்.
தேவதாசிகளுக்கு திருமணம் செய்யும் அனுமதி இருந்ததா?
1049 ஆவது ஆண்டில் திருவொற்றியூர் சிவன் கோயிலில் முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுத் தகவலின்படி சதுரன் சதுரி எனும் ஒரு தேவரடியார் நாகன் பெருங்காடார் என்பவரின் மனைவியாக இருந்துள்ளார். (ஆதாரம் : Ins 147 of 1912)
அடுத்ததாக மூன்றாம் குலோத்துங்கச்சேழனின் 11ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தஞ்சை மாவட்ட அச்சுத மங்கலத்தில் உள்ள கோயில் ஒன்றில் பணிபுரிந்த தேவரடியார் திருமணம் ஆனவர் என்ற தகவல் கிடைக்கிறது. ஆதாரம் : (Ins 147 of 1925) இதன் அடிப்படையில் சோழர்கள் காலத்தில் தேவரடியார்களுக்கு திருமணம் செய்யும் உரிமை இருந்தது என்பதை அறியலாம்….!
தேவதாசிகள் ஒரே சாதியில் இருந்து வந்தவர்களா?
உறையூரை ஆண்ட நந்த சோழரின் மகள் மகள் தன்னை இறைவனுக்கு அற்பணித்தார் என்ற செய்தி சோழர்களின் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது.முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியாக இருந்த ஆச்சப்பிடாரன் கணபதி நம்பி என்ற அழகிய பாண்டிய வல்லவரையன் பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் கோவிலில் உழுவரா பணிகளைச் செய்வதற்கு தன் குடும்ப பெண்களைத் தேவரடியார்களாக ஒப்புவித்தான் என்று திருவல்லம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது….!
அதோடு குலசேகராழ்வாரின் மகள் நீலாதேவி திருவரங்க பெருமானுக்கு தேவதாசியாக அற்பணிக்கப்பட்டார் என்பதுபோன்ற செய்திகளின் மூலம் அரச குடும்பங்களில் இருந்தும் உயர் குலங்களாக இன்று கருதப்படுவோரின் மகள்களும் தேவதாசிகளாக இருந்துள்ளனர் என்பதை அறியலாம். இதில் மிக முக்கியமாக சோழர் பாண்டியர்கள் காலத்தில் இருந்த தேவரடியார்களின் பெயர்களை கவனித்தால் இந்த வாதங்கள் புரட்டு வாதங்கள் என்பது புரியும். அதாவது சோழ பேரரசின் குடும்ப பெயர் கொண்டோர் கூட தேவதாசிகளாக இருந்துள்ளனர்.
உதாரணமாக செம்பியன் மாதேவி, திரிபுவன மாதேவி, வானவன் மாதேவி, குந்தவை போன்ற பெயரிலும் தேவரடியார்கள் இருந்திருக்கிறார்கள். மறறும் தென்னவன் மாதேவி, மீனவன் மாதேவி என்ற பெயரிலும் மதுரவாசகி, அற வாட்டி,சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, சோழதேவி,சோழவல்லி போன்ற பெயர்களே உதாரணமாகும்….!
தளிச்சேரிப் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக சூடு வைக்கப்பட்டதா?
அக்காலத்தில் பொதுவாக சிவன் கோவிலில் பணிசெய்யும் தேவரடியார்களுக்கு சூல இலச்சனையும், வைணவக் கோயில்களில் இறைப்பணியாற்றும் தேவரடியார்களுக்குச் சக்கர இலச்சினையையும் பச்சைகுத்துவது கோவில் மரபு. முதலாம் குலோத்துங்கனின் 49 ம் ஆட்சியாண்டில் இருமுடி சோழ தெரிந்த வில்லிகள் என்ற படைத்தலைவன் கணபதி நம்பியாகிய அழகிய பாண்டிய பல்லவரையன் என்பவன் தன் குடும்ப பெண்கள் சிலரை சூல இலச்சனையிட்டு திருவல்லங் கோவிலில் தேவரடியராக பணி செய்ய விட்டான் என்பது வரலாறு. எவ்வளவு போற்றத்தக்கதாய் இருக்கும்..? இப்பெண்களை பொது மகளிரோடு (விலை மாதர்கள்) ஒப்பிடுதல் நியாயமா..?
இராஜராஜ சோழன் 400 தேவதாசிகளை விபச்சாரிகளாக வைத்திருந்தானா?
பேரரசன் இராஜராஜச் சோழன் தஞ்சை பெரிய கோயிலாம் இராஜராஜீவரம் என்னும் பெருங்கோயிலை மிக பிரம்மாண்டமாக எடுக்கிறார். இக்கோவிலில் அதாவதுதஞ்சை பெரிய கோயிலுக்கு இறைபணி செய்வதற்கும், ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவும் மற்றும் கோயிலை பராமரிக்கவும் 400 பெண்களை பணிக்கு அமர்த்துகிறார். இவர்கள் சோழநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தஞ்சைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்…!
இவர்களுக்கு கோயில் அருகிலேயே வீடுகட்டிக் கொடுத்து, பாதுகாப்பாக தங்கவைத்து, அவர்கள் செய்யும் இறை பணிக்கு ஊதியம் அளித்து, அவர்களது வாழ்வாதரத்தை பாதுகாத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பையும் அளிக்கிறார். இப்பெண்கள்தான் #தளிச்சேரி_பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். அதாவது இவர்கள் தேவரடியார்கள். இவர்களது பெயர், இவர்களது பணி, குடியிருக்கும் வீடு,வழங்கப்பட்ட ஊதியம் என்று பல செய்திகளை விரிவாகத் தருகிறது தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு ( S.i.i. vol 2. No 66 ) இந்த கல்வெட்டு கூறுவதாவது,
“சோழ மண்டலத்து தளிச்சேரிகளில் நின்றுங் கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்கள்” |
பொருள்:
இவர்கள் ஏற்கனவே சோழ மணடலத்தில் இருந்த தளிச்சேரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இங்கு இராஜராஜ சோழன் தான் தளிச்சேரியை உருவாக்கினான் என்ற கூற்று முற்றிலும் தவறாகிறது….!இங்குதான் ஒரு சிலர் தாங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் அதாவது இறை பணி செய்யும் பெண்களை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்தி அப்பெண்களை மட்டுமல்ல இறைவனையே அவமதித்தார்கள் என்று எழுத துவங்கி விட்டனர்.
தேவரடியார்கள் மகேஸ்வரர்கள் என்று அழைக்கப்பட்டார்களா?
ஆம் பொ.ஆ 1079ல் மணவாளேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடபுறச்சுவரில் இரண்டாம் ராஜேந்திரச் சோழன் எடுப்பித்த கல்வெட்டு ஒன்றில் இக்கோயிலில் உள்ள தேவரடியார்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை நம்பிமைத் திருவமுது என்றும் இந்த தேவரடியார்களை #மகேஸ்வரர்கள் என்று அழைக்கப்பட்ட செய்தியும் உள்ளது….!
கல்வெட்டு :
(பத்தாவது வரி) “தேவரடியாராய் வந்த ஸ்ரீமஹாதேவர்க்கு நம்பிமைத் திருவமுது செய்விக்க ஸ்ரீமஹாதேவர்க்கு”ஆதாரம் : (தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர் எண் 8/1997)
இப்படி நமது பண்டைய சமூகத்தில் பொது மகளிர் இரு தரப்பினராகவும் அவர்களில் ஒரு பிரிவினரான தேவரடியார்கள் மூவேந்தர்கள் காலத்தாலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர் என்பதை பாரத்தோம். இப்படி நல்ல நிலையில் இருந்த தேவரடியார்கள் எப்படி தாசிகள் ஆனார்கள் என்பதையும் அதற்கான காரணங்களையும், தேவதாசி ஒழிப்பு சட்டத்தின் போக்கையும் பிற்காலத்தில் தேவரடியார்ளின் கல்வியின் நிலை என்ன என்பதையும் இன்னொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்…!
(கல்வெட்டுத் தகவல் உதவி – தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்கள்)
– பா இந்துவன்
bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1