புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 6%
Anthony raj
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ரேவதி2023
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
57 Posts - 10%
heezulia
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
23 Posts - 4%
prajai
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
manikavi
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_m10ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 3:43 pm

First topic message reminder :

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 F8UUreu

ஐபிஎஸ் அதிகாரி டூ ஆளுநர் - யார் இந்த ஆர்.என்.ரவி?


பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்என் ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்என் ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்என் ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.

இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய ஆர்என் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர். 2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்என் ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராகியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Barrab10

கடந்த ஆட்சி வரை தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில் பஞ்சமில்லா லஞ்ச லாவண்ய ஊழல் ஆட்சியில் திளைத்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர்.

அதே கனவுடன் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தற்பொழுது உள்ள திராவிட மாடல்? அரசு.

ஆட்சிக்கு வந்ததும் யாரையோ திருப்திப் படுத்த வேண்டிய நிர்பந்த நிலையில் ஈஷா யோகா அறக்கட்டளையை தவிடுபொடி ஆக்க வேண்டும் எனக் கிளம்பினார்கள். அதற்கு பதிலடி டெல்லியில் இருந்து கிடைத்ததும் ஈஷாவை விட்டுவிட்டு ஓடினார்கள்.

அடுத்து வழக்கம் போல் இந்து அழிப்பு பணியே பிரதான பணி என இதுவரை நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிக்கிறது திராவிட மாடல் அரசு.

இவற்றையெல்லாம் வெற்றிகரமாக சாதித்த ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுக அரசுக்கு ஊழல் செய்ய இடையூறாக இரண்டு முன்னாள் ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் வந்து இப்படி முட்டுக்கட்டை போடுவார்கள் என கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒருவர் அண்ணாமலை ஐ‌பி‌எஸ் மற்றொருவர் ஆர்.என்.ரவி ஐ‌பி‌எஸ்.

ஒருவர் ஊழல் செய்ய திட்டமிடும் பொழுதே இதில் ஊழல் செய்ய திட்டமிடுகிறார்கள் என அறிவித்து விடுகிறார். மற்றொருவர் இதுவரை செய்த ஊழல்களையெல்லாம் எப்படி செய்தார்கள் என அறிவிக்கிறார்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போன்ற இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட திராவிட மடல் அரசு, தனது மீடியா சக்தி, தனது அல்லக்கை அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள், அவ்வப்பொழுது நேரடியாகவும் இவர்களுடன் மோதிப்பார்க்கிறது. இதுவரை தோல்விகளே எஞ்சியுள்ளது திராவிட மாடல் அரசுக்கு....

ஆர்.என்.ரவி திமுகவிற்கு எதிராக அதிகம் பேசிய பேச்சின் மூலப்பொருள்.

நீட்
மும்மொழித் திட்டம்
புதிய கல்விக் கொள்கை
சனாதனம்
கால்டுவெல்
திராவிடம்
மசோதா நிலுவை

தற்போழுது முதலமைச்சர் குடும்பமே நேரடியாக ஆளுனருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த காரணமான ஆளுநரின் பேச்சு ஸ்டெர்லைட் போராட்டம்.

இறுதியாக (இன்று) திமுக ஆளுனருக்கு எதிராக எடுத்துள்ள வாசகம் "ஆளுநர் பதவி, அவசியமில்லாத பதவி"

இதுவரை ஆளுனருக்கும் திமுகவினருக்கும் என்ன பிரச்சனை, இனிமேல் வரப்போகும் அரசியல் யுத்தம் என அனைத்தையும் செய்தித் தொகுப்புகளாக இங்கு பார்ப்போம்.

அதற்கு முன் அவரது பேச்சுக்களின் சுருக்கத்தை ஒரு பார்வையிடுவோம்.


போராட்டம்:


* ``வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்.

* கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கும் வெளிநாட்டு நிதிகளே காரணம்.

*விழிஞ்சம் துறைமுகம் கொண்டுவரக் கூடாது என்ற எதிர்ப்புக்குப் பின்னாலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* `அக்னிபத்' திட்டம் புரட்சிகரமான திட்டம். அக்னிபத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில், தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதி இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.”

திராவிடம்:


* ``பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.

* ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களை வடஇந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து அடையாளப்படுத்திவிட்டனர். திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் அடையாளப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்!

* சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. அது 'டார்வினியன் மாடல்!' சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள். பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்தான் எல்லா அடிப்படைத் தேவைகளையும் எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிக்கிறது!

* நாம் அனைவரும் மாநிலரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.

* அதிகாரத்துக்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையைக் குறுக்கிவிட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டுவருகிறது. ஆனால், தேசியகீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது!

* நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது, தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* மற்ற மாநில மாணவர்களைப்போல நம்முடைய தமிழக மாணவர்களும் பிற இந்திய மொழிகளைக் கற்க வழிசெய்ய வேண்டும், அதை மறுப்பது சரியல்ல!”

தமிழ்நாடு:


*``ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்திவைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்துக்காகவே நாகரிகமாக நிறுத்தி வைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்.

*சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஓர் அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்குப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் பட்டியலின மக்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இன்னும் பல இடங்களில், பல பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

*கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல். இந்தப் பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்துதான் தமிழக அரசு என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை ஒப்படைத்திருக்கிறது. இந்த காலதாமதம் ஏன்?

*கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம்!

* பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமைகள், மறுவாழ்வு, மாணவர் சங்கம் எனப் பல முகமூடிகளை அணிந்துகொண்டு அது செயல்பட்டுவருகிறது. இந்தியாவைச் சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்னை. இது குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புக்கு இது போன்ற வெளிநாடுகளில் இருந்தே நிதி வருகிறது.

*துப்பாக்கியைப் பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால்தான் பதில் சொல்ல வேண்டும்.”

திருக்குறள்:


*``மதபோதகரான ஜி.யு.போப் திருக்குறளிலுள்ள ஆன்மிக சிந்தனைகளை, பக்தி கண்ணோட்டத்தை நீக்கி பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப்பின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம்போல இருக்கிறது.

*திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பதுபோல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், அது ஓர் இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது.

*முதல் திருக்குறளிலுள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்திலிருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. திருவள்ளுவர் ஓர் ஆன்மிகவாதி!”

சனாதனம்:


*``சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது.

*ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது.

*`சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

*இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும்.

*இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல! உலகின் மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது.

*நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

*காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே நிரந்தர மோதல்களைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கிடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

*நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டிப் பேசுகிறார்கள். "மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றிப் பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.”

புதிய கல்வி கொள்கை:


* ``மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம்.

*ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம். இதுவரை நாம் தேசத்தைப் பார்த்த பார்வை சரியாக இல்லை; தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும்.

* புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றைப் புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

* புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னவென்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான். தயவுசெய்து தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்!”


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 11, 2023 4:18 pm

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 ZT1gUUK
பிளஸ் டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணுடன் உதயநிதியார் ராம்சாமி சிலையோடு சிரித்து கொண்டிருக்க மறுபடியும் திமுகவினர் மண்டையில் ஓங்கி அடித்திருக்கின்றார் ஆளுநர்

அவர் மாகாணத்தில் தமிழ்வழி கல்வி பயின்று 590 மதிப்பெண் குவித்த சப்ரீன் இமானா எனும் தென்காசி ஏழைகுடும்பத்து மாணவியினை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து, அங்கே பிரதமர் போன்ற அதிமுக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்தில் அமரவைத்து உபசரித்துள்ளார்

இது விதிமுறைகளை மீறியது என்றாலும் ஏழைப்பெண்ணின் சாதனைக்கு விதிமுறைகளை தளர்த்தி மரியாதை செய்யலாம் என அவர் பதிலுரைத்துவிட்டார்

கவனியுங்கள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் கறறு சாதனை படைத்த மாணவியினை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழிவந்த அரசு கவனிக்கவில்லை, தமிழுக்காக தண்டவாளத்தில் தலைவைக்கும் போராளிகள் கண்டுகொள்ளவில்லை

மாறாக கவர்னர்தான் தமிழ்மொழியில் பயின்ற மாணவியினை வரவேற்று உபசரித்து வாழ்த்தி ஆலோசனை வழங்கியிருக்கின்றார்

இந்து கவர்னர், சதானதன தர்ம பிடிவாதக்காரன் என்றெல்லாம் திராவிட கோஷ்டிகளால் பொய் பரப்பபடும் ஆளுநர் இஸ்லாமிய மாணவிக்கு பெரும் உபச்சாரம் அளித்துள்ளார்

இது நிச்சயம் தமிழ் காத்த, தமிழ்வாழ அரியணை ஏறிய திமுகவுக்கு ஒரு அவமானம் என்பதில் சந்தேகமில்லை

ஆக கிரிக்கெட் கோப்பையில் மட்டுமல்ல, தமிழ்வழி கல்வி தேர்வு முடிவிலும் திமுக மேலிடம் மிக மிக கடுமையாக சொதப்புகின்றது, விளம்பரம் தேடும் வேகத்தில் அடிமட்ட உறுதிபடுத்த வேண்டிய காரியங்களை மறக்கின்றார்கள்

ஆள ஆசை இருக்கும் அளவு நிதானமும் பொறுமையும் கொள்கையும் கொள்கை காக்கும் கடப்பாடும் கொஞ்சமும் இல்லை

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 12, 2023 9:15 pm

பாரத நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது: கவர்னர் ரவி உரை


பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என பீஹார் மாணவர்களுக்கு மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

‛ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின்கீழ், சென்னை கவர்னர் மாளிகையில் பீஹார் மாணவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பாரதம் என்பது 1947ம் ஆண்டு உருவாக்கப்படவில்லை; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. குறிப்பாக பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. ராஜாக்கள் காலம் முதல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

பன்மொழிகள் கொண்ட நாடாக இருப்பது இந்தியாவிற்கு அழகு. பழமையான மொழி, கலாசாரத்தை தமிழகம் கொண்டுள்ளது. பழமையான மொழிகள் என்றால் தமிழும், சமஸ்கிருதமும் சொல்வர். அதில் இப்போது வரை முடிவு கிடைக்கவில்லை. தமிழில் இருந்து சமஸ்கிருதத்திலும், சமஸ்கிருதத்தில் இருந்து தமிழிலும் சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 3:59 pm

ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Whatsa10

உலகின் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா; கோவை நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்



G20 மாநாட்டின் ஒரு பகுதியாக CIVIL 20 SUMMIT – C20 கருத்தரங்கம், கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அம்ரிதா கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது.

‘Technology and Security for One world’ என்ற தலைப்பில் நடைபெற இக்கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்து கொண்டு தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, ”சுற்றுச்சூழல் சார்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகளும் சவால்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இவற்றோடு ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் கண்டு வருகிறோம். எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்களும் உண்டு.

இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்தும் இந்த வேலையில் உலக அளவிலான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது கருத்துக்களை பெறும் வகையிலும் சிவில் 20 எனும் இது போன்ற மாநாடு நடத்தப்படுகிறது. உலக அளவிலான பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு காணும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த உலகில் உள்ள அனைவரும், அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பம் என்கிற மேம்பட்ட சிந்தனையை நமது கலாச்சாரம் முன்னிறுத்தி வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு ரிஷி அரவிந்தரும் இதையே கூறினார். தமிழில் இதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என குறிப்பிடுகிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு பல்வேறு கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் தாம் தான் சிறந்தவை என கூறப்பட்டது. ஆனால் நமது ரிஷிகள் இந்த உலகில் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி செடி, கொடி, விலங்கினம் என அனைத்தும் ஒரே குடும்பம் என கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே இப்போது உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இது ‘வசுதேவ குடும்பம்’ எனும் இந்தியாவின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தடுப்பூசியை வியாபாரம் ஆக்காமல் உயிர்களை காப்பாற்ற இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அரசு சார்ந்த வளர்ச்சி எனும் முறையை பின்பற்றி ஆட்சி செய்து வந்தன. இதனால் மருத்துவம், கல்வி, வறுமை ஆகியவற்றை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி அவர்களின் உன்னத ஆட்சியில் மக்களை மையமாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மருத்துவம், கல்வி, பெண் பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், எரிவாயு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் டிஜிட்டல்மயம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது திட்டத்தின் வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண காய்கறி கடைக்காரர் வரை டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு விற்பனை செய்து வருகிறார். உலகில் தலை சிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

ஜன் தன் யோஜனா எனும் பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு அரசின் பயன்கள் எந்த இடைத்தார்கள் இன்றி நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் வெளிப்படை தன்மையான அரசாங்க நிர்வாகத்தை காட்டுகிறது.

கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்தியதும் உடனடியாக அதற்கான சான்றிதழ் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டு நம்மால் பயணம் செய்ய முடிந்தது. அதேபோல் அடுத்த தவணைக்கான தகவலும் தொழில்நுட்ப உதவியோடு நினைவுபடுத்தப்பட்டது.

கோவிட் பெருந்தோற்றால் செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு அனைத்து மக்களுக்கும் உணவு விநியோகிக்கப்பட்டது. தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எவரும் தமிழ்நாட்டிலோ கேரளத்திலோ ரேஷன் அட்டை சிக்கல் இல்லாமல் உணவுப் பொருட்களை பெற முடிகிறது. இதேபோல் ஆதார் உட்பட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தைப் பொறுத்தவரை பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மீதான தாக்குதல் குறிப்பாக கேரளாவில் பெண்கள் காணாமல் போவது உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பெண்களுக்கான பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, அனைத்தும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்றால் ஒரு புறம் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் உள்ளன. அவற்றை நாம் அதே தொழில்நுட்பத்தோடு கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான கருத்துக்களை பகிரும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருத்துக்களை பல்வேறு வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இவை அனைத்தும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் சர்வதேச நாடுகள் தங்களது கொள்கைகளை வகுப்பதற்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியோடு இந்த உலகின் தாவரங்கள், விலங்குகள் உட்பட அனைவரும் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆளுநர் உரையாற்றினார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 15, 2023 8:42 pm

''அம்மாவின் ஆசி இல்லாமல், எந்த உயரத்தையும் நம்மால் எட்ட முடியாது,'' - கவர்னர் ரவி



கவர்னர் மாளிகையில், நேற்று நடந்த அன்னையர் தின விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

தாய்மார்கள் தனித்துவமானவர்கள். மொழி, இனங்களைக் கடந்து, எல்லா இடங்களிலும், தாய் என்பவர் ஒரே மாதிரியாகவே இருப்பார்.

ஏனெனில், தாய்மார்கள் அன்பு, இரக்கம், உணர்ச்சி வசப்படுதலுக்கு பேர் பெற்றவர்கள்.

'அம்மா!'


என் அம்மா படிப்பறிவு இல்லாதவர்; ஆனால், அது முக்கியம் இல்லை. அவர் ஒரு தாய். இது மிகவும் துாய்மையான மற்றும் நம்மை துாண்டி எழுப்பக் கூடிய உறவு. நாம் தெய்வீகம் குறித்து சிந்திக்க முயற்சிக்கும்போது, அதில் தாயின் பிரதிபலிப்பை காணலாம்.

ஒரு குழந்தை பேசத் துவங்கும்போது, உச்சரிக்கும் முதல் வார்த்தை 'அம்மா!' துரதிருஷ்டவசமாக நாம் ஒரு நாகரிக நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் உடைந்து வருகின்றன.

தாய்மார்கள் கவனிப்பாரற்று கிடக்கும் துரதிருஷ்ட வசமான நிலை உள்ளது.

குழந்தைகள் வளர்ந்து, தொலைதுார இடங்களுக்கு பறந்து செல்கின்றனர். தாய் அல்லது பெற்றோர், சொந்த நாட்டில் தனியாக விடப்படுகின்றனர்.

விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசமே, விலங்குகள் தன் குட்டி மீது அளவற்ற அன்பை செலுத்தினாலும், குட்டி தனியாக இயங்கத் துவங்கியதும், தாய் - குட்டி இடையே பந்தம் குறைந்து விடும்.

ஆனால் மனித குலத்தில், தாய் என்பவள், தன் கடைசி மூச்சு வரை, தன் குழந்தைகள் மீது அன்பை யும், அக்கறையையும் இடைவிடாது செலுத்துவாள் என்பது தான்.

அம்மாவின் ஆசி இல்லாமல், எந்த உயரத்தையும் நம்மால் எட்ட முடியாது. நாம் எங்கிருந்தாலும், நம் வாழ்வின் எந்த நிலையிலும், நம் தாயை கைவிடக் கூடாது.

இவ்வாறு, கவர்னர் பேசினார்.

தங்கப் பதக்கம்


விழாவில், செஸ் 'கிராண்ட் மாஸ்டர்' ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி; 'பாராலிம்பிக்'தங்கப்பதக்கம் வென்ற பொன்ராஜின் தாய் ஞானசுந்தரி.

உயிர் அறக்கட்டளை நிறுவனர் சசிகுமாரின் தாய் ஜெயலட்சுமி; ஈரோடு மகேஷின் தாய் மீனாட்சி சந்திரசேகரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாய் நாகமணி; மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமாரின் தாய் அருள்மேரி; சமூக ஆர்வலர் கிரேஸ்பானுவின் தாய் ஹீனா.

விஜய் ஞானதேசிகன், இளங்கோ மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் தாய் திலகவதி ஞானதேசிகன், வசந்தா மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கும், கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர்விருதுகள் வழங்கி பாராட்டினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 12:08 pm

பாதுகாப்பான மாநிலம் தமிழகம்; கவர்னர் ரவி பெருமிதம்



சென்னை: ''பிற மாநில மக்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதுகின்றனர்,'' என, கவர்னர் ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று, 'கோவா தினம்' கொண்டாடப்பட்டது. கோவா மாநில கலை நிகழ்ச்சிகளும், சுதந்திர போராட்ட வீரர் ராம் மனோகர் லோகியா குறித்த நாடகமும் நடந்தன.

விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:



இந்த நிகழ்ச்சி வாயிலாக கோவா மக்களின் மொழி, கலாசாரம், கலைகள் பற்றி அறிய முடிந்தது. கோவா மக்கள் பல மாநிலங்களிலும் வாழ்கின்றனர்; தமிழகத்திலும் உள்ளனர். சில தினங்களுக்கு முன், மஹாராஷ்டிரா மாநில தினம் இங்கு கொண்டாடப்பட்டது. இது தான் நம் இந்தியா.

கோவா மாநிலத்தில் உள்ள மக்கள் அன்பானவர்கள். சுற்றுலா பயணியரும் முதலில் தேர்வு செய்வது, கோவா மாநிலம் தான். ஆனால், இதற்கு முன் கோவா மாநிலம், பல இக்கட்டுகளை சந்தித்து உள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னரும் போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்தால், அங்கு இருந்த மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். தற்போது, அந்த மாநிலம் துடிப்பான மக்களை கொண்டுள்ளது.

இந்தியா பல நாடுகளுக்கு வழிகாட்டியாக மாறி உள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பது தான், நாட்டுக்கு வலிமை தரும்.

இந்தியா என்பது ஆன்மிகம், கலாசாரம் நிறைந்த நாடு.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகத்துக்கு கல்விக்காகவும், தொழில் நடத்துவதற்காகவும் வருகின்றனர். பிற மாநில மக்கள், தமிழகத்தை தாய் மாநிலமாகவே கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால், இங்கு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கவர்னர் செயலர் ஆனந்த்ராவ் பாட்டீல், சம்யுக்தா கவ்டா சரஸ்வத் சபா தலைவர் தினேஷ் நாயக் உட்பட பலர் பங்கேற்றனர்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 04, 2023 10:01 pm

’மாநிலங்களின் அடையாளங்கள் பிரிவினையை ஏற்படுத்துகிறது’: ஆர்.என் ரவி



’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

எல்லா வருடமும் ஜூன் 2ம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ராஜ்பவனில் இந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆட்சி செய்வதற்கு உதவும் என்பதால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது இந்த அடையாளங்கள் அரசியல் அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ளது. மலையாளிகள், தமிழர்கள், பிகாரிகள், யு,பீஸ் என்று அழைக்கப்படுவது, இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு எதிராக உள்ளது “ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், திராவிட மாடல் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவியது. ”திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம், காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது’ என்று ஆங்கில பத்திரிக்கைக்கு ஆர்.ரன். ரவி பேட்டியளித்தார்.

திராவிட மாடல் என்பது பாஜகவின் இந்துத்துவ கொள்கைக்கு மாற்றானது என்று முதல்வர் ஸ்டாலினும் பொதுக் கூட்டங்களில் பேசினார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆளுநர் “ மாநிலங்களுக்கான தனி அடையாளம், மக்களை பிரிக்கும் மனநிலையில் உருவாக்கப்படுகிறது. ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு இது எதிரானது. இந்தியர்களாக ஒன்றுபடும் நோக்கத்தை இது வலுவிழக்க செய்கிறது. “ என்று கூறினார்.

”தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களை வேற்று மாநிலத்தவர்களாக பார்ப்பது சரியா?. அவர்கள் அனைவரும் இந்தியர்கள்தானே ” என்றும் கூறினார்.

” ஆற்றல் மிகுந்த ஆட்சி செய்யவும், மக்களின் நலனுக்காவும்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமாக இது அரசியல் அடையாளங்களாக மாறியுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் மனநிலை தினமும் வளர்க்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று கூறினார்.

கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மெட்ரால் மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்டதை போல, பிகாரில் இருந்து ஜார்கண்ட், உத்தர பிரதேசத்தில் இருந்து உத்ராகாண்ட், மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர், ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி, திறமையாக நிர்வாகம் செய்யவே இது உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 30, 2023 9:38 pm

ஆளுநர் Vs திராவிட மாடல் அரசு

ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தற்போது வரை நடந்த கருத்து மோதல்கள்


திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், திமுக அரசு தயாரித்து கொடுத்த இடங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் சேர்த்ததை நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு, முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால் ஆர். ரன். ரவி வெளிநடப்பு செய்தார். மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்பதுதான் சரி என்று ஆளுநர் கூறியதற்கு திமுக அரசு கடுமையாக விமர்சித்தது.

செப்டம்பர் 2021 ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றதிலிருந்து, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு சட்ட மசோதாக்களை ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம்சாட்டியது. குறிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பினார். மேலும் அது இரண்டாவது முறையாக மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

அந்நேரத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்யாமல், தேவையற்ற அரசியலை ஆளுநர் செய்கிறார். தமிழ்நாடு பாஜகவின் தலைமை போல அவர் செயல்படுகிறார்” என்று விமர்சித்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசுகையில் ” கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே இது ஒரு தீவிரவாத செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதில் உபயோகப்படுத்திய பொருட்களை அதை நிரூபித்தன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை சரியாக கண்டுபிடித்த காவல்துறையை நான் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் சில மணி நேரங்களில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான தகவல் தெரிந்தும், என்.ஐ.ஏ வருவதற்கு ஏன் 4 நாட்கள் எடுத்துகொண்டார்கள். என்.ஐ.ஏ தலையீடு தேவை இல்லாத நேரத்திலும், அவர்களை அழைக்க 4 நாட்கள் ஏன் தேவைபட்டது என்று தெரியவில்லை” என்று கூறினார்.

இந்நிலையில் இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி-யை  நீக்க வேண்டும் என்று  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்  இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு  மனு அளிக்கப்பட்டது. அதில் ஆளுநர் ஒப்புதல் வழங்காத, 20 சட்ட மசோதாக்கள் பற்றிய குறிப்பு இந்த மனுவோடு இணைக்கப்பட்டது.

ஆர்.என். ரவி முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி.  2012-ல் அவர் பணி ஓய்வு பெற்றார். கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக பணியாற்றினார். இந்தியாவின் துணை தேசிய  பாதுகாப்பு ஆலோகராகவும் அவர் நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு நாகாலந்துக்கும்- இந்தியாவிக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி பேச்சுவார்த்தை இவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் ஆளுநர் ரவி, தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படும் முன்னரே, இவரின் நியமனம் தமிழகத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டது. பொறுப்பேற்ற ஒரு மாதம் கழித்து, இதுவரை அரசு அமல்படுத்திய திட்டங்களின் முழு விவரங்கள் வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு  காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தலைமைச் செயலாளர் இறையன்பு, இது எப்போதும் நடைபெறும் வழக்கம் என்று கூறினார்.  

திமுகவின், அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் “ இது நாகாலாந்து கிடையாது, இது  தமிழ்நாடு.  காவல்துறைக்கு வேண்டுமானால் இதுபோன்ற யுக்திகள் கைகொடுக்கும். ஆனால் அரசியலில் இதுபோன்ற யுக்தி, எடுபடாது. இதை வைத்து இங்கே ஒன்றுமே செய்ய முடியாது” என்று விமர்சித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 11:25 pm

சனாதன தர்மம் உருவானதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு: கவர்னர் ஆர்.என்.ரவி



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Tamil_News_large_3363348

சென்னை: சனாதன தர்மம் உருவானதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு எனவும், சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

சென்னை ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது: பாரதத்தையும், சனாதனத்தையும் பிரிக்க முடியாது. சனாதனத்தில் பிரிவுகள் உள்ளது, வேறுபாடுகள் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும். சனாதன தர்மம், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறுகிறது.

இந்தியா என்பதற்கு அறிமுகம் தேவை, பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை. சனாதன தர்மம் உருவானதில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.

சனாதன தர்மம் இந்த உலகமே ஒரு குடும்பம் எனக் கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாரும் கேளிர். சனாதன தர்மம் 10 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறது. சனாதன தர்மம் தனித்துவமானது. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆன்மிகத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு தமிழகம். சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாசாரம் உருவானது. மக்களின் துடிப்பையும் உணர்வையும் உணர்ந்தவர் பிரதமர் மோடி. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:17 pm

அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க சொல்லி உள்ளதால் அதுவரை பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஆளுநர் தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் அட்டர்னி ஜெனரல் விடுமுறையில் இருந்ததால் அவரது கருத்தை உடனடியாக ஆளுநரால் பெற முடியவில்லை. இப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி டெல்லி வந்து விட்டார். இதனால் அவரை நேரில் சந்தித்து கருத்து கேட்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்தார். இதற்காக நேற்று (ஜூலை 7) மாலை டெல்லி சென்றார்.

இந்நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைத்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஆளுனர் ரவி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

ஆர்.என்.ரவி 5 நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பார். வருகிற 13 ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 11:06 pm

130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது: ஆளுநர் ரவி பேச்சு



130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது; தோல்வியை கண்டு பயப்படாதீர்கள், பாடம் கற்று கொள்ளுங்கள். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல, நான் பலமுறை தோல்வியை சந்தித்தவன். இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது.

அதிக தொழில்முனைவோர் கொண்ட எண்ணிக்கையின் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு தொழில் முனைவோரும் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் பெரும் வளர்ச்சியை பெற்றாலும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, இறப்பு விகிதம் அதிகரிப்பு என சவாலாக உள்ளது. 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது.

நாடு வளர்ச்சியடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். மேலும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு பயணிப்போம். ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கும் என மக்கள் முன் மாயை உள்ளது, ஆனால் எனக்கு அதிக வேலைகள் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன். என்று தெரிவித்தார்.



ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக