புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
31 Posts - 53%
heezulia
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%
jairam
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%
சிவா
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
114 Posts - 38%

13 Posts - 4%
prajai
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_m10பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 11:57 pm

துளசி

#துளசி ஒரு மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயில் பூஜைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என பல வகை துளசிகள் உள்ளன.

நம் உடலில் ஏற்படும் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக துளசி உள்ளது. துளசியின் மகிமை ஏராளம் என்பதால் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. துளசியில் நல்ல சாறு இருப்பதால் ‘சரஸா’ என்றும், பல இலைகளை கொத்தாகக் கொண்டதால் ‘பகுபத்திரி’ எனவும், மலர்கள் கொத்துகளாக இருப்பதால் ‘பகு மஞ்சரி’ எனவும், எளிதில் கிடைப்பதால் ‘தலபா’ எனவும் வட மொழியில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது என்பதால் ‘விஷ்ணு வல்லபா’ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் துளசியினை திருத்துஷாய், துளஷ, கிருஷ்ண துளசி, இராம துளசி எனவும் அழைப்பர். இப்படி பல பெயர்களால் அழைக்கப்பெறும் துளசி, சிறப்பான மருத்துவப் பயன்களை கொண்டது.

*முக்கியமாக நமது மூளை சோர்வடையும் போது, புத்துணர்ச்சி தரக்கூடியது. பத்து துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி, இரண்டு ஏலக்காய், இரண்டு டீஸ்பூன் தேன், சிறிதளவு பசும் பால் கலந்து பருகினால் மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும்.

*துளசியை குடிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதாலும், குடிப்பதாலும் தொண்டைவலி, அழற்சி, புண் போன்றவை நீங்கும். மேலும் ‘டான்சிலை’யும் கரைக்கும் தன்மை கொண்டது.

*துளசி ஊறவைத்த தண்ணீரைப் பருகுவதால் இருமல், இளைப்பு, காசநோய், காய்ச்சல் இவைகளையும் தீர்க்க வல்லது.

*ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவு துளசி விதைகளை போட்டு ஊறவைத்து, அந்த நீரை குடித்து, விதைகளை மென்று சாப்பிட வயிறு சம்பந்த தொல்லைகள் தீரும்.

*சுடுதண்ணீரில் ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாறு, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.இப்படி பல நோய்களை குணப்படுத்தும் துளசியை பயன்படுத்தி பலவித நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 11:59 pm

நொச்சி இலை

நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள்

பலருக்கும் தெரிவதில்லை. இவை கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தற்போது சிட்டிகளிலும் இந்த இலைகள் விற்கப்படுகின்றன.

* இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சளியினால் ஏற்பட்ட சுவாச அடைப்பு நீங்கும்.

* நீர் நிலைகளில் காணப்படும் நீர் நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இதில் கரு நொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது. ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கிறது.

* #நொச்சி இலைகளில் ஒருவித நறுமண வாசனையுண்டு. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

* தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள், காய்ந்த நொச்சி இலைகளை புகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க வேண்டும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். நொச்சி இலையை கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைபாரம் குறையும். கரு நொச்சி இலைகளின் சாறு, சீதபேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்கு பயனளிக்கும்.

* கட்டி, வீக்கத்திற்கு நொச்சி இலைகளை வதக்கி கட்டி மேல் வைத்து கட்ட அவை கரைந்து போகும். நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. கை, கால் முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்து கட்டிக் கொள்ளலாம்.

* புண் காயங்களுக்கு நொச்சி இலை சாறை நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்து தினமும் தேய்த்து வர புண் ஆறிவிடும்.

* நொச்சி மலர்கள் அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் இருக்கும். இதில் உற்பத்தியாகும் தேனுக்கு உடல் வலி, வீக்கத்தைப் போக்கும் தன்மை உண்டு.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 11:59 pm

வியர்வை மற்றும் தோல் அரிப்பிலிருந்து விடுபட

வெயில்காலம் முடிந்தாலும், நம் நாட்டு சீதோஷ்ணநிலை வெப்பமாக உள்ளது. வேலைக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்ல என நம் அனைவருமே வெளியில் சென்றாக வேண்டியுள்ளது. வெப்பத்தால், மக்கள் நெரிசலால், காற்றோட்டமில்லாமல் என நாளின் பெரும்பகுதி வியர்வையால் அவதியுற நேரிடுகிறது.உடல் சூடு அதிகமாகி, அதை பாதுகாக்க வியர்வை சுரப்பிகள் அதிக அளவில் வியர்வை நீரைச் சுரந்து உடலை குளிர்விக்க முயல்கிறது. வியர்வை சிலருக்கு நார்மலாக இருக்கும். சிலருக்கோ அதிக வியர்வையில், கற்றாழை வாடை, உடல் அரிப்பு, வேர்க்குரு, தோல் நோய்கள் என கஷ்டப்படுவர். இதை சரி செய்ய அதிகளவு நீர் பருகுதல், நன்னாரி, வெட்டிவேர் குடிநீர் , இளநீர், பதநீர் என குளிர்ச்சியானவற்றை அடிக்கடி பருகிட வியர்வை அதிகம் ஏற்படாது.

தர்பூசணி, நுங்கு, வெள்ளரி போன்ற நீர்க்காய்களை எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடையும். வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பு தடுக்கப்படும்.வாகைப்பூ, விளாமிச்சைவேர், சிறுநாகப்பூ, பாச்சோத்திப்பட்டை போன்ற மூலிகைகளை அரைத்து உடலில் பூசி குளித்துவந்தால் அதிக வியர்வை நீங்கும். பன்னீர் ரோஜா அல்லது ரோஸ் வாட்டரை குளிக்கும் நீரில் இட்டு குளித்து வர, வியர்வை வாடை இராது.

இலவங்க இலை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தனம் போன்றவற்றை அரைத்து உடலில் பூசி குளித்து வர, வியர்வையால் ஏற்படும் வாடை அகலும். வேப்பிலை, மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்து வர, அதிக வியர்வையால் ஏற்படும் வியர்க்குரு, அரிப்பு, நிறமாற்றம் போன்ற பிர்சனைகள் நீங்கும்.

வியர்க்குரு தொந்தரவை குறைக்க, நுங்கின் தண்ணீரை பூசலாம்.ஆவாரம் பூவை அரைத்து உடலில் பூசி குளித்தாலும், வியர்வை வாடை அகலுவதோடு அதை குடிநீராக்கியும் குடிக்கலாம். வியர்வை வாடையை சரிசெய்ய, உணவில் அதிக மசாலா, இறைச்சி உணவுகள், காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை குறைக்க வியர்வை வராது.

அதிக பருமன் மற்றும் ஹார்மோன் மாறுபாட்டால் அதிக வியர்வை சுரக்கும்.நீண்ட நாட்களாக உள்ள அஜீரணம், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவற்றாலும் வியர்வை துர்நாற்றும் ஏற்படும். அவற்றிற்கு, மருத்துவரை அணுகி, தக்க ஆலோசனை பெறலாம்.

வியர்வைக்கென, வேர்க்குருக்கென இருக்கும் டால்கம் பவுடரை உபயோகிப்பது தவறு. அது சரும துவாரங்களை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.முடிந்தவரை 2 வேளை குளிப்பதாலும், குளியல் நீரில் யுடிகோலொன், பன்னீர் கலந்து குளிக்க நாள் முழுவதும் மணமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 12:00 am

மன அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்ப்பது எப்படி?

மன அழுத்தம் மனிதருக்கு பல உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. முக்கியமாக இதய நோய்கள். பணிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து மீண்டு மாரடைப்பை தவிர்த்து கொள்வது எப்படி என காண்போம்.

கடன் பிரச்சினைகள், பணி சுமை, தனிமை உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி செய்கிறது.

தினசரி காலை அமைதியான சூழலில் அமர்ந்து தியானம் செய்வது அன்றைய நாளை அமைதியாக கையாள உதவும்.

பதட்டமான சமயங்களில் மூச்சை மெல்ல இழுத்து விட்டு மூச்சு பயிற்சி செய்வது பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

தனிமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது நல்லது.

மன அழுத்தம் ஏற்படுத்தும் பணிகள், ஃபோன், கணினி பயன்பாட்டிற்கு வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பு அளிப்பது நல்லது.

ஒவ்வொரு நாளும் எளிதான வேலைகள் முதல் கடினமான வேலைகள் வரை பட்டியலிட்டு அதை செய்து வருதல் நலம்.

மன அழுத்தத்தை குறைக்க நமக்கு நாமே முக்கியத்துவம் அளித்தல் அவசியம். நமது உடல், மன நலனை என்றும் மனதில் கொள்ள வேண்டும்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 3:58 pm

பர்கரை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தற்போதைய துரித உணவுகளில் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவது பர்கர். பல்வேறு ரெசிபிகளில் கிடைக்கும் இந்த பர்கர் வகைகள் அளவுக்கு மீறினால் உடல்நலத்தை பாதிக்கக் கூடியவை

பர்கரில் அதிகமாக சேர்க்கப்படும் சீஸ், மயோனைஸ் உள்ளிட்டவை உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

சீஸ் பர்கர் வகைகளில் உள்ள அதீத கொழுப்பு காரணமாக எடை வேகமாக அதிகரிக்கும்.

பர்கரில் சேர்க்கப்படும் அதிகமான பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உடல்நலத்தை பாதிக்கக் கூடும்.

பர்கரில் மைதா பிரதான பங்கு வகிப்பதால் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கொழுப்பு பொருட்கள் அதிகம் நிறைந்துள்ள பர்கர் இதய பாதிப்பு ஏற்பட காரணமாகலாம்.

பர்கரில் கொழுப்பு நிறைந்த சீஸ் பொருட்களை குறைத்து காய்கறிகளை வைத்து சாப்பிடலாம்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 9:29 pm

கஸ்தூரி மஞ்சள்

விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. கடைகளில் கிடைக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். வெறும் அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும். 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.

மிளகு, கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும், ‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை பயன்படுத்தலாம். சரும பிரச்னை ஏற்படாது.

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.கஸ்தூரி மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும். தோல் மென்மை ஆகும். முகப்பருக்கள், வியர்வைக் கட்டிகள் மறையும்.

கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கு பயன்படுத்துவது போலவே, மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 9:38 pm

நெருஞ்சில்

ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை நமக்கு ஏராளமான மூலிகைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவதில் நெருஞ்சில் முக்கியமான மூலிகையாக திகழ்கிறது.

நெருஞ்சில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்றுவகை இருக்கின்றது. மூன்றுமே மருத்துவக் குணம் நிரம்பியது. இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் இதில் மிகுந்துள்ளது. நெருஞ்சில் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கல்லீரல் பாதிப்பு, சரும நோய்கள், ரத்தநாள பாதிப்பு, இதய நோய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு நெருஞ்சிலை சீனாவில் பயன்படுத்துகிறார்கள். குழந்தையின்மை பிரச்னையை சரி செய்வதற்கு பல்கேரியாவில் நெருஞ்சிலை பயன்படுத்துகிறார்கள்.

மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் கிரேக்கத்தில் நெருஞ்சில் பயன்படுத்தப்படுகிறது. உடல் வெப்பத்தை தணிக்கவும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், சிறுநீர் சொட்டுச் சொட்டாக வருதல், வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல், சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் முதலான பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியாவில் சிறுநெருஞ்சில் பயன்படுத்தப்படுகிறது.நெருஞ்சில் காய், பச்சை அரிசி சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து சர்க்கரை கூட்டி கொடுக்க வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு நீங்கும்.

நெருஞ்சில் காய் 68 கிராம், கொத்துமல்லி விதை 8 கிராம் எடுத்து இரண்டையும் அரைலிட்டர் தண்ணீரில் போட்டு நான்கில் ஒரு பங்காக சுண்ட வைத்து, வடிகட்டி காலை, மாலை 40 மி.லி. வீதம் தினமும் குடித்துவர நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு நீர்எரிச்சல் குணமாகும்.நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

நெருஞ்சில் விதையை பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 12:30 am

நூக்கல்

காய்கறி சந்தைகளில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் ஒரு காய் நூக்கல். விலை அதிகமில்லாத இந்த காயில் அதிக சத்துக்கள் மிகுந்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. இனி, நுக்கலில் உள்ள சத்துக்கள் பற்றி காண்போம்.

* நூக்கலில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

* வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைய உள்ளன.

* நூக்கலின் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

* #நூக்கல் இலை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தநீர் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. மேலும், கொலஸ்ட்ராலைக் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

* நூக்கலை வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்குகிறது.

* நூக்கலில் உள்ள வைட்டமின் கே இதயப் பிரச்னை வராமல் பாதுகாக்கிறது.

* வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்புண்களை உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்த்து அழிக்கும் வல்லமை நூக்கலுக்கு உண்டு.

* நூக்கல் உடலில் ரத்தத்தின் அளவை சரியாக வைத்து, உடல் எடையையும் குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

* நூக்கலை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் குடல் நாளங்கள் உறுதிப்படும், எலும்புகள் உறுதியாகும்.

* குழந்தை பெற்ற பெண்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

* நூக்கல் காயிலும், இலையிலும் அதிக அளவிலான ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் அது இதயத்தை பாதுகாப்போடு வைத்து, மாரடைப்பு பிரச்னை வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க நூக்கல் உதவுகிறது.

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Main-qimg-928e3a3e0e3b522fcc3a8de97382f2b7

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2023 10:02 am

பழைய_சோறு - மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 17 Main-qimg-bc2af2d01a08091ea56ce32e9ca31154

Sponsored content

PostSponsored content

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக