புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
74 Posts - 44%
heezulia
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 4%
prajai
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
10 Posts - 5%
prajai
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
8 Posts - 4%
Jenila
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_m10அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 13, 2023 10:15 pm

அற்புதங்கள் நிகழும் நடராஜ திருத்தலங்கள் Nataraja

ஆடல் நாயகனாம் நடராஜ பெருமானுக்கு, 36 வகையான திரவியங்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்வார்களாம் தேவர்கள். இந்த ஐதிகப்படி பூவுலகிலும் சகல சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

அதியற்புதமான வரங்களை அருளவல்ல வைபவம் ஆனித் திருமஞ்சன தரிசனம். இந்த நாளில் நடராஜருக்கு நிகழும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்போருக்கு, சகல பாவங்களும் தோஷங்களும் விலகும். அவர்கள் நினைத்த நற்காரியங்கள் யாவும் நினைத்தபடி கைகூடும் என்கின்றன ஞானநூல்கள்.

சித்திரை - திருவோணம் உச்சிக்காலம், ஆனி - உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி - வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி - வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி - திருவாதிரை உஷத்காலம், மாசி - வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேகக் காலங்களாகும்.

தேவர்களின் பகல் பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை செய்வதே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.

ஆடல் நாயகனாம் நடராஜ பெருமானுக்கு, 36 வகையான திரவியங்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்வார்களாம் தேவர்கள். இந்த ஐதிகப்படி பூவுலகிலும் சகல சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். தில்லைச் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழாவை ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் தகவல். அற்புதமான இந்த நாளில் நாமும் குடும்பத்தோடு நடராஜ பெருமானை தரிசித்து வழிபட்டு, நன்மைகள் பெறுவோம்.

இவ்வருடம் ஜூன் - 25 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனித் திருமஞ்சனம் வருகிறது. இந்த வைபவத்தைச் சிறப்பிக்கும் விதம், தத்துவம் உணர்த்தும் திருமேனியரான நடராஜ பெருமான் விசேஷ கோலங்களில் அருளும் சில திருத்தலங்களும் தகவல்களும் உங்களுக்காக!

ஆனந்த வாழ்வு கிடைக்கும்

சகலரும் போற்றிச் சிறப்பிக்கும் நடராஜ திருத்தலம் சிதம்பரம். ஈசனின் போக வடிவத் திருக்கோலத்தில் முதன்மையானது நடராஜர் வடிவமே என்கின்றன சைவ நூல்கள். அவருக்கான தலங்களில் குறிப்பிடத் தக்கது சிதம்பரம். இங்கே பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் ஆடிக் காட்டிய ஆடல்வல்லான் ஆனந்த நடராஜராக அருள்கிறார். தேடி வந்து சரணம் புரிவோருக்கு ஆனந்த வாழ்வை அருள்பவர் இவர். சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப்பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர். சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திரு மஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம்; இது ராஜசபை.

மூலவராக அருள்பாலிக்கும் தில்லைக் கூத்தனை வணங்கி வழிபடுவோருக்கு தொல்லைகள் எதுவும் இல்லை; இக உலகின் அத்தனை இன்பங்களையும் அடையலாம்; சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதிகம்.

பதவி யோகம் கிடைக்கும்

வேண்டும் வரங்களை விரும்பிய வண்ணமே அருளக்கூடியவர் மாமதுரையில் அருளும் வெள்ளியம்பலத்தான் என்கிறது சைவம். ஏன் அப்படி? எல்லாக் காலங்களிலும் எல்லா இடத்திலும் நம் கூத்தபிரான் இடதுபதம் தூக்கி, வலதுபதம் தாங்கியே ஆடிக் கொண்டி ருப்பார். எம்பெருமான் மீது அதீத பக்திகொண்ட மன்னன் ராஜ சேகர பாண்டியன். பரதக் கலையிலும் தேர்ச்சி பெற்றவன். ஒருமுறை இவன், தனது ஒரு பதத்தைத் தூக்கிய நிலையில் சிறிது நேரம் நின்று பார்த்தான். உடல் வலியால் துன்பம் கொண்டான்.

சிறிது நேரம் நின்றதற்கே இப்படியென்றால் அனவரதமும் கால்த் தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் ஈசனுக்கு எப்படி வலிக்குமோ’ என்று கலங்கினான். அன்று சிவராத்திரி நன்னாள். ‘மதுரைக் காவலனே, என் பொருட்டு நீவிர் பாதம் மாறி ஆட வேண்டும். சற்றே இளைப்பாறிக் கொள்ளவும் வேண்டும். இல்லையேல், நான் இறந்துவிடுவேன்’ என வேண்டினான்.

அவன் அன்புக்குக் கட்டுப்பட்ட வெள்ளியம்பலத்தான் இடபாதத்தைத் தரையில் ஊன்றி வலப் பாதத்தை எடுத்து வீசி ஆடினாராம். சந்தியா தாண்டவம் எனும் இந்த அருள்கோலத்தை தரிசித்தால் வேண்டிய யாவும் கிட்டும் என்கிறார்கள். குறிப்பாக பதவி யோகம், உத்தியோக உயர்வு வேண்ட நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.

பிணிகள் தீர்க்கும் நாக நர்த்தனர்

திருவாசி எனும் திருத்தலத்தில் உறைபவர் அருள்மிகு மாற்றுரை வரதீஸ்வரர் எனும் சமீவனேஸ்வரர். பாடல்பெற்ற தலம் இது. இந்தப் பகுதியை ஆண்டுவந்த கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குத் தீராத வலிப்பு நோய் இருந்தது. எத்தனையோ வைத்தியம் செய்தும் குணப்படுத்த முடியவில்லை.

அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை இங்குள்ள ஈசனிடம் ஒப்படைத்தான் மன்னன். இந்த நிலையில் இத்தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்த பெருமான் ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் நோய் தீர்க்கும் பதிகம் பாடி அப்பெண்ணின் நோய் தீர்த்தார்.

காழிப்பிள்ளையாம் சம்பந்தன் பாட, உருகிப்போன ஈசன், நடராஜ வடிவம் கொண்டு இங்கு எழுந்தருளினார். கொல்லிமழவன் மகளைத் தாக்கிய பிணி சர்ப்பமாக மாறிட, அதன் மீது நின்று ஆடினார் பெருமான். அதனால் நாகநர்த்தனர் என்றும் பெயர் கொண்டார். இங்கு மட்டுமே நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் சர்ப்பம் உள்ளது. இங்கு வந்து, ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க சுடர்ச்சுடை சுற்றி முடித்து...’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி வழிபட்டால், தீராத நோய்கள் தீரும்!

பஞ்ச நதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர்.

இத்தலத்தின் பஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது ஆகும்.

முக்தி அளிக்கும் அண்டமதிர ஆடியோன்

ஆலமுண்ட நீலகண்டன், ஆலங்காடன், அண்டம் அதிர ஆடும் கள்ளக்கூத்தன் உறையும் தலம் திருவாலங்காடு. இங்கு மூலவர் வடாரண்யேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

அண்டம் அதிர, அரவம் கதற, கங்கை சிதற இங்கு ஆடிக் கொண்டிருக்கும் ஊர்த்துவத் தாண்டவர் அபூர்வமானவர். வலது காலை ஊன்றி, இடது காலை ஆகாயம் நோக்கி இடது காது அருகே தூக்கி ஆடும் விரிசடைக் கடவுளின் வடிவம் மெய்சிர்க்க வைக்கும். அடங்காத காளியோடு ஆடிய ஈசன், அப்போது அவிழ்ந்து வீழ்ந்த தன்னுடைய குண்டலங்களைக் காலால் எடுத்துக் காதில் அணிந்து கொண்டார். இதைக் கண்ட காளி, அது தாண்டவ கரணங்களில் ஒன்று என எண்ணி, அதுபோல் தன்னால் செய்ய இயலாது என வெட்கி நின்று தோற்றாள் என்கிறது புராணம்.

ஆனால் இதில் ஒரு சூட்சும விளக்கமும் உண்டு. அண்டமதிர ஆடும் ஈசனின் இடது தோளில் பரந்துவிரிந்து கிடக்கும் திருமுடிகளில், ஒரு முடியின் நுனியில் உள்ளதே இந்தப் பூலோகம். அதில் வசிக் கும் ஜீவராசிகள் யாவும் எளிதில் சிவபதத்தை அடையும் விதம், நம் சிங்கவர் பெருமான், தனது இடது திருவடியை பூமி அமைந்துள்ள செவிக்கு அருகே காட்டி அருள்கிறார் என்பதே அந்த சூட்சுமம்! காரைக்கால் அம்மையார் ஈசனோடு கலந்த இந்த சிவபூமியில் வந்து வணங்க நிம்மதியும், ஞானமும், மரண பயமில்லாத வாழ்வும் அமையும்; நிறைவில் பிறப்பற்ற மோட்சமும் கிட்டும் என்பார்கள் ஆன்றோர்கள்.

அமர்ந்தாடும் ஆரூரன்!

அஜபா நர்த்தனன், அசைந்தாடும் அப்பன், அடிக்காயிரம் பொன் வழங்குவோன், செம்பொன் தியாகர், தியாக சிந்தாமணி, தியாகராஜன், வீதிவிடங்கன் என்றல்லாம் போற்றப்படுபவர் திருவாரூர் தியாகராஜப் பெருமான். அர்த்தமண்டபத்தில் அலங் கார சிம்மாசனத்தில் அமர்ந்து சர்வ லோகங்களையும் ஆளும் தியாகராஜ பெருமான், அமர்ந்தாடும் அபூர்வத் திருக்கோலத்தில் அருள்கிறாராம். ஆம், அமர்ந்த கோலம் என்றாலும் இவர் ஆடும் நாயகனே என்கிறது சைவம்.

திருமாலின் மார்பில் வீற்றிருந்து அவர் மூச்சுக்கேற்ப அசைந் தாடுவார் இவர். இதை `அஜபா நடனம்’ என்பர். தேவலோகச் சிலை என்பதால் இவரின் திருமுகத்தை மட்டுமே நம்மால் தரிசிக்க இயலும். ஸ்வாமியின் இடது பாதத்தை மார்கழி திருவாதிரையிலும் வலது பாதத்தை பங்குனி உத்திரத்திலும் தரிசிக்கலாம் என்பது சிறப்பு.

திருவாரூர் சென்று இந்த அமர்ந்தாடும் நாயகனை வணங்கினால் நிலையான வாழ்வு கிடைக்கும். சோதனைகள், தோஷங்கள், பாவங்கள், அச்சங்கள் ஆகியவற்றால் அவதிப்படும் அன்பர்கள் இவரை வழிபட சகல பாதிப்புகளும் நீங்கி நிலையான நேர்த்தியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது திண்ணம்.

அம்பாளை மகிழ்வித்த நடனம்!

உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலத்தில்தான். `உத்திரம்’ என்ற சொல்லுக்கு `உபதேசம்’ என்ற பொருளும் உண்டு. `கோசம்’ என்றால் `ரகசியம்’. அம்பாளுக்குப் பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக