புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_m102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c10 
56 Posts - 49%
heezulia

47 Posts - 41%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_m102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_m102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_m102024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 8:25 pm

2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! 5lxFsRQ

வரும் தேர்தலில், குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் அறிவாலயம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘ஜுரம்’ ஆரம்பித்துவிட்டது. தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே வரிந்துகட்டிக்கொண்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாகிவிட்டன. திருச்சியில், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க. அந்தக் கட்சியின் பாக முகவர்களுக்குத் தேர்தல் பயிற்சியளிக்கும் இந்தக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். அதேநேரம், அ.தி.மு.க முகாமிலும் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி, மதுரையில் நடைபெறவிருக்கும் அந்தக் கட்சியின் மாநாட்டையொட்டி, தேர்தல் வேலைகளும் ஜரூராகியிருக்கின்றன. இரு கட்சிகளுமே 2024 தேர்தல் வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்திருக்கும் சூழலில், வண்டியில் ‘சீட்’ பிடிக்க இப்போதே தள்ளு முள்ளு ஆரம்பித்துவிட்டது. வண்டியில் ஏற விருப்பமில்லாத சில கட்சிகள், தனியாக ஆக்ஸிலேட்டரை முறுக்குவதால், ஒரே புகை மண்டலம்தான்.

“2019 நாடாளுமன்றத் தேர்தலில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமாகத்தான் இந்தத் தேர்தலில் ‘சீட்’ ஒதுக்கக் கோருவோம். இரண்டு திராவிடக் கட்சிகளுமே, தனித்து வெற்றிபெறும் சக்தியில் இன்று இல்லை. கூட்டணி பலம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து, எங்களுக்கு உரிய மதிப்பை அவர்கள் அளிக்க வேண்டும்” எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலைவர்கள். தமிழகம், புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதிகளுக்கான ‘சீட்’ பங்கீடு முணுமுணுப்புகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. என்னதான் நடக்கிறது இரண்டு கூட்டணிக்குள்ளும்... தனித்துக் களமிறங்குபவர்களின் திட்டம் என்ன... களமிறங்கி விசாரித்தோம்.

இரட்டை இலக்கம் கேட்கும் பவன்... ஏழு சீட் கண்டிஷனில் அறிவாலயம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 40 தொகுதிகளில் போட்டியிட்டு, 39 தொகுதிகளில் வெற்றிபெற்றன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நான்கு இடங்களும், ம.தி.மு.க., கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு இடங்களில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயகக் கட்சி, தற்போது பா.ஜ.க கூட்டணிக்குத் தாவிவிட்டது. அந்தக் கட்சியைத் தவிர, மற்ற கட்சிகளெல்லாம் தி.மு.க கூட்டணியிலேயே நீடிக்கின்றன. இந்தக் கூட்டணியில் பஞ்சாயத்தை முதலில் ஆரம்பித்திருப்பதே காங்கிரஸ்தான்.

வரும் தேர்தலில், குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் அறிவாலயம். கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் தி.மு.க-வே போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறது. கரூர் எம்.பி-யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. இருவருக்குமிடையே மோதல் தொடங்கியபோதே, “அடுத்த முறை கரூர்ல காங்கிரஸுக்கு சீட் கொடுக்காதீங்க தலைவரே... நம்ம கட்சிக்காரரே நிக்கட்டும்” என அழுத்தமாகவே சொல்லிவிட்டாராம் செந்தில் பாலாஜி. விருதுநகரிலும் இதே பஞ்சாயத்துதான். அந்தத் தொகுதியின் எம்.பி-யாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் இருக்கும் நிலையில், இந்த முறை தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்குத் தொகுதியைப் பெற்றுத் தருவதில் தீவிரமாகியிருக்கிறார் மாவட்ட அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். நாலா பக்கமும் தி.மு.க-வினர் அணை கட்டுவதால் வெளிறிப்போயிருக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்கள் சிலர், “2014 தேர்தலில் 39 இடங்களில், இரட்டை இலைச் சின்னத்தில் நின்று 37 இடங்களை வென்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என அ.தி.மு.க பெயரெடுத்தது. அப்படியான பெயரை இந்த முறை தனதாக்கிக்கொள்ளப் பார்க்கிறது தி.மு.க. அதற்காக, கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள். அதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து முதல் ஏழு சீட்டுகள் வரை மட்டுமே ஒதுக்க முடியுமென ‘கண்டிஷனாக’ சொல்லிவிட்டனர். தேசிய அளவிலான ஒரு கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணில் சீட் ஒதுக்கப்படவில்லை என்றால், அது அவமரியாதையாகிவிடும். இந்தத் தேர்தல், `நாட்டுக்குத் தேவை ராகுல் காந்தியா அல்லது மோடியா?’ என்கிற கேள்விக்கு விடை காணும் தேர்தல். எனவே, தி.மு.க அளிப்பதாகச் சொல்லும் எண்ணிக்கை போதாது. ஆகவே, 15 சீட்களைக் கேட்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்” என்றனர்.

“ஆளுக்கு ஒண்ணு...” - தி.மு.க-வின் ஒரு விரல் புரட்சி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.எம்., இந்த முறை திருப்பூர் தொகுதியையும் கூடுதலாகக் கேட்க நினைக்கிறது. கடந்த முறை போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளோடு சேர்த்து விருதுநகரையும் ஒதுக்கச் சொல்லும் எண்ணத்தில் இருக்கிறார்கள் சி.பி.ஐ கட்சியின் தலைவர்கள். ஆனால், அவர்கள் இருவருக்குமே இந்த முறை தலா ஒரு சீட் மட்டும் ஒதுக்கும் முடிவில் இருக்கிறதாம் தி.மு.க.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, கடந்த முறை ஒதுக்கிய விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் அவர்களைப் போட்டியிடவைக்க, கடுமையாக அழுத்தம் கொடுத்தது தி.மு.க. ஆனால், விடாப்பிடியாக நின்ற வி.சி.க தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் பானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை, விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளோடு சேர்த்து திருவள்ளூர் அல்லது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியையும் கூடுதலாகக் கேட்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் சிறுத்தைகள். ஆனால், அவர்களுக்கும் ஒரு விரலையே உயர்த்திக் காட்டுகிறதாம் தி.மு.க. அதுவும், திருமாவளவனுக்கு மட்டும்தான் ‘சீட்’ என்பதையும் மறைமுகமாகச் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடம் ‘ஒரு விரல்’ புரட்சியை ஆரம்பித்திருக்கிறது அறிவாலயம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்த முறை ஒரு சீட் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், வாய்ப்பே இல்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

நம்மிடம் பேசிய தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர், “கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க., இந்த முறை விருதுநகரைக் குறிவைக்கிறது. வைகோவின் மகன் துரை வையாபுரியை அந்தத் தொகுதியில் போட்டியிடவைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் தாயகத்தினர். ஆனால், சிட்டிங் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தொகுதியை விட்டுத்தர மறுத்து முரண்டுபிடிப்பதால், இப்போதே பஞ்சாயத்து களைகட்டியிருக்கிறது.

“நாலு பர்சன்ட் இருக்கோம்...” - அடம்பிடிக்கும் ஆழ்வார்பேட்டை

தி.மு.க கூட்டணியில், மக்கள் நீதி மய்யத்தை இணைத்துக்கொள்வதில் விருப்பமாக இருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் சம்மதம்தான். தென்சென்னை அல்லது கோவை தொகுதியை ம.நீ.ம-வுக்கு ஒதுக்கலாம் எனக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டது. ஆனால், ஆழ்வார்பேட்டைக்காரர்கள் நிலைமை புரியாமல் ‘மூன்று’ சீட்டுகள் கேட்கிறார்கள்.

பேச்சுவார்த்தையின்போது, ‘2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி என்கிற பேனரில் போட்டியிட்ட வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணிக்கு வந்துவிட்டனர். ‘மக்கள் நலக் கூட்டணி’யில் இவர்கள் பெற்ற வாக்கு விகிதாசாரம் 3.2 சதவிகிதம்தான். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு மொத்தமாக ‘ஏழு’ ஒதுக்கியது தி.மு.க. அதே தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.நீ.ம., 4 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதன்படி பார்த்தால், எங்களுக்கு எட்டு சீட்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மூன்று சீட்டுகளாவது கண்டிப்பாக வேண்டும்’ எனப் போராடுகிறார்கள் மய்யத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு சீட்டுக்கு மேல் ஒதுக்க அறிவாலயம் தயாராக இல்லாததால், ம.நீ.ம-வின் சீட் பஞ்சாயத்தை காங்கிரஸ் தலையிலேயே கட்டிவிட முடிவெடுத்திருக்கிறார்கள் அறிவாலயத்தினர்.

இந்தக் கட்சிகளைத் தவிர, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் ஒதுக்கிவிட்டு, அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவைக்கும் எண்ணத்தில் இருக்கிறது தி.மு.க. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும், கட்சி சார்பில் போட்டியிடத் தகுதியுள்ள நபர்கள் என மூவரின் பெயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு, கூட்டணிக் கட்சியில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்ற விவரங்களையும் சேகரித்துவைத்திருக்கிறார்கள். கூட்டணிகளுக்கு ஒதுக்கியது போக, 25 தொகுதிகளில் நேரடியாகவும், இரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகளை களமிறக்கவும் தீர்மானித்திருக்கிறது தி.மு.க” என்றனர் விரிவாக.

‘50 - 50 தமாக்கா...’ கமலாலயக் கணக்கு... ‘அண்ணாமலை வேண்டாம்’ இ.பி.எஸ் பிணக்கு!

தி.மு.க கூட்டணிப் பஞ்சாயத்துகள் ஒருபுறம் களைகட்டும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலும் கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. கட்சியின் ஒற்றைத் தலைமையாக, தான் அமர்ந்ததற்கு மாவட்டச் செயலாளர்களும், சீனியர் நிர்வாகிகளும் உறுதுணையாக இருந்ததால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் ‘சீட்’ கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் திட்டத்தில், முதல் கட்டையைப் போட்டிருப்பதே கமலாலயம்தான்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர், “இந்தக் கூட்டணியிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. கடந்த முறை ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., பஞ்சாயத்துத் தேர்தலில் குறிப்பிடத்தக்க கவுன்சிலர்கள் வென்றதாகக் கணக்கு காட்டி, இந்த முறை 20 சீட்டுகள் கேட்கிறது. ஆனால், அவர்களை கடந்த முறை போல ஐந்து விரல்களுக்குள்ளேயே அடக்கிவிடத் தீர்மானித்திருக்கிறாராம் எடப்பாடி. தவிர, கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் அண்ணாமலை இருக்கக் கூடாது என்பதையும் கண்டிஷனாகப் போட்டிருக்கிறாராம். இதனால், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது இரு தரப்புமே சூடாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எது நடந்தாலும் சரி, ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கையைவிட, ஒரு சீட்டாவது கூடுதலாக ஒதுக்கப்பட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறது பா.ஜ.க தரப்பு.

பா.ஜ.க-வைத் தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கின்றன. பிரதமர் மோடியுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், இந்த முறை இரண்டு தொகுதிகள் கேட்கத் திட்டமிட்டிருக்கிறார். கடந்த முறை தென்காசி தொகுதியை மட்டும் பெற்றுக்கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறை கூடுதலாக இரண்டு தொகுதிகள் கேட்கும் முடிவில் இருக்கிறார்.

“எங்களையும் ஆட்டத்துல சேருங்க...” - வரிந்துகட்டும் கட்சிகள்!

கடந்த முறை, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம், தேவநாதன் யாதவ்வின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில், அவர்கள் போட்டியிட விரும்புகிறார்கள். குறிப்பாக, டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பிய பிறகு, சீட் கிடைத்துவிடும் எனத் தெம்பாகவே இருக்கிறார்கள் ஜான்பாண்டியனும் தேவநாதன் யாதவும்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் வென்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். கே.வி.குப்பம் தொகுதியைப்போல, குடியாத்தம் தொகுதியும் தனித்தொகுதி என்பதால், அவற்றை உள்ளடக்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பெற முயல்கிறார். ‘இந்த முறை ஒரு சீட்டாவது கொடுங்கள். வடமாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்குப் பக்கபலமாக இருப்போம்’ என இலைக் கட்சியின் சீனியர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்திவிட்டார். அ.தி.மு.க தலைமை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

வேலூர் தொகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் தோல்வியைத் தழுவியதிலிருந்தே துவண்டுபோயிருந்தார் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். வரும் தேர்தலில், வேலூர் தொகுதியோடு சேர்த்து, ஒரு மாநிலங்களவை சீட் கேட்கும் எண்ணத்தில் இருக்கிறார் அவர். இவர்கள் அனைவரையும் கட்டி இழுத்துச் செல்லவேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தலைவர்களை அவரால் சமாளிக்க முடியவில்லையென்றால், ‘20 சீட்டுகளுக்கு மேல் தாருங்கள். பங்கீட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என பா.ஜ.க முரண்டு பிடிக்கும். `நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’ என எடப்பாடி சொன்னால், அனைவரையும் திருப்திப்படுத்த, அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ளவேண்டி வரும். எப்படிப் பார்த்தாலும் எடப்பாடிக்கு சிக்கலான நேரம்தான்” என்றனர் விரிவாக.

40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்!

அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாததுபோலக் காட்டிக்கொண்டு, பா.ஜ.க-வுடன் தனி நட்பு ரூட்டில் பயணிக்கிறது பா.ம.க. நட்புதான் இருக்கிறதே தவிர, கூட்டணி உறுதியானதாகத் தெரியவில்லை. டெல்லியில் நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு வந்திருந்தும், ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் நேரில் செல்லவில்லை. பா.ம.க தலைவர்களுள் ஒருவரான ஏ.கே.மூர்த்தியைத்தான் அனுப்பிவைத்தார்கள். “ஒருவேளை எல்லாம் சுமுகமாக நடந்து கூட்டணி உறுதியானாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுக்குக் கொடுத்த ஏழு இடங்களை மீண்டும் கொடுக்க அ.தி.மு.க தயாராக இல்லை” என்கிறது விவரமறிந்த இலைக் கட்சி வட்டாரம்.

“அ.தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது” என்பதை, ஜூலை 24-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியிருக்கிறார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். டெல்லி கூட்டணிக் கூட்டத்துக்குத் தங்களைப் பேச்சுக்குக்கூட அழைக்கவில்லை என்கிற மன வருத்தம் கேப்டன் குடும்பத்தினரிடம் ஏற்பட்டிருப்பதால், பா.ஜ.க-வுடனும் பஞ்சாயத்து அதிரி புதிரி ஆகியிருக்கிறது. தங்களையே கடைசி வரை நம்பியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, நட்டாற்றில் இறக்கிவிட்ட பா.ஜ.க., அவர் மகனுக்காவது சீட் பெற்றுத் தந்துவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. ‘யாருக்கு வேண்டுமானாலும் தருவோம். அவருக்கு சீட் கிடையாது’ என ‘கட் அண்ட் ரைட்’டாகச் சொல்லிவிட்டது எம்.ஜி.ஆர் மாளிகை. அ.ம.மு.க சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது சுயேச்சையாகக் களமிறங்குவதா எனக் குழம்பிப்போயிருக்கிறார் பன்னீர்.

பா.ஜ.க தன்னை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததால், தனித்தே களமிறங்க முடிவெடுத்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன். நாம் தமிழர் கட்சியினரும் தனித்தே களமாடத் தீவிரமாகியிருக் கிறார்கள். ஒரு காலகட்டத்தில் ‘பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு’ சீரியஸாக முயன்ற சரத்குமார், தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை எந்த வண்டியில் ஏற்றப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இப்படி, 40 தொகுதிகளிலும் சுமார் 20 கட்சிகளை முன்வைத்து 400 பஞ்சாயத்துகள் களைகட்டுகின்றன. இந்தப் பஞ்சாயத்துகளையெல்லாம் சரிசெய்து, தன் தரப்புப் பயணிகளை கவனமாக ஏற்றிக்கொண்டு, சேதாரமில்லாமல் நாடாளுமன்றம் வரை வண்டியை ஓட்டிச் செல்லவேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கின்றன தி.மு.க-வும் அ.தி.மு.க-வும். பயணம் என்னவாகும்?

விகடன்

2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 27, 2023 12:44 pm

2024 தேர்தல் - 20 கட்சிகள்... 40 தொகுதிகள்... 400 பஞ்சாயத்துகள்! 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக