புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
11 Posts - 50%
heezulia
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
53 Posts - 60%
heezulia
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_m10தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Apr 08, 2024 6:15 pm

# தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை AI4e0l8

செம்மொழி  என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை இலக்கிய வளமை அடிப்படையிலும் பிற பண்பு த்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் ஒரு வகைப்பாடு ஆகும்  தமிழ்  செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட தொலகாப்பியம் ஒரு முக்கிய சான்றாக  விளங்கியது
செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன்இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்
இன்றுநமக்கு கிடைக்கக்கூடிய மிகப் பழைய இலக்கியம்  தொல்காப்பியம்ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இது  பொதுவாக கி. மு. 400 --300ஆம்ஆண்டுகாலத்தில்எழுதப்பட்டதாகக்கருதப்படுகின்றது
தமிழின் மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் சங்க இலக்கியம் எனும் வகைப்பாடு என்று கி. மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.
தொல்காப்பியம்  என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார்.
 எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.
மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது தொல்காப்பியம்என்றழைக்கப்படுகிறது.
அகத்தியர் செய்தது அகத்தியம். . காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம்.  இப்படிப் பலவும் ,  பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே சரியாகும்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது.
இத்தனைச் சிறப்பு பெற்ற அந்த நூல் , அந்தக்காலத்தில் ஆங்கில மோகம் அதிகரிக்க, அதிகரிக்க தமிழ் அருமை மறைய த் தொடங்கி தொல்காப்பிய  ஏட்டுப்பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்;
கண்ணீர் வடித்தார்..தொல்காப்பியக் கடலில் இறங்கினார்" என்று பண்டிதர் சி.கணபதிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.. அந்த நூல் அனைவருக்கும் கிட்டாத நிலையிலேயே அந்தக்காலக்கட்டத்தில் சிலரிடம் மட்டும் ஏட்டுப் பிரதிகளாக அந்தக்காலகட்டத்தில்  இருந்தது
சங்க நூல்களும் , தொல் தமிழ்  இலக்கியங்களும் பதிப்பிக்கப்பட்ட
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் வரலாறு பதிவு செயகிறது .
நாம் இப்போது காணப்போவது பதிப்புச் செம்மல் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901) அவர்களைப்பற்றித்தான்
இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாத பிள்ளை - பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்
தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார்.
ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார்.
ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20ஆம் வயதில் இலங்கை கோப்பாயிலிருந்த பள்ளியில்  ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
அப்போது சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார், தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி" எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் இலஷ்சிஸ்டன் துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி" க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள்.அப்போது  இந்தியாவும் , இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்ச்சியில் ஒரே நாடாக இருந்தது .
பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை, கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது.   அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார்.
இதனால் அவருக்கு அரசாங்க வரவு - செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார்.
எத்தனை விதமான பதவிகள் வகித்தபோதிலும் ,  எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம் பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் இருப்பதையும் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார்.
அப்போது பதிப்புப் பணியில் இருந்த  ஆறுமுக நாவலரவர்கள்
எந்நூலையும்  பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார்.
இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868இல் வெளியிட்டார்.   இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879இல் ஆறுமுகநாவலர் காலமானார்.   பிள்ளை அவர்கள் மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார்.நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அவர்கள் அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய்,
வீரசோழியம் (1881)
தணிகைப்புராணம்,
இறையனார் அகப்பொருள் (1883)
தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885)
கலித்தொகை (1887)
இலக்கண விளக்கம், சூளாமணி (1889)
தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891)
தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892)
முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.
இது மட்டுமன்றி,
கட்டளைக் கலித்துறை
வசன சூளாமணி
சைவ மகத்துவம்
நட்சத்திரமாலை
முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும்  
அன்றைய சென்னை அரசு அவருக்கு 1875இல் "இராவ்பகதூர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக,
எனத தான் பணியாற்றியத்  துறையில் எல்லாம் புகழோடு விளங்கிய பிள்ளை, 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார்
தாமோதரம்பிள்ளைதொலகாப்பியத்தைப் பதிப்பிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே மழவை மகாலிங்கையர் (1847) என்பவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் 1847-இல் சென்னையில் அச்சிற் பதிப்பித்தார்
மதுரைக்குக் கிழக்கிலுள்ள மழவராயனேந்தல் என்னும் ஊரில் பிறந்தவர். மழவரானேந்தல் என்பது மழவை எனக் குறுகியது. வீரசைவ மரபினர். சென்னையில் பெரும்புலவர்களாக இந்த வீரசைவர்களாகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்னும் சகோதரர்களிடம் தமிழ் பயின்றவர் இவர். கல்லூரிகளில் தமிழாசிரியராக இருந்தார். மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாருடன் நட்புள்ளவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் 1847-இல் சென்னையில் அச்சிற் பதிப்பித்தார். அருணாசல புராணத்திற்கு உரை எழுதினார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை 1879-ஆம் ஆண்டில் எழுதினார்.
எனினும் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன்முதலில் வெளியிட்டவர்
எனவே முதலில்தொல்காப்பியத்தின் ஒரு அதிகாரத்தைப்  பதிப்பித்த  பெருமை மழவை மகாலிங்கையர்அவர்களையே சாரும்
ஆனால் பல் சிறப்புக்கூறுகளுடன் முழுமையாக தொல்கப்பியத்தை பதிப்பித்தப் பெருமை ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை ச் சாரும் .
பண்டைய உரையாசிரியர்கள் உரை எழுதியதன் வழியாகத் தொல்காப்பியத்தை அடுத்த தலைமுறையினருக்குஅளித்து விட்டுச் சென்றனர். அதேவகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு அச்சு ஊடகத்தின் துணையால் தொல்காப்பியத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்ட பல பதிப்பாசிரியர்களும் பெரும்துணைபுரிந்துள்ளனர்.
தமிழின் செம்மொழித் தகுதிப்பாட்டிற்குப் பேராதாரமாக இருந்த தொல்காப்பியத்தைக் பதிப்பித்த  புலமை மரபில் பதிப்பாசிரியர்கள் பலர் முக்கிய ஆளுமைகளாகத் தென்படுகின்றனர்.
அந்தப் பதிப்பாளுமைகளை இன்றைக்கு நாம் நினைகூர்வது ஒருவகையில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலானது.
19ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலமாக அறியப்படுகிறது. இக் காலத்தில் பழம் தமிழ் நூல்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டன, உரையெழுதப்பட்டன, ஆய்வுசெய்யப்பட்டன. இன்று நமக்கு  கிடைக்கும் சங்க இலக்கியங்களில் பல இக் காலத்திலேயே முதலில் அச்சேறின. சமயம், அரசியல், அறிவியல் என தமிழில் பல துறைகளில் நூற்றுக் கணக்கான நூல்கள்
இக்காலத்தில் அச்சிடப்பட்டன.
பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது அதை எழுதிய ஆசிரியரின் உண்மைப்பாடத்தைத் தெரிந்து பதிப்பிப்பது அரிய பணியாகும்.  பல்வேறு சுவடிப் பிரதிகளையும் திரட்டி மூலபாடத்தைத் தெரிவு செய்து பதிப்பித்தல் வேண்டும். இவ்வரிய பணியின் அருமையைப் பின்வரும் பாடல் நன்கு காட்டும்.
ஏடுபடித்தல் என்பது ஒருகலை
எல்லோரும் ஏடுபடித்தல் இயலாது
அதற்குத்தக்க நூற்பயிற்சி பெரிதும்
உழைத்துப் பெறுதல் வேண்டும்
செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்
ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்
மெய்யெழுத்துகள் புள்ளி எய்தா
ஒற்றைக் கொம்பும் சுழியின் கொம்பும்
வேறுபாடின்றி ஒத்து விளங்கும்
காலும் ரகரமும் ஒன்றே போலும்!
பகர யகரம் நிகருறத் திகழும்
கசதநற என்பவை வசதியாய் மாறி
ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்
எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்
பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்
சீரும் தளையும் செய்யுள் வடிவம்
சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்
இத்தகு நிலைகளால் எத்தனையோ பலகுழப்பமும்
கலக்கமும் விளைத்து நிற்கும்
என்று சுவடிபடித்துப் பதிப்பிக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு இடர்களையும் அறிஞர் ந.ரா. முருகவேள் என்பவர் குறிப்பிடுவார்.
தமிழ் நூல்கள் பதிப்பு வரலாறு மிகப் பரந்து பட்டது. ஏறத்தாழ இருநுறு ஆண்டுகளின் தமிழக கல்வி வரலாற்றைக் காட்டுவது. பழைய சுவடிகளில் உள்ள புலமைச் செல்வத்தை மீட்டுருவாக்கம் செய்த அவர்களின் பணி என்றும் நினைந்து போற்றற்குரியதாகும்.
இத்தகைய சீரிய செம்மைப்பதிப்புகள் சித்தர் இலக்கியங்களில் இல்லாததால் தான் , இதுவரை தமிழ் சித்தர்கள் கூறிய மெய்ப்பொருளை அறியாது , தமிழ் சமூகம் தவித்துவருகிறது .
எனினும் தொல்காப்பியம் போன்ற சீரிய இலக்கியத்தை ,  இலக்கண நூலை
நாம் அனைவரும் ஆளுக்கு ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதற்கு காரணமாக அமைந்த அத்தனை பதிப்பாளர்களையும் , முக்கியமாக
மழவை மகாலிங்கையர்மற்றும்  ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை  அவர்களைத தமிழ் சமூகம் என்றும் மறந்திடல் ஆகாது
அண்ணாமலை சுகுமாரன்
6/4/18 REPOST  6/4/2024

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 09, 2024 1:15 pm

தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக